உலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது? முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்!

// கேம்ப்ரியன் காலம் என்பது சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலக்கட்டம். இந்த காலக்கட்டத்தில் தான் உயிரினங்கள் முதல் முதலாக உயிரினப்படிமங்களில் காணப்படுகின்றன. // என்று எதிர்க்குரல் ஆஷிக் அஹமது எழுதியிருக்கிறார்.

பகீரென்றது எனக்கு.

இப்படி நமது கண்ணுமணி மொஹம்மத் இப்பனு அப்பதல்லா சொன்னதெல்லாம் தப்பு, அந்தாள் ஒரு லூசு என்ரு இப்படி எதிர்க்குரல் ஆஷிக் அஹமதே சொல்ல ஆரம்பித்துவிட்டாரே , எதிர்க்குரல் எதிர்க்குரல்னு நம்ம காககககேவுக்கே எதிர்க்குரலா ஆயிட்டாரேன்னு எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அது மட்டுமா? அங்கே சுவனப்பிரியன் பக்கத்துக்கு போனால், பெரிய குண்டுவெடிப்பு (அதான் big bangகுங்க!) நடத்தி எல்லா மூமின்களுக்கும் வழிகாட்டியாக இருந்த அல்லாஹ் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் செய்த பெரிய bangஐ பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறார். துக்கம் தொண்டைய அடைக்குமா அடைக்காதா?

அப்புறம் இந்த பக்கம் நம்ம கார்பன் காப்பி பதிவர் பக்கத்துக்குபோனால் படிமங்களை பற்றியெல்லாம் வேறு எழுதி இத்தனை மில்லியன் வருடங்களுக்கு முன்னால் கிடைத்த படிமங்கள் என்றெல்லாம் நம் நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டார். என்னடா இப்படி ஆளுக்காள் நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லாவை காக்காவலிப்பு கழண்ட கேஸ் என்று சொல்கிறார்களே என்று ரொம்ப கஷ்டமாக போய்விட்டது.

உலகம் பல கோடி ஆண்டுகள் பழையது என்று இவர்கள் எழுதும்போதெல்லாம் பகீர் பக்கீர் என்கிறது எனக்கு.. என்னடா இப்படி எல்லோரும் நம்ம கண்ணுமணியை லூசு என்கிறார்களே என்று பக்கீர் என்காதா? நீங்களே சொல்லுங்கள்.

அது மட்டுமில்லை. நம்ம ஆஷிக் அஹமது எழுதிய பதிவில் ஏராளமான மூஃமின்கள் வேறு உள்ளே வந்து வழக்கம்போல செருப்படி, நெத்தியடி, சவுக்கடி மரண அடி என்று (ஆஷிக் அஹமதுவுக்கு அந்த செருப்படி கொடுத்திருக்கிறார்களா என்று பார்த்தேன். இல்லை அந்த செருப்படி நெத்தியடி மரண அடி சவுக்கடி எல்லாம் நாத்திகர்களுக்காம்) இத எங்கண போய் சொல்றது?

ரொம்ப குழம்புவதற்குள் விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.

என்ன விஷயம் என்றால் உலகம் தோன்றி எத்தனை வருடங்களாகிறது என்று காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா குறிப்பிட்டிருக்கிறார்?

7000 வருஷம். அவ்வளவுதான்.

இது சும்மா உட்டலக்கடி இல்லை.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் அல்லாஹ் படைத்த ஆறு நாட்களும் நீண்ட கால கணக்கு கிடையாது. ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு யுகமாக நீட்டிகொண்டுவிடுவார்கள். அதெல்லாம் சும்மா லுலுலாயி. திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிக்கிழமைதான். திங்கள் செவ்வாயெல்லாம் சூரியனும் பூமியும் படைத்தபின்னர்தானே அர்த்தமாகும் என்றெல்லாம் காபிர்த்தனமாக கேட்கக்கூடாது. நம்ம மூமின்மாதிரி சொல்றதை அப்படியே நம்பணும். ஹார்லிக்ஸ் மாதிரி அப்படியே சாப்பிடுவேன் என்று சொல்பவர்கள் மட்டுமே மூமின்கள், ஈமாந்தாரிகள் என்று நினைவில் வைத்துகொள்ளவேண்டும்.

http://theonlyquran.com/hadith/Sahih-Muslim/?volume=39&chapter=2

Chapter MCLV, The beginning of creation and the creation of Adam, Hadith No. 6707:

Abu Huraira reported that Allah’s Messenger (mpbuh) took hold of my hands and said: Allah the Exalted and Glorious, created the clay on Saturday and He created the mountains on Sunday and He created the trees on Monday and He created the things entailing labour on Tuesday and created light on Wednesday and He caused animals to spread on Thursday and created Adam (pbuh) after ‘Asr on Friday; the last creation at the last hour of the hours of Friday, ie. Between afternoon and night.

அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான். அதுவும் மத்தியானத்திலிருந்து இரவுவரைக்கும் படைத்துகொண்டே இருந்தான். என்று அபு உரைராவிடம் காககககே சொல்லிவிட்டு போயிருக்கிறார்.

இப்படி இருக்கும்போது அல்லாஹ் படைத்ததாக சொன்ன ஆறு நாளும் ஆறு யுகம் என்றெல்லாம் லுலுலாயி விடுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அடுத்து எப்போது ஆதாமை அல்லாஹ் படைத்ததாக நம்ம காககககே சொல்லியிருக்கிறார்? வெள்ளிக்கிழமை!
சரி ஆதாமை படைத்த பின்னால் இதுவரை எவ்வளவு வருடங்கள் ஆகியிருக்கின்றன?

யூதர்கள் தங்களது புத்தகங்களில் உலகம் தோன்றி இவ்வளவு வருஷம் ஆகிறது என்று ஆதாமுக்கும் இவர் பொறந்தார். இவருக்கு அவர் பொறந்தார் என்ற ரீதியில் எழுதி வைத்திருக்கிறார்கள். வேண்டுமென்றால் நம்ம ராபின், டானியல் மாதிரி கிறிஸ்துவ பதிவர்களிடம் கேட்டுப்பாருங்களேன். இயேசுவை நடுவில் போட்டு தாண்டி சத்தியம் பண்ணுவார்கள். உலகம் தோன்றி 7000 வருடம் தான் ஆகிறது என்று உங்கள் தலை என் தலை மீதெல்லாம் சத்தியம் செய்வார்கள். அப்படியே இழுத்துகொண்டு வந்து இயேசு கிறிஸ்து பிறப்பு வரைக்கும் இழுத்து வருபவர்கள் கிறிஸ்துவர்கள். அதே மாதிரி இஸ்லாமிய அறிஞர்களும் குரான் ஹதீஸெல்லாம் நோண்டி நொங்கெடுத்து உலகம் தோன்றி 7000 வருடங்கள்தான் ஆகிறது என்று சத்தியம் செய்கிறார்கள்.
(இந்த ஒரு விஷயத்தில் தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சியும் நிச்சயம் ஒத்து போவார்கள். )

அந்த கணக்கு தப்பு என்று இதுவரைக்கும் அல்லாஹ் காககககே வாயிலிருந்து சொல்லவில்லை என்பதால், அது உண்மை என்றே பொருளாகும்.

ஆதாரமான சில ஹதீஸ்களை தருகிறேன்.
ஒன்று ஆதாமுக்கும் நோவாவுக்கும் இடையே எவ்வளவு காலம் என்று நம்ம கண்ணுமணி ஆதாரப்பூர்வமாக சொன்ன தகவல். அவர் சொன்னா அப்பீல் உண்டா நம்ம மூமின்களிடம்? ஆகவே இதுதான் உண்மை. உண்மை. உண்மை.

‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.
http://islamkural.com/home/?p=228

உலகில் முதல் மனிதராக படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர்களின் காலம் முதல் கிட்டதட்ட பத்து நூற்றாண்டுகள் வரை மனிதர்கள் ஓரிறைக்கொள்கையிலேயே இருந்து வந்துள்ளனர் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
(இப்னு கஸீர்).
http://www.islamkalvi.com/portal/?p=3913

இந்த ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். தலைமுறையா நூற்றாண்டான்னு. எதுக்கும் ரெண்டும் ஒன்னுதான்னு வச்சிக்குவோம். பத்து நூற்றாண்டுகள் என்றால் ஆயிரம் வருடம்.

இரண்டாவது நூஹ் நபி (நோவா) எவ்வளவு காலம் உயிருடன் இருந்தார் என்ற தகவல். குரானிலேயே இது இருக்கிறது.

நூஹ் நபி வாழ்ந்த காலம் 950 ஆண்டுகள். ஆக அவர் மௌத்தாகும்போது உலகம் தோன்றி 1950 ஆண்டுகள். அவ்வளவுதான்.

நூஹ் நபியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் எவ்வளவு காலம்? மூன்று நான்கு ஹதீஸ்கள் இருக்கின்றன. ஒன்று மோஸஸிலிருந்து இப்ராஹிம் (அப்ரஹாம்) வரைக்குமான காலத்தை நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா  கொள்ளைக்கோ கொல்லைக்கோ போகும்போதே கூறிக்கொண்டே சென்றது. இன்னொன்று. ஈஸா நபிக்கும் தமக்குமான இடைவெளியை இன்னொரு முறை கூறியது.  ஆக மொத்தம் 4500 வருடங்கள்.

அதனைவிட முக்கியமாக நூஹ் நபியின் கப்பலே கிடைத்திருக்கிறது என்று நமது மூமின்கள் புல்லரிக்கும் அகழ்வாராய்ச்சியில் அந்த கப்பல் 4800 வருட பழையது என்று வேறு சொல்லிவிட்டார்கள். அந்த 4800 வருடங்கள் மிகச்சரியாக நூஹ் நபியின் காலத்தை சொல்கிறது .ஆகவே அது நூஹ் நபியின் கப்பல்தான் என்று ஹாரூன் யாஹ்யாவும் அடித்து பேசுகிறார்.

இதனை விலாவாரியாக நமது மூமின்கள் விவாதித்திருக்கிறார்கள். செங்கொடியின் தளத்தை பார்ப்போம்
http://senkodi.wordpress.com/2010/04/09/nooh-ship/

நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜூதி மலை மீது நூஹ் நபியின் கப்பல் இருக்கிறது என்று ஆதாரம் காட்டுகிறார்.

நம்ம தவ்ஹீத் அண்ணன்களுக்கெல்லாம் அண்ணன், ஹாரூன் யாஹ்யாவும் இதற்கு சர்டிபிகேட் கொடுக்கிறார்
http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/38639/NOAH_S_ARK_DISCOVERED_ON_MOUNT_AGRI_IS_THE_FIRST_OF_THE_SACRED_RELICS_TO_BE_FOUND_IN_THE_END_TIMES
The Age of the Ark

The age of the boat identified as Noah’s Ark emerged with Carbon dating in Iran of a 38-mm piece of timber. The age was calculated at 4800 years. Mr. Oktar, says this on the subject from an interview on Guneydogu Olay TV on 27 April, 2010:

ADNAN OKTAR: I looked at it, and it really does resemble Noah’s Ark. It really resembles it. It does not seem to be a lie. Because the structure is a classic boat structure. Huge, thick timber. What is a boat doing on the top of Mount Ağrı? How can that be explained? And the age is right. Some 5000 years, or 4800 years. The age is right, the time of the Flood. The style employed in the boat is also right. The ironwork for tethering animals, the thickness of the timbers, everything is right. By the law of Allah, it is Noah’s Ark.

The Boat Being Built from Wood and Nails:

“We bore him on a planked and well-caulked ship.” (Surat al-Qamar, 13)

As noted in this verse, Noah’s Ark was made from wood and nails. The boat found on Mount Ağrı was also built from wood. Indeed, the investigators say the boat was made from cypress wood. Mr. Oktar says this on the subject from an interview on Kanal Avrupa on 16 May, 2010:
ஏராளமான செலவு செய்து இந்த பக்கம், ஒரு பல்கலைக்கழகம் எல்லாம் நடத்துகிறார்கள் கிறிஸ்துவர்கள்.

http://www.answersingenesis.org/
(இந்த பக்கங்களிலிருந்துதான் நம்ம சிட்டிஜன், கார்பன் காப்பி பதிவர் போன்ற இஸ்லாமிய பதிவர்கள் எல்லாம் காப்பி அடிக்கிறார்கள். )

http://bible-truth.org/GEN5.HTM

செங்கொடி என்ற ஸனாதிக்காவுக்கு பதில் சொல்ல கிளம்புகிறேன் பேர்வழி என்று எழுத ஆரம்பித்த இஹ்ஸாஸ் மற்றும் எத்தனை எத்தனையோ ஈமாந்தாரிகள் அராரத் மலையில் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டு அது நூஹ் நபியின் கப்பல்தான் என்று காககககே மொஹம்மது இப்னு அப்தல்லாவின் தலையிலேயே அடித்து சத்தியம் செய்கிறார்கள்.

நம்ம ஜூவனப்பிரியர்கள் எல்லோரும் காக்காவலிப்பு வஹி வந்தாற்போல கத்த வைக்கக்கூடிய இணையப்பக்கம்.
நூஹ் நபியின் கப்பல் பற்றிய இணையப்பக்கங்கள்

http://www.arkdiscovery.com/noah’s_ark.htm
http://news.nationalgeographic.com/news/2010/04/100428-noahs-ark-found-in-turkey-science-religion-culture/
http://cafewitteveen.wordpress.com/2010/04/29/radio-carbon-dating-noahs-ark-and-you/

(காபிர்களே, கொஞ்ச நாளைக்கு சுவனப்பிர்யன் பக்கத்துக்கு போகாதீங்க. உங்களுக்கும் வலிப்பு வந்தா நான் ஜவாப்தாரி அல்ல.
சார்வாகன் நான் சொன்னா கேக்கமாட்டார். அவருதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடியவர்)

சரி இந்த பக்கங்களில் என்ன எழுதியிருக்கிறது என்பதை சுருங்கச்சொல்லி விளங்க வைக்கிறேன். அராரத் மலையில் சில மரத்துண்டுகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த மரத்துண்டுகளின் வயது 4000க்கு சமீபம் என்று கார்பன் டேட்டிங் சொல்கிறதாம். இதுவே அந்த மலை மீது நூஹ் நபியின் கப்பல் தங்கியிருந்ததன் அடையாளம் என்று கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் ஒரே நேரத்தில் எம்பி குதிக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதிக்காமல், ஒருவரோடு ஒருவர் சந்தோஷமாக குதிக்கிறார்களே என்று காபிர்கள் சந்தோஷப்படலாம்.

அதுவும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு சொந்தமாக எதுவும் ஆராயும் புத்தியும் கிடையாது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆகவே காபிர்கள் என்ன கேள்வி கேட்டாலும் உடனே இணையத்தில் எதாவது கிறிஸ்துவர்கள் பதில் எழுதியிருக்கிறார்களா என்று தேடிப்பார்ப்பார்கள்.  எழுதியிருந்தால் ரொம்ப சந்தோஷம், உடனே உட்கார்ந்து, அங்கங்கு இருக்கும் பைபிள் வசனங்களை எடுத்துவிட்டு ஏதோ சில குரான் வசனங்களை போட்டு அதே கட்டுரையை தமிழில் எழுதி பதிலாக எழுதிவிடுவார்கள். எழுதவில்லையா, அப்பத்தான் சிக்கலே. அந்த கேள்வி கெடக்கும் நாள் கணக்கா. பாருங்களேன். நான் ஒரு அறிவுரை சொன்னேன். நம்ம கார்பன் கூட்டாளி இன்னும் பதிலே சொல்லலை. ஏன் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் (இதுக்குத்தான் காககககே அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்)

போன ஆகஸ்ட்டில் போட்ட கேள்வி. என்ன செய்றது, அவர் பதில் சொல்றதுக்கு இன்னமும் ”இறை நாடவில்லை”!

http://carbonfriend.blogspot.com/2011/06/blog-post.html
இப்னு ஷாகிர் said… 13 அன்புள்ள கார்பன் கூட்டாளி,

குரோமசோம்களை நம்புவதா அல்லது இஸ்லாமை நம்புவதா என்று முடிவு
செய்யுங்கள்.

இந்த நாத்திகர்கள் குழந்தை உருவான பொழுதே ஆண் பெண் என்று நிச்சயம் செய்யப்பட்டுவிடுகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 42 ஆம் நாளில் வானவர்கள் அல்லாஹ்வை கேட்டு அதன் பின்னரே ஆணா பெண்ணா என்று முடிவு செய்கிறார்கள் என்று கூறுகிறார்.

உங்கள் தாயின் கருவறையில் நாற்பத்தி இரண்டு நாட்கள் கடந்த பின், இறைவன் ஒரு வானவரை அனுப்பி வைத்து, அவர் (அக் கருவின்) செவி மற்றும் பார்வைப் புலன்களையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் ஒருங்கமைக்கின்றார். பின்பு இறைவனிடம் அவர் இது ஆணா அல்லது பெண்ணா? என வினவ, இறைவன் தான் விரும்பியதைப் படைக்கின்றான். (முஸ்லிம். எண்.2645).

நாத்திகர்களுக்கு பதிலளிக்கிறேன் என்று வழிதவறி விழுந்துவிடாதீர்கள்.

Thursday, August 04, 2011 3:36:00 PM

சரி விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த நோவாவின் கப்பலை கண்டுபிடித்ததை எவாஞ்சலிக்க கிறிஸ்துவர்களின் ஆஸ்தான தளமான பாக்ஸ் நியூஸ் தெரிவிக்கிறது

The group claims that carbon dating proves the relics are 4,800 years old, meaning they date to around the same time the ark was said to be afloat. Mt. Ararat has long been suspected as the final resting place of the craft by evangelicals and literalists hoping to validate biblical stories.
Read more: http://www.foxnews.com/scitech/2010/04/27/noahs-ark-found-turkey-ararat

http://www.noahsarkmovies.com/arkmovie/big5/
கவனிக்கவும் இது இஸ்லாமிய தளமல்ல. நோவாஸ் ஆர்க் மூலமாக கிறிஸ்துவத்தை சீனாவில் பரப்பும் தளம். (சீனாக்காரங்களை  உருப்படியா இருக்க உட்டுருவமா?)

ஆகவே எல்லாம் கூட்டி பாத்தா 1950+ 4800+  உங்களுக்கும் வேணாம் எங்களுக்கும் வேணாம். வச்சிக்குவோமே .சுமார் 7000 வருடம் ஆகிறது.

ஆகவே உலகம் தோன்றி 7000 வருடங்களே ஆகியிருக்கின்றன என்று நம்ம கண்ணுமணி சொல்லிவிட்டு போயிருக்கும்போது இந்த முஸ்லிம் பெயர்தாங்கிகள் ஈமானை   பரப்புகிறேன் என்று கண்ணுமணியையே கேலி கிண்டல் செய்துகொண்டு உலகம் தோன்றி பல கோடி வருடங்களாகிவிட்டன என்று ஃபித்னாவை பரப்பிகொண்டிருக்கிறார்கள்.

உலகம் தோன்றி எவ்வளவு வருடங்களாகின்றன என்பதற்கு இருக்கும் ஏராளமான ஹதீஸ்களில் சிலவற்றை பார்ப்போம்

http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/14883/IN_HIS_BOOK_THE_GREAT_SUNNI_SCHOLAR_SUYUTI_RELATES%20_TRUSTWORTHY_HADITH_REGARDING_THAT_THE_LIFE_OF_THE%20_WORLD_LASTS_7000_YEARS

அப்துல்ஹக்கீம் என்ற வழிகெட்டு அலையும் ஈமாந்தாரிக்கு செங்கொடி தளத்தில் நான் எழுதிய பதில்.

ibnushakir, on நவம்பர்15, 2011 at 5:20 AM said:
மார்க்க சகோ abdulhakkim

//குறிப்பு முதலில் நான் இட்ட பின்னூட்டத்தில் மனிதர்கள் தோன்றி பல
லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில்//

இதனை படித்து நெஞ்சம் வெடிக்கிறது! ஆதாம் தோன்றி 10 நூற்றாண்டுகளுக்கு பின்னர் நூஹ் நபி தோன்றினார் என்று நமது கண்ணுமணி நபிஹல் நாயஹம் சொல்லியிருக்கும்போது, நூஹ் நபியின் கப்பல் கிடைத்திருக்கும்போது, அந்த கப்பல் 4800 வருடங்கள் பழையது என்று நமது ஹாரூன் யாஹ்யாவே உறுதிபடுத்தியிருக்கும்போது மனிதர் தோன்றி 5800 வருடங்கள்தானே ஆகிறது? எப்படி நீங்கள் கண்ணுமணி நபிஹள் நாயஹம் சொன்னதை மறுத்து , மனிதன் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன என்று ஈமானை இழந்து இப்படி பேசுகிறீர்கள்? இதுதான் ஈமானா?

இவ்வாறு ஒவ்வொரு ஈமாந்தாரிகளாக இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதையும் நபிஹள் நாயஹம் பொய்யர் என்று சொல்லுவதையும் பார்க்கையில் என் நெஞ்சம் வெடிக்காமல் என்ன செய்யும்?

ஒருவேளை நபிஹள் நாயஹம் தீர்க்கதரிசனமாக சொன்னதுபோலவே இஸ்லாம் ஒரு பாம்பு போல சுருண்டு மீண்டும் மெக்கா மெதீனாவில் மட்டுமே இருக்கும் மதமல்ல மார்க்கமாக ஆகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

ஆ அல்லாஹ்

சரி இப்படி ”உண்மை” இருக்கும்போது 10000 வருட பழைய கட்டிடங்கள், 20000 வருட பழைய ஓவியங்கள், 50000 வருட பழைய மனிதர்களது எலும்பு கூடுகள், 100000 வருட பழைய விலங்கினங்களது எலும்பு கூடுகள், பல கோடி வருடங்கள் பழைய புராதன படிமங்கள், பல கோடி கோடி வருட பழைய நட்சத்திரங்கள் கேலக்ஸிகள், பிக் பேங்குகள் ஆகியவற்றை எப்படி விளக்குவது என்று ஈமாந்தாரி கேள்வி எழலாம்.

ஒரே பதில்தான். இஸ்லாம் இதையெல்லாம் ஒப்புகொள்ளவில்லை. அப்படியாக நீங்கள் அப்பாவியாக நம்புகிறீர்கள். இதற்கெல்லாம் ஆதாரம் கிடையாது. உங்களுக்கு ஒரு எதிர்காலத்தில் புரிந்து இஸ்லாமை “உண்மையாக தழுவுவீர்கள்” என்று சொல்லிவிட வேண்டும். என்ன ஆதாரம், என்ன லாஜிக் சொன்னாலும், ஒரே பதில்தான்! இது என்ன ஆதாரமா? இது ஆதாரம் என்று மடையன் கூட ஒப்புகொள்ளமாட்டானே? திருந்துங்கள் என்று அழகிய இஸ்லாமிய வழியில் தாவா பண்ணிகொண்டே இருக்க வேண்டியதுதான். பரிணாமவியலுக்கு நாம எதிர்க்குரல் கொடுக்கிறோம்ல? அதுமாதிரி 7000 வருசத்துக்கும் எதிர்க்கொரல் கொடுத்துர வேண்டியதுதான்.

ஆனா இந்த இஸ்லாமிய வழியை விட்டுவிட்டு இப்போது  தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தவ்ஹீத்வாதிகளும் சனாதிக்காக்களாகிவிட்டார்கள் என்றுதான் தெரிகிறது. மொஹம்மத் இப்னு அப்தல்லா ஒரு லூசு, அவருக்கு ஒன்றும் தெரியாது என்று இப்படி பகிரங்கமாக சொல்லும் முஸ்லீம்கள் நிறைந்துவிட்ட இந்த தமிழ்நாட்டில் இனி பேசாமல் எல்லா ஈமாந்தாரிகளும் பெயர்தாங்கி முஸ்லீம்களாக பிலிம் காட்டுவதை விட்டுவிடலாம். கிறிஸ்துவத்துக்கு போனால் அங்கும் யாஹ்வா ஆறு நாளில் உலகம் படைத்தார்,. உலகம் தோன்றி ஏழாயிரம் வருடம் ஆகிறது என்றுதான் ஏற்றுகொள்ள வேண்டும். அப்படி ஏற்றுகொள்வதாக இருந்தால் நீங்கள் இஸ்லாமிலேயே இருக்கலாமே? ஆகவே பேசாமல் இந்துக்களாகவோ ஜெயின்களாகவோ ஆகிவிடலாம் அல்லது செங்கொடி மாதிரி சனாதிக்காக்களாக ஆகிவிடலாம்.

பெயர்தாங்கி முஸ்லீம்களான சுவனப்பிரியன், எஸ். இப்ராஹிம், கார்பன் காப்பி, ஆஷிக் அஹமது, ஜட்டிஜன் ஆகியோர் இப்படி பகிரங்கமாக சனாதிக்காக்களாக மாறிவிட்ட நிலையில் ஆதி சனாதிக்காக்களான சார்வாகன், செங்கொடி போன்றோர் அவர்களை அரவணைத்து செல்லலாம்.

ஆகவே ஈமாந்தாரிகளே, போலிகளை கண்டு ஏமாறாதீர்கள். ஒரிஜினல் காகககககே மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடமே ஏமாற அழைக்கிறேன்.

இப்போது அழைக்கிறார் அண்ணா மெட்டில் அழைக்கிறார் காககககே என்ற பாட்டு போட்டுடுவோம்.

வாழ்க காககககே நாமம். வாழ்க அவர் ஈமாந்தாரிகளுக்கெல்லாம் போடும் நாமம்!
00

இணைப்புகள்

1) ஆதாமுக்கு பிறகு ஒவ்வொருதலைமுறையாக மொஹம்மத் இப்னு அப்தல்லா வரைக்கும்..

http://prophetsofallah.tripod.com/prophets/id4.html

2) உலகத்தை அல்லாஹ் உருவாக்கி  7000 வருடம் தான் ஆகிறது என்று இஸ்லாமிய அறிவியல் ஆதாரப்பூர்வமாக (அதாவது ஹதீஸ் மூலமாக) நிரூபிக்கும் ஹாரூன் யாஹ்யா தளம்

http://us1.harunyahya.com/Detail/T/EDCRFV/productId/14883/IN_HIS_BOOK_THE_GREAT_SUNNI_SCHOLAR_SUYUTI_RELATES%20_TRUSTWORTHY_HADITH_REGARDING_THAT_THE_LIFE_OF_THE%20_WORLD_LASTS_7000_YEARS

3) கிறிஸ்துவர்கள் உலகத்தை யாகவா உருவாக்கி 7000 வருடம் தான் ஆகிறது என்று கிறிஸ்துவ அறிவியல் மூலமாக நிரூபிக்கும் தளம்

http://www.answersingenesis.org/

http://bible-truth.org/GEN5.HTM

4)

Advertisements

98 thoughts on “உலகத்தை அல்லாஹ் படைத்து எவ்வளவு வருடம் ஆகிறது? முஸ்லீம் பெயர்தாங்கிகளுக்கு ஒரு சவால்!

 1. ஐயோ பாவம் இந்த jaffer.khan. அல்லாவை எதிர்த்து நிற்கவும் தைரியம் இல்லை. உண்மையை ஒத்துக்கொள்வும் மனம் வரவில்லை. இவர் இன்னும் ஆறு மாதத்தில் பகடுவின் விசிறியாகிவிடுவார் என்று நினைக்கிறேன். (இவர் மூளை செத்துப்போன மற்றவர்களைப்போல் அல்ல – ரொம்பவும் நம்புகிறேனோ?)

 2. @S.jaffer.khan, நான் உங்களை மற்ற முஸ்லிம்களில் இருந்து வேறுபடுத்தி , உசத்திக்காட்கியுள்ளேன் . அதற்கு எனக்கு இந்த திட்டா?

 3. //ஸஃபிய்யா(ரலி) இரவு நேரத்திலா நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்? என்று நான் சுஃப்யானிடம் கேட்டேன். அதற்கவர் ‘இரவெல்லாமல் வேறென்ன?’ என்று விடையளித்தார் என்று அலீ இப்னுஅப்தில்லாஹ் கூறுகிறார்.
  அறிவிப்பாளர் : அலீ இப்னு ஹுஸைன், நூல்: புகாரி
  பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2039

  என்ன பதிவரே! தனக்கு எல்லா வகையிலும் பாதகம் செய்த நபிகள் நாயகத்தை கான
  ஸஃபியா(ரலி) சென்றது ஏன்…????

  தனது தந்தையாரையும், அன்புக்குரிய கணவனையும், உறவினர்களையும் கொன்ற நபிகள் நாயகத்துடன், ஸஃபிய்யா(ரலி) அவர்கள், இறுதிக்காலம் வரை நல்ல மனைவியாக நடந்து கொண்டார்களே ஏன்….???.

  இந்த ஹதீஸ்களின் மூலம் தெரிய வருவது என்ன?
  அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் மற்ற மனைவிகளைப் போலவே தானும் நபிகள் நாயகத்தின் மீது அன்பான, பாசமுள்ள, மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்./////

  அய்யாகளே, உங்களால் முடிந்தால் இறையில்ல இஸ்லாத்தில் வந்துள்ள , அறிஞர் அ.ஹாஜாமைதீன் அவர்களின் பின்னூட்டத்துக்கு பதில் குடுங்கள் பார்ப்போம். இவரது இந்த பின்னூட்டத்தைப்பார்த்துவிட்டு நான் ஆடிப்போயிருக்கிறேன்.. ஒருவேளை நபி அவர்கள் உண்மையான துதுவனாக இருந்தால்???? அல்லாவை நினைக்கையில் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

 4. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

  யார் இந்த S.jaffer.khan? உங்களைவிட தேஞ்ச ரிக்கார்டா இருப்பார் போலருக்கே?

  அட்லீஸ்ட் அவரை தமிழ்லயாவது எழுதச்சொல்லிட்டீஹன்னா நல்லாருக்கும். ஒன்னு தமிழ்ல்ல எழுதணும்.இல்லன்னா இங்கிலீஷ்ல எழுதணும். இப்படி தங்கிலீஷ்ல போட்டு சித்ரவதை பண்றது அடுக்குமா? நம்ம காகககக்கே பண்ணின சித்திரவதைக்கு ஒப்பா இருக்கும்போலக்குது.

 5. jaffer khan,

  i have extracted the relevant information from above. Please go thru again.

  1. //அல்லாஹ் களிமண்ணை சனிக்கிழமை படைத்தான்.மலைகளை ஞாயிற்றுக்கிழமை படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். உழைக்கும் உயிரினங்களை செவ்வாய்க்கிழமை படைத்தான். ஒளியை புதன்கிழமை படைத்டஹன். மிருகங்களை வியாழக்கிழமை பரப்பினான். ஆதாமை வெள்ளிக்கிழமை படைத்தான்.//

  2. ‘நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ள மக்கள் இஸ்லாமியர்களாகவே வாழ்ந்திருந்தார்கள்’ என்று கூறினார்கள்.
  http://islamkural.com/home/?p=228

  3. நூஹ் நபி வாழ்ந்த காலம் 950 ஆண்டுகள். ஆக அவர் மௌத்தாகும்போது உலகம் தோன்றி 1950 ஆண்டுகள்.

  4. The age of the boat identified as Noah’s Ark emerged with Carbon dating in Iran of a 38-mm piece of timber. The age was calculated at 4800 years.

  So, 7 days + 1000 yrs + 950 yrs + 4800 yrs = 7,000yrs (approximately)

  Hope the above clarifies.

 6. நண்பர் புரட்சிமணி பதிவில்….
  …………………………………………….
  பிரதர் பு.ம.

  ஒரே குழப்பம். நம்ம சகோக்கள் சொல்றத பார்த்தா முஹம்மது அரபிக்கு மட்டும்தான் சட்டம் போட்டிருக்கிறார் போல. இல்லை அல்லாவுக்கு மற்றவர்கள் இருப்பது தெரியவில்லை போலும்.

  வஹி வந்து இறைவன் வார்த்தை என்றால் அது பொதுவாகத்தான் எல்லோருக்கும் பொருந்துபடியாக இருக்கவேண்டும். அரபு பெண்களின் மேம்படுத்த அது என்றால் மற்றவர்களுக்கு அது எப்படி பொதுவாகும் பொருந்தும். மற்ற சமூகங்களில் வெவ்வேறாக இருக்கும் அல்லவா.

  அரபியர்களுக்காக சொல்லியிருந்தாலும் மற்றவர்களுக்கும் அது பொருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியான பதிலா?

  இறைவன் சட்டம் என்றால் அதுதான் சிறந்தது உச்சம் அதை விட சிறந்தது ஒன்றும் இருக்க முடியாது இருக்கவும் கூடாது. இஸ்லாம் பெண்கள் சட்டத்தை விட மற்ற சட்டங்கள் சிறந்தது என்றும் உள்ளது.

  மேற்கோள் காட்டும் வெள்ளைக்கார காஃபிர் என்ன சொல்கிறார் improved quite a lot என்கிறார் அதனால் முழுமையாக improve ஆகவில்லை. testified to on behalf of woman rights என்கிறார். பெண்கள் உரிமைகளை முழுமையாக பெற்றுதந்தார் என்று கூறவில்லை ஒரு சாட்சியாக இருந்தார் என்கிறார்.

  அதனால் முஹம்மது ஒரு இறைதூதர் இல்லை ஒரு சாதாரண மனிதர் என்று விளங்கமுடியும். ஆனால் அவர் இறைதூதர் என்ற நம்புகிறோம் என்றால் அந்த நம்பிக்கைக்கு நாம் மரியாதை செய்வோம். அதுதான் உண்மை என்றால் கேள்விகள் கேட்டு உண்மையா இல்லையா என்று சோதிப்போம். உண்மையாக இருந்துவிட்டால்?????LOL

  குழப்பம் தான், மேலும் மணியடித்து ஆராய்ச்சி செய்யுங்கள். புரட்சி ஓங்குக.
  …………………………………………….

 7. எல்லாம் வல்ல raja!

  இனிமே உங்களை அப்படித்தான் அழைக்கப்போகிறேன். நம்ம அன்பு சகோ ஜாபர்கானுக்கு விளக்கிவிட முடிகிறதென்றால் நீங்க எங்கயோ போய்ட்டீங்கன்னுத்தானே அர்த்தம்!

  வாழ்க ராஜா! வளர்க உங்கள் தொண்டு!

 8. வழக்கம் போல பட்டைய கிளப்பும் காபிர் நரேன்,

  நானும் புரட்சிமணி பதிவுக்கு வர்ரதா வேணாமான்னு ஒரே கொளப்பம். நான் எழுதினவுடனே ஆஷிக் இன்ன இதர ஈமாந்தாரிகள் மாயம் செய்தாற்போல காணாமல்போய்டுவார்களே என்று கவலை.

 9. உங்க சகோ சுவனப்பிரியன் லேட்டஸ்ட் பதிவில் ஒரு கமெண்ட்

  =======================================================
  நண்பர் சு.பி.

  தமிழரான உங்க ஆதங்கம் புரியுது. சரித்தரத்தை எடுத்து பார்த்தால் நம்ம நித்யானந்தா “சாமிகள்” மாதிரி மொல்லமாரிகள் பின்னாள் தான் முதலில் சில மக்கள் சென்று பிறகு பெருகி, ஏன் என்று கேள்வி எழுப்ப முடியாமல், நிலைத்து இருக்கிறார்கள்.

  நித்யானந்தா மீது சதி செய்து அவர் மீது சொல்லப்படும் அவதூறுகளை முறியடித்து இன்னும் வரும் சில நூற்றாண்டுகளில், அவர் சொன்னதுதான் உண்மை என்று அறிவியல் பூர்வமாக அவரை முன்மாதிரியா எடுக்கும் ரசிகர்களால் வெறியர்களால் நீருபிக்கப்படும. -:)LOL

  சரி விடுங்க அந்த மேட்டரே ஒரு காமெடி பீஸ்.

  ஆனாலும் நண்பரே நீங்கள் ஓன்றை தவறு குற்றம் என்று சொன்னால் அது தவறுதான் குற்றம்தான் பொய்யாகது அப்பீலே கிடையாது போங்க.

  என்னது நரேன் ஒரு இந்து மத ஆர்வலரா?? கொடுமை நான் இஸ்லாமிய ஆர்வலராக எண்ணிக்கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தில் பெட்ரோலை போட்டு கொலுத்தீட்டீங்களே. so sad. -:)

  ஆமாங்க அது யாருங்க இப்னு ஷாகீர்??

  =======================================================

 10. http://anjjamvakuppu.blogspot.in/ என்ற ராவணன், I am a fan of his.

  சரி அவரும் நமது சுவனப்பிரியன் தளத்தில் ஒரு மறுமொழி போட்டுள்ளார்…
  =======================================================

  ராவணன் said…
  எத்தனை கதைகள்?

  பிராமணர்களிடம் இதைவிட ஆயிரம் கதைகள் கூடுதலாக உள்ளன.

  சீனர்கள் இன்னும் பல புதிய கதைகளைக் கூறுகின்றனர்.

  கதை கேட்பதில் என்ன தப்பு?

  வெறும் கதை தானே?

  அடுத்த கதை என்னவோ?
  =======================================================

  லொல்@கொள்@கொல்@LOL

 11. காபிர் நரேன்
  இது நாயமா?

  நித்யானந்தாவையும் நம்ம காககககேவையும் ஒப்பிட்டு எவ்வளவு அழகா தாவா பண்ணியிருக்கேன்.

  அந்த சுவனப்பிரியன் பிளாக்ல நம்ம ரெபரன்ஸ் கொடுத்து அவரையும் நித்யானந்தாவை விட எவ்வலவு நம்ம காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா நல்லவரு வல்லவருன்னு எடுத்து சொல்லலாம்ல..

  என்ன இருந்தாலும் ஈமாந்தாரிக்கு காபிர் ஹெல்ப் பண்றதில்லைன்னு காககககே சொல்லிட்டு போய்ருக்கிறதை நிரூபிக்கிறீங்களே..

 12. @jaffer khan- what a shame on you? ? ?if yor are a true mummin just bring your source correct and proceed. .without doing that don’t be ashamed in public media.. .that’s why ‘kannumani ponnumani’ requesting mummins to ‘SINDHIKKA MATEERGALA?’ and please go through this video ’25mistakes in 5minutes by dr.zakir naik’ in youtube and know more about islam and modern science . . . (sorry,im using mobile blog ,i can’t type in tamil and can’t give the video link)

 13. இஸ்லாமிய சகோதரர் இப்னு ஷகிர் அவர்களே,
  நீங்க ஒரு தீர்க்கதரி தான். முகமதுவையும் – நித்யானந்தா ஒப்பீடு செய்து நித்யானந்தாவுக்கு கொடூரமானவனாக வரும் தகுதிகள் போதாதென்றீர்கள். காபீர்கள் நிலை பரிதாபம். தகுதிகள் மிக குறைந்த இந்த நித்தியானந்தாவை தான் மதுரை ஆதீனமாக்கியுள்ளார்கள்.

  நித்தியானந்தாவும் இஸ்லாமிய மதவாதமும்
  http://www.sirakuhal.com/2012/04/blog-post_29.html

 14. @the quickfox-panam paadhalam warai paayum. . .nithyananda use this matter as a guard to protect himself from the stones throwing on him

 15. அன்பு நெஞ்சம் கொண்ட காபிர்களே, சனாதிக்காக்களே, மூமின்களே…

  ஆன்லைன்பிஜேவின் அலெக்ஸா ரேட்டிங் போட்டு இப்ராஹிம் சந்தோஷமாக இருந்தார் இல்லையா?
  இன்றைக்கு ஆன்லைன்பிஜேவின் இந்தியா ரேங்க்

  http://www.alexa.com/siteinfo/onlinepj.com
  India 53,638

  நம்ம தாவா பக்கத்தின் ரேங்க்
  http://www.alexa.com/siteinfo/pagadu.blog.com
  India 52,951

  இந்த பகக்த்துக்கு நிறைய வரும் சனாதிக்காக்கள், மூமின்கள் காபிர்கள் அனைவருக்கும் நன்னி நன்னி நன்னி

 16. //நம்ம தாவா பக்கத்தின் ரேங்க்
  http://www.alexa.com/siteinfo/pagadu.blog.com
  India 52,951//

  பகடு வாழ்க. ( இங்கு வந்ததில் முக்காவாசிபேர் முமினாகத்தான் இருந்திருப்பார்கள். பீஜேவையும் சேர்த்து)

 17. வாழ்த்துக்கள் மூமின் இ.சா. (உங்கள் மார்க்கத்தில் வாழ்த்து சொல்லலாமா என்று தெரியவில்லை, ஏற்பது ஏற்காதது உங்கள் விருப்பம்)

  இராமநாதபுரம் பட்டணத்திலிருந்துதான் நிறைய வாசகர்கள் வந்திருக்கிறார்கள் போலிருக்குதே. உங்களுக்கு சொந்தக்காரர்கள் அங்கு அதிகமோ?

  ஒரு S.M.S ல் இலட்சம் பேரை கூட்டும் பி.ஜே வை இணையத்தில் முந்திவிட்டீர்கள். பெரிய ஆள்தான் போங்க நீங்க.

 18. இ.சா

  நம்ம(எங்க) நித்தி என்ன வசியம் செய்தாரோ தெரியவில்லை, ஆதினம் அடடா..அடடா…என்று ஆடுதோ இல்லையோ, நம்ம இணையதளமும் குறிப்பாக தமிழ்மணமமும் அடடா..அடடா என்று ஆடுகிறது. டாப் டென்னில் அதுதான் டாப்பு. போதாதற்கு தோழர் செங்கோடி நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார். எல்லாம் நித்தியின் அருளால்தான். (என்ன ஒரு குத்து பாட்டு, என்ன ஒரு ஆட்டம், அந்த ஆட்டத்தை பார்த்து வாலிப வயோதிகர்கள் நித்தியை பார்த்து ஐக்கியமாக ஒரே ஒட்டமா ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிட்டுகுருவி லேகியதிற்கு ஆப்பு) போதாதற்கு தோழர் செங்கோடி நட்சத்திர பதிவர் ஆகிவிட்டார். எல்லாம் நித்தியின் அருளால்தான். LOL

  உங்க சகோக்கள் ஒரு பக்கம், கிடைச்சாச்சு சான்சு, என்று பதிவு போட, அதற்கு எதிர்பதிவா- அனைவரும் நித்தியானந்தாதான் என- என்று எதிர் சகோக்கள் போட்டு தாக்க, உங்களுக்கு உள்ளூர ஒரே சந்தோசம்தான் போங்க. ஏன்னா???

  நித்தியானந்தா செய்தது விபச்சாரம் என்று ஒரு குற்றச்சாட்டு. அதை நியாயபடுத்தினால் கல்யாணத்தை கொச்சைபடுத்துவதாக சொல்கிறார்கள்.

  சரி, நித்தி ரஞ்சிதாவை கல்யாணம் செய்து கொண்டு, ரஞ்சிதாவிற்கு கல்யாணதிற்கு ஒரு பணத்தை அள்ளிவிட்டு, அந்த மேட்டரை அரங்கேற்றியிருந்தால், சரியாகுமா?

  அப்படியே யாரையெல்லாம் ஆசை படுகிறாரோ அவர்களை எல்லாம் காசு கொடுத்து கல்யாணம் செய்து கொண்டு, நித்தி மார்க்கத்தில் எட்டு கல்யாணம் தான் அப்பர் லிமிட் என்று சொல்லி, எட்டு கல்யாணம் வரை செய்து கொள்ளலாமா. அதற்கு மேல் என்றால், விவாகரத்தை எளிதாக்கி, மேலும் மேலும் கல்யாணம் செய்து கொள்ளலாமா?

  நித்தி கல்யாணம் செய்யாமல் அரங்கேற்றியதுதான் குற்றமா? அல்லது அந்த அரங்கேற்றத்தை உள்ளூர ரசித்து பார்த்ததுதான் குற்றமா? கடவுள் அச்சம் உள்ளவர்கள் அந்த சி.டியை பார்ப்பார்களா இல்லை அப்படி பாத்ததுதான் குற்றமா? என் குற்றமா உன் குற்றாம……….யாரை இங்கே குற்றம் சொல்ல?

  உங்களுக்கு இந்த பதிவு ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல…..

  http://pagadu.blog.com/2011/12/02/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

 19. lexa Traffic Rank
  Reputation
  194,936
  Global Rank
  1,580
  Rank in AE

  Alexa Traffic Rank Reputation
  740,999
  Global Rank
  49,821
  Rank in IN
  உலக அளவில் வித்தியாசத்தை பாருங்கள் .இணையதளம் பார்க்கும் முஸ்லிம்கள் அதிகமாக வளைகுடாவில் உளதால் ஆன்லைன்பீஜே உலக அளவில் பகடுவை விட பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
  அடுத்து பகடுவை அதிகம் பார்க்கும் மக்கள் இந்தியா என்பதால் முஸ்லிம்களுடன் நேசத்துடன் இல்லாத முஸ்லிம் அல்லாத மக்கள்தான் அதிகம் பகடு பார்க்கின்றனர்.

 20. ஓ ! மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

  பகடு தள ரேங் இன்னும் கொஞ்சம் ஏறிடிச்சா!
  பிஜே ரேங் இன்னும் கொஞ்சம் எறங்கிடுச்சா…

  அப்டி போடுங்க…

 21. நரேன்…

  நித்தி நம்ம தளத்தை பார்த்தாரு.. அப்பறம் விலையாட்டு வெனையானாலும் ஆயிடும்..

  ஆஹா நம்ம காககககே இருக்கிற தூரத்துக்கு நாமளும் முயற்சி பண்ணுவோம்னு எறங்கினா என்ன ஆகிறது? கொஞ்சம் யோசிச்சி பாத்தீங்களா?

  காககககே ரேஞ்சுக்கு நித்தி ஆனாலும், நம்ம இப்ராஹிமை அவர் கொஞ்சம் காசு கொடுத்து அமுக்கிறனும். அப்புறம் நித்தி பண்ற எல்லா லூட்டியளையும் இப்ராஹிம் மானே தேனே பொன்மானே போட்டு அழகிய மொழியில் நெஞ்சம் நெகிழ வைச்சிடுவார்..

  அப்புறம் ஆயீஷாவை தொட வேலை பண்ணினதெல்லாம் மூமின்களோட நன்மைக்கெங்கற மாதிரி, ரஞ்சிதாவோடு கும்மி அடிச்சதெல்லாம் உலகத்தார் உய்யவேன்னு ஒரே போடா போடுவார் நம்ம இப்ராஹிம்.. நாமளும் ரசிக்க்லாம். பொழுது போவுமில்லா

 22. @pagadu- here in srilanka lot of conflicts going on regarding a issue of breaking down of mosque in dambulla by buddist monks.. . buddist shown their real face to muslims.although muslims joined with buddists against US and UN..no tamil is reacted ..buddist have crossed the enemy+enemy=friend agreement

 23. @விஜய் சிறிலங்கா, நீங்க நித்தி பற்றி சொன்னது உண்மை தான்.

 24. பகடு /////காககககே ரேஞ்சுக்கு நித்தி ஆனாலும், நம்ம இப்ராஹிமை அவர் கொஞ்சம் காசு கொடுத்து அமுக்கிறனும். அப்புறம் நித்தி பண்ற எல்லா லூட்டியளையும் இப்ராஹிம் மானே தேனே பொன்மானே போட்டு அழகிய மொழியில் நெஞ்சம் நெகிழ வைச்சிடுவார்./////.
  காசுக்காக த்தான் இப்படி ஆட்டம் போடுகிறீர்கள் என்ற உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு உண்மையாகிறது.
  ///பகடு தள ரேங் இன்னும் கொஞ்சம் ஏறிடிச்சா!//
  நான் இங்கே கூறவருவது இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் பகடு பார்த்தது போல உமது சம்பா கூனி கூட்டம் கும்மியடித்துள்ளனரே ,அதை பொய்ப்பிக்கவே

 25. “திருக்குர்-ஆன் இறைவேதமே!” -கிறித்தவர்களுடன் விவாதம்!”

  http://suvanappiriyan.blogspot.in/2012/05/blog-post_03.html

  என்ன இ.சா. அலெக்ஸா ரேட்டிங்கு எகிறியவுடன் TNTJ தளத்திலும் உங்கள் கைவண்ணம் காட்ட அழைத்து விட்டார்களா?

  மேலே உள்ள நண்பர் சுவனன் பதிவு சாட்சாத் நீங்கள் எழுதியது போலவே உள்ளது. அதை அப்படியே இந்த தளத்தில் காப்பி பேஸ்ட் செஞ்சா ஒரு வித்தியாசமும் தெரியாது.

  வாஹாபினா வாஹாபிதான்.

 26. //நாம் பிறந்து வளர்ந்த நமது தாய் நாடு இந்த அளவு கேடு கெட்டு போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் பதிவுகளாக வடிக்கிறார் வாஞ்சூர் பாய். அப்படியாவது இந்த மக்கள் திருந்தி நமது நாட்டை முன்னேற்ற மாட்டார்களா? என்ற ஆதங்கமே. நாட்டுப் பற்று அதிகரித்ததினால் வந்த பதிவுகளே அவை.
  //
  இப்படி சூ பீ பதில் போட்டிருக்கிறார்.

  ஒரு மெய்யான மும்மீனுக்கு நாட்டு பற்று அதுவும் இந்திய நாட்டுப் பற்று இருக்கலாமா? இது நபி வழிக்கு கேடு தருமே. சூ பிக்கு என்ன ஆச்சு ?

 27. //தேவதூதர்களுக்கு எதுவும் பத்தாதா? :
  சுவனத்தில் அழகிய பெண்களை மணமுடித்து வைப்போம் என்று அல்லாஹ் சொல்லிக்காட்டும் வசனங்களை மேற்கோள்காட்டி இப்படித்தான் உங்கள் வேதம் உங்களை அழைக்கிறது என்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
  அனைவரும் மரித்தவுடன் வானுலகத்தில் தேவ தூதர்களாக வாழ்வார்கள் என்பது கிறித்தவ நம்பிக்கை. அப்படியானால், வானிலுள்ள தேவ தூதர்கள் கீழுலகத்திற்கு இறங்கி வந்து இங்குள்ள பெண்களோடு உடலுறவு கொண்டார்கள் என்று ஆதியாகமத்தில் உள்ளதே. தேவதூதர்களுக்கு அங்கே கிடைப்பது போதவில்லை என்று தானே இங்கே இறங்கி வருகிறார்கள் என்றும், ஒரு மனைவியை தியாகம் செய்தால் உனக்கு நூறு மனைவி கிடைப்பாள் என்று சொல்லித்தானே ஏசுவும் உங்களை ஊழியம் செய்யக் கூப்பிடுகின்றார் என்றும் பீஜே கேட்க அமைதியானார்கள் ஊழியக்காரர்கள்.
  //

  இதுவல்லவோ மார்க்கங்கள் – சூ பீ மற்றும் பீ ஜி அண்ணன் வைக்கும் அதிரடி வாதங்கள். பகடு உங்களுக்கு கடும் போட்டி எழுந்திருக்கிறது.

  நல்ல மார்கம்யா

  //
  தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப்.
  //

  இசா இதென்ன, விபரீதம். தங்கள் பழங்களை சாப்பிடுமாமே ஆதாரம் இருக்காமே. உங்கள் பதில் என்னாவாக இருக்கும் ?

 28. ” //தேனீக்கள் பூக்களில் உண்பதோடு மட்டுமல்லாமல், கனிகளிலும் உண்கின்றது என்று சொல்லும் குர்ஆன் வசனம் பொய் என்று ஜெர்ரி சொல்ல மறு அமர்விலேயே அதற்கான ஆதாரத்தை அள்ளிப்போட்டவுடன் ஜெர்ரியும் கப்சிப்.
  //
  இசா இதென்ன, விபரீதம். தங்கள் பழங்களை சாப்பிடுமாமே ஆதாரம் இருக்காமே. உங்கள் பதில் என்னாவாக இருக்கும் ?”

  செங்கொடி இதைக்குறித்து அருமையான கட்டுரையை அவருடைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். முடிந்தால் பி.ஜே.அதற்கு பதில் கொடுக்கட்டும்.

 29. அடப்பாவிகளா…

  காபிர் தேனீக்கள் மூலம் சான்று அளிக்கும் அல்லாஹ் என்று ஒரு அருமையான தாவா கட்டுரை எழுதி காபிர்களுக்கும் மூமின்களுக்கும் வெளக்கியிருக்கிறேன்.
  இப்படி சொல்லுகிறீர்களே..

  http://pagadu.blog.com/2011/09/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/

 30. பகடு,

  “அடப்பாவிகளா…
  காபிர் தேனீக்கள் மூலம் சான்று அளிக்கும் அல்லாஹ் என்று ஒரு அருமையான தாவா கட்டுரை எழுதி காபிர்களுக்கும் மூமின்களுக்கும் வெளக்கியிருக்கிறேன்.
  இப்படி சொல்லுகிறீர்களே..”

  உங்களுடைய கட்டுரையையும் படித்திருக்கிறேன். நன்றாக நகைச்சுவையுடன் எழுதி அல்லாஹ்வின்(அதாவது முஹம்மதின்) அறிவு எவ்வளவு மேலோங்கி இருக்கிறது என்பதை விளக்கி இருக்கிறீர்கள்.

 31. இ.சா.

  நண்பர் சு.பி. எழுதியது (காப்பி பேஸ்ட்) சீரியஸ் பதிவாமே, பதிவிற்கு வந்த மறுமொழிகளை பார்த்தால் அப்படிதான் தெரிகிறது. வரவர எது காமெடி எது சீரியஸ் என்பதே புரியமாட்டேங்கிறது.

 32. வாங்க வாங்க நரேன்…
  வூட்டுக்கு வாங்க.. என்ன்னென்ன சீரியஸ் சமாச்சாரமெல்லாம் காமெடியாகும்னு பாக்கலாம்.

 33. அரபு நாட்டு கடவுள் கணக்குப் படி, ஒரு நாள் என்பது ஒரு ஆண்டுக்கு நிகரானது எனில் ஆறு நாட்களில் உலகை படைத்தால் 6000 ஆண்டுகள் அல்லவா? அப்படியும் கணக்கு இடிக்கிறதே? நீங்கள் 7000 ஆண்டுகள் என்கிறீர்களே ஒரே குழப்பமாக இருக்கிறதே. தெளிவான திருமறையில் இப்படி ஒரு குழப்பமா? என்னய்யா இது குரானுக்கு வந்த சோதனை???

 34. வாங்க இனியவன்..
  சரியா படிங்க.. முதல் ஹதீஸ் என்ன சொல்லுதுன்னா, அந்த கணக்கு இங்கண செல்லுபடியாகாதுங்குது..
  ஆறு நாள்ல உலகத்தை படைச்சா அது ஒரு நாள் ஆயிரம் ஆண்டு கணக்கு நாள் அல்ல. அது ரொம்ப சாதாரணமான சனிகிழமை வெள்ளிக்கிழமை நாள்.

  அதனால இது ஆயிரம் ஆண்டு ஐம்பதாயிரம் ஆண்டு அல்ல. அது பத்தி தனியா ஒரு பதிவு எழுதியிருக்கோம்ல..

  வலது பக்கம், கார்பன் கூட்டாளி கண்டுபிடித்த அல்லாஹ்வின் கிரகம் என்ற பதிவை பார்க்கவும்..

 35. //…நபிஹள் நாயஹம் தீர்க்கதரிசனமாக சொன்னதுபோலவே இஸ்லாம் ஒரு பாம்பு போல சுருண்டு மீண்டும் மெக்கா மெதீனாவில் மட்டுமே இருக்கும் மதமல்ல …//

  இது என்னங்க?

 36. வாங்க தருமி
  இதுவும் நம்ம காககககே சொன்ன ஹதீஸ்தான்.

  Abû Hurayrah relates that Allah’s Messenger (peace be upon him) said: “Islam began strange, and it will become strange again just like it was at the beginning, so blessed are the strangers.” [Sahîh Muslim (1/130)]

  `Amr b. `Awf relates that Allah’s Messenger (peace be upon him) said: “The religion will shrink back to the Hijâz like the snake shrinks back into its hole. It will cling to the Hijâz like the mountain goat clings to the mountaintop. The religion began strange, and it will become strange again just like it was at the beginning, so blessed are the strangers who restore what the people corrupt of my Sunnah.” [Sunan al-Tirmidhî (#2630)] Al-Tirmidhî grades it as good and authentic (hasan sahîh).

 37. pagadu

  சுவனபிரியன் இது சம்பந்தமா ஒரு பதிவு போடபோறேன் சொல்லி இருக்கார். இன்ஷா அல்லா. அதை பாதாவது நீங்க திருந்தரீங்கலானு பாப்போம். யா அல்லாஹ்.

  ஆனா தருமி குடுத்த உங்க பதிவோட லிங்க எடுத்து விட்டார்.

 38. இதுக்கும் இன்னமும் பதிலை எழுதலையா?
  ரொம்ப மாசத்துக்கு முன்னாடி, ஒருத்தர் அடிமைக்கு அடிமை பெண்ணுக்கு பெண் ஆணுக்கு ஆண் பலி வாங்கணும்னு காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் சொன்னதுக்கு பதில் எழுதறேன்னு சொன்னாரு.. அதுக்கும் பதில் எழுதலை..

  இந்த பெயர்தாங்கி முஸ்லீம்களோட தொல்லை தாங்கலைய்யா…

 39. muthalla kolgalla patri oru arivum ungalta illa(science) appuram kolgal suriyane suthuthunu sonninga….. ulagam thondrunathu peranda vedippu moolamnu soonninga……. sooriyan nagaruthungrathe ungalukku 10 varusathukku munnadi than theriyum… yella uyiranamum thanniral aanathunu ungalukku 300 varasathukulla than theriyum…… thavarangalilum aan, pen irukuthungrathu 300 varudathuku munnadi than ungaluku theriyum……… yempa ithai yellam QURAN 1400 varasathuku munnadiye solli irukke…….. ithuku yenna solringa? ungaloda ariviyal maara koodiyathu yerumbu pesumnu quran sonnapa, ithe kindal senja neenga ippa athe yerumbu thangalukulla karuthu parimaarathe vachu DISCOVERY CHANNALa oru prog poduringa…. pluto planetnu sonna neenga, ippa illangringa…… onrai mattum purinthu kollungal ARIVIYAL MAARA KOODIYATHU…… QURAN NILAIYANATHU……. ARIVU YENNAM UNGAL ARIVU KADAISIYIL VANTHU SERVATHU ISLAM YEENDRA MUGAVARIKE!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s