குரான் வீடியோ விளக்கம்: ஈமான் கொண்டோரே! கொலைக்காக பழிதீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது-

முதலில் இந்த வீடியோவை பாருங்கள்.

சிரிக்கிறீர்களா? நாசமாப் போற காஃபிர்களே?

இதனைத்தான் அல்லாஹ்வும் தன்னுடைய அல்குரானில் சொல்கிறான்.

2:178. ஈமான் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண்

ஈமான் கொண்டவர்கள் என்ன செய்யணும்?

உங்களுடைய அடிமையை இன்னொருத்தன் கொன்றுவிட்டால், அவனுடைய அடிமையை நீங்கள் கொல்லலாம்.

உங்களுடைய பெண்டாட்டியை இன்னொருத்தன் கொன்றுவிட்டால், அவனுடைய பெண்டாட்டியை நீங்கள் கொல்லலாம்.

உங்களுடைய மகளை இன்னொருத்தர் கொன்றுவிட்டால், அவருடைய மகளை நீங்கள் கொல்லலாம்.

இது நான் சொல்லலை! அல்லாஹ் சொல்றான், நம்ம கண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லா வழியாக.

இப்ப அந்த வீடியோவை திரும்ப பாருங்கள்

http://naattamain.blogspot.com/2010/11/blog-post_27.html

காமக்கொடூர நாய்கள் என்று இஸ்லாமிய சகோதரர்களை கடுமையாக திட்டியிருக்கிறார் அந்நியன்2  என்ற இஸ்லாமிய சகோதர பதிவர்.
இந்த படங்களை போட்டு இவ்வாறு ஆசிட் ஊற்றிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு கடுமையாக இஸ்லாமிய ஷரியா முறையில் தண்டிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கூடவே நிறைய மார்க்க சகோதர்ர்களும் கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமிய ஷரியா என்றால் அல் குரானில் அல்லாஹ் என்ன சொல்கிறானோ அதனை கேட்டு அதன்படி தண்டனை தருவதுதான்,.

பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரியின் சகோதரர் என்ன செய்ய வேண்டும்? ஆஸிட் ஊற்றிய இஸ்லாமிய சகோதரரின் சகோதரி முகத்தில் ஆஸிட் ஊற்ற வேண்டும்.
ஆஸிட் ஊற்றியவர் முகத்தின் மீது ஆஸிட் ஊற்றக்கூடாது! ஆஸிட் ஊற்றியவரது சகோதரியின் முகத்தில் ஆஸிட் ஊற்ற வேண்டும்.

இஸ்லாமிய ஷரியா இந்த முறையில் பின்பற்றப்படவில்லை என்றால் எப்படி ஒரு நாட்டை இஸ்லாமிய நாடு என்று சொல்வது?

இந்த காலத்தில் அடிமை முறை இல்லாமல் போய், அல்லாஹ் அனுப்பிய அடிமை வசனங்களுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. ஆனாலும், எல்லாக்காலத்துக்கும் பொருந்துவதாக அனுப்பட்ட அல் குரானில் இன்று சில வரிகள் தேவையில்லை என்று சொல்லுவது அல்லாஹ்வின் அறிவையே கேள்வி கேட்கிற விஷயமாயிற்றே?

ஆகையால், இந்த வசனத்தை இப்படி புரிந்துகொள்ளவேண்டும். உங்கள் வீட்டு வேலைக்காரனை ஒருத்தன் கொன்றுவிட்டால், அவன் வீட்டு வேலைக்காரனை நீங்கள் கொல்லலாம்! இதெப்படி இருக்கு?

உங்க சண்டையில என்னை ஏண்டா இழுக்கிறீங்க என்று வேலைக்காரன் கேட்டால் உடனே, அவன் நபிஹள் நாயஹம் அல்லாவின் இறைதூதர் இல்லை என்று சொல்கிறான் என்று அவதூறு வழக்கு போட்டுவிட வேண்டியதுதான்! யா அல்லாஹ்!

இப்போதாவது புரிகிறதா?  இது நபிஹள் நாயஹம் தானாக இட்டுக்கட்டியதல்ல, இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் தனது கருணையாக நபிஹள் நாயஹத்தை அனுப்பி நமக்கு அவர் வாயிலாக கொடுத்த அருட்கருணை என்று தெரியவில்லையா?

Advertisements

லேட்டஸ்ட் நபி மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவு

மிர்ஸா குலாம் அஹமது ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களின் சாவு
 மிர்ஸா குலாம் அஹமது என்பவரை பற்றி தமிழ்நாட்டு மூமின்களுக்கும்,  காபிர்களுக்கும் நிறைய தெரியாது. ஆகையால் அவரை படம் வரைந்து பாகங்களை குறிக்கிறேன்
 குவாதியான் (Qadian) என்ற பஞ்சாப் ஊரில் 1835 ஆண்டு பிறந்த இவர் லாயருக்கு  படித்தார். தேர்வில் தோற்றதால், முல்லாவாக முடிவு செய்தார்.   (இதில் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன)
 35 வயதில் அல்லாஹ் தன்னிடம் பேசுவதாக கூற ஆரம்பித்தார். கிறிஸ்துவ மிஷனரிகளை  எதிர்த்து இஸ்லாமை நிலைநிறுத்துவதற்காக எழுத ஆரம்பித்தவர் பிறகு பிரம்ம சமாஜ்  போன்ற இந்து மத குழுக்களையும் தாக்கி எழுத ஆரம்பித்தார்.
கொஞ்சம் புகழ் வந்ததும் தானே மெஸையா, தானே இறுதி நபி,இறுதியாக வர வேண்டிய  இயேசு தானே, நானே கல்கி அவதாரம் என்றெல்லாம் கூற ஆரம்பித்தார்.  இதெல்லாம் பார்த்து கடுப்பான மற்ற  முஸ்லீம் தலைவர்கள் இவரை கண்டால் விலக ஆரம்பித்தார்கள்.
 இஸ்லாமில் இமாம் மெஹ்தி என்ற இறுதி மெஹ்தி கருத்து உண்டு. அது நான் தான் என்று  கூறினார்.
 இவரது முக்கிய கொள்கைகள்
  •  குரானில் நாஸிக் = மன்ஸூக் (நீக்கப்பட்ட வசனம், நீக்கும் வசனம்) என்றெல்லாம்  எதுவும் கிடையாது.
  •  ஹதீஸை விட குரானே மேல். குரானை ஹதீஸ் ஒத்துப்போனால் அது உண்மையான ஹதீஸ்.  இல்லையென்றால் அது பொய்யான ஹதீஸ்.
  •  இயேசு சிலுவையிலிருந்து தப்பி காஷ்மீரில் வந்து செத்துப்போனார்
  •  யாராவது முஸ்லீம்களை தாக்கினால்தான் ஜிகாத். ஜிகாதை காரணமாக வைத்துகொண்டு மற்ற  நாடுகள் மீது படையெடுப்பது ஜிகாதாகாது.
தன்னை அடிக்கடி நபி என்றும் ரசூல் என்றும் கூறிகொண்டார். இது நபிஹள்  நாயஹத்தின் இறுதி தூதுத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகிறது என்று மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூஅலைஹிவஸல்லம் அவர்களை மட்டும்  பின்பற்றும்  முஸ்லீம்கள் இவரை பொய்யர் என்று அழைக்கிறார்கள்.
இவர் தன்னைத்தானே கல்கி  அவதாரம் என்றெல்லாம் சொல்லிகொண்டதால், பல ஆர்ய சமாஜிகள் இவருடன் விவாதிக்க முனைந்தனர்.  இவரை விமர்சித்த ஒரு ஆர்ய சமாஜத்தை சேர்ந்த பண்டிட் லேக் ராம் என்பவரை ஆளை வைத்து தீர்த்துக்கட்டிவிட்டு, அல்லாஹ்வின் ஆள்தான் இந்த ஆரிய சமாஜியை கொன்றது என்றெல்லாம் பேசிவந்தார். (இவருக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ் அரசு இந்த வழக்கை துலக்கவில்லை. இவ்வாறு தீர்த்துகட்ட துஆ செய்து இவர் இறந்ததால், இது ஒரு தீர்க்கதரிசனம் என்று அஹ்மதியா பிரிவினர் சொல்வார்கள். இதிலும் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன. ஏன் பிரிட்டிஷ் அரசு அஹ்மதியா மார்க்கத்துக்கு ஆதரவாக இருந்தது, இன்னும் இருக்கிறது என்பது பெரிய ரகசியம் எல்லாம் இல்லை. முஸ்லீம்கள் பிரிட்டிஷ் மீது ஜிகாத் தொடுக்க தேவையில்லை என்று பத்வா போட்டதுதான் காரணம். நான் பிரிட்டிஷ் ராஜ்யத்தின் விசுவாசமான பிரஜை என்றெல்லாம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார் நம்ம புதிய நபி.  )
இவரை பின்பற்றுபவர்களை அஹ்மதியாக்கள் என்று மற்ற முஸ்லிம்கள்  அழைக்கிறார்கள். இவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று பாகிஸ்தான் அரசாங்கம்  அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டு அஹமதியக்கள்  மெக்காவுக்கு ஹஜ்  செய்யமுடியாது. மற்ற நாட்டு அஹ்மதியாக்களது பாஸ்போர்ட்டில் இவர்களை  அஹ்மதியாக்கள் என்று குறிக்காததால் அவர்கள் ஹஜ் செய்கிறார்கள்.
சிறுகுறிப்பு ஓவர்.
சரி இப்போது அவரது சாவுக்கு வருவோம்.
 இவர் பலரோடு பல விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். அதே சமயத்தில் தன்னிடம்  எதிர்காலத்தில் நடக்கப்போகும் பல விஷயங்களை அல்லாஹ் சொல்லியிருக்கிறான்.  தீர்க்கதரிசனமாக தான் சொல்லும் 150 தீர்க்கதரிசனங்கள் நடக்கும். அவை  அல்லாஹ்தான் தன்னிடம் சொன்னான் என்று நிரூபிக்கும் என்றெல்லாம்  எழுதியிருக்கிறார்.
 இவரோடு விவாதித்த முஸ்லீம்களில் ஒருவர் மௌலவி சனாவுல்லாஹ் அம்ரித்சாரி  என்பவர். இவர் ஈமானுள்ள முஸ்லீமாக அழகிய வார்த்தைகளில் மிர்ஸா குலாம் அஹ்மதை,  “பொய்யன், தஜ்ஜால், இட்டுக்கட்டுபவன்” என்றெல்லாம் கூறினார்.
 குலாம் அஹ்மத், “நஸூல் ஈ மஸி என்ற என்னுடைய புத்தகத்தில் 150 தீர்க்க  தரிசனங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து எனக்கு  வந்தவை.  அவற்றை பொய் என்று நிரூபிக்கட்டும். தைரியமிருந்தால் குவாதியானுக்கு வா.  என்னோடு விவாதம் பண்ணு. மௌலவின் சனாவுல்லா காரணமில்லாமல் குரைக்கும் நாய். ”  என்றெல்லாம் அழகிய நபி வழியில் சவால் விட்டார்.
 “இன்னும் மூன்று தீர்க்கதரிசனங்களை சொல்லுகிறேன்.  1) இவன் (சனாவுல்லாஹ் அம்ரித்சாரி) குவாதியானுக்கு வரவே மாட்டான்  2) நான் சாவதற்கு முன்னாலே அவன் சாவான்  3) அரபிய கவிதை – உருது கவிதை சம்மேளனுத்துக்குக் கூட அவன் வரமாட்டான்.” என்று  தீர்க்கதரிசனம் சொன்னார்.
 மௌலவி சனாவுல்லாஹ், நேராக கிளம்பி குவாதியானுக்கு போய், குலாம் அஹ்மதுக்கு ஒரு  லெட்டர் அனுப்பினார்.
 ‘Bismillah Al-Rehman Al-Raheem. To Janab Mirza Ghulam Ahmad Saheb,  Raees-e-Qadian.  This humble self, according to your invitation mentioned in Aijaz-e-Ahmadi  pp. 11-13, I am presently here in Qadian. Until now, Ramadhan prevented me  from accepting your invitation, otherwise I would not have delayed it. I  swear upon God that I do not have any personal grievance or animosity  against you. Since according to you, you are appointed on such a high  position which is for the guidance of all humanity in general and for  sincere persons like me especially, therefore I firmly hope that you will  not spare any effort to make me understand, and as promised, you will give  me permission that I will express in front of people my thoughts about your  prophecies. Once again I remind you of my sincerity and the trouble that I  have taken to travel all the way, and by virtue of the grand position,  please give me a chance.’ …. from Abu al-Wafa Sanaullah. dated 10th  January 1903.’ (Tareekh-e-Mirza by Maulana Sanaullah Amratsari p. 61)
 நம்ம குலாம் அஹ்மதுக்குவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
 உடனே நபிபெருமான்கள் வழக்கம்போல செய்வதைப்போல, அல்லாஹ்வை துணைக்கிழுக்கும் வேலையை செய்தார்.  “உங்களைபோன்றவர்களிடம் விவாதம் செய்யமாட்டேன் என்று நான் அல்லாஹ்வின் வாக்கு  கொடுத்திருக்கிறேன்.  என்று ஆரம்பித்து படித்தாலே தலைசுற்றுகிற கண்டிஷன்  போட்டார்.
 “I have promised God that I would never debate with those people  (opponents). Thus that way which is quite far away from debates is that to  clear this stage you will have to promise that you will not go out of the  ‘Minhaj-e-Nabuwwat – way of the prophethood’ ……. 2nd condition is that  you will not be allowed to speak at all. You will only give a written  objection, one line or two lines, that this is your objection. Then in the  gathering, a detailed reply would be given. For objection, there is no need  to write in detail, just a line or two is enough. 3rd condition is that you  would raise only ONE objection per day. Since you have not informed us of  your coming, rather you have sneaked in like a thief, because of lack of  free time and work of printing the book, we cannot spend more than three  hours. Remember that this will never be allowed that you give a long  lecture like a sermon in front of public, instead you will have to  absolutely keep your mouth shut, as deaf and dumb, so that the talk does  not turn into a debate. First you will ask only regarding one prophecy. For  three hours I can give its reply, and at each you will be cautioned that  even if now you are not satisfied then write it down. It would not be your  task to let (people) hear your objection. We will read ourselves, but it  should not be more than two or three lines. This way, you will not suffer,  since you have come to clear your doubts, this way is excellent to remove  doubts. I will announce to the people that regarding this prophecy, such  and such doubt has come into the heart of Molvi Saheb, and this is its  reply. This way all the doubts will be cleared. But if you want that like a  debate you are allowed to talk, then this will never happen. (Mirza  repeated the same conditions at least two more times in the next paragraph)  …. From my side, I swear upon God, that I would not go out of this, and  will not hear anything, you will not dare to utter a single word from your  mouth. And I bind you also with the swear of God, that if you have come  with a true heart, then be bound to it and do not spend your life in  creating trouble and disturbance. And whosoever among the two of us, breaks  this oath, then God’s curse be on him, and may God will that he sees the  fruit of this curse in his life. Ameen….. by the pen of Mirza  Ghulam  Ahmad by his own hand” (Tareekh-e-Mirza pp.62-64)
ஆக இப்படியே இழுத்தடித்து விவாதம் பண்ணவே இல்லாமல் துரத்திவிட்டார் நபிவழியில்  வந்த குலாம் அஹ்மது.
ஊர் திரும்பிய மௌலவி சனாவுல்லாஹ், அல்லாஹ் அனுப்பிய இந்த புதிய நபி குலாம் அஹ்மதை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. ஆகையால் ஏக கடுப்பான நம்ம நியூ நபி  குலாம் அஹ்மது அல்லாஹ்விடம் துஆ வைத்தார்.
Prayer of Mirza Ghulam, against his erstwhile opponent, Molvi Sanaullah  Amratsari seeking judgment from Allah
 “Dear Mr. Sanaullah. Salaam on those who follow the right path.  My  rejection and disapproval has been going on for a long time in your  magazine. You have always remembered me in your paper as Mardood, Liar,  Dajjal, corrupt and have advertised me all over the world that i am a  Fabricator and Dajjal, and Liar and that my claim of Maseeh Mowood is  absolutely a Fabrication. …..If I am such a Liar and FAbricator, as you  remember me in your paper, THEN I WILL DIE IN OUR LIFETIME, because i know  that a LIAR and Corrupt does not have a long life and at last he dies as a  failure within the lifetime of his fierce opponents with great humiliation  and discontentment….If I am not a LIAR and FABRICATOR and is honored by  the addresses of God and am Maseeh Mowood, then I hope by the Grace of God  that according to the Tradition of God you will not be safe from the  punishment of a LIAR. Thus that punishment which is not by human hands but  only at the hands of God, such as Plague and Cholera etc. deadly diseases  are not afflicted upon you than I AM NOT FROM GOD. This is not a prophecy  because of inspiration or revelation, rather just as a prayer i have sought  justice from God and I pray to God…. {O my Master! Baseer and Qadeer who  is Aleem and Khabeer, who knows my inside the heart! If this claim of  Maseeh Mowood is just a fabrication of my egotistical self, in Your Eyes I  am Corrupt and Liar and day and night Fabrication is my business, then O my  Beloved Master! I pray with great humility in your Presence that kill me in  Molvi Sanaullah and with my death make him and his Jamaat happy. Ameen.  But O my Perfect and True God! If Molvi Sanaullah is not right in these  allegations which he accuses me of, then kill him in my lifetime, BUT not  by human hands, rather by Plague or Cholera deadly diseases, … but i see  that his tongue has crossed all boundaries, he considers me worse than  those thieves and dacoits….he considers me worse than the whole world and  has spread about me in far away places that this man actually is corrupt  and trader and Liar and fabricator and an extremely bad person….Thus now  I am now taking refuge in you and requests you that make true judgment  between me and Sanaullah. Whoever is in your eyes truly a Liar and corrupt,  KILL HIM IN THE LIFETIME OF TRUTHFUL PERSON, or afflict him with some  serious illness which is like death. O My Beloved Master! Do Just that.  Ameen.”
அதாவது மௌலவி சனாவுல்லாஹ் தவறாக சொல்லியிருந்தால் அவரை தான் உயிரோடு  இருக்கும்போதே சாகடி என்று அல்லாஹ்விடம் கேட்டார். அதுவும் மனுஷ கையால்  சாகக்கூடாது,  பிளேக், காலரா மாதிரி அல்லாஹ் கொடுக்கும் தண்டனையில்தான் போக  வேண்டும் என்று கேட்டுகொண்டார். அது மாதிரிநான் பொய் சொல்லியிருந்தால் என்னை  அப்படி கொண்டு போ என்று கேட்டுகொண்டார்.
அடுத்த வருஷம் மிர்ஸா குலாம் காலராவில் 26ஆம் தேதி மே மாசம் 1908இல் போய்  சேர்ந்தார்.
 மௌலவி சனாவுல்லா செத்த வருஷம் 15th March 1948
நமது மூஃமின்கள் ஆஹா என்று புல்லரித்து இணையப்பக்கம் எல்லாம் போட்டு, குலாம் அஹமதுவை போலி நபி என்று அல்லாஹ்வே நிரூபித்துவிட்டார் என்று குதி குதி என்று குதிக்கிறார்கள்.
ஆனால், நபி வழியில் வந்த குலாம் அஹமதுவை பின்பற்றுபவர்கள் என்ன சொல்கிறார்கள்? அவர் வயிற்றுப்போக்கில்தான் செத்து போனார். காலராவில் சாகவில்லை என்று அழிச்சாட்டியம் செய்கிறார்கள். (நமது மூஃமின்கள் போலவே அஹ்மதியாக்களும் இருக்கிறார்கள் என்பதை பார்த்து உங்களுக்கு நெஞ்சம் நெகிழவில்லையா?)
மிர்ஸா குலாம் சாகும்போது என்ன சொன்னார்?
 மிர்ஸா குலாமின் மாமனார் மிர் நஸிர் நவாப் படுக்கை அருகே உட்கார்ந்திருந்தார்.
மிர்ஸா குலாமுக்கு வாந்தி பேதி ஆரம்பித்தது.
ஹயத் ஈ நஸிர் என்ற புத்தகத்தில்  மிர் நஸிர் நவாப் எழுதினார்.
 “When i reached Hazrat Saheb and saw his condition, then he addressed me  and said:  ‘MIR SAHEB. I HAVE DEVELOPED EPIDEMIC CHOLERA’.  I think After that He (MIRZA) did not say anything clear till he died next  day at 10 am.”  (Hayat-e-Nasir, p.14)
“நான் ஹரசத் சாஹேப்( மிர்ஸா குலாம் அஹ்மது)வை அடைந்து அவரது நிலையை பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து சொன்னார்,”மிர் சாஹேப். எனக்கு காலரா தொத்துவியாதி
தொற்றிவிட்டது”  அதற்குப் பிறகு மிர்ஸா எதுவும் தெளிவாக சொல்லவில்லை. அடுத்த நாள் காலையில் 10 மணிக்கு மரணமடைந்தார்” (ஹயாத் ஈ நஸிர் பக்கம் 14)
வாந்திபேதி காலரா வந்துதான் செத்தார் மிர்ஸா குலாம் அஹ்மது.  ஆனால், நமது அஹ்மதியாக்கள் இவரது சாவை பூசி மொழுகி தொடர்ந்து அஹ்மதியா இஸ்லாமையே ஒரிஜினல் இஸ்லாம் என்று பரப்பி வருகிறார்கள்.
ஆனாலும் மிர்ஸா குலாம் அஹ்மது ஆரம்பித்த அந்த அஹ்மதியா மார்க்கம் அப்போதே ஒரு  லட்சம் முஸ்லீம்கள் கொண்டதாக இருந்தது. இப்போது அது இன்னும் பல மடங்கு  விரிவடைந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இன்றைக்கு அவர்கள் முஸ்லீம்கள்  இல்லை என்று அரசாங்க ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் பாகிஸ்தானிலேயே 40 லட்சம்  பேர் அஹ்மதியாக்களாக இருக்கிறார்கள். அதாவது சுதந்திரமடையும்போது  பாகிஸ்தானில் 50000 பேர்களாக இருந்த அஹ்மதியா முஸ்லீம்கள் 80 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்.  பாகிஸ்தானின் ஒரே ஒரு நோபல்பரிசு பெற்ற  விஞ்ஞானி அஹ்மதியா பிரிவை சேர்ந்தவர். (அறிவியலுக்காக  நோபல் பரிசு பெற்ற ஒரே முஸ்லிம் விஞ்ஞானி அப்துல் சலாம் என்ற அஹ்மதியா பிரிவைச்சார்ந்தவர்தான்.)  இன்று  உலகம் முழுவதும் சுமார் 2 கோடி  அஹ்மதியாக்களுக்கு மேல் இருப்பார்கள் என்று கணக்கிடுகிறார்கள். ஆப்பிரிக்க  நாடுகளில் வேகமாக பரவும் இஸ்லாம் அஹ்மதியா இஸ்லாம்தான் என்று ஆப்பிரிக்க  செய்திகள் கூறுகின்றன. அவர் மேற்படி கேவலமாக சாகும்போது ஒரு லட்சமாக இருந்த  அஹ்மதியாக்கள் இன்று எப்படி அதுவும் நூறே வருடங்களில் இரண்டு  மேலே ஏறத்தாழ  ஒரு லட்சம் இருந்த அவரை பின்பற்றிய அஹ்மதியாக்கள் இன்று எப்படி இரண்டு  கோடிக்கும் மேலாக அதிகரித்தார்கள்?   இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன.
 இன்று அஹ்மதியா மார்க்கத்தை பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக தடை செய்தும்,  அவர்களை கொலை செய்தாலும், அவர்கள் முஸ்லீம்கள் இல்லை என்று அறிவித்தாலும்,  அவர்களுக்கு பாஸ்போர்ட் கூட கொடுக்க மறுத்தாலும்  அஹ்மதியாக்கள் ஏன் இன்று 80  மடங்கு அதிகரித்திருக்கிறார்கள்?(இந்தியாவில் அஹ்மதியாக்களை முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்க வேண்டும் என்று தொடுத்த வழக்கு தோற்றுவிட்டது. ஆகவே இந்தியாவில் அஹ்மதியாக்கள் அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்கள் என்றே அறியப்படுகிறார்கள். இதில் ஒரு நகைமுரண் உள்ளது. பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று மிகக்கடுமையாக உழைத்தவர்கள் அஹ்மதியாக்கள். பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றார்கள். ஆனால், இன்று பாகிஸ்தானில் அவர்கள் கடுமையாக தாக்கப்படுகிறார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்ய அனுமதி கிடையாது. இன்று  பாஸ்போர்ட் கூட வாங்க முடியாது. பாஸ்போர்ட் வாங்க வேண்டுமென்றால், குலாம் அஹமது ஒரு பொய்யன் என்று கையெழுத்து போட்டு தரவேண்டும்.   காஃபிர் இந்தியா என்று அஹ்மதியாக்கள் வெறுத்த இந்தியாவிலோ அவர்கள் விருப்பப்படி முஸ்லீம்கள் என்றும் அறியப்பட்டு, சுதந்திரமாக அவர்களது “இஸ்லாமை” பின்பற்றவும், மற்றவர்களை  மதம் மாற்றவும் அனுமதிக்கப்படுகிறார்கள்)

 நமது மூஃமின்கள் குலாமின் சாவு விஷயத்தை மிக அழகாக ஆவணப்படுத்தி மிர்ஸா குலாம்  அஹ்மது ஒரு பொய்யன். அல்லாஹ் அவருக்கு தக்க தண்டனை கொடுத்தார் என்று  எழுதியிருக்கிறார்கள். இதில் காணப்படும் அனைத்தும் இந்த பக்கத்திலிருந்து  எடுக்கப்பட்டவை.
அஹ்மதியா எதிர்ப்பு இணையதளம்
 இவ்வளவு ஆதாரப்பூர்வமாக அவர் ஒரு பொய்யன் என்று நிரூபித்தாலும் ஏன்  அஹ்மதியாக்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள்?
 அது ஒரு தனி ஆராய்ச்சிக்கு உரிய விஷயம்.
 இப்ப விஷயத்துக்கு வருவோம். உண்மையிலேயே அல்லாஹ் மிர்ஸா குலாமுக்கு வாந்திபேதி  காலரா கொடுத்து கொன்றானா? அல்லது மிர்ஸா குலாமின் பிரமையா?
 தான் இல்லாதது பொல்லாததெல்லாம் அல்லாஹ் இல்லைன்னு நெனச்சிகிட்டு உளறினோமே,இப்ப நமக்கு வாந்தி பேதி வந்துவிட்டதே என்று அந்த இறுதி நேரத்தில்  பயந்திருக்கலாம்.

ஒருவேளை அப்போதுதான் அல்லாஹ் என்று உண்மையிலேயே உண்டோ என்னமோ  என்று கூட பயந்திருக்கலாம்.

 உண்மையான ஈமானுள்ள மூஃமின்கள்  அல்லாஹ்தான் இந்த பொய்யன் அஹ்மதை அவனது வாயில்  உளறியதை வைத்தே கொன்றார் என்று கருதுவார்கள்.
நாத்திகவாதிகளோ, இதுவரை  அல்லாவாவது ஒன்னாவது, நம்மளாக அள்ளிவிடுவது தான் அல்லாஹ் என்று  உளறிகொண்டிருந்த ஆள், சாகும் காலத்தில் ஒருவேளை அல்லாஹ் என்பது உண்டோ என்று  பயந்திருப்பார், அது அவரது மனப்பிரமை என்றும் கருதலாம்.
அஹ்மதியாக்கள் அஹ்மது  இயற்கையாக வயதெய்தி மரணமடைந்தார் என்றுதான் கருதிகொள்கிறார்கள்.  வயிற்றுப்போக்குதான் வந்தது. அது காலரா அல்ல என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், சாகும் காலத்தில் அவர் தனக்கு காலராதான் வந்தது என்று அவர்  கருதியதை அவரது மாமனாரே குறித்துவைத்துவிட்டு போய் விட்டார்.
நமது மூஃமின்களுக்கு ஒரு கேள்வி.
மிர்ஸா குலாம் அஹ்மதுவின் சாவை வைத்து சொல்லுங்கள்.
மிர்ஸா குலாம் அஹ்மது ஒரு பொய்யன் என்று அல்லாஹ் நிரூபித்தாரா?
அல்லது
தான் ஒரு பொய்யன் என்பதால்தான் அல்லாஹ் தனக்கு காலரா கொடுத்தார் என்று மிர்ஸா குலாம் அஹ்மதுவே நினைத்தாரா?
இன்னும் ஒரு உப குறிப்பு:
தமிழ்நாட்டு முஸ்லீம்களிடையே அஹ்மதியா ஜமாத்து வெகு வேகமாக பரவி வருகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன்னால், அஹ்மதியா ஜமாத்து என்ற பெயரே இங்கே பலருக்கு தெரியாது.   பெரும்பான்மையாக சுன்னிகளும் , மிகச்சிறுபான்மையாக ஷியாக்களுமே தமிழ்நாட்டில் இருந்தார்கள். இன்று அஹ்மதியா ஜமாத்து பல இடங்களில் மற்ற பிரிவுகளுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
இது இந்துக்களையோ கிறிஸ்துவர்களையோ பெரிதாக மதம் மாற்றுவதில் இறங்குவதில்லை. முழுக்க முழுக்க பாரம்பரிய முஸ்லீம்களையே குறி வைத்து அஹ்மதியா பிரிவுக்கு அழைத்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.   தவ்ஹீத் ஜமாத்து, அல் உம்மா,  மமக, எஸ்டிபிஐ  போன்ற வஹாபி பிரிவுகள்  வன்முறை, தீவிரவாதம், ஜிகாத் ஆகியவற்றுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும், அதனால் பல முஸ்லீம்கள் ஜிகாதை தவிர்க்கும் அஹ்மதியா பிரிவை சேர்கிறார்கள் என்றும் பலர் கருதுகிறார்கள்.   இந்த வஹாபி பிரிவுகள் அறிவியலுக்கு எதிராக இருக்கின்றன. சுன்னி முஸ்லீம்களும், சுன்னி முஸ்லீம்களின் தலைவர்களும், ஷியா முஸ்லீம்களும் பரிணாமவியலை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அஹ்மதியாக்கள் பரிணாமவியலை ஒப்புகொள்வது மட்டுமல்ல, பரிணாமத்தை அல்லாஹ்தான் வழிநடத்துகிறார் என்றும் சொல்கிறார்கள். (இதுவும் டுபாக்கூர். ஆனால், சுன்னிகளுக்கு பரவாயில்லை)  இதே போல, இன்னொரு இஸ்லாமான, பஹாய்களும் பரிணாமவியலையும் அறிவியல் முன்னேற்றங்களையும் ஏற்றுகொள்கிறார்கள். எதிர்ப்பதில்லை.  உண்மையிலேயே குரான் பரிணாமவியலை ஒப்புகொள்கிறதா? நிச்சயம் இல்லை. ஆனால், அஹ்மதியாக்கள் எப்படி பரிணாமவியலை ஒப்புகொள்கிறார்கள்? ஏனெனில் ஹசரத் மிர்ஸா குலாம் அஹமது குரான் பரிணாமவியலை ஒப்புகொள்கிறது என்று சொல்லிவிட்டார். ஆகையால் அஹ்மதியாக்கள் ஒப்புகொள்கிறார்கள். அவ்வளவுதான்.
இவ்வாறு அஹ்மதியா முஸ்லீம் பிரிவுக்கு போவதற்கு பதிலாக இந்துவாகவோ கிறிஸ்துவராகவோ மாறிவிடலாமே என்று கேட்கலாம். அஹ்மதியா பிரிவுக்கு செல்வது சுன்னி முஸ்லீம்களுக்கு வசதியானது. பெயரை மாற்ற வேண்டியதில்லை. ஜாதியை மாற்றவேண்டியதில்லை. இந்துவாகவோ கிறிஸ்துவராகவோ மதம் மாறினால் என்ன ஜாதி என்ற கேள்வி வரும். அஹமதியா பிரிவுக்கு மாறினால், முஸ்லீம் ஜாதி (அன்சாரி, சையது, பட்டாணி,  மரைக்காயர், ராவுத்தர்)  ஆகியவற்றை தொடரலாம். திருமணம் செய்து வைப்பதிலோ எந்த வித பிரச்னையும் வராது. ஆனால் கிறிஸ்துவராகவோ அல்லது இந்துவாகவோ ஆனால், எந்த ஜாதியில் குழந்தைகளுக்கு திருமணம், தானே எந்த ஜாதி என்று பதிவது என்பதெல்லாம் கேள்வி வரும்.
இந்த புதிய நபி  மிர்ஸா குலாம் அஹ்மது நமது மொஹம்மத் இப்னு அப்தல்லா சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை போலவே பல புளுகுகளை அவிழ்த்து விட்டிருந்தாலும், ஏன் மிர்ஸா குலாமின் பின்னால் அஹ்மதியாக்களாக ஆகிறார்கள் என்பதற்கு காரணம் அவர் உண்மையே சொன்னார் என்பதல்ல. அது வசதி என்பதால்தான்.
தமிழ் அஹ்மதிய்யா முஸ்லீம் யூட்யூப் சேனல்http://www.youtube.com/user/moulaviabdullah

இன்னொரு தமிழ் அஹ்மதியா முஸ்லிம் யூட்யூப் சேனல்
http://www.youtube.com/user/AlislamTamil
தமிழ் அஹ்மதியா முஸ்லீம் ஜமாத் இணையப்பக்கம்
http://tamilahmadiyya.blogspot.com/
சூரன்குடி அஹ்மதியா ஜமாத்து இணையப்பக்கம்
http://northsoorankudy.blogspot.com
கன்னியாகுமரி அஹ்மதியா முஸ்லீம் ஜமாத்
http://jafarla.blogspot.com
வஹியும் இஸ்லாமும் நின்றுவிடவில்லை. அன்னஜாத்துக்கு ஒரு விளக்கம்
http://northsoorankudy.blogspot.com/2010/06/blog-post_9891.html
இன்னுமின்னும் ஒரு உபகுறிப்பு:
மிர்ஸா குலாம் அஹமதுவின் எழுத்துக்களில் பிரிட்டிஷ் அரசாங்கம்.
I am the “Self-implanted/Self-cultivated Seedling ” of the British Government. “Government should take great care regarding this SELF-IMPLANTED SEEDLING . . . . .should instruct its officers to treat ME and MY JAMA’AT with special kindness and favours. Our family has never hesitated in shedding their blood in the way of British Rulers and did not stop from laying down their lives neither do they hesitate now.” (Roohani Khazain vol.13 p.350)
“From my early age till now when I am 65 years of age, I have been engaged , with my pen and tongue, in an important task to turn the hearts of Muslims towards the true love & Goodwill & sympathy for the British Government and to obliterate the idea of Jehad from the hearts of stupid (Muslims). ” (Kitab-ul-Bariyah, Roohani Khazain vol 13 p.350)
” . . . . for the sake of British Government, I have published & distributed 50,000 leaflets in this country (India) other Islamic countries(against jehad). . . . the result is that hundreds of thousands of people have given up their filthy ideas about Jihad.” (Roohani Khazain vol 15 p.114)