பரிணாமவியலை அடித்து நொருக்கிய அல்லாஹ்..

எனக்கு ஒரு நெருங்கிய நண்பன் இருக்கிறான். தீவிர முஸ்லீம். குழந்தைகளை மதரஸாவுக்கு படிக்க அனுப்புகிறான். எங்கே, யார் என்ற விஷயமெல்லாம் இங்கே பகிர்ந்துகொள்ளப்போவதில்லை. ஆனால் முக்கியமான விஷயத்தை சொல்லாமல் மேலே சொல்லமுடியாது.

அவன் வேலை செய்வது vaccine தயாரிக்கும் மருந்து நிறுவனத்தில். மெடிக்கல் பயாலஜியில் டாக்டரேட். virology என்னும் துறையில் நிபுணன்.

சில மாதங்களுக்கு முன்னால், அவன் வீட்டுக்கு போயிருந்தேன். ஹைதராபாத் ஒரு அழகான நகரமாக இருந்தது. அதனை அப்போது தெலுங்கானா போராட்டக்காரர்கள் நரகமாக மாற்றிகொண்டிருந்தார்கள். அவன் என்னை கண்டுபிடித்து காரில் அமுக்கி வீடு போய் சேர்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அரபியில் எழுதி மாட்டியிருந்தார்கள். நமக்கு அரபி வராது என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். சொந்த வீடாக இருந்தால் உச்சாவை இழுத்து ஒரு கிண்டல் அடித்திருப்பேன். இங்கே வாயை மூடிகொண்டிருந்தேன். நண்பனுக்கு நம்மளை பத்தி கொஞ்சம்தான் தெரியும்.

நல்லா கசகசா போட்ட பிரியாணி சாப்பிட்டு அப்படியே திண்டுல சாஞ்சி ”மக்கா பிரியாணி சூப்பர்டா. தங்கச்சியை நிக்காஹ் பண்ண நீ கொடுத்துவச்சவண்டா” என்றேன்.

“ஏன் நம்ம தங்கச்சியும் நல்லா பிரியாணி பண்ணுமே” என்று கொளுத்தி போட்டான். நானும் அவனும் விழுந்து விழுந்து சிரித்தோம். (பொம்பளைங்க உள்ளார இருக்கிறதுல ரொம்ப வசதி இருக்குங்கோ. அந்த கதையை அப்புறம் சொல்றேன். )

அப்படியே சென்று அவன் தொழில் பற்றிய பேச்சு வந்தது.

”ஏண்டா எப்படா நம்ம ஊருக்கு வரப்போற?”

“மாப்ள. வேலை மும்முரம்டா. ஒவ்வொரு வருஷமும் இந்த ஃபுளூ தடுப்பு மருந்து பண்ணி அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் அனுப்பற வேலை. பெண்டு கழண்டுருது” என்றான்.

”ஆமா ஒவ்வொரு வருஷமும் ஃபுளூ தடுப்பு மருந்து பண்றீங்களே. ஒருதடவை பண்ணா போதாதா? உங்களுக்கு ஒவ்வொரு வருஷமும் லாபத்துக்காக ஒவ்வொரு வருஷமும் புதுசு புதுசா பண்றேன்னு சொல்லி ஊரை ஏமாத்துறீங்கதானே?”

“இல்லடா மாப்ள. அது ஒவ்வொரு வருஷமும் புது புது புளூ வைரஸ் வரும்டா..ஒவ்வொரு வருஷமும் ஐநா ஹூ ஆளுங்க மூன்று வைரஸ் அனுப்புவானுங்க.. அத வச்சி அத முட்டையில் போட்டு வாக்ஸின் பண்ணனும்” என்றான்.

”என்னது? ஒவ்வொரு வருஷமும் புதுசு புதுசா புளூ வைரஸ் வருமா? எங்கே ஒவ்வொரு வருஷமும் அல்லாஹ் வைரஸ் படைக்கிறாரா? என்னடா அள்ளுறீங்க?”

“அது அல்லாஹ் பண்றதில்லை. இது ம்யூட்டேஷன். இது ரொம்ப வேகமா மாறும். அதுவும் ஆர்.என்.ஏ வைரஸெல்லாம் ஒரு ஜீனோமுக்கு ஒரு ம்யூடேஷன் வேகத்துக்கு புளூ வைரஸ் மாறும். போன வருஷத்துக்கு ஒரு செட் புளூ வைரஸ் இருக்கும். அந்த தடுப்பு மருந்தை இந்த வருஷம் போட்டா வேலை செய்யாது. ஏனென்றால், போன வருஷத்தில இருந்த வைரஸ் வேற இந்த வருஷத்தில இருக்கற வைரஸ் வேற.. வைரஸ் ரொம்ப வேகமா ம்யூட்டேஷ்ன் ஆகிகிட்டே இருக்கும்டா.. ம்யூட்டேஷ்ன் அதிகரிக்க அதிகரிக்க அதோட குணமும் மாறும். குணம் மாறினா பழைய புளூ வைரஸ் கிடையாது. புது புளூ வைரஸ்”

“ஏண்டா நாசமத்து போறவனே.. அல்லாஹ் ஆறு நாளில உலகத்தை படைச்சி முடிச்சாருன்னு சொல்லுது. நீயென்னடான்னா இன்னமும் உலகத்தில வைரஸெல்லாம் உருவாக்கிகிட்டே இருக்கார்ங்கிறியே.. புளு வாக்ஸின்னு ஒன்னே ஒன்னு பண்ணா போதும்டா.. இன்னொன்னு பண்ற பாரு. அது வேற ஒரு வைரஸ்.”

“அடே.. அல்லாஹ் ஆறு நாள் சமாச்சாரத்தையெல்லாம் தவ்ஹீத் அண்ணன்கிட்ட வச்சிக்க. இது உயிர் போற பிரச்னை..”

“எதாவதுசுத்தி வளைச்சி இந்த வைரஸெல்லாம் உலகம் தோன்றிய காலத்திலேர்ந்து இருக்கு. ஆனா இந்த வருசம்தான் அது மனிசனை கடிக்கணும்னு அல்லாஹ் ஆணை போட்டிருக்காருன்னு வச்சிக்கலாமா?”

என்னை ஒருமாதிரி பார்த்தான்.

”மவனே. உன்னை அடிச்சே கொன்னுறுவேன். ஒவ்வொரு புளூ வைரஸையும் ஒரு மனுஷன் மாதிரி வச்சிக்க. இப்ப பாத்தியன்னா, ஆறு பில்லியன் மனுஷங்க நடுவே ஒருத்தனுக்கு வால் புதுசா மொளக்கும். ஒருத்தனுக்கு ஆறு விரல் இருக்கும். இன்னொருத்தனுக்கு எட்டு விரல் கூட இருக்கும். ஒருத்தனுக்கு சளியே புடிக்காது. இன்னொருத்தனுக்கு தூக்கமே வராது. இப்படி ஆறு பில்லியன் மனுஷங்க எல்லோரும் ஒரே மாதிரி இல்லை. ஆனா எல்லாரும் மனுஷங்கதானே. ஒரு கிராமத்தில இருக்கிற எல்லாருக்குமே இரட்டை குழந்தையே பொறக்குது.
http://articles.timesofindia.indiatimes.com/2007-03-03/special-report/27873056_1_twins-village-pond-pairs
ஒரு ஈக்வடார் கிராமத்தில ஏராளமான பேர் குட்டையா இருக்காங்க, ஆனா ரொம்பகாலம் வாழராங்க
http://www.huffingtonpost.com/2011/02/17/ecuadorean-villagers-cancer-clues-_n_824556.html
அதே மாதிரி ஒரு வியாதி எல்லா மனுஷங்களையும் அட்டாக் பண்ணுதுன்னு வச்சிக்க. அதில சும்மா 1000 பேருக்கு மட்டுமே அந்த வைரஸை எதிர்க்கக்கூடிய உடம்பு இருக்குன்னு வச்சிக்க. என்ன ஆகும்? அந்த ஆயிரம் பேர் மட்டும்தான் உலகத்தில மனுஷங்களா இருப்பாங்க. அவர்களோட சந்ததிகள் பெருகினால், அந்த ஆயிரம் பேர்களோட சந்ததிகளாகத்தான் உலகம் முழுவதும் இருப்பாங்க இல்லையா.. ஆக அந்த ஆயிரம் பேர்கிட்ட இருக்கிற நோய் தடுப்பு சக்திதான் எல்லா மனிஷர்கள்கிட்டயும் இருக்கும். ”

“இது மனுஷங்கடா.. அது வைரஸ்டா.. ரெண்டையும்போட்டு ஏன் கொழப்புற”

”மக்கா, பரிணாமம் மனுஷங்களுக்கு தனி, வைரஸ்களுகு வேறன்னு இல்லை. பரிணாமம் காமன் சென்ஸ். இப்ப நம்ம பாக்டீரியாவை பாப்போம். ஹாஸ்பிடல்ல முந்தி இல்லாத ஒரு பாக்டீரியா வந்திருக்கு.
http://articles.latimes.com/2011/mar/25/local/la-me-superbug-20110325
ஆண்டிபயாடிக்கை எல்லா ஹாஸ்பிடல்லயும் அள்ளி தெளிச்சிருப்பானுங்க. எதுக்கு வம்புன்னு கொஞ்சம் கூடவே தெளிச்சிருவானுங்க.. என்ன ஆகும்? அந்த ஆண்டிபயாடிக் கொல்ற பாக்டீரியாவெல்லாம் செத்து போகும். ஆனால் பாக்டீரியாங்கறது இக்கணூண்டு. அது பாட்டுக்கு காத்தில சேத்தில சுவர்ல எல்லாம் இருக்கிற விஷயம். ஆண்டிபயாடிக்க்கு எதிர்ப்பு சக்தியோட ஒன்னிரண்டு பாக்டீரியா இருக்கும். அது சாகாது. இப்ப என்ன ஆகும்? இந்த ஒன்னிரண்டு பாக்டீரியா வளரும். முன்னாடி மத்த பாக்டீரியா இருந்ததால இது வளர இடம் கிடையாது. இப்ப அந்த பாக்டீரியாவெல்லாம் செத்து போச்சி. இப்ப சாப்பாட்டுக்கு போட்டியே இல்லாம இந்த பாக்டீரியாவெல்லாம் வளரும். இதனால இப்ப ஹாஸ்பிடல்ல எல்லாம் ஆண்டிபயாடிக் ரெஸிஸ்டண்ட் பாக்டீரியான்னு பயந்து கிடக்கானுங்க. இந்த பாக்டீரியாவை பழைய ஆண்டிபயாடிக் கொடுத்து கொல்ல முடியாது. புது ஆண்டிபயாடிக் கண்டுபிடிக்கணும். புரியுதா? இப்ப இந்த ஆண்டிபயாடிக் பாக்டீரியா உலகத்தில இருக்கிற எல்லா மனுஷங்களையும் கொல்லுமா? கொல்லலாம். ஆனா இந்த பாக்டீரியாவையும் கொல்ற மாதிரி நூறு பேர் இரு நூறு பேர் இருப்பான். அவன் பொழச்சிக்குவான். அவன் மூலமா மனித குலம் தொடரும். இதுதான் பரிணாமத்தோட போட்டி ரேஸ். இது வெறும் காமன் சென்ஸ். இது பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை.”

“அப்ப இந்த பாக்டீரியாலேர்ந்து வளர்ந்துதான் மனுஷன் வந்தான்னு சொல்றியா?”

“அட நாசமத்து போறவனே.. பாக்டீரியா மனுஷனா ஆகாதுன்னு நாம சொல்ல முடியாது. ஏன்னா எதிர்காலத்தை நம்மால கணிக்க முடியாது. நாளைக்கு என்ன வியாதி வரும், என்ன விபத்து நடக்கும்னு சொல்ல முடியாது. இப்ப உதாரணத்துக்கு ஒன்ன பாப்போம். உலகத்தில அணுகுண்டு போட்டு அழிச்சிட்டானுங்கன்னு வச்சிக்க.. அப்ப பத்து பேர் ஒரு கிராமத்தில ஆழத்தில குழி தோண்டிகிட்டிருக்கான்னு வச்சிக்க. அவனுங்க எல்லோருக்கும் ஒவ்வொரு கால்லயும் கையிலயும் எட்டு எட்டு விரல்னு வச்சிக்க. இவனுங்க மட்டும் தப்பிச்சானுங்கன்னு வச்சிக்க. அப்ப உலகத்தில இருக்கிற மனுஷங்களுக்கு எத்தனை விரல்? மனுஷனுக்கு ஒவ்வொரு கையிலயும் எட்டு விரல்தான் எதிர்காலத்தில இருக்கும்”

“அப்ப நமக்கு மட்டும் எப்படி கால் கையில ஐஞ்சி ஐஞ்சி விரல் இருக்கு? நீ பொய் சொல்ற”

“அட செந்தில் மண்டைக்காரா.. அது ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்ண்டா.. “

”மாப்ள.. இஸ்லாத்துக்கே வேட்டு வைக்கிறியேடா.. அல்லாஹ் ஆறு நாள் படைச்சிட்டு போய்ட்டாருன்னுதான் இஸ்லாம். தினந்தினம் புதுசு புதுசா வைரஸ் உருவாகுது.. பரிணாமம் அடையுதுன்னு சொன்னா, பரிணாமத்தை ஒத்துகிடணுமேடா.. பரிணாமத்தை ஒத்துகிட்டா எப்படி அல்லாஹ் ஆதாமையும் ஹவ்வாவையும் படைச்சதா சொல்றது என்னா?”

“மாப்ள.. ரொம்ப கேட்கக்கூடாதுடா. கம்பார்ட்மெண்ட் மாதிரி இஸ்லாம் இந்த கம்பார்ட்மெண்ட்ல.. வேலை அந்த கம்பார்ட்மெண்ட்ல. அதத்து தனித்தனியா வச்சிக்கணும். மாஸ்க் போகும்போது ஆதாம். வேலைக்கு போகும்போது பரிணாமம்.. ரெண்டையும் போட்டு குழப்பிகிட்டா நாம ஆபீஸுக்கும் போமாட்டோம், மாஸ்குக்கும் போமாட்டோம் கீழ்ப்பாக்கந்தான் போவோம்”

”இரு இரு… பரிணாமம் உண்மைங்கிறியா?”

“மாப்ள.. அதுல சந்தேகமே கிடையாது. பரிணாமவியலை ஒத்துக்கலைன்னா நீ சாக வேண்டியதுதான். போன வருஷத்து வைரஸோட ஜீனோம் வேற. இந்த வருஷத்து வைரஸோட ஜீனோம் வேற. போன வருஷத்தோட வைரஸை வைச்சி உருவாக்கின வாக்ஸினை இந்த வருஷம் போட்டியின்னா வேஸ்ட். அமெரிக்காகாரன் கம்பெனி மேல கேஸ் போட்டு நாறடிச்சிடுவான். அது கிடக்கட்டும். நம்ம சவுதி அரேபியா இருக்கே. அவுங்க வாங்கற வாக்ஸினும் நம்ம கம்பெனிகிட்டதான். அவுகளே போன வருஷம் பண்ண வாக்ஸின்ன்னு சொன்னா வாங்க மாட்டானுங்க.. நீ அங்க ஹஜ்ஜுக்கு போகணும்னா, ஃப்ளூ வாக்ஸின் போட்டிருக்கிறேன் என்று சர்டிபிகேட் கொடுக்கணும். “

“நா ஒத்துக்க மாட்டேன். பரிணாமம் பொய். வேணுமின்னா, நம்ம இஸ்லாமிய அறிவியல் எழுதுற பதிவர்கிட்ட போய் சொல்லு. உன்னை டார்க் மேட்டர், சார்பியலெல்லாம் சொல்லி பரிணாமத்தை பொளந்து கட்டிடுவார்.”

“மாப்ள.. அவரு என்ன வைராலஜி அத்தாரிட்டியா? அவரு ஏதொ கையில கிதாப் இருக்கு. கிதாப்ல இருக்கிறதை இதுதான் கிதாப்ல இருக்குன்னு சொல்றாரு. அவரு வேலை அது. என் வேலை இது”

“மாப்ள.. அப்ப பரிணாமத்தை பொய்னு நம்ம ஆளுங்கல்லாம் பேசறது..?”

“மாப்ள. அப்படித்தாண்டா அவுங்க பேசணும். அவுங்க இஸ்லாத்தை பரப்புராங்க. அதில அவங்களுக்கு ஏதோ சந்தோஷம் இருக்கு.”

“மாப்ள அதெல்லாம் சரிதாண்டா.. அப்ப பரிணாமவியலின் படி வர்ர புளூ வாக்ஸினை நான் போடமாட்டேன்னு சொல்லலாம்ல?”

”மாப்ள, அதெல்லாம் சொல்ல மாட்டாய்ங்க… நம்ம தவ்ஹீத் அண்ணன்கிட்ட போனவருஷம் வந்த புளு வைரஸ் எல்லாம் பரிணாமத்தில மாறி, இந்த வருஷம் வேற மாதிரி ஆய்டிச்சி. பரிணாமத்தை ஒத்துகிட்டா மட்டும், இந்த வாக்ஸின் போட்டுக்கங்க.. பரிணாமத்தை நம்பளைன்னா போனவருஷ வாக்ஸினையே போட்டுக்கிங்கன்னு சொல்லிப்பாரேன். அவரு உள்ள வா தம்பின்னு சொல்லி வாக்ஸின் போட்டுக்குவாரு”

“நான் போட மாட்டேன். கார் ஓடறதை நம்பமாட்டேன்னு சொல்லிட்டு கார்ல ஏறி உக்காந்து ஊர் போய் சேந்தியின்னா அது என்னா? கேனத்தனம் இல்ல? இல்ல கேக்கற நாம கேனையன்களா?”

“ஹாஹ்ஹா.. நீ வேற.. அவன் போட்டிருக்கிற சட்டை, பேண்ட் எல்லாமே காட்டன். அந்த காட்டன் நிறைய விளைச்சல் தர்ரதுக்கு பரிணாமவியல் அறிவில்லாமயா அந்த புது காட்டன் செடியெல்லாம் உருவாக்கியிருக்காங்க? இந்த காட்டன் செடியெல்லாமே பரிணாமவியல் மூலமா மரபணு மாத்தி உருவான புது வகையான செடிடா.. இந்த செடியெல்லாம் சும்மா நூறு வருஷத்துக்கு முன்னாடி உலகத்திலேயே கிடையாது”

“நீ சொல்ற எனக்கென்னா தெரியும். ஆமா இந்த புளூ என்ன அதிகபட்சம் போனா பத்தாயிரம் பேர் போவானுங்க.. போனா போயிட்டு போறாங்கன்னு பரிணாமவியலை ஒத்துக்காம இருந்தா என்ன?”

“அது அவ்வளவு சுளு இல்ல மாப்ள.. சும்மா பாரேன். 1889இல ஒரு புளூ தொத்துவியாதி வந்திருக்கு.. ஒரு பத்துலட்சம் பேர் காலி. அப்புறம் 1918லேர்ந்து 1920வரைக்கும் ஸ்பானிஷ் புளூன்னு சொல்ற தொத்து நோய் இந்த புளூ வைரஸால வந்திருக்கு 5 கோடி பேர் காலி.. அதாவது 1918இல உலக மக்கள் ஜனத்தொகையே கம்மியாத்தான் இருந்திருக்கும். அப்பவே 5 கோடி பேர் இந்த புளூவால காலி. அந்த புளூவில இந்தியாவில மட்டுமே 50 லட்சம் பேர் காலின்னு கேள்விப்பட்டேன். அப்புறம் ஆஸியன் புளூன்னு 1957இல ஒன்னு வருது. 20 லட்சம் பேர் காலி. அப்புறம் ஹாங்காங் புளூன்னு 1968இல ஒன்னு வருது 10 லட்சம் பேர் காலி. அப்புறம் ஸ்வைன் புளூ 2009இல வந்ததில 18209பேர் காலின்னு சொல்றாங்க.. இந்த ஸ்வைன் புளூவோட ஜீனோமே ரொம்ப ரொம்ப வித்தியாசமானதுன்னு சொல்றாங்க.. இப்ப மட்டும் வருஷாவருஷம் புது புளூ வாக்ஸின் நாம உருவாக்கலைன்னு வய்யி .. உலகத்தில நெருங்கி வாழறதுக்கும். ஜனத்தொகை இருக்கறதுக்கும் சும்மா பாதி பேர் போய்டுவாங்க”

“ஆனா மாப்ள, நீ சொல்ற.. ஆனா நம்ம ஆளுங்க கேக்கணுமே.. அவனவன் காசிமி நின்னுகிட்டு குடிக்கணும்னா நின்னுகிட்டு குடிக்கான். ஜமாலி உக்காந்து உச்சா போடான்னு சொன்னா உக்காந்து உச்சா போறான். தவ்ஹீத் அண்ணன் மாதிரி, எதுக்கெடுத்தாலும் உயிரினும் மேலான கண்மணி நபிஹள் நாயஹம்ன்னு ஆரம்பிச்சி வெறியேத்துவானுங்க.. இவனுங்க வெறியேத்தி, நம்ம ஆளுங்க இப்படியே போயி தாலிபான் மாதிரி எல்லாத்தையும் நிறுத்துடான்னு உங்க ஆபீஸ் மேல குண்டு போட்டா என்னடா பண்ணுவ?”

“மாப்ள நீ சொல்றதை பாத்தா, நீயே போட்டுடுவ பொலருக்கே.. நான் இதெல்லாம் சொல்றேன்னு எவண்ட்டயும் சொல்லிடாத . பரிணாமம் உண்மைன்னு நான் தமிழ்ல எழுதினேன்னு வச்சிக்க..மக்கா ஊடு பூந்து அடிப்பானுங்க.. காபிர் ஆயிட்டேன்னு சொல்லி தள்ளி வப்பானுங்க.. வீட்டில உன் தங்கச்சி என்னை விளக்குமாத்தாலயே சாத்துவா… “

”தெரியுதுல்ல. சும்மா அமுக்கிவாசி. உன் வேலை உண்டா நீ உண்டான்னு இரு. பரிணாமம் உண்மைங்கறதெல்லாம் உன் வேலையோட வச்சிக்க. நம்ம நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒரு தடவை சொன்னா ஒரு பில்லிய்ன் தடவை நம்ம மூஃமின்கள் திருப்பிச் சொல்வார்கள். நினைவில் வைத்துகொண்டு இந்த அறிவியல் புண்ணாக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு பள்ளிவாசல்ல போயி நம்ம நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் 1400 வருடத்துக்கு முன்னாடி எப்படி அகட்டிகிட்டு நின்னாரோ அது படி நிக்க பாரு. எப்படி உக்காந்து மூச்சா போனாரோ அது படி மூச்சா போறதை பாரு. அவரு எப்படி அவரோட மனைவிமார்களுக்கு முக்காடு போட்டு பெண்டு நிமித்தினாரோ அதுமாதிரி நிமித்த பாரு. அத வுட்டுட்டு காஃபிரா ஆய்டாத”

”காஃபிர்ன உடனே ஒன்னு ஞாபகம் வருது. நம்ம மாமா பிஜே பின்னாடி அலையறதை உட்டுட்டு ஐய்யப்பனுக்கு மாலை போட்டுட்டு போயிட்டு வர்ர மர்மம் என்னடா?”

“அது தெரியாதா? எல்லா புள்ளை பாசம்தான். பயலுக்கு ஜூரம் வந்து சாகக்கெடந்தான். அல்லாஹ் அல்லாஹ்ன்னு அலுது பொலம்புனாரு. ஒன்னும் ஆகலை. உங்க டாக்டருங்க கூட கைய விரிச்சிட்டானுங்க.. ஐயப்பனுக்கு மாலை போட்ட சாமி ஒன்னு வந்து விபூதி போட்டான். பய எப்படியோ பொழச்சிட்டான். என்ன கொடுத்த மருந்து கொஞ்ச நேரங்கழிச்சி வேலை செய்ஞ்சிருக்கும். ஆனா நம்ம மாமாவுக்கு அப்ப வந்த ஐயப்பன் பக்திதான். போங்கடான்னு எல்லாத்தையும் போட்டுட்டு ஐயப்பனுக்கு மாலை போட்டுட்டாரு”

“எழவு… என்னைக் கேட்டா இந்த காபிர்கும்பல் பரவாயில்லைம்பேன். அவன் கொடுக்கிற மருந்தை கொடுத்துகிறான். படிக்கிற ஸயன்ஸை படிச்சிக்கிரான். வேணுங்கற சாமியை கும்பிட்டுக்கிரான். பரிணாமவியலா ஓகே, உலகம் தோன்றி பில்லியன் வருஷம் ஆச்சா, ஓகேம்பான். உலகம் தோன்றி ஆறாயிரம் வருஷந்தான் ஆகுதுன்னு அடாவடியா கிறிஸ்துவந்தான் எழுதுவான். நம்மாளு என்னடான்னா, அல்லாஹ் ஆறு நாள்லதான் உலகம் பிரபஞ்சம் மிருகம் மனுஷன் வைரஸெல்லாம் படைச்சான்னு எழுதுவான். இருக்கிறதிலயே ரொம்ப கேவலமானவன் எவந்தெரியுமா? பெந்த கொஸ்தேன்னு ஒரு கிறிஸ்தவன் இக்கான். மருந்து குடுக்காத… இயேசுவை பிரே பண்ணு. எல்லா சரியாப்பூடும்பான்.. மவனே அவனையெல்லாம் சைல்ட் டார்ச்சர்ன்னு சொல்லி உள்ள வைக்கணும்…”

“சரி மவனே ரொம்ப பேசற… தவ்ஹீத் அண்ணன்கிட்ட சொல்லி உன் முட்டியை தட்டச்சொல்ல வேண்டியதுதான்”

http://evolution.berkeley.edu/evolibrary/article/0_0_0/medicine_03

Advertisements

33 thoughts on “பரிணாமவியலை அடித்து நொருக்கிய அல்லாஹ்..

 1. ஸலாம் இபின் ஷாகிர் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.1.இந்த வைரஸ் பரிணாம வளர்ச்சியை சிறு(மைக்ரோ) பரிணாமம் என்று ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள் .2.ஆனால் இந்த சிறு பரிமாண‌ம் பெரும்(மேக்ரோ) பரிமாணமாக ஒரு உயிரினம் இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உயிரினங்களாக் பிரிவதை மட்டும் வேறு வழியில்லாமல் எதிர்க்கிறார்கள்.3. ஜீன்கள் அடிப்படையிலான‌ பரிணாம் நிருபணமம் அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு பெரும்பாலான பல்கலைகழகங்களில் கற்பிக்கப் படுகிறது.4.இதில் இன்னொரு நகைசுவை என்னவெனில் பரிணாம் என்பது இறை மறுப்பின் மதம் என்றும் கூறும் மத பிரசாரகர்கள் கருத்து.இவர்களுக்ககவே பரிணாமம் படிக்க ஆரம்பித்தேன்.5.இத்துறையில் உங்களின் புலமை பளிச்சிடுகிறது. செலெக்டிவ் ப்ரீடிங் எனப்படும் வழிநடத்தப்பட்ட பரிணாம பற்றி எழுத ஒரு வேண்டுகோள்.6. திரு டார்வின் பல வகைகளில் மத தலைவராகவும், ஹிட்லர், ஸ்டாலின் உட்பட்ட பல்ரின் செயலுக்கு காரண கர்த்தாவாகவும் கூட இருந்தார் மதவாதிகளால் பிரச்சாரம் மேற்கொள்ளப் படுகிறது.அவர் எழுதிய புத்தகத்தின் மின் வடிவம் அனைவரும் ஒருமுறையாவது படியுங்கள.பிறகு விமர்சிக்கலாம்.இதன் தமிழ் மொழி பெயர்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை.http://www.vliz.be/docs/Zeecijfers/Origin_of_Species.pdf6.பரிணாமத்தை எதிர்ப்பதை விட கண்டு கொள்ளாமல் செல்லலாம் அல்லது அதற்கு தோதாக மதம் சார்ந்த‌ ஒரு விளக்கம் சொல்லி விட்டு போவது நல்லது என்பேன்.நன்றி

 2. //தவ்ஹீத் அண்ணன்கிட்ட சொல்லி உன் முட்டியை தட்டச்சொல்ல வேண்டியதுதான்”//செஞ்சிர வேண்டியதுதான்!!

 3. //பயலுக்கு ஜூரம் வந்து சாகக்கெடந்தான். அல்லாஹ் அல்லாஹ்ன்னு அலுது பொலம்புனாரு. ஒன்னும் ஆகலை….//ஏ.ஆர்.ஆர். பத்தி சொல்றது மாதிரில்லா இருக்கு!!

 4. மார்க்க கொலைஞ்சர் இ.சா அவர்களே,முதலில், பதிவில் இருக்கும் கார்ட்டூன் doonesbury கார்ட்டூன் என்பதையும், doonesbury கார்ட்டூன் என்றால் என்ன என்று மூமின்களுக்கு விளக்கிவிடவும்.இல்லையென்றால் michael doonesbury யை ”நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்” ஆக சித்திரித்ததாக உங்கள் மேல் பத்வா போட்டுவிட்டால் காஃபிர் ஆன நாங்கள் எல்லாம் மார்க்க அறிவுக்கு எங்கே போவோம். மேலும் doonesbury கார்ட்டூன் வரலாற்றில் இருந்து அகற்றப்படுவதற்கு நீங்கள்தான் முதல்காரணமாக இருப்பீர்கள்.இரண்டாவது, நண்பர்களிடம், மச்சான் நாமெல்லாம் காஃபிர்டா என்றால், அவர்கள் ஆச்சரியமாக, நாமெல்லாம் coffee யையும் beer யையும் கலக்கி cocktail இதுவரைக்கும் அடிக்கவில்லையே, எப்படி நாமெல்லாம் காஃபிராவோம் என்கிறார்கள்.அதனால் இதுப்போன்று அரபிச்சொற்களுக்கும், அதுவும் மிக முக்கியமாக கமெண்டில் முன்னாலும் பின்னாலும் வரும் சொற்களுக்கு, எளிமையான வகையில் விளக்கம் தந்தால், உங்களுக்கு காஃபிர்களின் கோடி புண்ணியம்.மூன்றாவதாக இந்தப் பதிவுக்கு பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன், முத்துகள் கிடைத்தால் உங்களுக்கு செருப்படி தருவேன்.ஆனாலும் கசகச பிரியாணி..ம்ம்ம்ம்…கொடுத்துவைத்த மூமின்…..வாழ்த்துகள்

 5. இந்த பதிவில் சிந்திக்க வைத்துள்ளீர்கள். காமெடியைக் குறைத்து விட்டீர்கள். அடுத்த பதிவில் ஒரு ஸ்புன் காமெடி கூடுதலாக போடுங்கள். அப்போதுதான் இந்த காபிர்கள் நன்றாக சிரித்து ஆரோக்கியமாக இருக்க முடியும். அருமை.

 6. காஃபிர் நரேன் அவர்களே.இந்த பதிவை ஒரு வழி பண்றதா முடிவு பண்ணிட்டீங்க போலருக்கே..யா அல்லாஹ்அல்லாஹ் உங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கட்டும்

 7. காஃபிர் ராஜா அவர்களே,உங்களோடெல்லாம் பழகி சாவு, ஜிகாத் இதிலெல்லாம் காமெடி பண்ணமுடியாமல் போகிவிட்டது. இனி மூமின்களோடு நெருங்கி பழகி மீண்டும் சாவில் காமெடி பார்க்கும் பழக்கத்தை அதிகரித்துகொள்ளவேண்டும்.

 8. காஃபிர் சார்வாகன் அவர்களே,உங்களது பின்னூட்டம் ஏன் ஸ்பாமுக்கு போனது என்று தெரியவில்லை.உங்கள் கருத்துக்கு நன்றி. நீங்களும் நம்ம தோஸ்து மாதிரி பரிணாம ஆதரவாளர் போலிருக்கிறது.

 9. கராமத்துள்ள அவுலியா இப்னு ஷாகிர் அவர்களே! தாங்கள் குரானைக்குறித்து ஒரு தப்ஸீர் போட்டால் நலமாய் இருக்கும். இபின் காதிரோட தப்ஸீர படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குது. உங்களது கலைநயத்தோட படித்தால் நாங்கள் சீக்கிரமாக முழு விளக்கங்களையும் அறிந்து கொள்வோம். உங்கள் தாவாப்பணி சிறக்க எல்லாம் வல்ல ????????????? வேண்டுகிறேன்.

 10. ஸலாம் இபின் ஷாகிர்/காஃபிர் சார்வாகன் அவர்களே,உங்களது பின்னூட்டம் ஏன் ஸ்பாமுக்கு போனது என்று தெரியவில்லை./அறியாத‌து போல் ந‌கைச்சுவையாக‌ விள்க்குவ‌தில் உங்க‌ளுக்கு நிக‌ர் நீங்க‌ள்தான்.நான் விள்க்குகிறேன்.இஸ்லாமின் உல‌கில்(நாட்டில்) காஃபிர்க‌ள் spamஈமானுள்ள முஸ்லிம்க‌ளின் ப‌திவுல‌கில் காஃபிர்க‌ளின் பின்னூட்ட‌ம் spam************8ha haa haaaந‌ன்றி

 11. இப்னு ஷாகிர் அவர்களே எனக்கு ஒரு நீண்ட நாள் சந்தேகம் ஆதாம், ஏவாள் தான் முதல் மனிதர்கள், அவர்கள் மூலமாக மட்டும் தான் இன்றைய மனித குலம் உருவாகியது என்றால்;ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் தமக்குள்ள பால்உறவு கொண்டிருந்தால் மட்டுமே இது சாத்தியம் (இன்செஸ்ட் செக்ஸ்).அப்படி ஆனால் குரான் இன்செஸ்ட் செக்ஸ் ஐ ஏற்றுக்கொள்கிறதா ???????????

 12. இ.சா.முதல் செருப்படிSIRAJUDEEN சொன்னது…ஓர் உயிரினத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி இஸ்லாமும் கூருகின்றது. அதாவது ஆதி மனிதன் 60 முழம்,நாம் 4 அல்லது 5 முழம் தான். ஆனால் ஓர் உயிரினத்தில் இருந்து பிரிதொரு உயிரினத்திற்கு வாய்ப்பே இல்லை.28 செப்டெம்ப்ர், 2011 12:16 amதொடரும்.

 13. இரண்டாவது மரணடிசுவனப்பிரியன் said…ஊர் சுற்றி!//ஆதான் 90 அடி என்று உண்மையிலேயே சொல்லப்பட்டிருக்கிறதா?!//ஆதமுடைய உயரம் 60 முழங்கள் என்று முகமது நபியின் அறிவிப்பு வருகிறது.//எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர், இன்னும் பலவகையான விலங்குகளின் ஃபாசில்கள் கிடைத்துள்ளன! ஆனால், இப்படி உயரமான மனிதர்களுடையது எங்கே?!//மனிதர்களின் எலும்புகள் டைனோசர்களைவிட மென்மையாக இருந்திருக்கலாம். இன்றும் ஒரு உடலை புதைத்து அடுத்த நூறு வருடத்தில் அதே இடத்தில் பல உடல்களை முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழகத்தில் புதைக்கிறோம். அரிதாகத்தான் ஒரு சில எலும்புகள் கிடைக்கும. அதனால் முன்னோர்களின் எலும்புகள் மண்ணோடு மண்ணாக மக்கி இருக்க வாய்ப்புண்டு. அல்லது நமது பார்வைக்கு இன்னும் படாமல் அந்த எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் புதையுண்டு இருக்கலாம். வருங்காலத்தில் கண்டு பிடிக்கப் படலாம். ஆதமையும் ஹவ்வாவையும் மறுப்பவர்கள்தான் எலும்புகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்.ஒரு பொருள் கிடைக்காததாலேயே அந்த தத்துவம் பொய்யாக முடியாது. குர்ஆனும், மாற்றப்படாத பைபிளும், வேறு பல இறை வேதங்களும் ஒரு மனிதரிலிருந்து பல்கி பெருகியவர்கள்தாம் நாம் அனைவரும் என்கிறது. விஞ்ஞானமும் ஒரு ஆப்ரிக்க தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறதுfitting and suitable r eplyto be continued

 14. @naren/மனிதர்களின் எலும்புகள் டைனோசர்களைவிட மென்மையாக இருந்திருக்கலாம். இன்றும் ஒரு உடலை புதைத்து அடுத்த நூறு வருடத்தில் அதே இடத்தில் பல உடல்களை முஸ்லிம்களாகிய நாங்கள் தமிழகத்தில் புதைக்கிறோம். அரிதாகத்தான் ஒரு சில எலும்புகள் கிடைக்கும. அதனால் முன்னோர்களின் எலும்புகள் மண்ணோடு மண்ணாக மக்கி இருக்க வாய்ப்புண்டு. அல்லது நமது பார்வைக்கு இன்னும் படாமல் அந்த எலும்புக் கூடுகள் பூமியின் அடியில் புதையுண்டு இருக்கலாம். வருங்காலத்தில் கண்டு பிடிக்கப் படலாம்./மனிதன் டைனோசார் ஒரே சம்யத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள் சூப்பர்.மனிதனும் டைனோசாரும் சம காலத்தவரா?:காணொளி http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_07.htmlhttp://www.youtube.com/watch?v=IUQeN7INIc8************/ஒரு பொருள் கிடைக்காததாலேயே அந்த தத்துவம் பொய்யாக முடியாது. /தவறு. கிடைக்கும் வரை உண்மையாக் முடியாது.எ.கா எந்த ஒரு கொள்கையும் ஆய்வு ரீதியாக மெய்ப்பிக்கும் வரை முழு உண்மை ஆகாது./ஆதமையும் ஹவ்வாவையும் மறுப்பவர்கள்தான் எலும்புகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும்./க‌ட‌வுள் இல்லை என்ப‌வ‌ன்தான் நிரூபிக்க‌ வேண்டும் என்ப‌து போல்.இம்மாதிரி வாத‌ங்க‌ளில் இருந்தே எந்த நிரூப‌ண‌மும் ம‌த‌ வாதிக‌ளால் முடியாது என்ப‌தை அவ‌ர்க‌ள் அறிந்து வைத்திருப்ப‌து உறுதியாகிற‌து.இது ஒரு புர‌ளி கிள‌ப்பி அது பொய்யாகி விட்ட‌து. அதாவது நம் தமிழ்நாட்டில் சுனாமியின் போது ஆதி தந்தை ஆதமின் 60 அடி(60 முழ) எலும்புகூடு கிடைத்தது என்ற கதைதான்.இன்னும் ஒரு கதை ஆதம் தமிழராம்.அன்னை ஹவ்வா மட்டும் அரபியாம்.அதுவும் ஈழத்தில் வாழ்ந்து ஆதம்(இராமர் மன்னிக்கவும்) பாலம் மூலம் தமிழ்நாடு வந்து அப்ப்டி போய் அன்னையை கண்டார் என்று கதை உண்டுha ha haa இப்போது இது சவுதி சட்டப்படி அனுமதி இல்லை See this http://www.youtube.com/watch?v=tGmQ90O3etk***/விஞ்ஞானமும் ஒரு ஆப்ரிக்க தாய் தந்தையிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும் என்கிறது/இக்கட சூடண்டிஆதித் தந்தை ஆதமைத் தேடி: ஜீன்களின் இடம்,காலப் பிரயாணம்http://aatralarasau.blogspot.com/2011/07/blog-post_18.html**********இது விஷயமாக பல் விஷ்யங்கள்கேள்விகளை இன்னும் கேளுங்கள்

 15. நல்ல பதிவு. அப்படியே உங்களின் நண்பனுக்கும் இஸ்லாம் என்றால் என்ன என்று புரியவையுங்களேன். ( உங்களை போட்டுத்தள்ளவேண்டும் என்று நினைக்கிறேன் என்று எண்ணாதீர்கள் :)).

 16. இ.சா. அவர்களே.எங்கள் காஃபிர் உம்மத்தை சார்ந்த சகோதரர் சார்வாகான் (காஃபிர் உம்மத்தில் காஃபிர்கள் சகோதரர்களாக இருக்க ஒரிறையின் அனுமதி உண்டா என்பது விவாதப் பொருள்)மீது எவ்வளவு F.I.R. போட்டாலும், CHARGESHEET போட்டு trial நடத்தி conviction தந்தாலும், சலிக்காமல் மேல் சொன்ன காமெடி பீஸ் ”அடிகளுக்கு” சீரியஸாக பதில் தருவார். (பதிலில் நல்ல விஷயங்கள் இருப்பது வேறு விஷயம்).ஆனால் அந்த ஆற்றல்மிகு காஃபிருக்கே பெரிய்ய ஆப்பு. இனி வரும் முதல் கமெண்டில் ஒரு SUCKER PUNCH, அடுத்து வரும் கமெண்டில் ஒரு KNOCK OUT PUNCH- மூமின்களின் சந்தோஷத்திற்காக……to be continued.

 17. @@@@@ SUCKER PUNCH @@@@@Aashiq Ahamed said…சகோதரர் சுவனப்பிரியன், அஸ்ஸலாமு அலைக்கும், என்னிடம் யாரும் பரிணாமம் குறித்து வாதிக்க வருவார்களேயானால் அவர்களிடம் நான் முதலில் கேட்கும் இரு கேள்விகள், 1. பரிணாமம் உண்மையென்று வாதிக்கப்போகின்ரீர்களா? 2. முதல் கேள்விக்கு விடை "ஆம்" என்றால் என்னுடைய அடுத்த கேள்வி "பரிணாமம் என்றால் என்னவென்று விளக்குங்கள்?" இந்த இரண்டு கேள்விகளை முதலில் வைக்கவே விரும்புவேன். இதற்கான பதில்களை கொண்டு வாதிப்பவரின் பரிணாம ஞானத்தை கணக்கெடுக்க பார்ப்பேன். பின்பு அதற்கேற்றார்போல என்னுடைய கேள்விகள் அமையும். பரிநாமவியலில் உள்ள ஓட்டைகள் என்பது கணக்கிட முடியாதது. அதனை எவரும் நிரூபிக்கவும் முடியாது. தங்கள் கற்பனைகளை கொண்டு ஏதாவது சொல்ல முயற்சிக்கலாமே ஒழியே ஆதாரங்களை காட்ட முடியாது. என்னுடைய தளத்தில் நமக்கும், பரிணாம ஆதரவாளர்களுக்கும் நடந்த விவாதங்களே இதற்கு சாட்சி. பரிணாமத்தை புரிந்துக்கொள்ள/பரிணாமம் குறித்த உங்கள் குற்றச்சாட்டுக்கு பதிலாக இதை பாருங்கள், அதை பாருங்கள், இந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார், அந்த விஞ்ஞானி அப்படி கூறிருக்கின்றார் என்று பலவித லிங்குகளை கொடுப்பார்கள். அங்கே சென்று படித்து பார்த்தால்/கண்டால் வெங்காய கதையாக இருக்கும். அதாவது உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது. தங்கள் கற்பனையை கொண்டு என்னென்னமோ சொல்லிருப்பார்கள், ஆனால் ஆதாரம் மட்டும் இருக்காது. நம் நேரத்தை வீணாக்கியவர்களை நினைத்து நொந்து கொண்டு திரும்ப வருவோம். இதுதான் தொடர்ந்து நடக்கின்றது. இப்போதெல்லாம் பரிணாம ஆதரவாளர்களுடன் வாதிட நேர்ந்தால், அவர்கள் சுட்டியை கொடுத்தால், அவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது 'தயவுக்கூர்ந்து அந்த சுட்டியில் உள்ள மத்திய மேட்டர் என்னவென்று சுருக்கமாக நீங்களே சொல்லிவிடுங்கள். இந்த மத்திய மேட்டார்தான் நான் எதிர்பார்ப்பதாக இருந்தால் நான் அந்த சுட்டியை பார்க்கின்றேன்". அப்புறம் மற்றொரு மிக முக்கிய விசயம். பரிணாமத்தை முளையிலேயே கில்லிவிடலாம். அதாவது, அடிப்படையிலேயே பிரச்சனைகளை கொண்டது பரிணாமம். அதனால் அதை முறியடிக்க நாம் அதிக தூரம் செல்லவேண்டியதில்லை. பரிணாம அடிப்படைகள் குறித்து கேள்விகள் எழுப்பினாலே பரிணாம ஆதரவாளர்கள் திணறுவார்கள். பதில் சொல்லுவதற்கு ஆதாரம் என்று ஒன்றும் இருக்காது.உதாரணத்துக்கு, சமீபத்தில், பரிணாமத்தின் அடிப்படையான "பரிணாம மரத்தை" கட்டுக்கதை என்று விமர்சித்தார் பாருங்கள் வென்டர்.இவர்களை முறியடிக்க நீங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அடிப்படையில் கை வைத்தாலே போதும். இன்ஷா அல்லாஹ் தொடர்கின்றேன்…உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹமத் அ

 18. @@@@@ KNOCK OUT PUNCH @@@@@அஸ்ஸலாமு அலைக்கும், தொடர்கின்றேன்…அப்புறம் படுதமாஷ் எல்லாம் பண்ணுவார்கள் பரிணாம ஆதரவாளர்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கின்றேன் பாருங்கள். நான் Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடு குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அதில் சில பரிணாம ஆதரவாளர்கள் வந்து நல்ல காமெடியான வாதத்தை முன்வைத்தார்கள். அதாவது, குட் அவர்களும் பரிநாமவியலாளர்தானாம், வேறு கொள்கையை கொண்டு வந்தாராம். இதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என்று கேட்டார்கள். என்னுடைய அடிப்படை கேள்வியை நன்கு புரிந்துகொண்டே ஏமாற்றுவது போல இருந்தது அவர்களது வாதம். நான் தெளிவாகவே கூறினேன். அதாவது குட் (மற்றும் Eldredge) பரிநாமவியலாளர்கள் என்றுதான் நானும் கூறினேன். என்னுடைய கேள்விகள் வேறு. அவை இதுதான், 1. எதற்காக தங்களுடைய கோட்பாடை கொண்டுவந்தார்கள் இவர்கள் இருவரும்? (குட் தெளிவாக நெத்தியில் அடித்தாற்போல சொன்னார் "It is gradualism we should reject, not Darwinism" – Gould, Stephen Jay 1980. "The Episodic Nature of Evolutionary Change" The Panda's Thumb. New York: W. W. Norton & Co., p. 181-182.)2. டார்வின் சொன்ன சிறுக சிறுக உயிரினங்கள் மாறியிருக்க வேண்டுமென்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்றுதானே தங்களுடைய கோட்பாட்டை கொண்டு வந்தனர் இருவரும். இதனை மறுக்கபோகின்றார்களா பரிணாம ஆதரவாளர்கள்?3. Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடை கடுமையாக விமர்சித்தார்கள் நியோ டார்வினிஸ்ட்கள். அது ஏன்?4. ஜே குட் மற்றும் அவரை ஆதரிக்கும் பரினாமவியலாளர்கள் சொல்கின்றார்கள், டார்வின் சொன்னது போல பரிணாமம் நடந்ததற்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லையென்று. இதை கேட்கும் எனக்கு தோன்றுவது என்னவென்றால் "ஓஹோ, ஆதாரங்கள் இல்லையா, அப்புறம் எப்படி பரிணாமம் உண்மையாக இருக்க முடியும்?"5. அடுத்து, ஜே குட்டை எதிர்க்கும் பரினாமவியலாளர்கள் சொல்கின்றார்கள் "ஜே குட் சொல்வது போல நடக்க வாய்ப்பில்லை" என்று. அதுமட்டுமல்லாமல், ஜே குட் கருத்துப் படி, பரிணாமம் குறுகிய காலத்தில் நடந்து, பிறகு மாற்றமடையாமல் இருப்பதால் அதற்கும் வரலாற்று ஆதாரங்கள் இல்லை. இப்போது இதை படிக்கும் எனக்கு தோன்றுவது என்னவென்றால் "ஓஹோ, அப்போ இதற்கும் ஆதாரமில்லையா?"6. ஆக மொத்தத்தில் இருவரது கோட்பாட்டுக்கும் ஆதாரங்களில்லை (அதை அவர்களே ஒருவர் நோக்கி ஒருவர் கூறிக்கொள்கின்றார்கள்)…. பிறகு எப்படி பரிணாமம் உண்மை? பிறகு எப்படி அது நடந்தது என்று தீர்க்கமாக சொல்கின்றார்கள்?இப்படி கேள்வி கேட்டதற்கு அந்த துறைச்சார்ந்த பரிணாம ஆதரவாளர் பதிலே சொல்லவில்லை. ஆக, இவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் கூட்டத்தினர். நான் கேட்பது என்னவென்று தெரிந்தும் திசை திருப்ப முயலும் எண்ணத்தை கொண்டவர்கள். அதனால் தான் "குட் மற்றும் Elredge" ஆகிய இருவரும் பரிநாமவியலாலர்தானே?? என்பது போன்ற தமாஷான வாதங்களை வைத்து கொண்டிருப்பார்கள். உள்ளே சென்று கொஞ்சம் நொண்டி கேட்டால் ஆட்கள் எஸ்கேப் ஆகி விடுவார்கள். அதற்கு அவர்கள் மேல் தப்பு சொல்லமுடியாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்???இங்கே நான் சொல்லிருக்கும் விஷயங்கள் உங்களுக்கு உபயோகப்பட்டால் உங்கள் வாதங்களில் சேர்த்து கொள்ளுங்கள்…நன்றி, உங்கள் சகோதரன்,ஆஷிக் அஹமத் அ

 19. நம்ம சகோக்கள் இறை மறுப்பாளர்களை பரிணாம காஃபிர் மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால்,அது எனக்கு பிடித்து இருப்பதாலும் , அம்மதம் என்னை எந்த விதத்திலும் கட்டுப் படுத்தாததாலும் அதன் மீது ஒரு உம்மத்தை கட்டமைக்கும் பணியில் இறங்கி உள்ளேன்.இதில் மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுமே சேரலாம்.அனத்துமே கடவுள்தான்.அவரவர் வாழும் வகையிலேயே வாழ்ந்து கொள்ளலாம்."இதுவ‌ரை பிரபஞ்சத்தில் வாழ்ந்து ம‌றைந்த,வாழும் அனைத்து உயிரின‌ங்க‌ளின் ஆசி அனைவருக்கும் வ‌ருவ‌தாக‌"ச(சைக்)கோ ந‌ரென் காஃபிர் உம்ம‌த்தில் இருந்து கொண்டே ச‌தி செய்வ‌தால் அவ‌ர் மீது ஃப‌த்வா கொடுத்து டைனோசாரை விட்டு க‌டிக்க‌ சொல்ல‌லாம் என‌ எண்ணுகிறேன்.எனினும் அவ‌ர் கூறிய‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் இர‌ண்டு ம‌ட்டுமே.இத‌ற்கும் ப‌தில் சொல்லி விட‌லாம். 1./உதாரணத்துக்கு, சமீபத்தில், பரிணாமத்தின் அடிப்படையான "பரிணாம மரத்தை" கட்டுக்கதை என்று விமர்சித்தார் பாருங்கள் வென்டர்./2. /Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடு/1.வென்டர் சொல்வதை ஏற்கிறார்கள் நம்பிக்கையாளர்கள்.சரி யார் இந்த வென்டர்.இவரின் முழு பெயர் க்ரய்க் வென்டர். இவர் மனிதனின்(ஹோமோ சேஃபியன்) ஜீன் குறியீடுகளை சரியாக கண்டறிந்தவர் என்பது இவரின் சிறப்பு.http://en.wikipedia.org/wiki/Craig_Venterவென்டர் என்ன கூறினார்?http://thesciencenetwork.org/programs/the-great-debate-what-is-life/what-is-life-panelஇம்மாதிரி விஷயங்ளில் எபோது கருத்து வேறுபாட்வராதா என்று கிறித்தவ படைப்பு கொள்கைவாதிகள் காத்துக் கொண்டே இருப்பார்கள்.இதில் பாருங்கள் இக்காணொளியின் எந்த இடத்தில் வென்டர் கூறுகிறார் என்று தெளிவாக கூறுவதை.http://www.evolutionnews.org/2011/03/venter_vs_dawkins_on_the_tree_044681.htmlஇவர்கள் சொன்னதை மொழி பெயர்ப்புதான் ச(சைக்)கோ நரேன் கூறிய குற்றச்சாட்டு.ச(சைக்)கோ என்பது நம் உம்மத்தில் அழைக்கும் முறையாகும் நீங்களும் என்னை அப்ப்டியே அழைக்கலாம்.இபோது இந்த குற்றசாட்டுக்கு பதில் கூறுகிறேன்.அ) வென்டர் ஒரு பரிணாம் துறை சார்ந்தவர் அல்ல.ஆ) இவர் பரிணாம இந்த காணொளியில் கூறியது தவிர இது குறித்து ஆய்வுக் கட்டுரை எதுவும் எங்கும் பதிவிட்டதாக தெரியவில்லை.ஆய்வு சஞ்சிகைகளில் வராத ஒன்று கருத்து மட்டுமே."The tree of life is an artifact of some early scientific studies that aren't really holding up…So there is not a tree of life."அதுவும் இடையில் வரும் கோடிட்ட இடங்களையும் சேர்த்து காணொளியில் கேட்டு விளக்க வேண்டுகிறேன்.(to be contd)

 20. /2. /Stephen Jay Gould மற்றும் Niles Elredge ஆகியோர் கொண்டுவந்த Punctuated Equilibrium கோட்பாடு/கேம்பிரியன் எக்ஸ்ப்ளோசன் என்ற கனடாவில் கண்டு பிடிக்கப்பட்ட படிபங்கள் சுமார் 55 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை.அவை முழு வளர்ச்சி பெற்ற விலங்குகள் போல் இருந்த்னை.அவற்றின் முன்னோர்கள் படிமங்கள் அதிகம் கிடைக்கவில்லை.இது பரிணாம் விளக்க்த்தில் ஒரு பெரிய சவால் என்றாலும்.இந்த கேம்பிரியன் பரிமங்களில் ஊள்ல 99% உயிரினங்கள் இபோது இல்லை.பெரும்பாலான உயிரினங்கள் கடல்வாழ் உயிரினங்கள்.இதன் பிறகு கண்டெடுக்கப் பட்ட படிமங்கள் வரிசைக் கிரமமாக உள்ளன்.இதனை விளக்கும் அடிப்ப‌டையில் வ‌ந்த‌துதான் இந்த‌ கொள்கை.இத‌ன் மீது டேனிய‌ல் டென்ன்ட் உட்ப‌ட்ட‌ ப‌ல அறிஞ‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌ம் வைக்கின்ற‌ன‌ர்.இது குறித்து ஒரு ப‌திவிட‌ வேண்டும்.http://theobald.brandeis.edu/pe.htmlhttp://evolution.berkeley.edu/evosite/evo101/VIIA1bPunctuated.shtmlCompeting Hypothesesabout the Pace of Evolutionhttp://evolution.berkeley.edu/evosite/evo101/VIIA1aHypotheses.shtmlபரிணாமம் என்பது பல காரணிகளை உள்ளடக்கியது.இயற்கைத் தேர்வு மட்டுமன்றி இன்னும் சில காரணிகளும் இருக்க வேண்டும்.அது குறித்து சில அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பது இயல்பே.அனைத்து படிமங்கள்,கால சான்றுக்ளுகாக்த்தான் பரிணாம் விள்க்கமே தவிர விளக்க்த்திற்காக ஆதரம் தேடுவது அறிவியல் ஆகாது.

 21. Excellent Post Im-mam-Ibnu Shakir. I have read ur every Article,and iam eagerly awaiting for ur Next Article. But i just amaized abt the article இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ் . It just explo(de)re abt how this fraud lier Mullahs cheating muslims and non-muslims . it is ground reality of ISLAMIC PSEDO-SCIENCE . Thank U

 22. அய்யா வணக்கம்,அந்த எலும்புக்கூடு ஒரு ஃபோட்டொஷாப் வேலை மட்டுமே.அதனால்தான் இதை பற்றி யாரும் இபோது சொல்வது இல்லை.பரிணாம எதிர்ப்பாளர்கள் எது பரிணாம்த்தில் விளக்குவதில் சிக்கலாக இருக்குமோ அதை மட்டுமே பிடித்துக் கொண்டு கருத்து திணிவு செய்யப் பார்ப்பார்கள்.ப‌டிமங்கள் துணை இன்றியே டி என் ஏ(DNA) சார்ந்து மட்டுமே பரிணாம நிரூபணமாக் ஆய்வுலகில் ஏற்றுக் கொள்ளப் படுகிறது.பரிணாமம் எல்லா உயிர்னங்களிலும் ஒரே வித்மாக ,ஒரே வேக‌த்தில் நடந்து இருக்க முடியாது.ஆகவே பரிணாமத்தின் காரணிகளை வரையறுப்பதில்தான் சில வித்தியாசங்கள் இருப்பது அறிவியலில் இயல்பே.இது கூட நீல்பிரிட்ஜ் 1972ல் எழுதிய கட்டுரை காட்டுகிறார்களே தவிர‌ 2011 வரை இதனை சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை காட்டுவது இல்லை.இது சில படிம தோற்ற நிகழ்வுகளுக்கு மட்டுமேயான விள்க்கம் என்பதையும் கூறுவது இல்லை.படிமங்களில் கால,உயிர் தோற்ற வரிசை எது பரிணாம மரத்திற்கு விரோதமாக் இருக்கிறது? 50% மேல் இப்படி இருந்தால் மட்டுமே பரிணாமம் மறுக்கப் படும்.http://www.fossilmuseum.net/fossilrecord.htmகிடைத்த படிமங்களில் இருந்து 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் முதல் இப்போது வரை உலகில் வாழ்ந்த,உள்ள உயிரினங்களை ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளுக்கும் வகை படுத்தி(4000 பிரிவுகள்) பாருங்கள். ஏன் பல் உயிரினங்கள் அழிய வேண்டும்?ஏன் புதிய உயிரினங்கள் தோன்ற வேண்டும்?.ஏன் ஒரே மாதிரியே பல உயிரினங்கள் இருக்க வேண்டும்?இதற்கு மாற்று விள்க்கம் அளிக்கும் அறிவியல்(கவனிக்கவும்!!!!!!) கொள்கை வரும் வரை பரிணாமம்தான் உயிர்களின் தோற்றம்,பரவல் கொள்கை!!!!!!!!!!!!!!. ஆக்வே பரிணாம மறுப்பாளர்கள் மனிதனின் படிமம் 4 பில்லியன் ஆண்டுகள் முன்பு கண்டு பிடிக்கப்பட்டால் பரிணாமம் பொய்பிக்கப்படும் என அறிந்து நன்கு இறைவனை வேண்டினால் ,மனிதன் அல்லது பரிணாமத்தை முற்றும் முழுதாக் பொய்ப்பிக்கும் படிமங்கள் கிடைத்து(?) விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமே!!!!!!!!!!!!

 23. ஆதாரம் கொடுத்தால் மூஃமின்கள் ஏற்றுகொள்வார்கள் என்று அப்பாவியாக நம்பும் சார்வாகானை பார்த்து பரிதாபப்படுகிறேன்.ஆதாரம் என்பது அல்குர்ஆனிலிருந்து அல்லது (தவ்ஹீத் அண்ணன் சஹி என்று சொன்ன) ஹதீஸ்லிருந்து மட்டுமே வரவேண்டும்.இது கூட தெரியாம பச்சப்புள்ள என்னன்னமோ பேசுது…

 24. ஸ‌லாம் இபின் ஷாகிர்/ஆதாரம் கொடுத்தால் மூஃமின்கள் ஏற்றுகொள்வார்கள் என்று அப்பாவியாக நம்பும் சார்வாகானை பார்த்து பரிதாபப்படுகிறேன்./"இதுவ‌ரை பிரபஞ்சத்தில் வாழ்ந்து ம‌றைந்த,வாழும் அனைத்து உயிரின‌ங்க‌ளின் ஆசி உங்களோடும் அனைவரோடும் இருப்பதாக‌‌"நான் இது கூட‌ அறியாம‌ல் இருப்பேனா?நான் சொன்ன‌து அனைத்தும் எங்க‌ள் காஃபிர் உம்ம‌த்தை சேர்ந்த‌ ச‌(சைக்)கோத‌ர‌ர்க‌ளுக்கு.ஹா ஹா ஹா!!!!!!!.ஏமாந்தீர்ர்க‌ளா!!!!!!!!!!உங்க‌ள் ச‌(சைக்)கோத‌ர‌ன்சார்வாகன்

 25. வணக்கம் நண்பர்களேஇத்தளம் சென்று பார்க்க பரிணாம் கொள்கையாளர்கள்& எதிர்ப்பாளர்கள் அனைவரையும் வேண்டுகிறேன்.மிக அருமையாக்வும் எளிமையாக்வும் உள்ளது.உங்கள் சந்தேகங்களுக்கு கூட பதில் அளிக்கப்படுகிறது.http://www.proof-of-evolution.com/index.htmlநன்றி

 26. இ.சா.உங்கள் “ஆயுதங்களுக்கு” பூஜை செய்துவிட்டீர்களா.(asked with straight face, not sarcastically).மூமின்களின் அறவியல் தாவா பணியால் மற்ற உம்மத்தினர் ச(சை)கோ ஆகி வருகிறார்கள்.முதல் அத்தாட்சி. நம்முடைய தருமி சார்- அந்த youtube காணொளியை பார்த்தோமா, வடிவேல் காமெடியை பார்த்த மாதிரி வயிறு குலுங்க சிரித்தோமா என்ற அளவில் நில்லாமல், அடைப்புகள் போட்டு ஆச்சிரியகூறிப் போட்டு கேள்விகூறியுடன் fossils பற்றி சிரிப்பை அடக்கிக் கொண்டு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு காஃபிர் சார்வாகன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் கூறிய விதம் அலாதியானது. இரண்டாவது அத்தாட்சி. நம்முடைய ஒரிறையின் அடிமை மருத்துவர் அப்துல்லா, நான் முன்னால் பெரியார்தாசன் என்ற புகழைவிட நான் ஒரு சைகோ, சைகோ, சைகோ, சைகோ (மனோவியல் நிபுணர்) என்ற புகழுடன் திகழ்ந்தவன் என்கிறார்.சரி எப்படி இருந்தாலும், இந்த விவாதத்தில் இ.சா அவர்களே நீங்கள் தான் வெற்றி பெற்றீர்கள்- இந்த வாதத்துடன்.//ஆதாரம் என்பது அல்குர்ஆனிலிருந்து அல்லது (தவ்ஹீத் அண்ணன் சஹி என்று சொன்ன) ஹதீஸ்லிருந்து மட்டுமே வரவேண்டும்.// பரிணாமத்தை (சார்வா கானை) மூன்று நாள் விவாதத்தின் மூலம் ஓட ஓட விரட்டிவிட்டோம் என்று சி.டி.கள் வெளியிட்டு கூட்டங்கள் போட்டு பறைச்சாற்றுங்கள். ஒரிறை is the great.ஆனால் கியாமத் நாளில் வெற்றிப் பெறுவது எங்கள்உம்மத் காஃபிர் கூட்டத்தினர் தான், நீங்கள் மற்ற 72 வழிகெட்ட கூட்டத்தைச் சார்ந்தவர், வெற்றி பெற மாட்டீர்கள். வேண்டுமானால் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் பந்தயம், கியாமத் நாள் வரை காத்திருந்து யார் வெற்றிப் பெறுவார்கள் எனப் பார்ப்போம். ரெடியா…..ஒரிறையை நடுவராக நியமிப்போம்.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s