காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து.

சல்மான் ருஷ்டியின் தலையை எடுக்க ஈரானிய ஷியா பிரிவினரின் தலைவர் கொமேய்னி போட்ட புகழ்பெற்ற பத்வாவின் காரணமாக, பத்வா என்றவுடனேயே தலையை சீவுவதையே நமது காஃபிர்கள் நினைத்துகொண்டிருக்கிறார்கள்.

பத்வா என்றால் என்ன? 

ஈமான் கொண்ட மூஃமின்களுக்கு பல நேரங்களில் பல விஷயங்களில் சந்தேகம் வரும். திடீரென்று சாப்பிட்டுகொண்டிருக்கும்போது முதலில் பிரியாணியில் கறியை சாப்பிடனுமா, அல்லது சோறை சாப்பிடணுமா? நிஹாரியில் எவ்வளவு நெய் ஊற்றணும்? சூடான பிரியாணியை ஊதி ஊதி சாப்பிடலாமா?  இல்லை அப்படியே சுடச்சுட சாப்பிடணுமா? பக்கத்து வீட்டு பொண்ணை சைட் அடிக்கலாமா அல்லது எதிர் வீட்டு சபராளியின் ஏங்கிப்போன மனைவியை சைட் அடிக்கலாமா? இது மாதிரி நெறைய கேள்விகள். கேள்விகள். கேள்விகள்.

ஆனால், மற்ற மதத்தினர் மாதிரி ”மதம் அல்ல மார்க்கத்”தில் இருப்பவர்கள் அந்த கேள்விகளுக்கான விடைகளை தாங்களே சிந்தித்து அடைய மாட்டார்கள். இது மார்க்கம். ஞாபகத்தில் வைத்துகொள்ளவும். ஆகவே மூமின்களுக்கு சொந்த புத்தி என்று ஏதும் இல்லை என்பது மட்டுமல்ல, தங்களுக்கு சொந்த புத்தி ஏதும் இல்லை என்பதை பெருமையாகவும் கருதுபவர்கள் மூஃமின்கள். உடனே மௌலானா, இமாம், காஜி, ஷேக், ஆலிம்களுக்கு லெட்டரில் கேள்வியை அனுப்பி விடுவார்கள். இமாம், காஜி, மௌலானாக்களுக்கு ஏதேனும் சொந்த புத்தி இருக்குமா என்று கேட்கக்கூடாது. அவர்களும் எந்த அளவுக்கு சொந்த புத்தி இல்லாமல், அந்த கேள்விக்கான விடையை குரான் ஹதீஸில் கண்டுபிடிக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் ஈமாந்தாரிகள் என்று எல்லா மூஃமின்களாலும் கொண்டாடப்படுவார்கள். அவர்களும் எதிர் வீட்டு சபராளி மனைவியை சைட் அடிப்பதை பற்றி நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்ன சொல்லியிருக்கிறார்கள், அவர்கள் எப்படியெல்லாம் மற்றவர் மனைவியை ஆட்டை போட்டிருக்கிறார்கள் என்று நெஞ்சம் நெகிழும் வகையில் விவரித்து முழநீள பத்வா வழங்குவார்கள். சொந்த புத்தியை உபயோகப்படுத்தும் தொந்தரவிலிருந்து விடுபட்ட மூமின்கள் சந்தோஷமாக அந்த வழியை பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.
இது மாதிரி உச்சா போவதிலிருந்து சைட் அடிப்பது தொடர்ந்து எல்லா கேள்விகளுக்கும், ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞரால் இஸ்லாமிய நூல்களை ஆராய்ந்து (அதாவது இப்னு இஷாக் எழுதிய நபிஹள் நாயஹம் வாழ்க்கை வரலாறு, பெலஹீனமான ஹதீஸ், பெலமான ஹதீஸ், அல்குரான் ஆகியவை. இந்த வரிசை பத்வா கொடுப்பதற்கு மிகவும் உகந்ததிலிருந்து மிகவும் பலவீனமானது வரை) அவரது சொந்த சரக்கை சொல்லிய பின்னால், அல்லாஹ்வே மிகவும் அறிவான் என்று முடித்து வைப்பதற்கு பெயர்தான் பத்வா.
சொந்த சரக்காவது ஓரளவுக்கு சீரியஸாக இருக்கும். ஆனால், சொந்த சரக்கு இல்லாமல் உண்மையிலேயே ஹதீஸ், அல்குரான் என்று எடுத்து பத்வா கொடுப்பார்களே அதுதான் ரொம்ப காமெடியாக இருக்கும். சிச்சீ.. மனம் மகிழும் வண்ணம் இருக்கும்.
ஆகவே இப்போது காபிர்கள் மனம் மகிழக்கூடிய பத்து பத்வாக்களை பார்ப்போம்.
அல்ஹம்துலில்லாஹ்

10 . உச்சா போகும்போது பேசாதே!

திரும்பத்திரும்ப பத்வாக்களிலும், நபிஹள் நாயஹம் வாழ்க்கையிலும் உச்சா போவது முக்கியமான ஒரு விஷயமாக இருப்பதை பற்றி காஃபிர்கள் சிந்திக்கலாம். மூமின்களும் உச்சா போகும்போதுதான் இதில் ஏதேனும் பத்வா கித்வா இருக்குமோ என்றும் சிந்திப்பார்கள். உடனே பத்வா டிபார்ட்மெண்டுக்கு லெட்டர் போட்டுவிடுவார்கள். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.
http://en.islamtoday.net/node/769
பாத்ரூமில் இருக்கும்போது பேசலாமா என்று ஒரு மூமின் வினவுகிறார்.
இதற்கு ஒரு பத்வா டிபார்மெண்டே போட்டு ஒரு ஹதீஸ் ஒளியில் டார்ச் லைட் அடித்து (ஹதீஸை.. வேற சமாச்சாரத்தை அல்ல) கன்னா பின்னாவென்று சிந்தித்து (சும்மாவா நமது அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்?) பத்வா கொடுக்கிறார்.

பாத்ரூமில் இருக்கும்போது பேசலாம் ஆனால், உச்சா போகும்போது பேசக்கூடாது என்று பத்வா போட்டுவிட்டார்.
The Fatwa Department Research Committee – chaired by Sheikh `Abd al- Wahhâb al-Turayrî
ஆதாரம் இந்த ஹதீஸ்.
Abû Sa`îd said: I heard the Prophet (peace be upon him) saying : “Two men should not go to relieve themselves, exposing their private parts, and then be talking to each other, since Allah hates that.” [Sunan Abî Dâwûd (15) Sunan Ibn Mâjah (342) and Musnad Ahmad (10884)]
ஏன் இதனை காஃபிர்கள் தாராளமாக ஆதரிக்கலாம்?
சினிமா தியேட்டரில் உச்சா போகும்போது அங்க இங்க பார்த்து ஒரு ஒதுக்குப்புறமா நின்னு ஜிப்பை கழட்டிகிட்டு இருக்கும்போது அப்பத்தான் “மாப்ளே எங்கடா இங்க? சினிமா பாக்கவா வந்தே?” (அப்புறம் என்ன மயித்துக்கு சினிமா தியேட்டருக்கு ஒருத்தன் வருவான்?) என்று தடாலென்று தோளில் அடிப்பான் ஹைஸ்கூல்ல கூட படிச்ச ஒரு சாவுகிராக்கி. அடிக்கிற அடியில வந்துகிட்டிருந்த உச்சா கன்னா பின்னான்னு பேண்ட், சட்டை, சுவருக்கு அடுத்தாப்பல இருக்கிற பெண்கள் கக்கூஸ் வரைக்கும் செதறி அடிக்குமே.. அப்ப வரும் பாருங்க கோவம்.. மவனே கையில மட்டும் என் உயிர் மையம் இல்லைன்னா, உன் கழுத்தை ஹலால் பண்ணியிருப்பேன் என்று சிந்திக்கிறீர்களே.. இப்ப சொல்லுங்கள். இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டுமா கூடாதா?
நிச்சயம் ஆதரிக்க வேண்டும். கூடவே உச்சா போகும்போது தோளில் அடிப்பவர்களது கழுத்தை ஹலால் பண்ணலாம் என்று பத்வா போட்டால், இன்னும் தீவிரமாக ஆதரிக்கலாம். (அதே நேரத்தில் நின்றுகொண்டு உச்சா போவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை பத்வா லிஸ்டில் இருப்பதை கண்டுகொள்ள வேண்டாம்)

9: கொட்டாவி விடுவது ஹராம். மூஃமின்கள் கொட்டாவி விடக்கூடாது.

கொட்டாவி விடும்போது, “ அ-உது பில்-லாஹ் மின் அல்-ஷைதான் அல்-ரஜ்ம் “ என்று சொல்லவேண்டுமா? என்று ஒரு மூமின் வினவுகிறார். அதற்கு பதிலளித்த ஷேக் சாத் அல் ஷுவைரிக் அவர்கள், அட சைத்தான்கிபச்சா, கொட்டாவி விடுவதே ஹராம் என்னும்போது கொட்டாவி விட்டுவிட்டு என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறாயே என்று ஒரு பிடி பிடிக்கிறார் http://en.islamtoday.net/node/1664
காபிர்கள் மனம் மகிழ இதில் என்ன இருக்கிறது?

பொதுவாக மூமின்களுக்கு இஸ்லாமிய அறிவியல் தவிர வேறு அறிவியல்களில் அதிக நாட்டம் இல்லை என்பதை இதற்குள் அறிந்திருப்பீர்கள். அந்த நேரத்தில் அவர்களுக்கு சார்வாகன், நரேன் போன்ற காபிர்கள் பாடம் எடுக்கும்போது அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள், அப்படியே கண்டுகொண்டாலும் கொட்டாவி விட்டு கண்ணை சொக்குவார்கள். இஸ்லாமை நிரூபிக்காத அறிவியல் என்னய்யா அறிவியல் என்பதுதான் நமது மூஃமின்களின் நிலைப்பாடு என்பதை இன்னேரம் உணர்ந்துள்ள காஃபிர்கள் கொட்டாவி விடும் மூஃமின்களை தடுப்பது எப்படிதானே சிந்திப்பார்கள்?
மூஃமின்கள் கொட்டாவி விடும்போது, இந்த பத்வாவை நினைவு படுத்துங்கள்.
மூமின்களுக்கு மட்டுமேயான இந்த பத்வாவை காபிர்கள் கண்டுகொள்ளத்தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் தப்பு. சவுதி அரேபியாவில் முஸ்லீம் பெண்களுக்கு மட்டும் புர்க்கா என்று கிடையாது. உள்ளே எந்த பெண்மணி போனாலும் புர்கா போட்டுத்தான் ஆகவேண்டும். அது போல இஸ்லாமிய ஷரியா பொங்கித்ததும்பும் நாடாக இந்தியா ஆனால், (அப்போது அதற்கு பெயரை மாற்றிவிடுவோம்) இந்த பத்வா காஃபிர்களுக்கும் கட்டாயம் என்று உணருங்கள். அப்போது கொட்டாவி விட்டால் திறந்த வாயிலேயே முட்டவீனின் குச்சி இறங்கும் என்று அறிவித்துகொள்கிறோம்.

8. புட்பால் விளையாடக்கூடாது!

ஜிகாதுக்காக பயிற்சி எடுக்கும்போது தவிர வேறு நேரங்களில் புட்பால் விளையாடக்கூடாது என்று நமது இஸ்லாமிய புனித பூமி சவுதி அரேபியா ஷேக் அப்தல்லா அல்-நஜ்தி பத்வா விதித்துள்ளார்.
http://www.mukto-mona.com/Articles/fatemolla/fatwa_in2005.htm 
“One should not use the terminology established by the non-believers and the polytheists, like ‘foul,’ ‘penalty kick’… Whoever pronounces these terms should be punished, reprimanded, kicked out of the game, and should even be told in public: ‘You have come to resemble the non- believers and the polytheists, and this had been forbidden.’”
ஏன் காஃபிர்கள் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்கலாம்.
எந்த புட்பால் விளையாட்டிலாவது நாம் உருப்படியா என்று கவனிக்க வேண்டும். உலகக் கோப்பை இதுவரை பலமுறை நடந்துள்ளது. எந்த இறுதி போட்டியிலாவது நாம் கலந்துகொண்டிருக்கிறோமா?

இந்தியாவில் புட்பால் விளையாடுபவர்களில், வெறியர்கள் என்றால் பெங்காலிகள்தான். பெயரிலேயே காலித்தனத்தை வைத்துள்ள இவர்களுக்கு நாம் ஆதரவாக இருக்கலாமா? மூஃமின்களின் நாடான பங்களாதேஷ் கூட பரவாயில்லாமல் புட்பால் விளையாடுகிறது. நாமோ அவர்களை விட கேவலமாக புட்பால் விளையாடுகிறோம். தேவையா என்று சிந்தியுங்கள். ஆகவே நாம் இந்த பத்வாவை ஆதரிக்கலாம். சிறுபான்மையினர் மனம் கோணக்கூடாது என்று புட்பால் விளையாடுவதை நிறுத்திவிட்டோம் என்று இந்திய அரசு அறிவித்தால், சிறுபான்மையினரின் ஓட்டும் கிடைக்கும். நமது மானமும் காற்றில் பறக்காது. ஒரே கல்லில் ரெண்டு மாங்கா!

7 தொடையை காட்டக்கூடாது (ஆண்கள் மட்டும்)

Sheikh Sheikh ‘Abd al-Rahman al-Ajlan, lecturer at the Grand Mosque in Mecca, states ” … man must wear clothing that is of sufficient length to cover all of the thigh, whether he is standing, sitting, bowing, in jalsah, or in prostration. His entire thigh must remain covered at all times.”
http://en.islamtoday.net/node/1119

காஃபிர்கள் ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்?

உலக நாயகன் கமலஹாசனை நம் தவ்ஹீத் அண்ணன் ஆதரித்தாலும், அவர் படங்களில் வெறும் ஜட்டி மட்டும் போட்டுகொண்டு வருவதை ரொம்ப ஸ்டைல் என்று நினைத்துகொண்டு கொல்லறார். பதினாறு வயதினிலேவில் ஒரு கோவணம் கட்டிகொண்டு வந்தவர் பிறகு ஷ்டைலாக ஜட்டி போட்டுகொண்டு டிக்டிக்டிக் எல்லாம் பண்ணி பிறகு ஆளவந்தான் பேளவந்தான் என்று ஒரே கொடுமை பண்ணிகொண்டிருப்பதை , காஃபிர்களே, சிந்தித்து பாருங்கள். ரசிகர்கள் சொல்வதை வைத்து தன்னை ஏதோ ஒலக அலகன் என்று நினைத்துகொண்டு அவுத்து போட்டு ஆடுவதை பெருமையாக நினைக்கும் இந்த கமலஹாசனை கொஞ்சம் அடக்கி வைத்தால், நாம் கொஞ்சம் தைரியமாக சினிமா பார்க்கலாம் இல்லையா?

இந்தியில் கூட சல்மான் கான் சான்ஸ் கிடைத்தால் சட்டையை கிழித்துகொள்கிறார்.

அவரையும் அடக்கிவைக்க பத்வாவை காட்டி கொஞ்சம் பயமுறுத்தினால் என்ன என்று காஃபிர்கள் சிந்திக்க வேண்டும்.
நம் கிராமங்களில் நாசுவ முஸ்லீம்களுக்கு வெறும் கோவணம் மட்டும் கட்டி அலைய விட்டாலும் பார்க்க கொடுமையாகத்தான் இருக்கிறது. ஆகவே அவர்களாவது பொழச்சி போகட்டும் என்று இந்த பத்வாவை ஆதரிக்கலாம்.

6. காதல் கதைகளை படிக்கக்கூடாது!

According to Sheikh Salman al-Oadah, “These stories take people from the real world and place them in a world of fantasy. In doing so, they give people an unrealistic concept of life as well as unrealistic expectations.” Testify!
He goes on to say, “It is only advisable for certain academics and concerned people to read such stories so they can be aware of what is out there.” ஆஹா! நம்ம ஷேக்குக்கு இந்த காதல் கதைகளை படிக்கிறதுக்கு ஆசையா இருக்கு. அதனால அவர் படிக்கிறதை தடை பண்ணக்கூடாதுல்ல. நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிஸ்வஸல்லத்தின் வழி அல்லவா இது? நான் பண்ணலாம். நீ பண்ணக்கூடாது என்று நமது உயிரினும் மேலான நபிஹள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வஹி வரும். நம்ம ஷேக்குக்கு பத்வா வருது.

ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்? மொதல்ல இந்த காதல் கதைகளை எல்லாம் படிச்சீங்கண்ணா அதில் ஆண்கள் ரொம்பவும் கரிசனமாக பெண்களிடம் நடந்துகொள்வார்கள்.
பெண்களுக்கு மரியாதை தருவார்கள். அவர்களது அன்பைப்பெற கடுமையாக முயற்சி செய்வார்கள்.

இதெல்லாம் முஸ்லிமாக்கள் அறிந்தால் அல்லாஹ் இவர்களை கணவன்மார்கள் அடிப்பதன் மூலம் கௌரவப்படுத்துவதை எப்படி புரிந்துகொள்வார்கள்?

இது முஸ்லீம் ஆண்களுக்கே உரித்தான பத்வாவாக இருந்தாலும், இதனை நீங்களும் ஆதரிக்கலாம்.

5. போலியோ வாக்ஸின் போடக்கூடாது.

போலியோ இந்தியா பாகிஸ்தான் நைஜீரியா போன்ற நாடுகளில் மீண்டும் வந்துகொண்டிருக்கிறது. ஏறத்தாழ போலியோவே அருகிப்போய்விட்ட சூழ்நிலையில் மீண்டும் போலியோ தலைகாட்ட காரணம் என்ன? நமது மௌலானாக்களும், காஜிகளும், இமாம்களும் போட்ட பத்வாவே காரணம். போலியோ மருந்து உண்மையில் ஆண்களையும் பெண்களையும் மலடுகளாக ஆக்க கிறிஸ்துவர்களின் சதி என்று நமது இமாம்களும் காஜிகளும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

இதில் என்ன விளையாட்டென்றால், பொதுவாக போலியோ வந்தவர்களுக்கு பெண் கிடைக்காமல் பிள்ளைக்குட்டி இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். Source: “POLIO ERADICATION: Looking for a Little Luck”, Roberts Science 6 February 2009
இந்த பத்வாவை ஆதரிக்க நமது காஃபிர்கள் தயங்கலாம். நான் நிச்சயம் தயங்கவில்லை. ஏனெனில் வாக்ஸின் என்பதே ஒரு பரிணாமவியல் சதித்திட்டம் என்று கருத பலத்த ஆதாரங்கள் உள்ளன. போலியோ வாக்ஸின் மட்டுமல்ல, ப்ளூ வாக்ஸின் போன்றவையும் அவ்வப்போது மாறிவரும் போலியோ, புளூ கிருமிகளை எடுத்து அவற்றை வளர்த்து அதிலிருந்து வாக்ஸின் எடுப்பதுதான். தடுப்பு மருந்து என்பதை ஒப்புகொண்டால், நாம் பரிணாமம் என்பதையும் ஒப்புகொள்ளவேண்டும் என்று பல பத்திரிக்கைகளில் எழுதித்தொலைத்துவிட்டார்கள். நமது மூஃமின்கள் அல்லாஹ் போதுமானவன் என்று சொல்லிக்கொண்டே ஹராமான விஷயங்களை தொடர்ந்து செய்துவந்தாலும், பரிணாமம் பொய் என்று சொல்லிக்கொண்டும், புளூ வாக்ஸினுக்கும் பரிணாமவியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லிகொண்டு மருந்தடித்துகொண்டாலும், எனக்கென்னமோ மனது கேட்பதில்லை. ஆகையால் தடுப்பு மருந்து என்ற விவகாரத்தையே எதிர்க்கிறேன்.

4. மிக்கி மவுஸை கொல்லவேண்டும்.

ஓகே இது சல்மான் ருஷ்டி மீது போட்ட தலையெடுக்கும் பத்வா மாதிரியான பத்வாதான் என்றாலும், நமது ஷேக் மொஹம்மத் அல் முனாஜித் அவர்களிடம் மிக்கி மவுஸ் தலையை எடுப்பது அவ்வளவு லேசான விஷயமில்லை என்று யாராவது எடுத்துச் சொல்லியிருக்கலாம்.

உண்மைதான். நம்ம ஷேக் மிக்கி மௌஸை கொல்ல விலை வைத்திருக்கிறார். மிக்கி மௌஸ் என்பது சாத்தானின் போராளி என்பதையும் அவர் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார். Sheikh Muhammad Al-Munajid decreed that household mice and their cartoon cousins must be “killed in all cases”, according to the U.K.’s Daily Telegraph. வீட்டில இருக்கிற எலியானாலும் சரி, கார்ட்டூன் எலியானாலும் சரி, கொன்னே ஆகணும்னு பத்வா போட்டுட்டார்.
இவரும் நம்ம இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் மாதிரியான கேஸ் என்று நினைத்தால், உங்கள் தவறு. இவர் அமெரிக்காவில் வாஷிங்டனில் சவுதி அரேபியாவின் முன்னாள் தூதர். இவர் சவுதி அரேபியாவின் அரசாங்க டெலிவிஷன், அல்-மஜ்ட் டிவியில் இஸ்லாம் எலிகளை பற்றி என்ன சொல்கிறது என்று கேட்டபோது இந்த பத்வாவை அளித்தார்.
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் ஜெர்ரி எலி தப்பித்துவிட்டது என்று கருத வேண்டாம். ஜெர்ரி தலையையும் எடுக்க பத்வா விதித்துவிட்டார்.
Source: Report: Saudi Cleric Says Mickey Mouse ‘Must Die’.
ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்?
டொனால்ட் டக் பொதுவாக நமது மூமின்களை போலவே நடந்துகொள்கிறது என்பதை கவனித்திருப்பீர்கள். அதனால், மிக்கி மவுஸ் எப்போது பார்த்தாலும் டொனால்ட் டக்கை ஏமாற்றிகொண்டே இருக்கிறது. இதனை ஒரு கார்ட்டூனில் பார்த்தால் சரி ஒன்னே ஒன்னும் என்று விட்டுவிடலாம். எல்லா கார்ட்டூன்களிலும் அதே மாதிரி ஏமாற்றிகொண்டே இருந்தால் அதனை அமெரிக்க சதி என்று சொல்லாமல் என்ன செய்வது? எலிகளை எல்லாம் கொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் தெரிவித்துள்ளார். ஆகவே எல்லா எலிகளையும் கொன்று மிக்கி மவுஸ் உட்பட எல்லா எலிகளையும் கொன்று ஈமானை பரப்புவோம்.

3: உலகம் தட்டையானது; சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்று நம்பவேண்டும். மறுப்பவனெல்லாம் காபிர் (கொல்லப்பட தகுதியானவன்)

இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் இந்த பத்வா உண்மையான பத்வாதான். இஸ்லாமிய புனிதபூமியான சவுதி அரேபியாவின் தலைமை முஃப்டி ஷேக் இப்னு பாஸ் உலகம் தட்டையானது. சூரியன் பூமியை சுற்றுகிறது என்று தான் அல்லாஹ் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடம் இறக்கிய அல்குரான் கூறுகிறது. மறுப்பவனெல்லாம் காபிர். துணைக்கோள்கள் மூலமாக பூமியை பந்து போல காட்டும் படங்கள் எல்லாம் இஸ்லாமுக்கு எதிரான அமெரிக்க சதி, யூத சதி என்று பத்வா கொடுத்திருக்கிறார்.

The Fatwa: Grand Mufti Sheikh Ibn Baaz: The Sun Revolves Around the Earth In a 2000 Fatwa titled “The Transmitted and Sensory Proofs of the Rotation of the Sun and Stillness of the Earth”, Saudi Arabian Grand Mufti Sheikh Ibn Baaz asserted that the earth was flat and disk-like and that the sun revolved around it. He had insisted that satellite images to the contrary were nothing but a Western conspiracy against the Islamic world. Source: Al-Ahram Weekly Issue 477, 13-19 April, 2000.
இதனை ஏன் ஆதரிக்க வேண்டும்?
ஓகே. காபிர்கள் இதனை ஆதரிப்பது கொஞ்சம் பிரச்னைதான். ஆனால், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கமல்ல அது ஒரு காமெடி மார்க்கம் என்று வயிறு வலிக்க சிரிக்க இதனை விட நல்ல ஒரு பத்வா உங்களுக்கு கிடைக்குமா? சிந்தித்து பாருங்கள்.
இது நமது புனித பூமியின் தலைமை முஃப்டி கொடுத்திருக்கிறார். அதுவும் இஸ்லாமில் கரை கண்ட, அரபி மொழியில் கரைகண்ட முஃப்டி கொடுத்திருக்கிறார். நமது தவ்ஹீத் அண்ணனின் தாய்மொழி என்ன அரபி மொழியா? இல்லை. ஆனால், இருட்டுக்குள்ள வெளிச்சம், வெளிச்சத்துகுள்ள இருட்டுன்னு ஏதோ கண்ணாமூச்சி காட்டி அல்குரானில் உலகம் உருண்டை என்று தலையை சுற்றி மூக்கை உங்கள் மூக்கை எங்க மூக்கையெல்லாம் தொட்டு நிரூபித்துவிடுவார். தவ்ஹீத் அண்ணனை நம்ப வேண்டாம் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தாலும், நமது புனித பூமியின் தலைமை முஃப்டியா தவ்ஹீத் அண்ணனா என்று கேட்டால் நாம் வேறு வழியின்றி புனித பூமியின் தலைமை முஃப்டியையே ஆதரிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மேலும் நம் மூஃமின்களில் சிலர் இஸ்லாமிய அறிவியல் என்று பல கொடுமைகளை இழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மூலையையும் கசக்கி கசக்கி, எப்படிடா, இந்த உடான்ஸை வைச்சி ஐன்ஸ்டீன் மாதிரி பிலிம் சுத்துறது என்று ரொம்பவுமே கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் ஈமானுக்காக கஷ்டப்படுவதை பார்க்கும்போது நமக்கே கண்களில் கண்ணீர் பொங்குகிறது, சிரிச்சி நமக்கு வாயெல்லாம் வலிக்கிறது. ரொம்ப சிரிச்சதில் வயிறெல்லாம் வலிக்கிறது. அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள். (அல்லாஹ் அடிக்கடி சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுவதை நினைவுபடுத்திகொள்ளவும்)
இப்படிப்பட்ட கஷ்டங்களிலிருந்தெல்லாம் இந்த பத்வா அவர்களுக்கு விடுதலை அளிக்கிறது. எப்படி பரிணாமம் பொய் என்று தடாலடி அடிக்கிறார்களோ அதே போல இனிமேல், உலகம் உருண்டை இல்லை, உலகம் தட்டைத்தான். சூரியன் பூமியை சுற்றுகிறது. பூமி சூரியனை சுற்றுகிறது என்பது கலிலியோவின் நிரூபிக்கப்படாத தியரி என்று அடிக்கலாம். யார் என்ன ஆதாரம் வைத்தாலும், நீ உலகம் உருண்டைன்னு நேரா பாத்தியா? நீ ராக்கெட் மேல போயி உலகத்தை பாத்தியா என்று கேள்வி மேல் கேள்வி போட்டு தாக்கலாம். உலகம் சூரியனை சுற்றுகிறது என்பது பொய். நீ சூரிய மண்டலத்துக்கு மேலே போயி ஒரு வருஷம் முழுக்க உட்கார்ந்திருந்து பூமி சூரியனை சுற்றுவதை பாத்தியா என்றும் தாக்கலாம். பூமி உருண்டையா இருந்தால் எல்லா தண்ணியும் வழிந்து போய்டுமே, எப்படி உருண்டையான பூமியில தண்ணி ஒட்டிகிட்டு இருக்கும் என்று கேள்வி மேல் கேள்வி போட்டு கேக்கலாம். உருண்டையான உலகத்தில ஒரு மனுஷன் நடுவில நின்னா சரி. ஓரத்தில இருந்தா வெளியே வுழுந்திடுவானே? என்ன பண்ணுவே என்று மடக்கலாம். பூமி வேகமா சூரியனை சுத்துதுன்னு சொல்றியே, ஒரு சாதாரண கார்ல போனாவே தடதடன்னு ஆடுதே, இவ்வளவு பெரிய உலகம் அவ்வளவு வேகத்தில போனா எவ்வளவு ஆடும்? அதெல்லாம் எங்க? என்று கேட்கலாம். அவ்வளவு வேகத்தில போனா, நாமெல்லாம் பிஞ்சி போயிடமாட்டமா என்று கொக்கி போடலாம். நமக்குத்தான் மூஃமீன் சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்களே.. நமக்கு படு பயங்கர சப்போர்ட் அளித்துவிடுவார்கள். “நன்றாக நாத்திகர்களின் நாக்கை பிடிங்கிகொள்வது போல கேள்வி கேட்டீர்கள்”, “இந்த சவுக்கடிக்கு பிறகு இந்த பக்கமே வரமாட்டார்கள்”, “உலகத்தின் பண்பை பற்றி அழகாக குரான் ஒளியில் விளக்கி நாத்திகர்களை தோற்றோடச் செய்துவிட்ட சகோதரருக்கு நன்றி” இப்படி பின்னூட்டங்கள் பறக்கும்.
இதில் காபிர்களுக்கும் நன்றாக பொழுது போகும்.
(பின்குறிப்பு: காபிர்களுக்கு எச்சரிக்கை. இந்த காலத்தில் இப்படிப்பட்ட பத்வாக்களை ஒரு முஸ்லீம் கூட நம்ப மாட்டார் என்று கருத வேண்டாம். நைஜீரியாவில் பெருகி வரும் பொக்கொ ஹராம் என்ற அமைப்பு உலகம் தட்டை, சூரியனே உலகத்தை சுற்றிவருகிறது போன்ற குரான் போதனைகளை பள்ளிகளில் சொல்லித்தர வேண்டும் என்று போராடி வருகிறது. அதாவது பார்க்கும் இடங்களிலெல்லாம், முக்கியமாக பள்ளிக்கூடங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் குண்டு வைத்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் இந்த குண்டுவெடிப்புகளில் இறந்திருக்கிறார்கள். கூகுள் செய்திகளில் boko haram என்று தேடிப்பார்க்கவும். ஆகவே இது தற்காலிக நகைச்சுவைதான் என்று உணரவும்.)
இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

2. வாய்வழி புணர்ச்சி ஊ……க்கே

ஷேக் அப்த் அல் வஹாப் அல் துராய்ரி (Sheikh Abd al-Wahhab al-Turayrî, former professor at al-Imam University in Riyadh) அவர்கள் அளித்த பத்வாவின் படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வாய்வழிப் புணர்ச்சி இஸ்லாமிய ஷரியாவின் படி சரியானது. நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள், “முன்னாலோ பின்னாலோ எப்படி வேண்டுமானாலும் உறவு கொள்ளுங்கள். குதவாய் வழியாகவும், மாதவிடாய் காலத்திலும் மட்டும் வேண்டாம்” என்று சொல்லியிருக்கிற படியால் இது ஆகுமானது என்று அறிவிக்கிறார்

இந்த பத்வாவை ஏன் ஆதரிக்க வேண்டும்?
இதுக்கெல்லாம் விளக்கம் வேற வேணுமா? ஆனால் இதில ஒரு பிரச்னை இருக்கு. அத அப்புறம் பாப்போம். இப்போதைக்கு அடுத்ததை பாப்போம்.

டட்டட்டாய்ங்… நம்பர் ஒன்!

1) அலுவலகத்தில் யாராவது பெண்களை வேலைக்கு வைக்க வேண்டுமென்றால், அப்பெண்களது மார்பில் பால் குடித்து மம்மி என்று ஆண் வேலையாட்கள் அழைக்க வேண்டும். 

இன்ப அதிர்ச்சியில் மூர்ச்சை போட்ட காபிர்களே எழுந்திரியுங்கள்! நிஜமாத்தான் சார்! தமிழ் அறிந்த மூஃமின்கள் இந்த விஷயமாக தீவிரமாக ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த இணைப்பிலும் பார்க்கலாம்.
http://groups.google.com/group/fromgn/browse_thread/thread/a50da1b2bc8013c 

தவ்ஹீத் அண்ணனின் தளத்தில் சஹி முஸ்லீம் பால்குடி அத்யாயம் http://onlinepj.com/sahih_muslim/athiyayam_17/

ஒரு சில தேர்ந்தெடுத்த ஹதீஸ்களை பார்ப்போம்.

7 பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது தொடர்பான சட்டம்.
2878 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் பின் மஅகில் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் வரும்போது (என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபா வின் முகத்தில் அதிருப்தியை நான் காண்கி றேன்” என்று கூறினார்கள். சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித்தாய் – மகன் உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள். சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) பருவ வயதை அடைந்த மனிதராயிற்றே, அவருக்கு எவ்வாறு நான் பாலூட்டுவேன்?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தவாறு, “அவர் பருவ வயதை அடைந்த மனிதர் என்பது எனக்கும் தெரியும். (உன்னிடமிருந்து பாலைக் கறந்து அவரைக் குடிக்கச் செய்வாயாக)” என்று கூறினார்கள். 14இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர் (சாலிம்) பத்ருப் போரில் கலந்து கொண்டவராவார்” என்று அதிகப்படி யாக இடம்பெற்றுள்ளது.இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புன்னகைத்தார்கள் என்பதற்குப் பதிலாக) சிரித்தார்கள்” என்று இடம்பெற் றுள்ளது.

2879 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) சாலிம் (ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவி சஹ்லா) பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “சாலிம் ஆண்கள் அடையும் பருவ வயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் சஹ்லாவிடம், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்துவிடும்” என்று கூறினார்கள்.
அவர் (திரும்பிச் சென்று) மீண்டும் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “நான் அவருக்குப் பால் கொடுத்துவிட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது” என்று கூறினார். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2880 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) சஹ்லா பின்த் சுஹைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (ரலி) அவர்கள் எங்களுடன் எங்கள் வீட்டில்தான் இருக்கிறார். -அவர் (சஹ்லாவின் கணவர்) அபூ ஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனும்) ஆவார்.- அவர் ஆண்கள் அடை யும் பருவ வயதை அடைந்துவிட்டார்; மற்ற ஆண்கள் அறிகின்றவற்றை அவரும் அறிகி றார்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு. இதனால் நீ அவருக்குச் செவிலித் தாய் ஆகிவிடுவாய்” என்று கூறினார்கள்.
இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ஓர் ஆண்டு காலமாக, அல்லது சுமார் ஓராண்டு காலமாக இந்த ஹதீஸை நான் (யாரி டமும்) அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க நான் அஞ்சினேன். பின்னர் (ஒரு முறை) காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் என்னிடம் ஒரு ஹதீஸை அறிவித்தீர்கள். அதை இதுவரை நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை” என்று கூறினேன்.
காசிம் (ரஹ்) அவர்கள், “அந்த ஹதீஸ் என்ன?” என்று (என்னிடம்) கேட்க, நான் அதைத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், “என்னிடமிருந்து நீங்கள் அதை (தாராளமாக) அறிவியுங்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அதை அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2881 ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “விரைவில் பருவ வயதை அடைய விருக்கும் அந்தச் சிறுவன் உங்களுடைய வீட்டிற்குள் வருகிறானே! ஆனால், அவன் என் வீட்டிற்குள் வருவதை நான் விரும்பமாட்டேன்” என்று கூறினார்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இதற்கான) முன்மாதிரி உங்களுக்குக் கிடைக்க வில்லையா?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அபூஹுதைஃபாவின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் என் வீட்டிற்குள் வருகிறார்; அவர் பருவ வயதையடைந்த மனிதர். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் உறவு ஏற்பட்டு) அவர் உனது வீட்டிற்குள் வரலாமே!” என்று கூறினார்கள்.

2882 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (பால்குடிப் பருவத்தைக் கடந்துவிட்ட) பால் குடிக்கும் அவசியமில்லாத நிலையில் உள்ள சிறுவன் (திரையின்றி) என்னைப் பார்ப்பதை என் மனம் விரும்பவில்லை” என்று சொன் னார்கள்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “எதற்காக (நீங்கள் அவ்வாறு கூற வேண் டும்)?” என்று கேட்டுவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: சஹ்லா பின்த் சுஹைல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சாலிம் (என்) வீட்டிற்குள் வருவதால் (அவர் என்னைத் திரையின்றிப் பார்க்க நேரிடுகிறது. அதனால் என் கணவர்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியைக் காண்கிறேன்” என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ சாலிமுக்குப் பால் கொடுத்துவிடு. (அதனால் செவிலித் தாய் – மகன் என்ற உறவு ஏற்பட்டுவிடும்)” என்று கூறினார்கள்.அதற்கு சஹ்லா (ரலி) அவர்கள், “அவர் (சாலிம்) தாடி உள்ளவராயிற்றே (அவருக்கு எப்படி பாலூட்ட முடியும்)?” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), “நீ அவருக்குப் பாலூட்டிவிடு. அதனால், அபூஹுதைஃபாவின் முகத்திலுள்ள அதிருப்தி மறைந்துவிடும்” என்று கூறினார்கள்.
பின்னர் சஹ்லா (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று நான் செய்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அதற்குப் பின்) அபூஹுதைஃபாவின் முகத்தில் அதிருப்தியை நான் அறியவில்லை” என்று கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

2883 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான உம்மு சலமா (ரலி) அவர் கள் கூறுவார்கள்: (ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர) நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் எவரும் பால்குடிப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குப் பால் கொடுத்து (“செவிலித் தாய் – மகன்’ என்ற) உறவை ஏற்படுத்தி, அவரைத் தங்களது வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும், நபி (ஸல்) அவர்களுடைய மற்றத் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலிம் (ரலி) அவர்களுக்கு மட்டுமே இந்த முறையை அனு மதித்தார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம். (பால்குடிப் பருவத்தைக் கடந்த பின்) பால்குடி உறவை ஏற்படுத்தும் இந்த முறைப்படி யாரும் எங்களது வீட்டிற்குள் வந்ததுமில்லை; எங்களை(த் திரையின்றி)ப் பார்த்துமில்லை” என்று கூறினர்.

(இந்த ஹதீஸ் மூலமாக தெரிவது என்னவென்றால், இளம் வயதிலேயே ஆயீஷாவின் கணவர் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழந்த ஆயீஷா (றலி) அவர்கள் இந்த ஹதீஸை அதிகமாக பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது)
இந்த நெஞ்சு நெகிழும் (யாருக்குன்னு கேக்கக்கூடாது.. எந்த நெஞ்சுன்னும்  கேக்கக்கூடாது) ஹதீஸ்களை படித்து உங்களுக்கும் கொ(?)ஞ்சம் ஏதாவது நெகிழ்ந்திருக்கும்னு நெனக்கிறேன்.

எகிப்தில் அல் அஜார் என்ற இஸ்லாமிய பல்கலைக்கழகம் இருக்கிறது. இருக்கிறது ஒரு புஸ்தகம். இதுக்கு எதுக்கு பல்கலைக்கழகம் என்று அப்பாவி காஃபிர்கள் கேட்கலாம். இஸ்லாமிய அறிவியல், தவ்ஹீத் அண்ணனின் சொற்பொழிவுகள், ஜமாலியின் பேருரைகள் எல்லாம் கேட்பவர்கள் இதற்குள் இஸ்லாம் ஏன் எளிய மார்க்கம் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம்.
இந்த பல்கலைக்கழகங்களில் இருக்கும் ஆலிம்களின் முழுநேர வேலையே இஸ்லாமிய புத்தகங்களை கரைத்து குடித்து வாந்தி எடுத்து வாந்தி எடுத்ததை மீண்டும் அலசி மீண்டும் குடித்து .. இப்படியே 24/7 பண்ணுவதுதான்.
அப்படிப்பட்ட ஒரு ஆலிம்ஷா எஜ்ஜாத் அட்டியா என்பவர் நமது தவ்ஹீத் அண்ணன் மாதிரியே எப்படி இஸ்லாத்தை நவீன உலகத்துக்கு பொருந்துவது மாதிரி சொல்வது என்று மண்டையை பிய்த்துக்கொண்டு இறுதியில் ஹதீஸ் ஒளியில் நவநாகரிகமும் கெடக்கூடாது, இஸ்லாமும் பங்கப்படக்கூடாது என்ற வழியில் ஒரு பிரச்னைக்கு முடிவு சொன்னார்.

பிரச்னை என்ன? இஸ்லாமின் படி, ரத்த தொடர்பற்ற ஆணும் பெண்ணும் பேசக்கூடாது பழகக்கூடாது. ஆனால், தற்போது அலுவலகங்களில் தெருக்களில் தொழிற்சாலைகளில் ரத்த தொடர்பற்ற ஆணும் பெண்ணும் கலந்து பழகுகிறார்கள். இது இஸ்லாத்துக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் முரணானது. ஜஹிலியா காலத்தில் மட்டுமே கதீஜா(ற) போன்ற அம்மையார் மேனேஜராகவும் வியாபார சொந்தக்காரராகவும் பணக்காரராகவும் இருக்க முடியும். எப்போது அந்த சொத்தெல்லாம் கண்ணுமணி பொண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லாவிடம் வந்ததோ பழி தீர்க்கிற மாதிரி எவளும் ரத்த சம்பந்தமில்லாத ஒரு ஆணோடயும் பேசக்கூடாதுன்னு சட்டம் போட்டு புர்க்கா போட்டுவிட்டுட்டார். இதுவே இஸ்லாமிய ஒளியில் முஸ்லீமாக்களுக்கு கிடைத்த இஸ்லாமிய இருட்டு.
ஆனால் நவீன உலகத்துக்கு தகுந்தாற்போல ஆணும் பெண்ணும் அலுவலகத்தில் வேலை செய்வது எப்படி? அதுக்குத்தான் மேலே பார்த்த ஹதீஸ்கள் வருகின்றன.
மேலே பார்க்கும் ஹதீஸ்களின் படி, வயது வந்த ஆணாக இருந்தாலும் ஒரு பெண்ணிடம் பால்குடித்துவிட்டால் அவர் தாய்-மகன் உறவு கொண்டவராக ஆகிவிடுவார். நம்ம மொஹம்மத் இப்னு அப்தல்லா சிரிச்சிகிட்டே (பர்வர்ட் என்று திட்டாண்டாம்) தாடி முளச்சிருந்தா என்ன? பால்குடு என்று ஒரு முஸ்லீமாவுக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இந்த ஹதீஸ் ஒளியில் விடை இருப்பதை நமது ஆலிம்ஷா எஜ்ஜ்ஜாத் அட்டியா கண்டுகொண்டார்.
ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவேண்டுமென்றால். அங்கு வேலை செய்யும் ஆண்கள் அங்கு வேலை செய்யும் பெண்களிடம் பாலருந்த வேண்டும்.
ஐ … நல்லா இருக்குல்ல?
ஆனா என்ன பிரச்னைன்னா, நம்ம அல் அஜார் பல்கலைக்கழகம் ரொம்ப கடுப்பாகி இந்த ஆலிம்ஷாவை வேலையை விட்டு துரத்திவிட்டார்கள். இதில் ஏதோ அமெரிக்க சதி இருக்கலாம் என்றுநம்பப்படுகிறது. அப்போது எகிப்துவின் ஜனாதிபதியாக இருந்த முபாரக், அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கே இவ்வாறு முஸ்லீம்கள் கூட வேலை செய்யும் முஸ்லிமாக்களின் பாலை அருந்தி நவீன உலகில் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று அஞ்சிய அமெரிக்காவும், இஸ்ரேலும் சதி செய்து இந்த ஆலிம்ஷா எஜ்ஜாத் அட்டியாவை வேலையை விட்டு துரத்திவிட்டார்கள் என்று நம்ப ஏராளமாக இடம் இருக்கிறது.
இறுதியில் நீதிமன்றத்துக்கு எல்லாம் போய், இவர் வேலையை மீண்டும் பெற்றுவிட்டார் என்பதை சந்தோஷத்துடன் கூறிக்கொள்கிறேன்.
ஏன் இந்த பத்வாவை ஆதரிக்க வேண்டும்? ஹெஹ்ஹே.. இதெல்லாம் ஒரு கேள்வியா சார்?
இதுவும் உங்களது பாத்ரூம் கற்பனை சுகங்களில் ஒன்றாக இருக்கும் என்று நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது அல்குரான் மொஹம்மத் இப்னு அப்தல்லா அவர்களாக இட்டுக்கட்டியது அல்ல என்பதையும் நிரூபிக்கிறது இல்லையா? இதனால் இன்னும் பல சந்தோஷமான விளைவுகளும் உண்டு. பீடிக்கடையில் மறைவாக வைத்திருக்கும் சரோஜாதேவி ஸ்டைல் புத்தகங்கள் விற்பனை படு பாதாளத்துக்கு சென்றுவிடும். போரடித்தால் அழகான ஆபீஸ் செக்ரட்டரியிடம் சென்று பேசலா…….ம்.
ஆனா ஒரே பிரச்னை. நான் காஃபிர் அதனால் நான் வேணுமின்னா குடிப்பேன். வேணாட்டி குடிக்க மாட்டேன் என்று சொல்லமுடியாது. சவுதி அரேபிய புர்க்காவை நினைவில் கொள்ளவும். கூட வேலை செய்யும் பெண்களது மார்பகங்களில் பால் குடிப்பது கட்டாயம். சாய்ஸில் விட்டுவிட முடியாது. கூட 75 வயது அரபிக்கிழவி, சிரைககாத நரைத்த தாடி மீசையோடு உட்கார்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். ஏண்டா இந்த பத்வா கொடுத்தார்கள் என்று உங்களை நீங்களே ஈர விளக்குமாறால் அடித்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்ட பத்வா!

http://listverse.com/2010/02/25/top-10-bizarre-or-ridiculous-fatwas/ 
http://www.cracked.com/article_15951_9-islamic-fatwas-we-can-get-behind.html

Advertisements

36 thoughts on “காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து.

 1. suuuupppppppppppppeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrr.ஆனால் மனதில் வலியை உண்டாக்கியது .. போலியோ வாக்ஸின் போடக்கூடாது என்பது தான். மனிதர்கள்(குழந்தைகள்) எந்த மதத்தை சேர்ந்தவர்களானாலும் மனிதர்களே. இதில் அல்லா, யேசு வந்து புடுங்கப்போவது எதுவும் இல்லை. இதனால் தான் இஸ்லாம் அழிக்கப்படவேண்டும் , இல்லை என்றால் மனித குலத்துக்கே ஆபத்து.

 2. பத்வா என்றால் ஏதோ தண்டனை கட்டளை என்று நினைத்திருந்தேன். தெளிவடைய செய்து விட்டீர்கள் . நன்றி. இஸ்லாத்தில் உள்ள முட்டாள் தனங்களை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் முகமது ஒரு மாமனிதர்தான். இத்தனை கோடி மக்களை முட்டாள்களாக்கி அவரை நம்ப வைத்துள்ளாரே. இந்த நவீன காலத்திலும் இந்த முட்டாள்கள் அவரின் உளறல்களை அறிவியலாக பார்க்கும் அவர்களது அறியாமையை என்ன என்பது

 3. //டட்டட்டாய்ங்… நம்பர் ஒன்! //இது எனக்கு ரொம்ப பிடிக்குது…….!ஆனால் சிம்பிளா sin of khalwa என்று சொன்னால் சில காபிர்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமே!மிக்கி மவுசை போட்டுப் பார்க்கிறது எதுக்குன்னா.. பிள்ளையார் மேல உள்ள கோபமா இருக்குமோ?

 4. பாட்டு பாடுறது, கவிஜ எழுதுறது & வாசிக்கிறது… இப்படி பல விஷயங்கள் ஹராம் தானாமே… அப்டியா?

 5. நீங்க கொடுத்த பதிவு ஒன்றில் சிராஜ் ஏர்வாடி என்பவர் சொன்னதை கொஞ்சம் விளக்க முடியுமா?//எனவே எப்பிரச்சினைக்கும் தீர்வு ஏற்படுத்துவதற்கு முன்பாக ஹதீஸ் கலைக்குசட்டத்திற்கு தீர்வு காணுங்கள். அதன் பிறகு தான் இந்த மார்க்கம் குழப்பமில்லாததெளிவான நிலையை அடையும் என்பது என் தாழ்மையான கருத்துஇப்படிக்குஅன்புடன்சிராஜ் ஏர்வாடி//

 6. மார்க்க மேதா(ஆ)வி, அண்ணன் இ.சா.இந்தப் பதிவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏன் என்றால் அது மூமின்களின் நம்பிக்கையை சார்ந்தது. நான் மூமின் இல்லாதாலால் அவர்கள் மார்க்க விஷ்யத்தில் சரியா, தவறா என்று கருத்து கூற எனக்கு அதிகாரம் இல்லை. மேலும் பட்வா வழங்கியவர்கள் அரபி மொழியில் ஊறித்திளைத்த், புனித பூமியில் வாழும் அரபி உம்மத்வாதிகள். நிகழ்கால வாழும் சாஹாபாக்கள்( பாகிஸ்தானில் இருக்கும் ஷியாக்களை தினந்தோறும் கொள்ளும்sipahi-e-sahaba என நினக்கவேண்டாம்). அதனால் அந்த பட்வாக்கள் எல்லாம் சரியான மார்க்க 100 % ஆதாரா பூர்வமான விஷயமாகத்தான் இருக்கும்.ஆனால், மார்க்க விஷயங்கள் எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்று கூற உரிமை இருக்கிறது. அந்த வகையில்…எனக்கு பிடித்த பட்வாக்கள் நம்பர் 1 மற்றும் 2……பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாயிருக்கு. ஹா…ஹா..ஹா…ஏன் என்று வெளிப்படையா சொல்லனுமா???.ஆனாலும் உங்கள் ‘தக்கியா’ புத்தியை காட்டிவிட்டீர்களே. இந்த மாதிரி பட்வாகளை காட்டி, தாவா செய்து காஃபீர்களின் எண்ணிக்கையை குறைத்து, மூமின்களின் எண்ணிக்கையை வளர்த்து. கடவுளின் சித்தத்தினால், இந்தியாவை darul islam ஆக்க சதிசெய்கிறீகள்.ம்ம்ம்ம்ம்ம்ம் இந்தியா மூமின்கள் நாடானால் என்னப் பெயர் வைக்கலாம் “தவ்வீதுஸ்தான்” சரியாக இருக்கும். அண்ணனை தலைமை இமாம் அல்லது அமீர் ஆக்கிவிடுவோம்- குரான் அதீஸின் ஆதாரப்படித்தான்.வாழ்க அதீஸ் கலைவல்லுனர். இ.சா.

 7. @தருமி//சிராஜ் ஏர்வாடி என்பவர் சொன்னதை கொஞ்சம் விளக்க முடியுமா?//நமது அன்பு சகோதரர் என்ன சொல்ல வருகிறார் என்றால்.1)ஹதீஸிலிருந்து சட்டத்தை இயற்றும் கலையை அல்லாவும் தூதரும் இப்படிதான் இருக்கவேண்டும் என்பதை சொல்லவில்லை.(note: முகமது அதீஸை தொகக்க சொல்லவில்லை. அதீஸைப் பற்றி குரானிலும் தூதரும் சொல்லவில்லை. முகமது இறந்து பல வருடங்கள் கழித்து அதீஸ்கள் தொகுகப்பட்டன். அப்படி இருக்கும் போது குரானிலும் அதீஸிலும், அதீஸ்கலைப்பற்றி எப்படிவரும்.)2) ஹதீஸிலிருந்து சட்டத்தை வரவழைக்கும் கலை குரானிலும் ஹதீஸிலும் இல்லாதலால், அவரவர் இஷ்டதிற்கு அவரவர் கலைக்கு ஏற்ப, அதீஸீலிருந்து குரானிலிருந்து சட்டத்தை இயற்றுகிறார்கள். அதனால் குழப்பங்கள் வந்து எல்லாரும் குழம்பி போயுள்ளார்கள்.3) இந்த குழப்ப குழப்பத்தால் குழம்பிபோயிருக்கும் காஃபிர்கள் மற்றும் மூமின்கள் தெளிவடைய வேண்டுமென்றால் முதலில், குரான் மற்றும் ஹதீஸிலிருந்து சட்டத்தை இயற்றும் (அதாவது பதிவிலிருக்கும் 10 தெளிவான பட்வா போல இயற்றும்) கலை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஆதாரப்பூர்வமாக குரானிலிருந்து அதீஸிலிருந்து (note அதில் இல்லை என்று ஏற்கனவே நண்பர் கூறிவிட்டார்)பட்வா வரும்வரை, தற்போதுள்ள கலை மூலம் குரான் அதீஸிலிருந்து சட்டம் மற்றும் பட்வாக்கள் இயற்றப்படும்போது, அது பலவிதமாக இருந்து குழப்பமாக இருக்கும்.அதனால் தற்போதுள்ள கலை மூலம் இயற்றிய, இயற்றப்படும் பட்வாக்கள் குழப்பமாகவும், சரியாகவும் இல்லை.note : மேலும் சரியான விபரம் அறிய அல்லாவின் அதிகாரப் பூர்வ website onlinepj.com க்கு செல்லவும். இல்லை நீங்கள் சொல்வதுதான் சரியென்றால் அண்ணனிடம் நேரடி விவாததிற்கு செல்லவும்.note 2: சகோதரரின் செய்திலிருந்து நான் எப்படி இப்படி விளக்கம் தந்தேன் என்று யோசித்தால் அதுதான் “கமெண்ட் கலை”. இந்த காபிரின் விளக்கத்தில் தவறு இருந்தால், என்னை திட்டாமல் மன்னித்து விடுங்கள். அண்ணனே எல்லாம் அறிந்தவன்.நன்றி.

 8. அருமையான பதிவு தலை!.எங்கியோ போய் விட்டீர்க‌ள்!நரேன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறீர்கள்.கல்க்கிறீர்கள்.ஹ‌திதில் நாம் ஏதாவ‌து ஆதாரமாக் காட்டினால் செல்லும், செல்லாது என்பார்க‌ள்.ஆனால் அனைத்துக்குமே ஹ‌திதில் இருந்தே ஆலோச‌னை கொடுக்க‌ப் ப‌டும்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 9. வாருங்கள் Tamilan அதான் சொன்னேனே உங்களைப் போன்ற காஃபிர்கள் இஸ்லாமியரானாலும் இரங்குவீர்கள் என்று. இதுவே பாருங்கள். மூஃமின்கள் பூகம்பத்தில் இறந்து போனவர்களையும், காஃபிர் என்று சவப்பெட்டியிலேயே எழுதி அல்லாஹ் கூறியபடி நஜஸாகத்தான் நடத்துவோம்.

 10. வாருங்கள் ராஜா,நபிஹள் நாயெஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அசத்தல் பேர்வழிதான். கொஞ்ச கொஞ்சமாக அறிந்துகொண்டே இருங்கள். ஒரு காலத்தில் மூஃமினாக ஆகிவிடுவீர்கள்.

 11. வாருங்கள் தருமி.இந்த அரபி ஷேக்குக்கு பிள்ளையார் பற்றியெல்லாம் எதுவும் தெரியுமா என்று தெரியவில்லை. அது ஏன்? நம்ம மூஃமின்களுக்கே பிள்ளையார் பற்றி எதுவும் தெரியாது. நம்ம மூஃமின்களுக்கு இந்து மதம் பற்றியும் எதுவும் தெரியாது. இந்து மதத்தை எதிர்த்து யார் என்ன எழுதியிருந்தாலும் காப்பி பேஸ்ட் பண்ணுவார்களே தவிர காப்பி பேஸ்ட் பண்ணுவதைக்கூட படித்து பார்க்க மாட்டார்கள். உண்மையாகத்தான் சொல்லுகிறேன்.

 12. வாருங்கள் நரேன். அண்ணன் சார்வா கான் சொல்வது போல புல் பார்மில்தான் இருக்கிறீர்கள். கிளப்புங்கள்

 13. வாருங்கள் சார்வாகன்,கருத்துக்கு நன்றி. என்ன.. நீங்களும் நானும்தான் இந்த பதிவை படித்துகொண்டிருக்கிறோம். மூஃமின்களின் பதிவில் போட்டால் நிராகரித்துவிடுகிறார்கள். தாவாப்பணியை ஊக்குவிக்காததற்காக எதுவும் அல்லாஹ் தண்டனை தருகிறாரா என்று பார்த்து மூஃமின்களிடம் ஞாபகப்படுத்த வேண்டும்.

 14. இப்னு சாகிர், நீ சாகிருக்கு பொறந்தவனா? (இப்னு சாகிரின் அர்த்தம் அதுவே.). இல்ல, உன் அப்பன் யாருன்னு தெரியாததால சாகிருக்கு பொறந்தவன்னு நீனா வச்சுக்கிட்டியா? நீ உண்மையானவனா இருந்தா உன்னோட ஒரிஜினல் பேரோட எழுது, அத விட்டுட்டு, பேடிதனமா முஸ்லிம் மாதிரி நடிக்காதே.–பயாஸ்.

 15. எக்க இறைவனின் திருப்பெயரால்அன்பு சகோ.பயாஸ்,உங்கள் மீது ஏக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.இந்த மாதிரி கோபித்து எழுத என்ன நடந்துவிட்டது?அல்லாஹ் காபிர்களை திட்டுவது போல நாம் திட்டலாமா?இனிய சொல் பேச வேண்டும் என்று நபிஹெள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியபடி பேச முயலலாமே?

 16. இறைவனால் ஏக்கத்துடன் படைக்கபட்ட இ.சா அவர்களே.Just for laughs, seriously!!!On Deoband Fatwas// fatwa “possessed both the rectitude and solidity of traditional thought and the dynamism of contemporary global theory”//.//“practical historical and contemporary foundations for the ruling”//மேலும் ஒத (ரசிக்க)http://www.fakingnews.com/2011/03/deoband-fatwa-to-bring-son-in-laws-closer-to-mother-in-laws/….ஹக்..மன்னனே நீவீர் வாழ்க.

 17. @naren , நண்பரே, இன்று தான் fakingnews வலைத்தள்த்தை பார்த்தேன். நல்ல பொழுது போக்கு தளம்.

 18. எதையும் ஆராயாமல் குறை காணும் புதிய வகை கிறுக்கர்கள் எழுதிய கட்டுரை இது , இதில் ஒரு விஷயம் தெரிகிறது குறை சொல்வது மட்டுமே பிரதானம் , அதுவும் இவர்கள் பார்வையில் நல்லதும் குறைகளே . பாத்வா ஆள் ஆளுக்கு இஷ்டத்துக்கு குடுக்க முடியாது , எவனோ ஒருவன் பூமி தட்டை என்று சொன்னாலும், அல்லது மார்க்க அறிஞர் ,இம்மாம்கள் சொல்வதும் இஸ்லாம் ஆகிவிடாது . இவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு இஸ்லாத்திலும் அவ்வாறுதான் உள்ளதா என்பதை குரான் மற்றும் ஆதார பூர்வமான ஹதீஸ் (7 நூல்கள் ) களை பார்த்து ,பின் உங்கள் கருத்துகளை சொல்லவேண்டும் , அதுவே பகுத்து +அறிவு , எவனோ வெப்சைட்-இல் வாந்தி எடுத்ததை காபி , பேஸ்ட்போடுவதில் தெரியாது பகுத்தறிவு ? ************ fareeth

 19. வாருங்கள் சகோ. M.SHEIK FAREETH உங்கள் மீது எக்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!நீங்கள் சொல்வது சரிதான். இவை அனைத்தும் நல்ல பத்வாக்களே. ஒரு சில காஃபிர் கிறுக்கர்களே இந்த நல்ல பத்வாக்களை குறைகளாகச் சொல்லுவார்கள். இதில் உள்ள நல்ல பயன்களை விளக்கி சொல்வதற்காகவே இங்கே இனிய சொல் மூலம் காஃபிர்களிடம் தாவாப்பணி செய்துகொண்டிருக்கிறேன்.உங்கள் கருத்துக்கு மிக்க நன்றியா அல்லாஹ்அல்ஹம்துலில்லாஹ்

 20. அப்புறம் ஏதாவது ஒரு ஹதிசில் புத்திசாலிகளின் பேச்சை கேட்கவேண்டும் அப்டினு இருக்கபோவுது, அதை ஒன்னை வெச்சி உங்க எல்லா கேள்விகளுக்கும் நாங்க அப்பவே சொல்லிட்டொம்னு சொல்ல போறாங்க பாருங்க,

 21. வாருங்கள் ராஜரத்தினம்காஃபிருக்கும், முஷ்ரிக்கினுக்கும் உள்ள வித்தியாசம்/ஒற்றுமைhttp://www.islamqa.com/en/ref/67626

 22. முல்லா இ.சா.@www.islamqa.com/en/ref/67626இதுதான் head splitting -sorry- hair splitting விவாதம் என்பதோ? நல்ல தெளிவான விவாதம்.ஒரு ஒரே கேள்வி.தாவாக்களின் மூலம் எனக்கு புரிந்தது. இந்த உலகத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் (இதில் மனிதர்கள் அடக்கமா இல்லை எல்லா உயிரனங்களும் அடக்கமா என்பது முதல் கேள்வி) இஸ்லாமியர்களாக பிறக்கின்றன என்கிறார்கள்.பிறந்த குழந்தைகள் 5 அல்லது 8 வய்து வந்தவுடன், முஸ்லிம் பெற்றோர்கள் அந்த குழந்தைகளை அடித்து உதைத்து முஸ்லிம் கடமைகள் ஆற்றும் மூமினாக மாற்ற வேண்டும் என சொல்லும் அதீஸ் உள்ளது. மற்ற மதத்தினரின் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றுகின்றனர்.எனது கேள்வி.1. உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் போதோ அல்லது பிறந்தவுடன் கலிமா சொல்லி முஸ்லிமாக பிறக்குமா???2. அவ்வாறு வேற்று மதத்தில் முஸ்லிமாக பிறந்த குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மதத்தை பின்பற்றினால். அவ்குழந்தைகளை apostate ஆக கருதி, குரான் அதீஸ் படி apostate க்கு செய்ய வேண்டியவகளை அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமா????!!!!.அண்ணன்களிடம் கேட்க பயமாக இருக்கின்றது அதனால் moderate முல்லாவான உங்களிடம் காஃபீரான நான் கேட்கிறேன்.

 23. என்ன மாடரேட் முல்லாவா? நானா? அடப்பாவிகளா.. என்னை தீர்த்துக்கட்ட முடிவே பண்ணிவிட்டீர்களா?காஃபிரைக்கூட விட்டுவிடுவார்களே.. மாடரேட் முல்லாவை போட்டுத்தள்ளாமல் தூக்கமே வராதே நம்ம மூஃமின்களுக்கு…உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்காம விட மாட்டீங்கள் போலருக்கே..

 24. இ.சா.இந்த அண்ணன் அந்த அண்ணனுக்கு ஆப்புவைக்க நினைத்து,அந்த அண்ணன் இந்த அண்ணனுக்கு ஆப்புவைக்க நினைத்து,கடைசியில் முகமதுவுக்கே ஆப்பு வைத்துவிட்டார்கள்-:)http://intjonline.in/2178.doஇந்த சுன்னாவிலிருந்து மூமின்கள் எல்லாம் குடுத்து வைத்தவர்கள் என தெரிகிறது.உலகின் திசை நான்கு, வண்டியின் சக்கரம் நான்கு, மனிதனுக்கு கைகள் கால்கள் இரண்டிரண்டு ஆக நான்கு, கிரிக்கெட்டில் நான்கு ரன்கள், ஒட்டகதிற்கு நான்கு கால்கள், புத்தகதிற்கு மற்றும் சதுரத்திற்கு நான்கு முனைகள், எண்களில் 4 உள்ளது, போன்ற …….அறிவியல் உண்மைகளை சொல்ல, மனைவிகள் நான்கு என வசனம் இறங்கி இருக்குமா????கொஞ்சம் பயான் மூலம் தெளிவுப்படுத்துங்கள்.

 25. காஃபிர் நரேன்,நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒரு பொம்பளை பொறுக்கி என்று கூசாமல் எழுதும் முகவை அப்பாஸ் ஆச்சரியத்துக்குரியவர். அதுவும் ஹதீஸை எல்லாம் ஆதாரமாக காட்டி, நபிஹள் நாயஹம் ஒரு பொம்பளை பொறுக்கி என்று நிருவுகிறார். அவை உண்மையிலேயே ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்தானா அல்லது இவராக இட்டுக்கட்டிய ஹதீஸ்களா? ஏற்கெனவே முகவை அப்பாஸ்<பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல் பற்றி விலாவாரியாக விரித்துரைத்து காஃபிர்களுக்கு அல்லாஹ்வின் ஈறுதி இரைதூதரின் அன்பை விளக்கியவர்இப்போது அவரே எப்படி பெண்கள் மீது கருணை மழை பொழிகிறார் என்பதையும் விளக்குகிறார். is he fpr real?

 26. ஏண்டா முருகர் படம் போட்ட முட்டாளே !! இங்க இஸ்லாத்தை நக்க வந்தியே , அந்த முருக பெருமானின் லீலைகள் எல்லாம் உனக்கு தெரியுமா ?

 27. என்ன இப்னு ஷாகிரு, நல்ல இருக்கீங்களா ?முருகர் படம் போட்ட முட்டாளே !! அப்டீன்னு சொன்ன உடனே ஒரு படத்தையும் காணோம்.இது உங்க வேலையா ? இல்ல நண்பர் தியாகு வேலையா ?நான் இது உங்க வேலையாதான் இருக்கும்னு நெனைக்கிறேன் 🙂

 28. வாருங்கள் இப்னு லஹப்,நீங்கள் முதலில் போட்ட கமெண்டும் புரியலை. இப்ப போட்ட கமெண்டும் புரியலை. கொஞ்சம்விளக்கலாமே?

 29. இப்னு ஷாகிர்,எனக்கு முன்னே பின்னூட்டம் போட்ட தியாகராஜன் பெயர் அருகில் ஒரு சின்ன Profile படம் இருந்தது, அங்கு நான் முருகபெருமானின் அருள் வடியும் முகத்தை October 16, 2011 5:17 AM அன்று இந்த பதிவின் முதல் பின்னூட்டம்போடும் பொது கண்டேன். அதற்கு முதல் பின்னூட்டம் போட்டேன் , பிறகு கொஞ்சநாளுக்கு பிறகு எந்த ஒரு Profile படமும் டிஸ்ப்ளே ஆகலையே ? அதற்கு எனது ரெண்டாவது கேள்வி.அந்த மாற்றத்தை நீங்கள் கவனிக்கவில்லையோ அல்லது மறந்துவிட்டீர்களோ தெரியவில்லை.எப்படியோ கெடக்குது போங்க ….. அத விடுங்க , உங்க தாவா பணி சிறப்படைய எனது துவாக்கள் 🙂

 30. இப்னு லஹப்ஓ அப்படியா? தியாகராஜன் இன்னமும் முருகன் படம்தான் வைத்திருக்கிறார். முந்தைய டெம்ப்ளேட்டின் படி அவரது புரோபைல் படமும் காண்பிக்கும்.சமீபத்தில் டெம்ப்ளேட் மாற்றினேன். தற்போதைய டெம்ப்ளேட்டில் வெறும் பெயர்தான் காண்பிக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s