அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி

அல்லாஹ் எங்கே இருக்கிறான், காட்டு என்று கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யும் நாத்திக பதிவர்களுக்கு இதோ அல்லாஹ் இருக்கும் கிரகம் என்று அடையாளம் காட்டி,  சவுக்கடியும்  செருப்படியும் அளித்துள்ள நமது கார்பன் கூட்டாளி பதிவர் அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன். அல்லாஹ் உங்களுக்கு நன்றாக கூலி கொடுப்பானாக.என்ன? முழிக்கிறீர்களா?இப்போது அல்லாஹ்வே அப்படி முழித்துகொண்டிருப்பான் என்பதையும் அறியுங்கள். ஆகவே நீங்கள் மட்டுமே தனியாக முழிக்கவில்லை.

கார்பன் கூட்டாளி பதிவர்  தோண்ட தோண்ட அறிவியல் புதையல் – அல்குர்ஆன் என்ற பெயரில் அறிவியலை தோண்டோ தோண்டு என்று தோண்டி அல்லாஹ்வையே கண்டுபிடித்து விட்டார்.

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)

இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.

(அல் குர்ஆன் 70:4–7)

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:

அதாவது அல்லாஹ் இருக்கும் இடத்துக்கு பூமியிலிருந்து வானவர்கள் (மலக்குகள்) மேலேறி செல்வார்கள். அதற்கு 50000 ஆண்டுகள் ஆகும்.

இப்போது மலக்குகளின் வேகம் என்ன என்ற கேள்வி வருகிறது இல்லையா? நமது இஸ்லாமிய அறிவியலாளரான கார்பன் கூட்டாளி ஒரு நெஞ்சம் நெகிழும் ஹதீஸை இங்கே ஆதாரத்துக்கு காட்டுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.  அறிவிப்பவர் :
ஆயிஷா(ர­)

நூல் : முஸ்லிம் (5314)

நமது கார்பன் கூட்டாளி கூறுகிறார்

இறைவன் தான் விதிகளுக்கு அப்பாற்பட்டவன் ஆனால் அவனால் உருவாக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் விதிகளுக்குட்பட்டவையே


அத்தோடு இன்னொன்றையும் நமது கார்பன் கூட்டாளி கண்டு அறிந்து கூறுகிறார். அதையும் கேட்போம்.

ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் 99.999999……%C (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.

இன்னொன்றும் கூறுகிறார்

அடுத்த வசனமாக 70:4 மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று     கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளதால் அவர்களது வேகம் ஒளிக்கு சமமானது!  ஆஹா! இதுவல்லவா, ஹதீஸ் ஒளியை வைத்து, ஒளிக்கே டார்ச் அடிப்பது என்பது! இப்போது தெரிகிறதா அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்பது?

ஆகவே நமது கார்பன் கூட்டாளி பதிவரின் கூற்றுப்படி, வானவர்களும் செய்தியும் ஒளிக்கு சற்று குறைவான வேகத்தில் சென்றதால், அவர்களது உணர்வில் ஒரு நாள் செலவழித்தமாதிரி உணர்வார்கள். ஆகவே அவர்களது அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம்தான்.

ஒளி ஒருவருடம் பிரயாணம் செய்யும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.  அதாவது light year.

இது நம்ம சூரியனும், சுற்றிவரும் பூமியும். எதுக்குன்னு கேட்கக்கூடாது.. பாக்க அழகா இருக்குன்னு போட்டிருக்கேன்

சூரியனை சுற்றி வரும் மூன்றாவது கல்தான் நாம் வாழும் பூமி. இதுக்குத்தான் வானவர்களை(மலக்குகளை) அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.

வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்களும், அதனை வைத்து  ஒளி வேகத்தில் பயணம் செய்கிறார்கள் என்று  கார்பன் கூட்டாளியும் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செல்ல 50000 வருடங்கள் ஆகிறது என்றால், அல்லாஹ் இருக்குமிடம் 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது என்று பொருள்!

ஆகவே, நமது பூமியிலிருந்து 50000 ஒளிவருடங்கள் தொலைவில் அல்லாஹ் இருக்கிறான்!

நமது பால்வீதி காலக்ஸி சுமார் 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது.

அதாவது நமது பூமி சுற்றும் சூரியனை மையமாக வைத்துகொண்டு 50000 ஒளிவருடத்தை ஒரு ஆரமாக வைத்துகொண்டு வட்டம் வரைந்தால் அந்த வட்டத்தின் விளிம்பில்தான் அல்லாஹ் இருக்கிறான்!

நமது இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியா உடனே நாஸாவுடன் ஒப்பந்தம் போட்டு உலக மகா டெலஸ்கோப்புகளை உருவாக்கி 50000 ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் கீழ்க்கண்ட வசனங்களில் பூமியிலிருந்து செய்திகள் அவனது கெரஹத்துக்கு செல்ல 1000 ஆண்டுகளாகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.

நமது இனிய இஸ்லாமிய அறிவியலாளர் கார்பன் கூட்டாளி, அல்லாஹ் காலம் வெளி டார்க் மேட்டருக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவன் உருவாக்கிய பொருட்கள் எல்லாம் விதிப்படியே இயங்கும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆகையால் பூமியிலிருந்து செய்தியும் விதிப்படிதான் இயங்க வேண்டும். எந்த ஒரு செய்தியும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று ஈன்ஸ்டீனின் சார்வியல் விதி கூறுகிறதல்லவா?

ஆகையால் இந்த செய்திகளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 1000 ஆண்டுகளாகிறது என்று சொல்கிறது. ஆகவே அல்லாஹ் இருக்கும் கெரஹம் நமது பூமியிலிருந்து 1000 ஒளிவருட தொலைவில் இருக்கிறது என்று ஆகிறது.  இப்போது நமக்கு சிக்கல் இருப்பதை கவனித்திருக்கலாம்.

ஒளியால் உருவான வானவர்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய 50000 ஒளிவருட தொலைவு ஆகிறது.  ஆனால் செய்திகள் 1000 ஒளிவருடத்திலேயே இந்த கெரஹத்தை அடைந்துவிடுகின்றன. அப்படி அடைய வேண்டுமென்றால், அவை ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும்அல்லாஹ்வுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்றாலும், அல்லாஹ்வுக்கு மேல் அதிகமாக அறிந்த கார்பன் கூட்டாளி செய்திகளின் வேகம் அல்லாஹ் உருவாக்கிய இயற்கை விதிகள் படித்தான் இருக்க வேண்டும் என்று கடிவாளம் போட்டுவிட்டாரே என்று கவலையாக இருக்கிறது.

இருப்பினும் கார்பன் கூட்டாளிக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது தெரியும். அவர் இதற்கு மேல் அங்கண இங்கண ரெண்டு படம் சுட்டு போட்டு, அங்கண இங்கண ரெண்டு ரெபரன்ஸ் போட்டு தலையாட்ட காத்திருக்கும் மூஃமின்களுக்கு “ஏதோ சொல்றான்யா.. ஏதோ நாத்திக காஃபிர்களை அடிக்கிறேன்னு  சொல்றான்.. சப்போட்டு பண்ணிவப்பம்” என்று சந்தோஷமாக சப்போட்டு பண்ண ஒரு பதிவு எழுதிவிடுவார். நம்பலாம்யா.

ஆகவே நம் உயிரினும் மேலான கண்ணின் மணி நபிஹள் நாயஹெத்தின் உயிரை கையில் வைத்திருக்கும் அல்லாஹ் நம்மோட லோக்கல் காலக்ஸியில்தான் இருக்கிறான்.

நம்மோட காலக்ஸி இக்கணூண்டு சின்னது. இந்த காலக்ஸியின் விட்டமே 100000 ஒளிவருடங்கள்தான். அது ஆயிரமோ ஐம்பதினாயிரமோ,  நம்ம காலக்ஸியிலதான் அல்லாஹ் இக்கான்.  நமது காலக்ஸியில் இருக்கும் நம் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் 200 பில்லியன் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ ஒரு சூரியனை சுற்றும் ஒரு கிரகத்தில்தான் அல்லாஹ் இருக்கிறான்.

அதுவும் எந்த மாதிரியான கெரஹம் என்பதற்கான க்ளூவையும் அல்லாஹ் தருகிறான். !

22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

மனிதர்கள் வாழும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் ஒரு நாள்.
மனிதர்களது பூமியின் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளை வைத்துகொள்ளுங்கள்.  அல்லாஹ் இருக்கும் கெரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மனிதர்களது கணக்கில் ஆயிரம் ஆண்டுகளாகிறது என்று பொருள்!

ஆஹா! இந்த மாதிரி ஒரு கெரஹத்தை கண்டுபிடிச்சா போதும்யா! அல்லாஹ்வை பிடிச்சிடலாம்!

இப்ப நமது பூமியை பற்றியும் அதன் இருப்பிடத்தையும் பற்றி கண்டுகொள்வோம்
நாம் இருக்கும் சூரியனை சுற்றி 12 ஒளிவருடங்கள் தொலைவுக்குள் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.

நம் சூரியனை சுற்றி 250 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திரங்கள் (சூரியர்கள்) இருக்கின்றன

நமது சூரியனை சுற்றி 5000 ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன

நம் கேலக்ஸி 100000 ஒளிவருடங்கள் விட்டமுடையது. இதில் நமது சூரியன் இருக்குமிடம்

நம்ம காலக்ஸியை சுற்றி பல கேலக்ஸிகள் இருக்கின்றன.  500,000 ஒளிவருடங்கள் தொலைவுக்குள்ளாகவே 13  கேலக்ஸிகள் இருக்கின்றன.  ஒவ்வொரு காலக்ஸியிலும் இதே மாதிரி 10 பில்லியனிலிருந்து 200 பில்லியன் வரைக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

ஐந்து மில்லியன் ஒளிவருடங்கள் சுற்றி பார்த்தால், 49 பெரிய காலக்ஸிகள் இருக்கின்றன. அதில் சுமார் 700 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.

இந்த லோக்கல் குரூப் ஒரு பெரிய காலக்ஸி கூட்டத்தின் பகுதி அதன் பெயர் விர்கோலிஸ் க்ளஸ்டர்

இந்த விர்கோலிஸ் க்ளஸ்டர் ஒரு பெரிய கூட்டத்தின் ஒரு பகுதி

நடுவில் விர்கோலிஸ் க்ளஸ்டரை வைத்து நாமாக போட்ட ஒரு படம். இதுதான் விர்கோ க்ளஸ்டர் இருக்கும் சூப்பர் க்ளஸ்டர்

இந்த சூப்பர் க்ளஸ்டர் நம்மால் அறியக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.

அவ்வளவெல்லாம் தேட வேண்டாம் என்று நமது கேலக்ஸிக்குள்ளாகவே அல்லாஹ் இருக்கிறான் என்று கண்டுபிடித்து கூறியிருக்கும் கார்பன் கூட்டாளியின் தலை மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

பூமி மேல வானம் விழ்ந்துடாம அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து உக்காந்துகிட்டே  புடிச்சிகிட்டிருக்கான்.  அப்பப்ப மலக்குகளும் (வானவர்கள்), ஜின்களும் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து நம்ம பூமி கெரஹம் வரைக்கும் வந்து போய்ட்டு இருக்காங்க.  அவங்க அல்லாஹ்  ஜிப்ரீலிடம் சொல்லி அனுப்பிச்சி அவர் இங்க வந்து சேர்ரதுக்கு ஆயிரம் வருடம் ஆகியிருக்குன்னு வேற கவனிக்கணும்.  அவங்க கிளம்பி 50000 வருடங்கள் கழித்துத்தான் பூமிக்கு வந்து சேர்வார்கள். ஆனால், இங்கே இருக்கும் செய்திகள் அல்லாஹ்விடம் போக 1000 வருடங்கள் ஆகும். உதாரணமாக, ஈஸா நபியை சாகடிக்க யூதர்கள் பிளான் பண்ணிகிட்டு இருந்தது அல்லாஹ்வுக்கு தெரியவேண்டுமென்றால், அந்த செய்தி அல்லாஹ்விடம் போவதற்கு அவரது ஒரு நாள், அதாவது மனிதர்களது 1000 வருடங்கள் ஆகும்.  அப்புறம் எப்படி அல்லாஹ் அந்த சதித்திட்டத்தை மறு சதித்திட்டம் போட்டு முடித்தார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வே அறிவான். அல்லது நம்ம கார்பன் கூட்டாளி அறிவார்.  ஆனால், நபிகளின் மனைவிமார்கள் ரவுசு பண்ணிகொண்டிருந்தால்,  நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு  எச்சரிக்க வேண்டுமென்றால் உடனே வஹி எறங்கிடும். அதற்கெல்லாம் 1000 வருடங்கள் ஆகாது.  அதுவும் அல்லாஹ்வே அறிவான். அல்லாஹ் அறியாவிட்டாலும், கார்பன் கூட்டாளி பதிவர் அறிவார்.

இப்ப ஜிப்ரீல் வந்ததை ஆராய்வோம். நம்ம ஹிஜ்ரி (கிபி 622) ஆரம்பிச்சப்ப ஜிப்ரீல் வந்திருக்கார்னு வச்சா  இந்த வருஷம் 2011. அதாவது 2011-622 = 1389 வருடங்கள் ஆகிவிட்டன.

அதாவது அவர் அல்லாஹ்வோட கிரகத்திலேர்ந்து கிளம்புவது சுமார் 50000-622 என்று வைத்துகொண்டால், கிமு  49378 ஆம் ஆண்டிலேயே நமது ஜிப்ரீல் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து கிளம்பிட்டார். அவர் இங்க வந்து சேர்ரதுக்கு கிபி 622 ஆய்டிச்சி.  ஸோ..  நபிஹள் நாயஹம் சாவுற வரைக்கும் வஹி எறக்கி வஹி எறக்கி கிபி 632இல் தன்னோட 62ஆம் வயசிலேயே செத்தவுடனே அப்பாடான்னு ஜிப்ரீல் கிளம்பி அல்லாஹ்வோட கெரஹத்துக்கு கிளம்பி போயிருப்பார். அவர் போய் சேரதுக்கு இன்னும் 50000+632 = அதாவது கிபி. 50632இல்தான் போய் சேர்வார். நான் சொல்லலைன்ங்கண்ணா. கார்பன் கூட்டாளி சொல்றார். நான் அவர்  சொன்னதை கொஞ்சம் விலாவாரியாக மூஃமின்களுக்கு வெளக்குகிறேன். அவ்வளவுதான்.

இப்ப முகம்மது செத்தது அல்லாஹ்வுக்கு தெரியுமா? தெரியும். எப்படி?

நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கிபி 632 இல் செத்தார். 632+1000 அதாவது கிபி 1632ஆம் வருடம் அல்லாஹ்வுக்கு இந்த செய்தி சென்றுவிட்டது என்று அறியவும்.  ”ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.”

ஓகேயா?

ஓகே இப்போது நபிஹெள் நாயஹெம்  மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்  கூறியதெல்லாம், அவராக வாய்க்கு வநதபடியெல்லாம் உளறியது இல்லை,  அல்லாஹ் உட்கார்ந்திருக்கும்  இந்த கெரஹத்திலிருந்து எறக்கியது என்று இஸ்லாமிய அறிவியல் மூலமாக நிரூபித்துவிட்டோம்,  ஆகவே இந்த அல்லாஹ்தான் காஃபிர்களின் தலையை வெட்டு என்று கூறியிருக்கிறான் என்பதை அப்படியே நம்பி காஃபிர்களின் தலையை வெட்ட கிளம்புவோம்.

இப்போ ரெபரன்ஸ்… ஏன் எதுக்கென்னு எல்லாம் கேட்கக்கூடாது. எவ்வளவு லிங்க் போடறமோ அவ்வளவுக்கு நாம நெறய படிச்சவங்கன்னு மூஃமின்கள் நினைப்பார்கள் இல்லையா?

References:
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-cornered-im-can-still-hit-back-with-a-vengeance/20110916.htm
http://www.onlinepj.com/Test/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/293/http://senkodi.wordpress.com/2010/08/03/time-space/

http://senkodi.wordpress.com/2010/01/13/about-sky/

http://www.nidur.info/index.php?option=com_content&view;=article&id;=451:2009-01-26-03-53-15&catid;=37:2008-07-26-14-12-36&Itemid;=58

http://science.howstuffworks.com/dictionary/astronomy-terms/big-crunch3.htm

http://www.tamilquran.in/t293.php

http://ennamopo.blogsome.com/2005/12/09/61-janus-face-of-islamhttp://rajaghiri-online.blogspot.com/2011/06/blog-post.html

http://jahangeer.in/?p=63

http://www.atlasoftheuniverse.com/milkyway.html

Advertisements

36 thoughts on “அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை அறிந்த கார்பன் கூட்டாளி

 1. இப்னு பஷிர், இப்னு பஷிர்(2), இப்னு சாகிர் என்று பரிணாமம் எடுத்து, பரிணாமம் என்பது அல்லாவின் படைப்பு கொள்கைதான் என்று சான்றாக இருக்கும் முப்தி இ.சா “அஸ்ஸாமு அலைக்கும்”. திரும்பி எனக்கு வ அலைக்கும் என்று சொல்ல வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஹா..ஹா..ஹா..ஹா..ஹா…ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..ஹா…ஹா..ஹா..ஹா..ஹா..ஹா..குரான் “ Massachusetts Institute of Technology" யில் பாடமாக இருக்கின்றது என்று ஒரு மூமின் சொன்னப்போது நம்பாமல் இருந்த நான், உங்கள் பதிவின் மூலம் உண்மை என்று நம்புகிறேன். அதனால் தான் காஃபிர் அமெரிக்கா இவ்வளவு அறிவியல் கண்டுப்பிடிப்புகளை செய்துள்ளது.இதை படித்து மூமினின் பரவசநிலையை அடைந்துவிட்டேன், மூமினாக மாறினாலும் மாறிவிடுவேன்.இந்த பரவசநிலை கொஞ்ச நேரம் அனுபவித்துவிட்டு திரும்பி வருகிறேன். எங்கேயும் ஓடிப் போகாதீர் காஃபீர் மூமினாக மாறவில்லையென்றால் நிறைய கேள்விகள் கேட்பேன்.மீண்டும் உங்களுக்கு “அஸ்ஸாமு அலைக்கும்”.(note: பிரபஞ்சத்தை படம் போட்டு விளக்கி காட்டியதற்கு நன்றி)

 2. //அறிவியலை தோண்டோ தோண்டு என்று தோண்டி அல்லாஹ்வையே கண்டுபிடித்து விட்டார்.//தல இந்த கட்டுரைய படிச்சு முடிச்சதும் எனக்கு பெருத்த ஏமாற்றம். நம்ப பாஸூ எங்க இருக்கார்னு நீங்க கண்டுபுடிச்சிட்டீங்க. ஆனா எங்கக்கிட்ட சொல்லாம வுட்டுப்புட்டீங்களே. அட்லீஸ்ட் இந்தக்கிரகப்படங்கள்ள எங்கயாவது மார்க் பண்ணியிருக்கப்புடாதா?. ஒரு சின்ன ஆறுதலா இருக்குமே.

 3. மூமினிடம் காபிரின் சில கேள்விகள் …1.//அல்லாஹ்வின் கிரகம் இருக்கும் இடத்தை ..//அல்லாஹ்விற்கும் “கிரகம்” எல்லாம் பிடிக்குமா?!2. அல்லாஹ் மிகவும் இரக்கமுள்ளவர். அதனால நம்மைப் படைத்து வழி நடத்துகிறார். எவ்வளவு மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம். (காபிருக்குத்தான் ‘அது’ வந்து விடுமே!) நம்மைப் படைத்து, நமக்காக உலகைப் படைத்து, நம்மைக் காத்து வழிநடத்தும் அல்லாஹ் ஏன் ரொம்ப ‘தள்ளிப் போய்’ – 50 k வருஷம், 1k வருஷம் தாண்டிப் போய் உக்காந்துட்டார். some communication problems – நீங்க சொன்னது மாதிரி வராதா? நம்மைப் படைத்தவர் நமக்குப் பக்கத்திலேயே இருந்தா எம்புட்டு நல்லா இருக்கும்?3. மூமீன்காரவுக சொல்றதைப் பார்த்தா அல்லாஹ் நம்மை நல்லா படைச்சிருக்கார். அதோடு வானம், galaxy, universes எல்லாம் படைச்சிருக்கார். அதெல்லாம் மனுஷங்களுக்கு மட்டும் தான். ஏன் இம்புட்டு சின்னூனூனூண்டு மனுசனுக்காக இந்த உலகத்தையும், அதோடு அம்புட்டு பெரிய galaxy, universes எல்லாம் படைக்கணும்.இந்த மாதிரி கேள்வி கேட்டால் சில மூமீன்காரர்கள் இந்தக் கேள்விகளுக்கான பதிலை கடைசி நாளில் அல்லாஹிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

 4. மார்க்க பீரங்கி இ.சா.”அஸ்ஸாமு அலைக்கும்”இதை விட அது மிகவும் அட்டகாசமான சிரிப்பை அளித்தது.அதில் உள்ள கமெண்ட்ஸ்//பெயரில்லா சொன்னது…Assalamu Alaikum,Alhamdulillah!Maasha Allah for this beneficial article. Jazakallahu Khair!Do we have this article in english?This will help a wider audience to benefit from the contents insha Allah!////சொன்னது…wa alaikkum assalam, brother anony.You may find regarding relativity with islam in internet, but i dont find anywhere mentioning the formulas. hope insha allah any of our friends will translate it to english.14 செப்டெம்ப்ர், 2011 1:57 pm//கடவுள் கேட்ட உடனேயே அருள் தந்து உடனேயே translate செய்துவிட்டான் இந்த தளத்தில். 50,000 வருடத்திற்கு முன் அனுப்பியது இப்போதுதான் வந்து சேர்ந்தது.http://www.speed-light.infoசரி நானும் மதத்தில் அறிவியல் எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.நன்றிஇப்படிக்குநீங்க பீரங்கியை சுடமுன் ஒட்டம் எடுக்கும் காஃபிர்.

 5. அருமையான ஒரு பதிவுக்கு வந்துள்ளேன் நண்பரே!உங்கள் மதத்தின் படி அல்லாஹ்வுக்கு நன்றி.தமிழில் பதிவு எழும் சிலர் எவ்வித சம்மந்தமும் இல்லாமல் நடிகைகளின் படம் போட்டு பதிவு எழுதுவார்கள். உங்கள் மதத்து சகோதரர்கள் அழகான விஞ்ஞான படங்கள் தியரி எல்லாம் போட்டு பதிவு எழுதுவார்கள். என்னை மிகவும் கவர்ந்தது இது. எப்படி எல்லாம் உங்களால் அறிவுபூர்வமாக சிந்திக்க முடிகிறது என்று நான் ஆச்சரிய படுவதுண்டு. தங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.

 6. மார்க்க மேத(ஆவி) இ.சா அவர்களே,ஏன் same side goal போடுகிறீர்கள்.நீங்களே ஒரு கமெண்டில்//நபி மொழி 7424 அபுதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அறிவித்தார்:இறைத்துதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்க பள்ளிவாசலினுள் நான் நுழைந்தேன். சூரியன் மறையத் தொடங்கியதும் நபி (ஸல்) அவர்கள் அபுதர்ரே! இது (சூரியன்) எங்கு செல்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே நன்கறிந்தவர்கள் என்று சொன்னேன். அவர்கள் இது இறைவனுக்கு (அவனுடைய அரியாசனத்திற்கு கீழே) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்ய அனுமதி கேட்பதற்காக செல்கின்றது. அதற்கு அனுமதி வழங்கப்படும். அதனிடம் நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடத்திற்கே திரும்பிச் செல் என்று சொல்லப்பட்டுவிட்டதைப் போன்றிருக்கும். உடனே அது மறைந்த இடத்தில் இருந்து (இறுதி நாளில்) உதயமாகும். என்று சொல்லிவிட்டு அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும். (தாலிக்க முஸ்தஹருல்லா) என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வுத் (ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி (திருக்குர்ஆன் 36:38வது வசனத்தை) ஓதினார்கள்.நபி மொழி 3199 அபுதர் (ரலி) அறிவித்தார்:நபி (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம் அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வும் அவனுடைய துதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்கு) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காக செல்கிறது. அங்கு அது (கிழக்கில் இருந்து உதயமாவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது//கடவுள்(கள்) சூரியனையே தாண்டவில்லை என்று நீங்க கூறிவிட்டு, இப்பொழுது, படம் போட்டு milky way பாதியில் கடவுளின் அரியாசன்ம் (அர்ஸ்) உள்ளது என்ற பிதற்றல் வருகிறது, நீங்கள் மாற்றி மாற்றி கூறுவது சரியா. காஃபீர்களுக்கு வெட்டு ஒன்று துண்டு இரண்டா, தாவா பணி செய்யுங்கள். தக்க்கியா செய்யாதீர்கள் இ.சா அவர்களே, உங்களை நீங்களே கண்ணியப்படுத்துங்கள்……குழம்பி போய்யுள்ள காஃபீர்.

 7. வாங்க நரேன்,இப்படியெல்லாம் சிக்கல் புக்கலா கேக்குறீஹளே.. நாயமா?நானே கார்பன் கூட்டாளியா இருந்தா உங்க காஃபிர் பின்னூட்டத்தையே அனுமதித்திருக்க மாட்டேன். அனுமதித்ததால், சிக்கலாய்டிச்சி.நானே கார்பன் கூட்டாளி சொன்னதை மேலெ விலாவாரியா விளக்கிகிட்டிருக்கேன்.இப்ப தினந்தினம் ராத்திரி எப்படி சூரியன் அல்லாஹ்வோட கால்ல வெய்ட் பண்ணுதுன்னு நமக்கே கொஞ்சம் கொழப்பமாத்தான் இருக்கு. எதுக்கும் பிஜே, கார்பன் கூட்டாளிகிட்ட போய் கேட்டுப்பாருங்க.. அவரு சொன்னதுக்கு அப்புறம் நாம வெளக்கிடுவோம்

 8. வாங்க தருமி1. அல்லாஹ்வுக்கு கெரஹம் பிடிக்குதோ இல்லையோ, அல்லாஹ்வோட அடியார்களுக்கு பிடிச்சிருக்குன்னு நல்லா தெரியுதுல்ல்ல?2. இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் மாதிரியான அத்வைதமெல்லாம் இஸ்லாமுக்கு முரணானது. அதை ஒத்துகொண்டால், நட்டுவைத்த கல்லிலும் இருக்கிறான் என்றெல்லாம் ஒத்துகொள்ளவேண்டும். ஆனால் அல்லாஹ் இந்த மாதிரி தொலைவில் இருக்கிறான் என்றுதான் அல்குரான் சொல்கிறது. அதனால்தான் நம் பூமியில் மூஃமின்கள் அடிக்கும் கூத்துகள் மிகவும் லேட்டாக அல்லாஹ்விடம் செல்கின்றன. இந்த கம்யூனிகேஷன் பிராப்ளத்தைத்தான் நம்ம கார்பன் கூட்டாளி சொல்கிறார்3. நம்ம சூரியனே இக்கணூண்டு. அந்த சூரியன் இருக்கிற காலக்ஸியே இக்கணூண்டு. அந்த காலக்ஸிக்குள்ளாறதான் அல்லாஹ் இக்கார். இந்த காலக்ஸிக்குள்ளாற இருக்கற சூரியனை கண்டுபிடிக்கிறதுக்குள்ளயே தாவு தீந்துடும். இங்கேர்ந்துவர்ர செய்தியை பிடிக்கிறதுக்கே அவருக்கு ஆயிரம் வருடமாவுது. இந்த லட்சணத்தில அவ்வளவு பெரிய க்ளஸ்டர் பிரபஞ்சம் என்றால் கொஞ்சம் முழி பிதுங்கித்தான் போவும். அவருக்கே அவ்வளவு இருக்குமான்னு தெரியாது. ஏன் இம்புட்டு சின்னூனூனூண்டு மனுசனுக்காக இந்த உலகத்தையும், அதோடு அம்புட்டு பெரிய galaxy, universes எல்லாம் படைக்கணும்னு நீங்க கேக்கறீங்க. //இந்த மாதிரி கேள்வி கேட்டால் சில மூமீன்காரர்கள் இந்தக் கேள்விகளுக்கான பதிலை கடைசி நாளில் அல்லாஹிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வது போல் நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என நினைக்கிறேன். //அதெல்லாம் ஒரு காலம். இப்ப கார்பன் கூட்டாளி மாதிரி கொஞ்ச பேர் கெளம்பியிருக்காங்க.. இப்ப அல்லாஹ்வுக்கே டார்ச் அடிச்சி உங்களுக்கு நல்லா வெளக்கிருவாங்க.. நாத்திகர்கள் யாரும் வரலைன்னு ரொம்ப கொறைப்பட்டுகீறார்.

 9. வணக்கம் தோழர்,நண்பர் கார்பன் கூட்டாளிக்கு நான் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையின் பொருளில் அந்தப் பதிலில் ஒரு குறிப்பு வருகிறது. அப்போது எனக்கு ஒரு எண்ணம் வந்தது, இதை உங்களிடம் தெரிவித்து ஒரு பதிவு எழுதச் சொல்ல வேண்டும் என எண்ணி இங்கு வந்தால் நேற்றே இந்தப் பதிவை எழுதி அசத்தியிருப்பது தெரிந்தது. தொடருங்கள்…. தொடருங்கள்….ஒரு வேண்டுகோள்: இறையில்லா இஸ்லாம் என்றொரு இணையதளம் இயங்கி வருகிறது. உங்கள் பதிவுகளை அவர்களுக்கு அனுப்பலாமா?

 10. காஃபிர் நரேன்//இதை விட அது மிகவும் அட்டகாசமான சிரிப்பை அளித்தது.//எனக்கே அப்படித்தான். ஆனாலும் மூஃமின் எழுதியிருக்காரேன்னு ரொம்ப கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கிட்டு படிச்சேனுங்க…

 11. ஸனாதிக்கா செங்கொடி அவர்களே,உங்கள் வருகைக்கு நன்றிதாராளமாக இந்த பதிவுகளை எப்படி வேண்டுமானலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.இதன் மூலம் அல்லாஹ்வின் அருமை பெருமைகள் பரவி நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா (ஸல்) அவர்களின் புகழ் பரவுவது அல்லாஹ்வுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.

 12. இப்னு ஷகிர் அவர்களுக்கு காஃபிர் ராஜாவின் காலை வணக்கங்கள்.உங்கள் பதிவுகளை படித்து சிரித்தது போதாது என்று பின்னூட்டங்கள் எழுதும் நரேன், தருமி ஆகியோரின் கமெண்ட்டுகளும் அவர்களுக்கு உங்கள் பதிலும் மேலும் சிரிப்பை வரவழைத்தது. எனக்கு இந்த மாதிரி காமெடியாக எழுத வரவில்லை. அல்லாவிடம் எனக்காக துஆ பண்ணிக் கொள்ளுஙகள். ஒரு சந்தேகம் நீங்கள் செய்யும் துஆ அல்லாவிடம் உடனே போய் சேர்ந்துவிடுமா?

 13. இப்னு சார், நீங்கள் இணைத்திருக்கும் படங்கள் பிரமாண்டமாய் பரந்து, விரிந்து படிப்பவரை ஆச்சரியப்படுத்துகிறது!!! எப்படி சார்? எங்கு படித்தீர்கள்!?தாங்க முடியல…

 14. யோவ் Ibnu Shakir, கார்பன் கூட்டாளி இந்த அளவுக்கு ஆராய்ந்து தனக்கு தானே மண்ண்ள்ளி போட்டுகொண்டுள்ளார். அதை ஏன் கேவலப்படுத்த நினைக்கிறீர்கள். மரியாதையாக local galaxy god ஆகிய அல்லாவை வணங்கி 72 கன்னிப்பெண்கள்+ 28 கில்மான் சுகம் அடைய வழியைப்பாருங்கள்.

 15. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. இப்படி காபிர்களுக்கு வயிற்று வலியை ஏற்படுத்துவதால் உங்களுக்கு சொர்க்கத்தில் எக்ஸ்ட்ரா வசதிகள் கிடைக்கும் என நம்புகிறேன்.அது சரி சொர்க்கம் எவ்வளவு தூரத்தில் உள்ளது? முகமது ஒரே இரவில் போய் வந்தாராமே.சுவர்க்கத்தில் அல்லாவையும் பார்க்க முடியுமாமே???????????????!!!

 16. வாருங்கள் காஃபிர் ராஜா அவர்களே,துஆ மாதிரி எந்த செய்தி போனாலும் அது 1000 வருடங்கள் ஆகும். அப்படித்தான் நம்ம கார்பன் சொல்கிறார்.ஆகையால் நாளைக்கு சாப்பாட்டுக்கு, துஆ செய்து வையுங்கள். ஆயிரம் வருடங்கள் கழித்து அது அல்லாஹ்விடம் போய், அதற்கப்புறம் அவன் முடிவெடுத்து உங்களுக்கு சாப்பாடு கொடுக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து அல்லாஹ் உங்களுக்கு கொடுப்பான். அல்லாஹ் போதுமானவன் என்று நமது தவ்ஹீத் அண்ணன் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தாலும், அல்லாஹ் கொடுப்பது போதாமல், வளைகுடா ரசிகர்களிடம் நம்ம தவ்ஹீத் அண்ணன் அடிக்கடி பணம் பிச்சை கேட்டுகொண்டேதானே இருக்கிறார். அதுமாதிரிதான்னு வச்சிக்கங்களேன்

 17. வாங்க அறிவாளன் அய்யா,அந்த படங்களுக்கு கடைசி லிங்கை பார்க்கவும்.நல்ல இணையதளம்

 18. வாருங்கள் டமிலியன் அவர்களே,உங்கள் பதிவையும் படித்தேன். ஆதாரம் எதுவும் இல்லாமல் அடிச்சி விடும் மூஃமீன்களை உங்களை போல சிலர் தொந்தரவு பண்ணுவதால்தான் இஸ்லாமிய அறிவியலே ஆரம்பித்திருக்கிறது என்று கருதுகிறேன்அறிவியல் மூலமாக இஸ்லாமை நிரூபித்து பிறகு அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் கண்ணுமணி பொன்னுமணி பண்ணியதெல்லாம் அல்லாஹ் அனுமதித்ததாலேயே என்று அடித்துவிடலாம் என்று நமது இஸ்லாமிய அறிவியல் மூஃமின்கள் இறங்கிவிட்டார்கள்

 19. வாருங்கள் ஷ்யாம் அவர்களே,பார்க்கலாமாம்.அவரை எதுக்கு பாக்கணும்னுதான் நம்ம மூஃமின்கள் சொல்ல மாட்டேங்கிறார்கள். டாஸ்மாக் ஆறு உடறாராம். குடிச்சி குடிச்சி போரடிச்சிருச்சின்னா நரகத்துக்கு ட்ரான்ஸ்பர் கேட்டா கிடைக்குமான்னு தெரியலை.ஸாடோமசோகிஸ்டுகளுக்கு நரகம் ரொம்ப ஜாலியா இருக்குமே அதுக்கு என்ன பண்னப்போறாங்கன்னும் தெரியலை.

 20. ஜனாஃப் இபின் ஷாகிர்,என்ன காஃபிர்கள் இஸ்லாம் பற்றி எழுதினாலும் ஒரு ஈமானுள்ள முமினுக்கு சம‌மாக எழுத முடியாது என்பதை மீண்டும் நிரூபித்த்து விட்டீர்கள்.எனக்கு கா.கூ அல்லாவின் இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டார் என்ற சிந்தனையே வரவில்லை.மகா பெரிய பிரபஞ்சத்தில் ஒளியின் வேகம் என்பது ஒன்றுமே இல்லை என்ப‌தை ப‌ற்றி ப‌திவிட‌லாம் என்று எண்ணினேன்.அத‌ற்கு தேவை இல்லாம‌ல் போய் விட்ட‌து. பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று உணராமல் ஒரு பிரசாரகர்(கா.கூ) இட்ட பதிவு ஒரு நகைசுவை விருந்தானதுதான் மிச்சம்.‌பிற மதத்தவர்கள் அறிவியலை கண்டு கொள்ளாமல் செல்வது என் என்றால் அறிவியலின் விதிகள் வரையறைகள் மாறும் போது ,சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்ததுதான்.அதனால் இது வேறு அது வேறு என்று ஜாக்கிரதையாக ஒதுங்கி விடுகின்றனர்.ம‌த‌த்தில் அறிவிய‌ல் என்று இவ‌ர்க‌ள் விடும் புருடாக்க‌ளால் ,கால‌ம் கால‌மாக மூடி ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌ அனைத்து புருடாக்க‌ளும் வெளி வ‌ந்ததுதான் மிச்ச‌ம்.தொடருட்டும் உமது தாவா!

 21. மூமின் பீரங்கி இ.சா அவர்களே,நீங்கள் கருணையாளன் தான் அதனால் நீங்கள் வணங்கும் அல்லாவும் கருணையாளன் தான், ஏனென்றால்…மூமினான தங்களை காஃபீரான நான் “அஸ்ஸாமு அலைக்கும்” என்று வாழ்த்தியபோது, கீழ்கண்ட அதீஸின் படி சும்மாயிருந்தீர்களே அதற்காகத்தான்!!!.================================================புகாரி6024. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார் யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸலாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வஅலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)' என்று கேட்டார்கள். Volume :6 Book :78================================================அண்ணன் தவ்வீது அவர்களை கார்பன் பேப்பர் வைத்து காப்பியடிப்பதால், உங்கள் சகோதரர் கார்பன் கூட்டாளியின் பெயர் காரணம் என நினைத்தேன். ஆனால் அவரே எல்லாம் கார்பன் மயம் என்ற அத்வைத்த சித்தாந்தம் (வரும் ஆனால் வராது) படி பெயர் காரணம் என்று கூறியதை அறிந்து புரித்துப் போனேன்.சரி விஷயதிற்கு வருவோம். ஆனாலும் நீங்கள் எவ்வளவு பெரிய மூமினாக இருந்தாலும் உங்களுக்கு bracket போட தெரியாது. இங்கே பாருங்கள்.//மேலே கொடுக்கப்பட்ட இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்டவையாக தோன்றலாம், அவன் ‘ஆகுக’ என்றால் ஆகிவிடும் அப்படி இருக்க எதற்காக ஆறு நாட்கள் (காலங்கள்). இரண்டுமே உண்மைதான், இந்த ஆறு நாட்கள் என்பது பிரபஞ்சம் உருவாகி ஆறு நாட்களாக, ஆறு பகுதிகளாக கூட இருக்கலாம்//.குரான் மொழிப்பெயர்ப்பு bracketக்கே ஜாக்கேட் ச்சீ…பிராக்கேட் போட்ட மூமின் கலை உங்களுக்கு இன்னும் அத்துப்படியாகவில்லை என நினைக்கிறேன். இன்னும் நன்றாக ஒதுவும். உங்கள் சகோதரர்களின் தளத்தில் எல்லாம் பின்னூட்டம் போட்டு தெளிவு பெற ஆசைத்தான். ஆனால் பின்னூட்டத்தின் முன்னாலும் பின்னாலும் அனைவரும், புரியாத பாஷையில் இரண்டு வரி எழுதுவார்களே அது எனக்கு பிடிப்படவில்லை. அதுவரைக்கும் உங்களை பின்தொடர்ந்து கேள்விகேட்டு ஞானப்பால் குடிக்க வேண்டியதுதான்.நன்றி.

 22. இஸ்லாமின் ஐண்ஸ்டீனே.ஆங்கில படத்தை பார்த்து தமிழ் படங்ளாக எப்படி உல்டா செய்து எடுக்கிறார்கள் என்பது அறிவியல் மூமின்களுக்கு தெரியும் போல.http://www.speed-light.info/speed_of_light_12000.htmநேர்த்தியாக உல்டா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நன்றி

 23. நண்பர் நரேன்கலக்கல்.மூல மொழியிலேயே படித்தால் புரியும் என்ற சகோக்களின் கொள்கையை மத அறிவியலின் மூல மொழி ஆங்கிலத்தில் கொடுத்தது அருமை.இது போல் அனைத்து மத அறிவியலுக்கும் மூலம் காட்ட முடியும்.இவர்களின் பணி மொழி மாற்றம் செய்வதே.ஏன் இஸ்லாம் மட்டும் மதத்தில் அறிவியல் என்பதை மட்டும் காட்டி தந்து இருப்பை காக முயல்கிறது.1. குரான் குறிப்பிடும் பல சம்பவங்கள்,மனிதர்கள் இவர்தன் என்று சரியாக இன்னும் தெரியாது எ.கா 18ஆம் சூராவில் வரும் துல்கர்னைன்(அலெக்சாண்டர்தான் அவன் என்றால் ஏகத்துவ கொள்கை பாழாகி விடும்).2.குரானின் இறையியல் கொள்கைகள் சரியாக வரையறுக்கப் படாதவை.இதனால்தான் பல் பிரிவுகள்.அ) இறைவனுக்கு உருவம் உண்டா,ஆ)முகமது இறுதி தூதரா,இ)எத்தனை முறை தொழுகை ஈ) எந்த ஹதிதுகளை ஏற்பது……3.குரானின் மொழி பெயர்ப்பில் பல் விளையாட்டுகளை செய்ய முடியும்.அத்தியாயங்கள் வ‌ரிச‌க்கிர‌மாக‌ இல்லை. ஆக‌வே இத‌ற்கு அடுத்து இதுதான் என்று கூற‌வே முடியாது.ஆக‌வே எந்த‌ கொள்கையையும் ஏதாவ‌து முறையில் கொண்டு வ‌ருவ‌து சாத்திய‌ம்.4.ஷாரியா என்ப‌து ப‌ல் ம‌னித‌ விரோத‌ அம்ச‌ங்க‌ளை கொண்டுள்ள‌தால் அத‌னை நியாய‌ப் ப‌டுத்த‌ இப்ப‌டி ஏஎதாவ‌து செய்தால் ம‌ட்டுமே சாத்திய‌ம்.இப்ப‌டி 6 ஆம் நூற்றாண்டு காட்டுத்த‌ன‌மான் ச‌ட்ட‌ங்க‌ளைகொடுத்த‌வ‌ர்தான் இப்பிர‌ப‌ஞ்ச‌த்தை ப‌டைத்தார் என்ப‌து ச‌ரியான‌ காமெடிஉட்பிரிவு. 5.முஸ்லிம்க‌ள் அதிக‌மாக் வாழும் நாடுக‌ள் உள் பிரிவு ச‌ண்டைக‌ளில் உயிர் சேத‌ம் ஏற்ப‌டுவ‌தும் கொள்கை போட்டியே.ஏன் இவ‌ர்கள் அழகிய முறையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வ‌ர‌க் கூடாது?.அது சும்மா என்ப‌து அவ‌ர்க‌ளுகு தெரியும் என்ப‌தையே இவ்வ‌ன்முறைக‌ள் காட்டுகின்ற‌ன‌.6.இஸ்லாம் என்ப‌து அதிகம் அர‌சிய‌ல் சார்ந்த‌‌து அதில் ஆன்மீக‌ம் ஒரு ஊறுகாய்.ஆக‌வே ஆட்சி அதிகார‌ம் பிடிக்கும் வ‌ரை ம‌த‌ம் மாற்று.பிற‌கு நாட்டில் ஷாரியா ச‌ட்ட‌ம்+அடுத்த‌ நாடுக‌ளை பிடிப்போம் என்ப‌துதான்.இஸ்லாமோட கேர‌க்ட‌ரையே புரிஞ்சுக்க‌ மாட்டேங்கிரீங்க‌ளேஹா ஹா ஹா

 24. முஸ்லிம்க‌ள் அதிக‌மாக் வாழும் நாடுக‌ள் உள் பிரிவு ச‌ண்டைக‌ளில் உயிர் சேத‌ம் ஏற்ப‌டுவ‌தும் கொள்கை போட்டியே.ஏன் இவ‌ர்கள் அழகிய முறையில் விவாதித்து ஒரு முடிவுக்கு வ‌ர‌க் கூடாது?.அது சும்மா என்ப‌து அவ‌ர்க‌ளுகு தெரியும் என்ப‌தையே இவ்வ‌ன்முறைக‌ள் காட்டுகின்ற‌ன‌. சார்வாகன் ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காதாம். அதுபோல அரிவாளைத் தூக்கிய கையும் சும்மா இருக்காது. யாரையாவது போட்டுத் தள்ளிக்கொண்டே இருக்கணும்.இஸ்லாம் என்ப‌து அதிகம் அர‌சிய‌ல் ஆன்மீக‌ம் ஒரு ஊறுகாய். சுப்பர் சார்வாகன்.அல்லாவுக்குத்தான் உருவமே கிடையாதே. சொர்க்கத்தில் போய் எப்படி அல்லாவை பார்க்க முடியும்? கொஞ்சம் குழப்பமாக உள்ளது. குழப்பத்தை தீர்த்து வையுங்கள் இ.ஷா. உங்களிடம் தான் இஸ்லாம் பற்றி நிறைய சந்தேகங்கள் கேட்க வேண்டியுள்ளது. தாடி வைத்துக்கொள்வது, தொப்பி வைத்துக் கொள்வது, சுன்னத் செய்வது, ஐந்து வேளை தொழுகை செய்வது இவை முஸ்லீம்கள் கட்டாயம் செய்ய வேண்டியவையா? செய்யாமலும் இருக்கலாமா? ஏனெனில் தாடி, தொப்பி எல்லோரும் எப்போதும் வைத்திருப்பதில்லை. வெள்ளிக்கிழமை மட்டும்தான் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாலி கட்டலாமா?கூடாதா? முகமது என்ன சொல்கிறார்? தெளிவுபடுத்துங்கள்.

 25. @சார்வாகன்//பிற மதத்தவர்கள் அறிவியலை கண்டு கொள்ளாமல் செல்வது என் என்றால் அறிவியலின் விதிகள் வரையறைகள் மாறும் போது ,சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்ததுதான்.அதனால் இது வேறு அது வேறு என்று ஜாக்கிரதையாக ஒதுங்கி விடுகின்றனர்.//ஏன் நாங்களும் சொல்வோம்ல்…http://www.hitxp.com/articles/veda/light-speed-rigveda/http://www.hitxp.com/articles/veda/veda-age-universe-bigbang/http://www.hitxp.com/articles/veda/vedic-ancient-science-modern-technology-mathematics-geometry/

 26. இதில் கார்பன்கூட்டாளி ஒன்றை சொல்ல மறந்துவிட்டார். இந்த 50000 , 1000 ஆண்டுகள் என்பது ஹிஜிரா வருடங்களா அல்லது காபிர் வருடங்களா என்று. ஏனென்றால். அல்லாவின் (இஸ்லாம்) வருடத்தில் 10-12 நாட்கள் காபிர் வருடத்தைவிட குறைவு?

 27. மூமின் இ.சா. அவர்களே.இந்த சார்வா“கான்”, டமிலியன் போன்ற காஃபீர்கள் இப்படிதான் உளறுவார்கள்.ஷாரியா எப்படிப் பட்ட இறைவனின் சட்டம் மற்றும் சுன்னத் என்பதை பற்றி அவர்கள் அத்தாட்சிகளைப் பார்க்கவில்லை. ஷாரியா சட்டத்தினால் சவுதி தீபகர்பத்தில் பாலும், தேனும், சாந்தியும், சமாதானமும், அருட்கொடைகளும், கங்கை ஆறுப்போல ஒடவில்லையா. உலகின் முதல்படி சுவனம் அங்கே தான் உள்ளது. அங்கே உள்ள மூமின்கள் தங்கள் இறைவன் தந்த முளையினால் பெரிய பெரிய தொழிற்சாலைகள் கட்டிடங்கள் கட்டி, தங்களின் சுய அறிவினால் எண்ணைகளை எடுக்க வில்லையா.அமெரிக்காவை தங்கள் சொல்படி ஆட்டிப்படைக்க வில்லையா.அப்காணிஸ்தானைப் பாருங்கள். தாலிபான் ஆட்சியில் சொர்க்கத்தின் சுவனம் அங்கே தழைத்தோங்கவில்லையா??தென் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஊய்கீர் சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா அச்சே, காஷ்மீர், ரஷ்ஷிய செச்சினியா, போன்ற தும்மி நாடுகளில் ஷாரியாவின் படி சாந்தியும் சமாதானமுமாக வாழவில்லையா.ஷாரியா பின்பற்றாத நாடுகளில், மூமின்கள் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா. மூமின்கள் ஷாரியத் பின்பற்றாத நாடுகளில் பார்த்திருக்கிறீர்களா?. உம்மத் தழைத்தோங்க சகோதரர்த்துவம் மேம்பட ஷாரியா நாடுகள் மூமின்களை கதவை திறந்து காட்டி வாருங்கள் வாருங்கள் என அழைக்க வில்லையா.ஷாத்தான் நாடான அமெரிக்காவில், வாழும் ஒரு மூமினை காட்டுங்கள். காஃபீர்கள் ஜிஸ்யா வரிக் கட்டி ஷாரியா நாடுகளில் வாழ விரும்புகிறார்கள். அதுவும் ஆப்கானிஸ்தானில். பால்வழி கிரகத்தில் இருக்கும் இறைவனின் அருளால் இஸ்ரேலை 1.5 பில்லியன் முஸ்லிம்கள் அடக்கி ஆளவில்லையா.அதனால் அந்த ”கானின்” உளறலை விட்டுத்தள்ளுங்கள். அடுத்து நமது காஃபீர் தலைவர் டமிலியன் பற்றியது.தனது தளத்தில் குரான் வசனங்களை அள்ளித்தெளித்து கோடிக்கணக்கான ரியால் கூலிகளை பெற்று, மற்ற காஃபீர்கள் எங்கே அதை படித்து தன்னைப்போல் கூலிகளை பெற்றுவிடுவார்களோ என்று குதர்க்கமாகவே பின்னூட்டம் ஈடுகிறார்.இந்த காஃபீர்களின் உளறல்களை உதறுங்கள், உங்கள் தாவா பணி தொடரட்டும். அதனால் காஃபீர்கள் தலையில் சாந்தியும், சமாதானமும், அருட்கொடைகளும் I.E.D குண்டுப் போல விழட்டும். அண்ணனின் ஷாரிய ஏகத்துவம் மட்டும் வெல்ல பாடுப்படுங்கள்.வாழ்க ஏகத்துவம்.

 28. காஃபிர் Tamilian அவர்களே,//இதில் கார்பன்கூட்டாளி ஒன்றை சொல்ல மறந்துவிட்டார். இந்த 50000 , 1000 ஆண்டுகள் என்பது ஹிஜிரா வருடங்களா அல்லது காபிர் வருடங்களா என்று. ஏனென்றால். அல்லாவின் (இஸ்லாம்) வருடத்தில் 10-12 நாட்கள் காபிர் வருடத்தைவிட குறைவு? //அல்குர்ஆனிடம் சென்று பதிலை கண்டுபிடிக்க முயன்றேன்.9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.என்று அல்லாஹ் இறக்குகிறான். (அப்புறம் இந்த சங்கை மிக்க மாதங்களில் இணைவைப்பவர்களை கொல்லுவதும் சரிதான் என்று சொல்வான். அதனை முன்னரே எழுதியிருக்கிறேன்)இப்போது இஸ்லாமிய அறிவியலின் படி எப்படி மாதங்களின் எண்ணிக்கை 12 என்று சொல்வது என்று மண்டையை பிய்த்துகொண்டிருக்கிறேன். நம் இஸ்லாமிய அறிவியல் பதிவர்கள் தசமப்புள்ளி சகிதமாக அட்டாக் பண்ணுவதால் விக்கி பக்கம் பார்த்தேன்.சந்திரனின்Orbital period 27.321582 d (27 d 7 h 43.1 min[1])Synodic period 29.530589 d (29 d 12 h 44 min 2.9 s)இரண்டு எண்களை 12ஆல் பெருக்கினாலும் வருடக்கணக்கு வரவில்லை.orbital period படி கணக்கு போட்டால் வருடத்தின் அளவு 327.85 வருகிறதுsynodic period படி கணக்கு போட்டால் வருடத்தின் அளவு 354.36 நாட்கள் என்று வருகிறது.இதில் எதாவது தப்பிக்க வழி இருக்கும். கார்பன் கூட்டாளி, சிட்டிஜன் ஆகியோர் நான் கேட்டால் சொல்லமாட்டார்கள். நீங்களாவது கேட்டு சொல்லுங்கள்.http://en.wikipedia.org/wiki/Moonவானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை 12 என்று சொன்னால் பயங்கர பிரச்னை.ஏனென்றால் வானங்கள் உருவாகி பல பில்லியன் ஆண்டுகள் சென்றுதான் பூமியே உருவாகிறது. அப்போது எப்படி சந்திரன் இருக்க முடியும்? பூமி உருவாகி பல கோடி ஆண்டுகள் கழித்துதான் சந்திரனே வருகிறது. அதுவும் ஆரம்பகாலம் முதலாகவே 12 மாதங்கள் என்பதெல்லாம் கொஞ்சம் கார்பன் பதிவர் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது.

 29. ஒளியின் வேகத்தை மிஞ்சும் துகள் கண்டுபிடிப்பா?http://aatralarasau.blogspot.com/2011/09/blog-post_23.htmlஇ.சா. உக்கிர காஃபிர் அண்ணன் டமிலியனோட பேசும்பொழுது கொஞ்சம் பெருமிதத்தை அடக்கி கொள்கிறீர்கள் ஏன்?இந்தப் பதிவை வைத்து தற்போது ஒளியின் வேகத்தை விட சென்றது, என்பதை வார்த்தை விளையாட்டால் விளக்க வேண்டியது தான்.http://pagadu.blogspot.com/2011/08/blog-post_16.html

 30. ஷாகிர் ஜி,ஆறாம் நூற்றாண்டின் அராபிய எழுத படிக்க தெரியாதவனுக்கு இவ்வளவு தான் தெரியும்.இதற்கு மேல் எதிர்பார்த்தல் கூடாது, அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புருடா உட்டுட்டு போய்ட்டான்.அதுல என்ன அறிவியலாவது இல்லை மன்னாங்கட்டியாவது ?ஒரு மயிரும் இருக்காது .கார்பன் கூட்டாளியாம் முண்டம் !! அறிவு கேட்ட முண்டம் , அடிமாட்டு தண்டம் !!

 31. வாருங்கள் இப்னு லஹப்இந்த ஜி எல்லாம் வாணாமுங்க.. ஏக்க இறைவனின் அருளாசி உங்கள் மீது நிலவுவதாக

 32. என்னடா நடக்குது இங்க ? “நானும் வரேன்டா ஆட்டத்துக்கு”

 33. நன்றாக சிரிக்க சிந்திக்கத் தூண்டும் பதிவைத் தந்த இ.சா.வுக்கு வாழ்த்துக்கள். இத்தனை நாள் உங்களின் பதிவைக் காணாமலேயே இருந்து விட்டேன். விழுந்து விழுந்து பிராத்தனை செய்கிறார்களே போய்ச் சேரவே 1000 ஆண்டுகள் ஆகுமே. அதுக்கு முன்னாடியே இவன் போய்ச்சேர்ந்துடுவானே பிறகு எதற்கு பிரார்த்தனை???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s