பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை

பி ஜெயினுலாபுதீன் என்ற இறைதூதர் என்றுதான் இந்த பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால், நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அளவுக்கு அவரையும் தூக்கிவிடுமோமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். இஸ்லாமில் இறைவனுக்கு மட்டும் இணைவைக்கக்கூடாது என்று சொல்வதை நம்ப வேண்டாம். நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கும் இணை வைக்கக்கூடாது. கவனிக்கவும், இறைவனுக்கு இணை வைக்கும் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கூட விட்டுவிடுவோம். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு இணை வைத்த காதியானிகளையும், பஹாய் களையும்  ஈமான்தாரிகள்  எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இறைவனுக்கு இணை வைப்பதை விட மிகப்பெரிய குற்றம் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இணைவைப்பது! ஜாக்கிரதை.

ஆனாலும் பிஜே சில விஷயங்களில் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகம் தெரிந்தவர் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர் மட்டுமல்ல, இங்கே நிறைய பேருக்கு நபிஹள் நாயகம்)ஸல்) அவர்களை விட அல்லாஹ்வின் மனத்தில் என்ன உள்ளது என்று தெரியும். அதனை எல்லாம் இங்கே இன்ஷா அல்லாஹ் கூற விரும்புகிறேன். அவற்றின் மூலம், இப்படிப்பட்ட அருட்கொடைகள் மீது உங்கல் அன்பு சுரந்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

விஷயத்துக்கு வருகிறேன்.

வஹி மூலம் வந்த வசனம் குரானில் இல்லாததை பற்றிய பிஜே அவர்களது விளக்கம் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ளது
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/

குரான் தவிர வேறு இறைச்செய்தி இல்லை என்பது தவறு என்பதற்கு ஆதாரத்தை பிஜே எழுதியுள்ளார். ஏன் குரானில் இல்லை என்பதற்கு காரணத்தையும் பிஜே எழுதியுள்ளார். மார்க்க சம்பந்தமாக எதுவும் இந்த இறைவசனத்தில் இல்லை என்பதால் அது குரானில் இடம் பெறவில்லை.

( நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும்அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார் என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது அனைத்தையும் அறிந்த நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான் குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும் குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம் சமுதாயத்துக்கோ மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான் குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது)

ஆகவே அல்லாஹ் ஒரு விஷயத்தை சொல்லாமல் நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்று தெரிந்து கொள்ளலாம். அதுவும் பக்கத்தில் இருக்கும் மனைவி என்ன நினைத்துகொண்டிருக்கிறாள் என்பது கூட நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்பதே இங்கே நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை.

ஆனால் அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்பதையும் நமது உயிருக்கும் மேலான நபிஹள் நாயகம் சொல்கிறார்.

ஸஹீஹுல் புகாரி 6223
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் கொட்டாவியை வெறுக்கிறான்.” மேலும், “ ஹா என்று கொட்டாவி விடுகிற மூஃமினை பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்”
என்றும் உண்மை விளம்புகிறார்.

மேலே இருப்பது ஓக்கே!

இது ரொம்ப ரொம்ப தப்பு.. ஷைத்தான் சிரிக்கிறான் ஜாக்ரதை!

அது அவருக்கு எப்படி தெரிந்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பகல்லயே பசு மாடு தெரியாதவர், ராத்திரியில் எருமை மாட்டை எப்படி பார்க்க முடியும் என்று கேட்கலாம். பக்கத்தில் இருக்கும் மனைவியின் உள்ளக்கிடக்கையே தெரியாதவர் எப்படி அல்லாஹ்வின் மனத்தில் அவரது விருப்பு வெறுப்பை அறிந்திருக்க முடியும்?

ஆக இதுவும் ஒரு வஹி மூலம்தான் வந்திருக்க வேண்டும். இல்லையா?

ஆனால் பாருங்கள். இந்த தும்மல், கொட்டாவி இறைவசனம் அல்குரானில் இல்லை!

மனைவியை பற்றி அல்லாஹ் நபிஹள் நாயகத்துக்கு சொன்னது நமக்கு தேவையில்லை என்பதால்தான் அது அல்குரானில் இடம் பெறவில்லை என்பதுதான் நமது பிஜே சொல்லும் விளக்கம். ஆனால், தும்மல் அல்லாஹ்வுக்கு பிடிக்கும் என்பது நமக்கு மிகவும் முக்கியமான விஷயம். கொட்டாவி பிடிக்காது என்பதும் நமக்கு முக்கியமான விஷயம். அதுவும் அல்லாஹ்வின் மனதில் உள்ள விருப்பு வெறுப்புக்களை பற்றிய மிக முக்கிய விஷயம்!

இதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

1) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொன்னார். ஆனால் அந்த இறைவசனம் அல்குரானில் இடம் பெறாமல் போய்விட்டது. இப்படி சொன்னால், அல்குரான் முழுமையானதல்ல என்று ஆகிவிடும்.

2) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொல்லவில்லை. இப்படி வைத்துகொண்டால், நபிஹள் நாயஹம் இஷ்டப்படி பொய் சொன்னார் என்று ஆகிவிடும். இதுவும் பிரச்னை.

இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாத்திகர்களும் சாதாரண கொட்டாவிக்கு ஏனய்யா இப்படி பிரச்னை பண்றீங்க. வந்தா கொட்டாவி வுடுங்க. தும்மல் வந்தா தும்முங்க. இதுக்கெல்லாம் எதுக்குடா அல்லாவை இழுக்குறீங்க என்று கேட்கலாம். இது முஸ்லீம்களுக்கு தலை போற பிரச்னை (no pun intended..man) என்று அறிந்துகொள்ளவும்.

இதே மாதிரி அல்குரானில் இல்லாத ஆனால் ஹதீஸில் அல்லாஹ் விரும்புகிறான், அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு வண்டி கிடக்கிறது.

உதாரணத்துக்கு சில.. (சிரிக்கும் காபிர்கள் சற்றி தள்ளி நிற்கவும்)
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48, 5198
அல்லாஹ்வுக்கு தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை நம்பிக்கை கொண்டு மனனம் செய்பவர் சொர்க்கம் செல்வார். அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்
5207
அல்லாஹ்வை யார் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்களை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுக்கிறார்களோ அவரை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்

அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான்

இதற்கெல்லாம் அல்குரானில் ஆதாரம் இல்லை. அவையெல்லாம் வஹி மூலமாகத்தானே வந்திருக்க வேண்டும். பிறகென்ன அல்ல்லாஹ்வின் இறுதி இறைதூதர் சும்மா வாயில் வந்ததை புளுகினார் என்றா சொல்ல முடியும்? (புளுகினார் என்று சொல்லும் காபிர்கள் சற்று தள்ளி நிற்கவும். நஜஸ்.. நஜஸ்)

ஆகவே இவற்றை எல்லாம் நாம் எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று நமது பிஜே கூறலாம்.

இரண்டாவது பிஜேவும் சும்மா லேசுப்பட்டவர் அல்ல. அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்தான் அவரும்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

இதோ இந்த வரியை பாருங்கள்!
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது:”

ல்லாஹ் இந்த இறைவசனத்தில் இதற்காகத்தான் கூறுகிறான் என்று ஒருவரால் கூறமுடியுமென்றால் அவர் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவராகத்தானே இருக்க வேண்டும்? அது பிஜேதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் இறைதூதருக்கு அனுப்பிய வசனத்தில் அன்றைய இறைதூதருக்கே புரியாத தெரியாத விஷயங்களை எல்லாம் புட்டு புட்டு வைப்பவர் ஒருவர் உண்டு என்றால், அது பிஜே அவர்களே!

www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/6-allah-iyalathavana/

அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான், அல்லாஹ் கேலி செய்கிறான், அல்லாஹ் ஏமாற்றுகிறான் போன்ற வசனங்கள் அல்குரானில் காணக்கிடக்கின்றன.

அவர்கள் கேலி செய்தால், அல்லாஹ்வும் கேலி செய்வான் என்பது, அவர்கள் கேலி செய்தால் அதற்கான தண்டனை தருவான் என்றுதான் அல்லாஹ் சொல்ல வருகிறான் என்று விளக்குகிறார்.

ஆகவே அல்லாஹ் என்ன சொல்ல வந்தான் என்பதை விளக்குபவர் பிஜே என்றால் மிகையில்லை. இது போல இந்த காலத்தில் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்துணர்ந்து சொல்லக்கூடியவர் யார் இருக்கிறார்கள்?

இதே மாதிரி, முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லத்துக்கே  தெரியாத பல அறிவியல் உண்மைகளை அல்குரானின் வரிகளிலிருந்து கண்டுபிடிக்கக்கூடியவர் பிஜே அவர்களே. இதனைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான், அது முகம்மது நபிக்கு தெரியவில்லை என்று பல விளக்கங்களை கொடுத்துள்ளார் அண்ணன் பிஜே. கவனியுங்கள். இதே போல இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு என்பதற்கெல்லாம் அல்லாஹ் இதனைத்தான் சொல்லவந்தான் என்று ஒரு வண்டி நமது பிஜேவும், நமது இஸ்லாமிய அறிவியலாளர்களும் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் வஹி வந்து இந்த அறிவை பெற்றார்களா அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டினார்களா என்று யாரும் கேட்கக்கூடாது. அவர்கள் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்கள் என்று வைத்துகொண்டு மேலே போகவேண்டும்.

அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் மாதிரியே அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை மட்டுமல்ல, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் உள்ளக்கிடக்கையையும் அறிந்தவர் பிஜே அவர்கள் மட்டுமே!

அதே மாதிரி இஸ்லாமிய வருடம் என்று அரபி வருடங்களை கருதுவது தவறு என்று பிஜே கூறியுள்ள விஷயமும் முக்கியமானது.

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/hijri_epothu_armbam/

இதன் இறுதியில் அவர் கூறியதை பார்ப்போம்
நபிகளுக்கு பின்னால் வஹி இல்லை என்பதும், வஹியின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது” என்று அறிவித்திருக்கிறார் பிஜே.
நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பின்னால் வஹி இல்லை என்பது குர் ஆனில் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது. காத்தமுன் நபி என்ற ஒரே ஒரு வார்த்தையை வைத்து வூடே கட்டிய மௌலவிகள் நாம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

அதனை அப்படியே வைத்துகொள்வோம்.

அப்படியென்றால், உத்மான் தொகுத்த குர் ஆனை என்ன சொல்வது என்ற கேள்வி எழுகிறது. காலிபா உத்மான் (றலி)அவர்களே அல் குர் ஆனை தொகுத்தார்கள். அது மட்டுமல்ல,எத்தனை எத்தனையோ வெவ்வேறு விதமாக தொகுத்த குர் ஆன்களை எல்லாம் கைப்பற்றி எரித்து தன்னுடைய குர் ஆனை மட்டுமே குர் ஆன் என்று சொல்லவேண்டும் என்று செய்தார்கள். இதில் அலி(ரலி) தொகுத்த குர் ஆனும் காலி. அந்த குர் ஆன் இப்போது இருக்கும் குர் ஆனுக்கு மாறுபாடானது என்பது வரலாறு. அது மட்டுமல்ல, அந்த குர் ஆன் மிக அழகாக பல முறைகளில் சரியானதும் கூட என்று சுன்னி பிரிவை சேர்ந்தவர்களே எழுதி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த குர் ஆன் அழிக்கப்பட்டு இந்த குர் ஆன் மட்டுமே நிற்கும்படி உத்மான் செய்துவிட்டார்.

குர் ஆனில் வஹியால் இறக்கப்பட்ட வசனங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு ஒரு வடிவத்தை கொடுத்து அத்தியாயங்களாக பிரித்து இந்த அத்தியாயம் முதலில், இது அடுத்தது இது அடுத்தது என்று கொண்டுவந்து அதற்கு உருவத்தை கொடுத்தது காலிபா உத்மான் அவர்களே.

இந்த குர் ஆனை இப்படித்தான் தொகுக்க வேண்டும் என்று ஒரு விவரமும் அல் குரானில் இல்லை.

குரானை யார் யாரிடம் கற்றுகொள்ள வேண்டும் என்று நபிஹள் நாயஹம் சொல்லியிருக்கிறார் என்றால், அது அப்தல்ல இப்னு மசூத், சலிம் மாவ்லா அபு ஹுதாபியா, உபய் இப்னு காப், முஅத் இப்னு ஜபல்,Muhammad said: “Learn the Qur’an from four persons: Abd-Allah ibn Mas’ud, Salim Mawla Abu-Hudhayfah, Ubay ibn Kab and Muadh ibn Jabal.”

இன்னொரு இடத்தில்
Narrated Qatada: I asked Anas bin Malik: ‘Who collected the Qur’an at the time of the prophet?’ He replied, “Four, all of whom were from the Ansar: Ubai bin Ka’b, Muadh bin Jabal, Zaid bin Thabit and Abu Zaid”.[Bukhari Sahih al-Bukhari, 6:61:525]

நபிஹள் நாயகம் காலத்தில் குரானை மனனம் செய்தவர்கள் அனைவருமே அன்சாரிகள் என்று இன்னொரு ஹதீஸ் சொல்கிறது.

ஆனால், நம்ம உத்மான் (றலி) யாரை வைத்து அல்குரானை தொகுக்கிறார் என்று பாருங்கள். இந்த நான்கு பேருமே இல்லை.
முழுக்க முழுக்க குரேய்ஷிகளை வைத்து அல்குரானை தொகுக்கிறார். (அலி(றலி)யும் குரைய்ஷி பிரிவை சார்ந்தவர்) ஹஃப்ஸா(றலி) என்ற நபிஹள் நாயஹத்தின் மனைவியையும், தனது கையில் இருந்த குரானையும் சரிபார்த்து தொகுத்துகொண்டதாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

உபய் இப்னு காப் ஓதிவந்த குரானில் இருக்கும் ஒரு வரி இப்போதைய குரானில் இல்லை என்று யூசூப் அலி கூறுகிறார்.

http://al-quran.info/default.aspx?x=y#&&sura;=33&trans;=en-yusuf_ali&show;=both,quran-uthmani&ver;=2.00

3652. ^ In spiritual relationships the Prophet is entitled to more respect and consideration than blood-relations. The Believers should follow him rather than their fathers or mothers or brothers, where there is conflict of duties. He is even nearer-closer to our real interests-thari our own selves. In some Qiraahs, like that of Ubayy ibn Ka’ab, occur also the words “and he is a father of them”, which imply his spiritual relationship and connection with the words “and his wives are their mothers”. Thus his spiritual fatherhood would be contrasted pointedly with the repudiation of the vulgar superstition of calling any one like Zayd ibn Harthah by the appellation Zayd ibn Muḥammad (33:40): such an application is really disrespectful of the
Prophet.

ஆக உத்மான் தொகுத்த குர் ஆன் முழுமையானது அல்ல என்ற நிலைக்கு வர வேண்டியிருக்கிறது. மேலும் இன்றைய குரானின் பெயர் அல்குரான் அல்ல. அல் முஸாப் அல் உத்மானி என்பதுதான் இந்த குரானின் பெயர். இதே போல இதனை பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறியிருந்தாலும், அவர் பாதுகாப்பது இந்த குர் ஆனா அல்லது அலி(றலி) தொகுத்த குர் ஆனா என்று பிஜேவோ அல்லது மற்றவர்களோ அறிவார்களா? அல்லாஹ்வே அறிவான். அலி (றலி) தொகுத்த குர் ஆன் பத்திரமாக இறுதி இமாம் பாதுகாத்துவருகிறார் என்று ஷிஆக்கள் நம்புகிறார்கள். அதுவா?

இது மாதிரி நிறைய ஆதாரங்கள் உண்டு என்றாலும் இப்போதைக்கு உத்மானுக்கு அல்லாஹ் வஹி கொடுக்காமல் உத்மான் தொகுத்த குர் ஆனை நாம் குர் ஆன் என்று கருதலாமா என்பதற்கு பிஜே அவர்களே விளக்கம் அளித்துவிடுவார்கள்.

அவருக்கு தெரியாததா? அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிந்தவர் பிஜே ஒருவரே. அல்லாஹ் என்ன கருத்தினால் எதனை சொன்னான், நபிஹள் நாயகம் என்ன கருத்தினால் எதனை சொன்னார் என்பதையெல்லாம் புட்டு புட்டு வைக்கும் பிஜேவுக்கு இதெல்லாம் ஜூஜூபி..

Advertisements

28 thoughts on “பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை

 1. ஹலோ நன்பரே,நான் பிஜேபிகாரன் அல்லன். மதம் மதம் என்று ஏன் மனிதனை அல்லல்பட வைக்கிறீர்கள்? அதனால்தான் சொல்கிறேன் உங்கள் எழுத்து மொத்த்மும் குப்பை.

 2. Ibnu zakir உனக்கு ஏன்டா இந்த மானங்கெட்ட பொழப்பு, உண்மை அடையாளாத்தில் எழுத பயப்படும் கோழையே ஓடிபோய்விடு.

 3. @zakir இஸ்லாத்தை விமர்சிக்கனும்னா உன் அடையாளத்தோடு அல்லது உன் கொள்கை அடையாளத்தோடு வா. உன் நடவடிக்கை இஸ்மாயிலென்று பச்சை குத்திக்கொண்டு வந்த கோட்ஸேவைபோல் உள்ளது.

 4. சகோதரரே,அச்ச்சூ…..(இனி எப்போதும் தும்மலுடன்தான் ஆரம்பிக்கலாம் என இருக்கிறேன். அல்லாஹ்வுக்கு பிடித்தமானதை செய்யாவிட்டால் வாய் என்னாவது?)இவ்வளவு காலமும் கண்ணின் மணி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் மட்டும்தான் இறுதி(?) குறைத்தூதர் அல்ல இறைத்தூதர் என எண்ணியிருந்தேன். இல்லவே இல்லை ,மார்க்கத்தின் ஒளிவிளக்கு,, நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லத்தின் அறிவுத்திறத்தையே(!!!!) விஞ்சும் மார்க்கப்பேராசான் அண்ணன் ப்பீஜே அவர்களே வஹீ கொண்டுவராத இறுதி(இதுவும் சந்தேகம்தான்) இறைத்தூதர் என சான்றுகளுடன்(உசாத்துணைகள் துணையோடு) நிரூபித்துக்காட்டி மூடிக்கொண்டு இருந்த என் அறிவுக்கண்ணை திறந்துவிட்டீர்கள். எனென்றால் அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான்,ஒன்று போனால் அதைவிட சிறப்பாக மற்றொன்றை கொண்டுவருவேன் என்று. இந்த மாபெரும் உதவிக்காக எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் உங்களுக்காக துஆ செய்கிறேன்.யா அல்லா.இன்ஷா அல்லா.மாஷா அல்லா.

 5. வாங்க ELIYAVAN ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் தலை மீது நிலவுவதாக.சேச்சே இது மதம் மதம்னு அலையிறதே இல்லை. இது மார்க்கம் மார்க்கம்னு அலையிறது. ,, உங்கள் வருகைக்கு நன்றி.

 6. வாங்க ஐத்ருஸ் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் தலை மீது நிலவுவதாக.அழகான நல்வார்த்தைகளை பேசி மார்க்கத்தை விரிவு படுத்தவேண்டும் என்று ஸல்லல்லாஹூ அலைஹிஸசல்லம் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் என்னடாவென்றால், அல்குரானில் அல்லாஹ் திட்டுவது போல திட்டுகிறீர்களே.யா அல்லாஹ்

 7. வாருங்கள் வானம்,இஸ்லாம் என்பது வன்முறை மார்க்கம் என்று பல காபிர்களும் பிரச்சாரம் செய்துகொண்டிருபப்தற்கு எதிராக அது வன்முறை மார்க்கம் அல்ல காமெடி மார்க்கம் என்று நிரூபிப்பதற்காக அல்லாஹ் எனக்கு இந்த உணர்ச்சியை ஊட்டியிருக்கிறான். (அது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கக்கூடாது. அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை நானும் இஸ்லாமிய அறிவியல் எழுத ஆரம்பித்ததிலிருந்து அறிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டேன்)யா அல்லாஹ்

 8. //இஸ்லாத்தை விமர்சிக்கனும்னா உன் அடையாளத்தோடு அல்லது உன் கொள்கை அடையாளத்தோடு வா. //இதே ‘அடையாளம்’ இஸ்லாமைப் பரப்புவர்களும் மேற்கொள்ளணுமா, வேண்டாமான்னு ஒரு ஐயம்!

 9. நண்பர் இபின் ஷாகிர் ஸலாம்,குரானின் வரலாறு குறித்த ஆதரபூர்வமான் தக்வல்கள் பல் த்ந்திருக்கிறீர்கள்.ஒரு மதபுத்தக்ம் எப்படி வந்தது என்று பார்த்தால் பெரும்பலும் அரசியல் சார்ந்த சூழலே அதன் உருவாக்கத்தை தீர்மானித்து இருக்கும்./இன்றைய குரானின் பெயர் அல்குரான் அல்ல. அல் முஸாப் அல் உத்மானி என்பதுதான் இந்த குரானின் பெயர்./இதில் எனக்கு ஆச்சர்யமான் விஷயம் உத்மான் தொகுப்பிற்கு இப்பெயர் இருப்பது தெரியாது கொஞ்சம் சுட்டி தர முடியுமா?_________ மதம் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வியலாக பின்பற்றுபவர்களுக்கு இம்மாதிரியான் ஆய்வுகள் தேவைப்ப்டாது.ஆனல் விளக்க்ம் சொல்வது அனைத்தையுமே வார்த்தைக்கு வர்ர்த்தை literal ஆக எடுப்பது பி.ஜே மாதிரி ஆட்கள் எதையும் விள்க்கமாக் சொல்ல முடியும் சூழலை உருவாக்குகிறது.பாருங்கள் அர்ஷின் மீது அமைந்தான் என்றால் .ஒரு ஆசனத்தின் மீது உட்கார்ந்து இருக்கிறார் என்று பொருள் கொள்வது சரியா !!!.சிம்மாசனம் ஏறினார் என்றால் என்ன அர்த்தம்?அரசு அமைத்தார்,அரசாட்சி ஏற்படுத்தினார் என்றுதானே பொருள்.!!!!!!!!!!இப்படி பொருள் கொண்டு இறைவனுக்கு உருவம் உண்டு என்கிறார் சகோ பி.ஜே.!!!!!!!எனக்கு தெரிந்து 1400+ வருடங்களில் யாரும் இப்படி கூறவில்லை.நல்ல வேளை அய்யா ஜமாலி ஒரு முட்டுக் கட்டை போட்டார்!!!!!!!!.இல்லையெனில் இன்னும் ஏகப் பட்ட கதை சொல்லி இருப்பார்!!!!இப்படி சொல்லும் நம் மீது கோப படுகிறார்களே தவிர அவர்களை ஏமாற்றி பிழைக்கும் பிரசாரக்ர்களின் மீது கோபம் வருவது இல்லை.பிஜே இஸ்லாமில் ஒரு பெந்தேகோஸ்தே பிரிவு உருவாக்கி விட்டார்.பல் பிரிவுகளுக்கிடையே போட்டியும்,விமர்சனமும் கூட நாகரிகமாக் இல்லை!அவ்வளவுதான்!

 10. சார்வாகன்,இந்த குர் ஆனை அப்படித்தான் மற்ற மார்க்க முஸ்லீம்கள் அழைக்கிறார்கள்http://web.youngmuslims.ca/online_library/books/ulum_al_quran/Ch2S4.htmhttp://www.google.com/search?&q;=al-mushaf+al-Uthmani//பாருங்கள் அர்ஷின் மீது அமைந்தான் என்றால் .ஒரு ஆசனத்தின் மீது உட்கார்ந்து இருக்கிறார் என்று பொருள் கொள்வது சரியா !!!. //பிஜே அப்படி சொல்வதில் தவறில்லை என்பது என் கருத்து.அவனுக்கு உருவம் கிடையாது என்பதல்ல உருவம் உருவாக்கி வழிபடக்கூடாது என்பதுதான் யூத ஒரிஜினலே. ஆகவே அவர் சொல்வதில் தவறேதுமில்லை. மனிதனை தன் உருவத்தில் படைத்ததாகத்தான் தவ்ரத்தும் கூறுகிறது.

 11. ஸலாம் இபின் ஷாகிர்,உங்கள் மார்க்க அறிவு இந்த காஃபிரை வியக்க வைக்கிற‌து.நீங்கள் கடை போட்டு இருந்தால் இந்த பிஜேவை ஓரங்கட்டி இருக்கலாம்.!!!!!!!!./அவனுக்கு உருவம் கிடையாது என்பதல்ல உருவம் உருவாக்கி வழிபடக்கூடாது என்பதுதான் யூத ஒரிஜினலே. ஆகவே அவர் சொல்வதில் தவறேதுமில்லை./உருவம் உண்டு எனில் இறைவன் சில சடப்பொருள்களினால்(matter) ஆன உடல் கொண்டவர் ஆகிறது அல்லவா!!!!!.பிறகு இப்படி உருவம் உள்ள கடவுளுக்கு முதல் காரணி வாதத்தை (first cause argument) பயன் படுத்த முடியாது.பெரும்பாலும் இவிவதத்தையே பிஜே வைக்கிறார்!!!!!!!!!.இல்லை அது வேறு மாதிரியான பிரப்ஞ்சத்தில் இல்லாத சடப் பொருள் என்றும் வாதம் செய்யலாம் என்றாலும்.பல் இறையியல் கொள்கைகளை இஸ்லாமில் சரியாக் வரையறுக்க முடியாது என்பது என் கருத்து.இதனால்தான் பல பிரிவுகள் தோன்றியது.____________கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டுக்கும் ,குரானுக்கும் வித்தியாசம் இருப்பதாக் தெரியவில்லை.இந்த ஹதிதுகள் தொகுக்காமல் இருந்திருந்தால் இஸ்லாம் முழுமையான் மதமாக்வே உருவாகி இருக்க முடியாது.கிறித்தவ்த்தின் ஒரு பிரிவான் யகோவா சாட்சிகள் மாதிரி இருந்திருக்கும்.இந்த குரான் மட்டும்(Quranist) என்கிற ஆட்கள் அப்ப்டித்தான் இருக்கிறார்கள்._____________ஹதிதுகள் தொகுப்பு பற்றியும் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.நன்றி.

 12. காபிர் சார்வாகன்,இங்கே சுன்னத் வல் ஜமாத்தின் ஜமாலி கேட்கும் விஷயங்களைத்தான் நீங்களும் கேட்கிறீர்கள்http://www.adiraitntj.com/2010/07/blog-post_19.htmlஅதனால் நீங்கள் அல்லாஹ்வையும் அவரது தூதரையும் கேலி செய்கிறீர்கள் என்று சொல்லி, உங்களுக்கு பதில் சொல்ல மாட்டோம். (on a serious note, this a separate post on the evolution of monotheism)

 13. ஸலாம் இபின் ஷாகிர்,ஒருவேளை நானும் ஜமாலியும் ஒரே ஆள் என்று சொல்லாமல் விட்டிர்களே!.அவர் ஒருவர்தான் பாக்கி.நீங்கள் காட்டிய பதிவை படித்து விட்டு அதிர்ச்சி ஆகிவிட்டேன்.யாரும் இப்படி கேட்டிருக்கவே முடியாது!!!!!!!.நல்லவேளை ஈரான் கோமெனிக்கு தமிழ் தெரியாது!!!!!!!!.இல்லையென்றால் இருவருக்குமே ஃபத்வா வந்திருக்கும்!!!!!!!!!!!.சரி ஜமாலி இப்படி கிண்டலாக் சொன்னார் என்றாலும் அதனையும் பதிவிட்டு ஜமாலியை எப்படியாவது குற்றப்படுத்தும் பிஜேவின் தாவா சூப்பர்!!!!!!!!!!!.அங்கேதான் நிக்கிறார் பிஜே!!!!!!!!!!!!!!!!.யார் கேலி செய்கிறார்கள் என்றே புரியவில்லையே இதெ மாதிரி அவர்கள் பிஜே பற்றி என்ன சொன்னார்கள் என்றல்தானே கணக்கு சரியாக் வரும். !!!!!!!!!!!!./(on a serious note, this a separate post on the evolution of monotheism)/நல்ல விஷயம்தான்!!!!!!!!!!!!

 14. காஃபிர் சார்வாகன்,ஜமாலிக்கு பதிலே சொல்லவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே போல பிஜேவிடம் பதில் இல்லை என்பதும் உண்மை. அதனால், பிஜேவை வெடைத்ததை அல்லாஹ்வையே வெடைத்ததாக திரித்து லொல்லு பண்ணி தப்பிக்க முனைவது பிஜேவின் தந்திரம். அதனால் கொடுத்தால் ரெண்டு பேருக்குமேதான் பட்வா

 15. இப்னு ஷாகீர் அவர்களே! நீங்கள் ஒளிந்து கொண்டு எழுதுவதை விட்டுங்கள். உங்களை நேர் முக விவாதத்திற்கு அழைக்கிறோம். நேர் விவாதத்தில் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். நாங்களும் எங்கள் கருத்துக்களை சொல்லுகிறோம். ஆனால் நாங்கள் சொல்லுவதை நீங்களும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாங்களும் எங்கள் கள்ள நபியாகிய முகம்மது நபியை(WBUH)நல்ல நபி என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம். W means Wrath. ஆகவே உங்களை விவாத்திற்கு அழைக்கிறோம். வராவிட்டால் "கோழைகள், தொடை நடுங்கிகள்" என்று விளம்பரப்படுதுவோம். எங்கள் மெயில் ஐடி "ஆண்லைன்.. பீய்ய்..சேய்ய்.டாட் காமம்"

 16. வாருங்கள் ஃபெரோஸ்ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் இயக்கத்தின் மீதும் நிலவுவதாக!

 17. வாருங்கள் Archies அவர்களே,உங்களது பின்னூட்டம் ஏன் spam போல்டருக்கு போனது என்று தெரியவில்லை. கூகுள் ப்ளாக்கர் ”நேர் முக விவாதத்திற்கு அழைக்கிறோம்” போன்ற வார்த்தைகள் ஸ்பாம் என்று தானாக முடிவுகட்டிவிடுகிறது போலிருக்கிறது. நமது இஸ்லாமிய அறிவியல் எழுதும் பதிவர்களை விட புத்திசாலியாக இருக்கும் பிளாக்கரை பாராட்டுவதா திட்டுவதா என்று குழம்புகிறேன்.

 18. வாருங்கள் FAZRIN FAROOK அவர்களே,டாக்டர் சொன்ன கவுன்ஸிலிங்தான் இது. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்றார் நம்ம குஞ்ஞாலி மரைகார் டாக்குதர்.உங்கள் ஆங்கிலத்தின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!

 19. பி.ஜெ.வின் ஆற்றலை உலகறிய சொன்ன கண்ணியதிற்குரிய இ.சா. அவர்களே,(ஹா..ஹா..ஹா பட்டப் பெயர் எப்படி)இந்த நஜஸ் காபிரின் வாழ்த்துகள்.ஷைத்தான்கள், ஜின்கள் airtel வடிவில் செய்த சூழ்ச்சியால், இணையதள இணைப்பு துண்டாகி, உங்கள் தளம் இந்த காபிரை நாடவில்லை மன்னிக்கவும். அதனால் me the first ஆக முடியவில்லை. உங்கள் தளம் இந்த காபிரை நாட துவா செய்யவும்.ஐந்தாவது மத்தபு இமாமான பி.ஜெ. அவர்கள் எப்படி ஆராய்ச்சி செய்வார்கள் என்பதை இந்த தளத்தின் யூடியுப் காணொளி நமக்கு தெள்ளத்தெளிவாக சொல்கிறது.http://this-is-truth.blogspot.com/2010/08/pj_03.htmlஇந்த கப்ஸா எல்லா கருத்துக்கும் காலத்திற்கும் பொருந்தும்.முகமதுவை இப்னு அப்துல்லா என்று சொல்கிறீர்கள், முகமதுவின் தந்தை இஸ்லாமியாரா இல்லையா என்ற கேள்விக்கு பி.ஜெ. மற்றும் ஜாமாலி ஏதேனும் விவாதம் நடத்தி தீர்ப்புகள் வழங்கப்பட்டனவா என்று அறிய ஆவல்.காபிரின் கேள்விகள் தொடரும், நஜஸாக இருப்பதால் கொஞ்சம் தள்ளி நின்று பதில் தரவும்.நன்றி

 20. உஸ்தாத் இ.சா.எதற்கும் இருக்கட்டும் இந்த காபிரின்wishing you happy teachers dayஇது மார்க்க சம்பந்த விஷயமல்லாதலால் அதிஸிலும் குரானிலும் ஆதாரம் தேட கூடாது. இது பி.ஜெ சொன்ன மார்க்க ஆராய்ச்சி பத்து கலைகளில் முதலாவது ஒன்று.வணக்கம் கூறி…… தலையை காப்பாற்ற ஒடுகிறேன்.

 21. காஃபிர் நரேன்ரொம்ப சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கிறீர்கள்.அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன் என்று இப்போதைக்கு உடுஜூட் பண்ணிக்கொள்கிறேன்

 22. //வணக்கம் கூறி…… தலையை காப்பாற்ற ஒடுகிறேன்// Naren ஓட வேண்டாம். தலையில ஒரு தொப்பிய வைச்சா போதும். இதையெல்லாம் மும்மின்களைப் பாத்து படிக்காண்டாமா?

 23. நீங்கள் ஆடை அணியும்போது உங்கள் கைலி, pants எல்லாமே கால் முழுவதிற்குமாக அணிவதாக அல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஹராம் அல்லவா? கணுக்காலுக்கு மேலே உங்கள் ஆடைகள் இருக்க வேண்டும் என்பதுதானே ஹலால். இனியாவது ஒழுங்காக ஆடை அணிய ஆரம்பியுங்கள் …. !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s