இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

நேற்று ஒரே நேரத்தில் ஹைசன்பர்க் ஐயப்பாட்டுகொள்கையையும் அல்குரானையும் படித்துவிட்டு தூங்கியதில் இரண்டும் கலந்து இஸ்லாமிய அறிவியல் பளிச்சிட்டுவிட்டது.

ஆஹா இதனைத்தான் அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்காரா என்று புல்லரித்ததில் என் மனைவி என்னை கூட்டிபோய் புல்லரித்த இடங்களிலெல்லாம் சாம்பலை தேய்த்து சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. அப்படியும் சரியாகாமல் கார்ட்டிசோன் அரிப்பு மருந்தை தேய்த்துவிட்டு படுக்கும் படி ஆகிவிட்டது.

சரி நாம் இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதுவது எப்படி என்று சிந்தித்து பார்த்தேன்.  இதுவரை எழுதப்பட்டு உள்ள இஸ்லாமிய அறிவியல் கட்டுரைகளை எல்லாம் படித்து அதன் இலக்கணத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
(இஸ்லாமிய அறிவியல் என்றதும் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். இஸ்லாமிய அறிவியல் என்றால் எல்லா அறிவியலும் அதில் சேர்த்தி. ஆனால் உயிரியலும் வானவியலும் மட்டும் சேர்த்தி இல்லை. உயிரியல் பற்றி வரும் எல்லா அறிவியலும் காபிர் அறிவியல், அல்லது  யூத, இந்து கிறிஸ்துவர்கள் சாத்தானுடன் சேர்ந்து செய்யும் சதிவேலை. அதே போலத்தான் வானியலும், நட்சத்திரங்களின் வயது, அதன் தோற்றம் எல்லாம். கவனமாக இருக்கவும். டார்க் மேட்டர் எல்லாம் உபயோகப்படுத்தலாம். ஆனால், அல்குரானுக்கு மாறாக இருக்கக்கூடாது. அப்படி எழுதிவிட்டோமென்றால் அந்த பதிவுக்கு மட்டுறுத்தல் போட்டு நமக்கு உண்மை மூமீன்களின் சாதகமான கருத்துக்களை மட்டுமே பதிய வேண்டும். இது மிக முக்கியம். ஜாக்கிரதை! )

இதில் பல முன்னோடிகள் ஹாரூன் யாஹ்யா, இன்னும் இணையத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மூலம் தாவா செய்யும் பலர் இருக்கிறார்கள். அவற்றை காப்பியடித்து ஏராளமான தமிழ் மூமீன்கள் தமிழில் மொழிபெயர்த்து அறிவியலுக்கே இஸ்லாமிய தண்ணி காட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுகொண்டதை  உங்களுக்கும் அளிக்கிறேன்,. நீங்களும் இஸ்லாமிய அறிவியல் தாவா செய்ய வசதியாக அவற்றை வரிசைப்படுத்துகிறேன்

1) முதலில் எதாவது ஒரு அறிவியல் கட்டுரையை எழுத வேண்டும். இதில் விளக்க படங்கள் இருந்தால் ரொம்ப நல்லது. கீழே எங்கிருந்தெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று லிங்குகள் இருப்பது மிக அவசியம்

2) பிறகு ஒரு குரான் வசனத்தை எழுத வேண்டும்

3) இறுதியில் இரண்டையும் முடிச்சு போட்டு (இதில் தான் உங்கள் திறமையே இருக்கிறது) ஆஹா அல்லாஹ், இதனைத்தான்யா சொல்லியிருக்கார் என்று புல்லரிக்க வேண்டும்.

நான் கடைசியில் குறிப்பிட்ட புல்லரிப்பை இப்போது செய்யப்போவதில்லை. ஏற்கெனவே அரித்து உடம்பு புண்ணாகிவிட்டது. ஆகவே மெதுவாஹ ரெண்டு நாள் கழித்து புல்லரித்துகொள்கிறேன்.

சரி இப்போது இஸ்லாமிய அறிவியல் கட்டுரை.

இது ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle எவ்வாறு அல்லாஹ் நபி(சல்) மீது இறக்கிய அல்குரானில் உள்ளது என்பது பற்றி.குவாண்டம் இயற்பியலில், ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle பின்வருமாறு கூறுகிறது: “ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது”.

In quantum mechanics, the Heisenberg uncertainty principle states precise inequalities that constrain certain pairs of physical properties, such as measuring the present position while determining future momentum of a particle. Both cannot be simultaneously done to arbitrarily high precision. In other words, the more precisely one property is measured, the less precisely the other can be controlled, determined, or known.

குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.

ஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது.

அதாவது ஒரு துகளின் இடத்தையும் உந்தத்தையும் கணக்கிட விழைந்தால், ஒன்று இடத்தை கணக்கிடலாம், அல்லது உந்தத்தை கணக்கிடலாம். உந்தத்தை எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறோமோ அந்த அளவுக்கு இடத்தை கணக்கிடும் துல்லியத்திலிருந்து விலகுவோம், அதாவது இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் துல்லியமாக அளக்க முடியும்

இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் வெளிப்படுத்துகிறான்.

8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

இரண்டு வியாபார கூட்டங்கள் வருகின்றன. இரண்டுமே அபு ஜஹலின் தலைமையில் வருகின்றன. இரண்டு கூட்டங்களில் ஒன்றைத்தான் நபி(சல்) அவர்களால் கொள்ளையடிக்க முடியும். இரண்டையும் கொள்ளையடிக்க முடியாது என்று அல்லாஹ் நபிபெருமானார்(ஸல்) அவர்களிடம் தெளிவு படுத்துகிறான். அபு ஜஹல் ஒரு துகள். அந்த துகளுக்கு இரண்டு வியாபார கூட்டங்கள். ஒன்று இடம், மற்றொன்று உந்தம். இரண்டையும் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணமுடியாது. இரண்டில் ஒன்றைத்தான் அட்டாக் பண்ண முடியும்.

ஆஹா என்ன அழகாக ஹைசன்பர்க் uncertainty ப்ரின்ஸிபிளை விளக்கிவிட்டான்.

இபப்டிப்பட்ட அல்குரானை படித்துத்தான் ஹைசன்பர்க் போன்றோர் இயற்கை விதிகளை புரிந்துகொண்டுவிட்டார்கள். இதனை ஹைசன்பர்கே ஒரு டயரியில் எழுதி வைத்திருந்தார். அதனை ஒரு கிறிஸ்துவ காபிர் ஒருவர் அந்த டயரியை எரித்து  அல்லாஹ்வுக்கு வரவேண்டிய புகழை தடுத்துவிட்டார்.

மூமீன்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இயற்கை விதிகளை காபிர்கள் சுட்டுவிட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக இருந்தாலும், இப்போது அல்லாஹ் என் மூலமாக அதனை தெளிவு படுத்திவிட்டான்..

அல்லாஹ் காஃபிர்களை வேரறுக்க தன் திருவாக்குகளால் நாடுகிறான் என்பதிலும் அறிவியல் இருக்கிறது. காஃபிர்களுக்கு வேர் எங்கே இருக்கிறது. அறிவியலில்தான் இருக்கிறது. அந்த அறிவியலை தனது திருவாக்குகளால் வேரறுக்கிறான் என்று அல்லாஹ் திருமறையில் அறிவிக்கிறான்.

காபிர்களின் அறிவியலை வேரறுக்க  மூமீன்கள் கடுமையாக உழைத்துவருகிறார்கள். அதற்கு அல்லாஹ் தன் உதவியை தருகிறான்.

இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

உசாத்துணை இணைப்புகள் 
 (இது ரொம்ப முக்கியம். கவனிக்கவும். இப்போதுதான் நமக்கே ஒரு பெரிய இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதிய திருப்தி வரும்.)
1) http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/uncer.html
2)  http://hendrix2.uoregon.edu/~imamura/123cs/lecture-6/planck.html
3) http://farside.ph.utexas.edu/teaching/qmech/lectures/node26.html

Advertisements

11 thoughts on “இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

 1. ஆலிம் ஜனாஃப் இபின் ஷாகிர் அவர்களே,உங்கள் தாவாவிற்கு பரம் இரசிகன் ஆகிவிட்டேன்.ஐயப்பாட்டு கொள்கையை ஐயமின்றி குரானின் துணை கொண்டு விளக்கிய அழகே அற்புதம்._________நானும் தாவா செய்கிறேன்.இறைவன் நாடியவர்கள் மட்டுமே முமின்கள் ஆக முடியும் என்ற‌ படியாலும்,இறைவன் நாடி மாறினேன் என்று பொய் சொல்ல மனம் வராததாலும் பெரியார்தாசன் போல் ஆய்வு செய்து மாறினேன் என்று உளர முடியாததாலும் என்னால் முமின் ஆக முடியவில்லை. காஃபிரின் தாவாவை இறைவன் ஏஎற்றுக் கொள்வதில்லை என்றாலும் நரக சூடு பூமி நெருப்பை விட 70 மடங்கு என்பதால் எனக்கு பய்மாக் இருக்கிறது.,ஆகவே தாவா செய்யும் எனக்கு பூமி நெருப்பில் மட்டும் வாட்டுமாறு துவா செய்ய உங்களை கேட்டு கொள்கிறேன்.________3265. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே" என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், '(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்" என்றார்கள். Volume :3 Book :59___________இனி காஃபிர் தாவாஐசன்பர்க் அயப்பாட்டு கொள்கை=குரான் அர்த்தம் ஐயப்பாட்டு கொள்கை"ஒரு குரானின் வசனம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதன் விளக்கம் இஸ்லாமுக்கு ஒத்துவராது.இஸ்லாமுக்கு ஒத்து வரும் வசனம் தெளிவாக இருக்காது".________பாருங்கள் அஜரத்,(1) குரான் வசனம் தெளிவு விளக்கம் குழப்பம்குரான் 3 நேரம் தொழுகை என்று தெளிவாக சொன்னாலும் அதற்கு அர்த்தம் 5 நேரம் என்று எப்படி குழப்புகிறார் பி.ஜே பாருங்கள்http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/71-natuth-thozukai-ethu/.குரான் 3.81 முகமதுக்கு பிறகு தூதர்கள் உண்டு என்றால் அதற்கு விளக்கம் பாருங்கள்.http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/95-nabimarkalidam-sduththauruthi-mozi/__________(2) குரான் குழப்பம் விளக்கம் தெளிவுகுரான் 33.40 ஹாத்தமுன் நபி என்கிற‌து அதாவது தூதர்களுக்கு முத்திரை என்கிறது.ஹாத்தமுன் என்கிர வார்த்தை குரானில் வேறு எங்கும் இதே அர்த்தத்தில் இல்லை.(வார்த்தையே இல்லை)ஹதிது அவர் தோளில் நபித்துவ முத்திரை இருந்தது என்கிற‌து. முத்திரையிடப்பட்ட நபியா, நபிமார்களுக்கெல்லாம் முத்திரையா என்று மண்டையை பிய்க்க வேண்டியதுதான் ஆனால்முகம்து இறுதி தூதர் என்ற அடிப்படையில்தான் சுன்னி இஸ்லாமே ஓடிக் கொண்டு இருக்கிறது.http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/187-iruthi-nabi-muhamathu/_________________ஆக்வெ குரான விள்கத்தை ஐயப்பாடாக்கி ஐசன் பர்க்கின் குவாண்டம் மெகானிக்சை அன்றே கூறிய ஏக இறைவன் செயலை வியக்கிறேன்.

 2. காபிர் சார்வாகன்.நீங்களும் தாவா செய்வது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! 6:45. எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”யா அல்லாஹ்!

 3. ”திண்ணை” தோழர்களின் ..மன்னிக்கவும் சாஹாபிகளின் சுன்னத்தை பின்பற்று்ம், எங்கள் கண்ணியதிற்குரிய “திண்ணை” மெளலானா இப்னு சாகிர் அவர்களே,உங்கள் தாவா பணியை மெச்சினோம்.================================================புகாரி349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். ================================================என்ற அதிஸ் மூலம், இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே OPEN HEART SUGERY பற்றி சொல்லியுள்ள உண்மைதான், இஸ்லாம் மற்றும் காஃபீர் அறிவியலின் உச்சம் என்று எண்ணியிருந்தேன்.ஆனால், உஙகள் தாவா பணி மூலம் QUANTAM MECHANICS யை பற்றியும் இஸ்லாம் முன்னரே முதல் முறையாக சொல்லியுள்ளது என்பதை அறிந்ததும், காபிர் ஆன நான் வெட்கி தலைகுனிந்தேன். இனிமேல் அறிவியலை அறியவேண்டும் என்றால் அல்குரானை கண்டிப்பாக படிப்பேன்.================================================புகாரி68. 'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்" என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். Volume :1 Book :3================================================ஆகவே எங்களுக்கு சலிப்பு ஏற்படாமல், உங்களுக்கும் சலிப்பு ஏற்படாமல், உங்கள் தாவா பணி தொடரட்டும்.ஆனால், உஙகள் தாவா மூலம் எனக்கு இன்னும் அருட்கொடைகள் வந்து சேரவில்லை, ஏன் என்று பாருங்கள்.…………இப்படிக்கு,,,நரகத் தீயில் விழப்போகும் காபிர்.

 4. நன்றி நரேன்( note to self: காபிருக்கு நன்றி கூறுவது சுன்னத்தா என்று ஆராய வேண்டும்) ஜம்ஜம் தண்ணீரில் ஏராளமான ஆர்சனிக் இருக்கிறது என்று படித்தேன். நாம் ஜிப்ரீல் அந்த தண்ணீரை வைத்து ஓப்பன் ஹார்ட் சர்ஜரியே பண்ணியிருக்கிறார்.ஆனால் எந்த ஓப்பன் ஹார்ட் சர்ஜரியிலும் தண்ணீர் ஊற்றீ கழுவமாட்டார்களே என்றும் ஒரே சிந்தனையாக இருக்கிறது. இப்போதைக்கு ஒரு விவாத தலைப்பு கிடைத்துவிட்டது.மூமீன்கள் மரைகழண்டு அலைவதற்கு காரணம்1) ஜம ஜம் தண்ணீரை குடிப்பதே2) அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் இரண்டாவது அருட்கொடையே! சுன்னத் வல் ஜமாத்தினர் ஜம ஜம் தண்ணீரே மீமீன்கள் மரைகழண்டு அலைவதற்கு காரணம் என்று வாதிடுவார்கள்.தவ்ஹீத் ஜமாத்தினர் நபி(ஸல்) அவர்களின் இரண்டாவது அருட்கொடையே(அதாவது தகாத உறவு திருமணங்கள்) என்று வாதிடுவார்கள்.

 5. அய்யய்யோ…தாங்க முடியல…இணை வைக்கிறவங்களும்,ஏக இறைவனை நம்பாதவங்களும் இருக்குற இந்தியாவுல இத படிச்சுட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தா தப்பிச்சுக்கலாம். என்னை மாதிரி முமீன்களின் தேசமான வளைகுடாவில இருக்குறவன், இத படிச்சிட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தா என்ன ஆகுறது.என்னை மாதிரி காஃபிரும் உசுரோட இருக்குறதுக்கு எதாவது வசனத்த அல்லா எறக்கியிருந்தா அதை சொல்லி(வரிசை எண்ணோட) என் உயிரை காப்பாத்தவும்.நன்றி……

 6. வாங்க வானம்,நீங்க என்னா சொல்றீங்க? இங்க மட்டும் என்ன வாழுது? ஜெயினுலாபுதீனும் ஜமாலியும் அடிச்சிரதை பாத்து, வீட்டுல மனைவியும் மாமியாரும் ஒரு நகைச்சுவை பட்டிமன்றம் மாதிரி உழுந்து உழுந்து சிரிப்பாங்க. ஆனா யாராச்சும் கதவை தட்டிடட்டும். உடனே சானலை மாத்தி ரொம்ப பதவுஸா ஆய்டுவாங்க.

 7. ibnu shakir அவர்களே காஃபிர் ஆகிய நான் இக் கட்டுரையை படித்த பின் என் மூன்றாம் கண் தானாக திறந்து கொண்டது. காஃபிர் ஆகிய நான் தூய இஸ்லாத்தை ஏற்கிறேன். குரானின் இந்த அறிவியல் உண்மை கண்டு மைய்சிலிர்த்தேன் இரவு முழுக்க தூங்கவில்லை மும்மின்களே சிந்திபொற்கு நிச்சயமாக நிறைய சாட்சியங்கள் உள்ளன இப்படி தாறுமாறாக சிந்திபவர்களுக்கு நியூட்டன் விதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விதி கிர்சாப் மின்னியல் விதி உயிரியல் இயற்பியல் வேதியல் விதி இருப்பதால் குரான் ஒர் அற்புதம் தான். இனி எனக்கு ஏதாவது அறிவியல் சந்தேகம் இருந்தால் குரான்தான் my refernece book. உங்களின் அழைப்புபணி சிறக்க வாழ்த்துகள். இன்ஷா அல்லா உங்கள் இம்மை மறுமை வாழ்க்கை வெற்றிபெற அலலாவிடம் துஆ கேட்கிறேன்

 8. வெறுமே அல்லாஹ்விடம் துவா செய்து பயனில்லை. இதுமாதிரி அல்லாஹ்வை மட்டும் துஆ செய்பவர்களுடைய மசூதியையே அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் இடிக்க ஆணையிட்டார் என்பதை கருத்தில் கொள்ளவும். மேல் விபரங்களுக்கு அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்று அருட்கொடைகளில் மூன்றாவது அருட்கொடையை படிக்கவும்.ஆகவே அல்லாஹ்வை விட முக்கியம், அல்லாஹ்வின் இறைதூதர் நபிஹள் நாயஹெம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று ஒத்துகொண்டு, நீங்கள் கொள்ளையடிக்கும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லாஹ்வின் இறைதூதரிடம் கொடுப்பதாகும்.அதே மாதிரி பிடிபட்ட பெண்கைதிகளில் அழகான பெண்களை அல்லாஹ்வின் இறுதி இறைதூதரிடம் அனுப்புவதுமாகும்.அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் செத்துபோய்விட்டபடியால் அந்த ஐந்தில் ஒரு பங்கையும் அழகான பெண்களையும் ஜக்காத்தாக கொடுக்கலாமா என்பதை பற்றி பிஜேவிடம் கேட்கவும்.

 9. //வீட்டுல மனைவியும் மாமியாரும் ஒரு நகைச்சுவை பட்டிமன்றம் மாதிரி உழுந்து உழுந்து சிரிப்பாங்க. //அட … அவுகளையும் உங்க பக்கம் இழுத்துட்டீங்களா? என்னால முடியலைங்க ….

 10. காஃபிர் தருமி அவர்களே,இது தலைகீழ்ங்க… என்னை கண்டபடி கேள்வி கேட்டு இந்த பக்கம் இழுத்தவுஹளே பீவிதானுங்க..

 11. உங்க இது போன்ற கம்பிமேல் போகும் வேலையில் உங்க குடுப்த்தையெல்லாம் தொடர்பு படுத்தி எதுவும் எழுதாதீர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s