சீப்பு வைத்து தலை சீவுவது பற்றி அல்லாஹ்வின் இறுது இறைதூதர் நபி(ஸல்) என்ன கூறினார்?

முதலில் தலை சீவுவது பற்றி அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபி(ஸல்)என்ன கூறினார் என்றுதான் தலைப்பு வைத்தேன். அது கொஞச்ம் வேறு மாதிரி பொருளை கொடுத்துவிட்டது.

தலை சீவுவது பற்றிய ஏராளமான ஹதீஸ்கள் நாம் அறிந்தவை. அந்த ஹதீஸ்களையும் குரான் வசனங்களையும் நாம் மிக நன்றாக அறிவோம். அவற்றை நம் மூஃமீன்கள் மிகவும் அழகாக நெஞசம் நெகிழும் வண்ணம் பயனபடுத்தியும் வருகிறார்கள்

இது வேறுமாதிரி, சாதாரணமாக சீப்பு வைத்து தலை வாருவது.

இஸ்லாமிய சகோதரர் ஒருவர் தினந்தோறும் ஆபீஸுக்கு வரும்போது தலையை வாரி சீவிதான் வருவார்.

நான் ஒரு நாள் விட்டு மறுநாள்தான் தலை வாருவேன். கொஞ்சம் முடி வேறு வளர்ந்துவிட்டதால் தலைமுடி கன்னாபின்னாவென்று இருக்கும்.

இஸ்லாமிய சகோதரர் (அவர் என் மேனேஜராக வேறு இருந்து தொலைத்துவிட்டார்) என்னை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
“ஷாகிர், நீ இப்படி தலை சீவாமல் ஆபீஸுக்கு வருகிறாய். கஸ்டமர்கள் எல்லாம் முகத்தை சுழிக்கிறார்கள். இது ரொம்ப தவறு. தலையை சீவி ஆபீசுக்கு வந்தால் என்ன? காலியில் எப்படி தூங்கி எந்திரிக்கிறியோ அப்படியே ஆபீசுக்கு வர்ரியே. உனக்கே நல்லா இருக்கா?” என்ற ரீதியில் வெளுத்து வாங்கிவிட்டார்.

என்னுடைய மேனேஜரின் இஸ்லாமிய அறியாமையை எண்ணி வருந்தினேன். இஸ்லாமிய அடிப்படை கூட தெரியாமல் இப்படி தினந்தோறும் தலை சீவிக்கொண்டு ஆபீஸ் வருவது ஒருபக்கம், இஸ்லாமிய முறைப்படி ஒரு நாள் விட்டு ஒருநாள் தலை சீவிக்கொண்டு வரும் என்னை இப்படி கடுமையாக திட்டுகிறாரே என்று அவரிடம் இஸ்லாத்தை விளக்கினேன்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் தலை சீவ சொல்லியிருக்கிறார்கள் என்று சொன்னேன்.

எங்கேய்யா நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார்? அவர் காபிரை பார்க்கற இடத்திலெல்லாம் தலையை சீவ சொல்லியிருக்கார். நீ என்னடான்னா ஒருநாள் விட்டு ஒருநாள் தலையை சீவச்சொல்லியிருக்கார் என்று சொல்றியே என்றார்.

பாருங்கள் அதே குழப்பம்.

இல்லை இல்லை இது வேற தலை சீவுவது.. அதாவது தலை வாருவது. ஒரு நாள் விட்டு ஒருநாள் தலையை வாரசொல்லியிருக்கிறார் என்று விளக்கினேன்.

அப்படியே எங்கே என்றார்


Combing the Hair (Kitab Al-Tarajjul)


Partial Translation of Sunan Abu-Dawud, Book 33:
Combing the Hair (Kitab Al-Tarajjul)


Book 33, Number 4147:
Narrated Abdullah ibn Mughaffal:

The Apostle of Allah (peace_be_upon_him) forbade combing the hair except every second day.

என்று காட்டினேன்.

என் மேனேஜர் ஒரு பக்கம் கொழம்பினாலும் மறுபக்கம் இன்னும் அதிகமாக கடுப்பாய்ட்டார்.

இந்த ஆளுக்கு வேற வேலையே கிடையாது. எப்படி உச்சா போகணுங்கறதிலேர்ந்து எப்படி உளு பண்ணனும், எப்படி தலை சீவணும் தலை வாரணும்னு ஒரேயடியா போட்டு தாக்குறான். நம்ம ஆளுங்களும் லூசுமாதிரி உளுதளுன்னு ஒரேயடியா மரைக்ழண்டு போய் அலையிறாய்ங்க.. என்று கடுப்படித்தார்.

நான் சொன்னேன்.

“நீங்க இப்படி என்கிட்ட நபிகள் நாயகம் ஸல்ல்லாஹூ அலைஹிவசல்லம் பத்தி சொன்னதை யார்கிட்டயும் சொல்லலை. அதே மாதிரி நீங்களும் என்னை தலையை சீவ…சீ…  தலையை வார்ரத பத்தி பேசாதீங்க”

அவர் என்னை பார்த்தார்.

”மெரட்ட ஆரம்பிச்சிருவீங்களே… போய்த் தொலைடா” என்று சொன்னார்.

இந்த நெஞ்சம் நெகிழும் கதையிலிருந்து நீங்களும் புரிந்துகொண்டிருக்கலாம்.

அழகாக தலை சீவி.. சீ… தலை வாரி ஆபீஸுக்கு வருதல் இஸ்லாமுக்கு முரணானது. ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் தலை வார வேண்டும்.

Advertisements

8 thoughts on “சீப்பு வைத்து தலை சீவுவது பற்றி அல்லாஹ்வின் இறுது இறைதூதர் நபி(ஸல்) என்ன கூறினார்?

  1. அருமை மதவாதி ச்கோ,சீப்பு வைத்து தலை சீவுவது எப்போது மட்டும் செய்யலாம் என்பது அருமை.ஆனால் எப்படி தலை சீவ வேண்டும் என்பதை கூறாமல் விட்டது சரியா?*********இந்த மாதிரி சந்தேகங்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு அதிகம் வருவதால்,காஃபிராகிய நானே முதலில் கேட்டு விடுவது உத்தமம் அல்லவா!!!!!!!!.****************நீங்கள் சொல்லவிட்டால் இருக்கவே இருக்கிறார் தமிழகம் ,இலங்கை, மலேசியா,சிங்கப்பூர்,கனடாவில் பிரபலமான் அண்னன் பிரச்சார பீரங்கியிடம் கேட்டுக் கொள்கிறேன்.!!!!!!!!!!!!____________

  2. சகோ சார்வாகன்பார்த்தீர்களா? என்னுடைய தாவா வேலை செய்வதால் நீங்களும் இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்.இஸ்லாமில் இருந்தால் ஒரு முடிவும் நீங்கள் எடுக்க வேண்டியதில்லை. ஏன் தலை வாருவதிலிருந்து, குசு விடுவதிலிருந்து, உச்சா போவதிலிருந்து, எல்லாவற்றுக்கும் நபி எப்படி போனார் என்று ஆராய்ந்து அதன் படி நடந்தாலே போதுமானது. வாழ்க்கையை எவ்வளவு ஈசியாக ஆக்கியிருக்கிறோம் என்று தெரிகிறதா?எப்படி தலைவார வேண்டும் என்ற உங்கள் கேள்வி என் சிந்தனையை தூண்டியிருக்கிறது. அல்லாஹ் நாடினால், நேராக வகிடெடுக்க வேண்டுமா தட்டையாக சீவ வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ந்து பதிவு எழுதுகிறேன்.

  3. நண்பர் ஆலிம் ஷா இப்னு சாகிர், உங்களுக்கு எனது நன்றிகள். ”ஆத்திக போக்கிரி” என்ற பட்டம் அளித்தமைக்கு. உங்களுக்கு வணக்கம் தெரிவித்தால் என்னுடைய கமெண்டை அனுமதிக்கமாட்டீர்கள் என்பதால் வாழ்த்துகிறேன்.இந்த பதிவு முக்கியமாக தொப்பி அணிவது சுன்னத்தா இல்லையா என்ற் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலை சீவுவதால் தொப்பி அணிவது சுன்னத் என்று தெரிகிறது. அது அவசியமும் ஆகிறது.அதனால் தொப்பி அணியும் சுன்னத்தை கடைப்பிடித்திருந்தால் உஙகளுக்கு பிரச்சனைகளும் இந்த பதிவும் தேவைப்பட்டிருக்காது.இறைவன் என்னை நாடுவதற்கு துவா செய்யுங்கள். single or crowd என்பது உங்கள் விருப்பம்.வணக்கம் மன்னிக்கவும்….. நன்றி.

  4. வாருங்கள் தருமி,துஆ என்றால் ஏக இறைவனிடம் பிரார்த்திப்பது.தாவா என்றால் ஏக இறைவனை பற்றி மற்றவர்களிடம் சொல்லி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏக இறைவனை வணங்கியது போலவே ஏக இறைவனை வணங்கச்சொல்வது அது மட்டுமல்ல,தாவா என்பது வெறும் இஸ்லாமிய பிரச்சாரம் மட்டும் அல்ல. தாவா என்பது உலகம் ஆறு நாட்களில் ஏக இறைவனான அல்லாஹ்வால் படைக்கப்பட்டது போன்ற அறிவியற்பூர்வமான் குரான் கருத்துக்களை பரப்புவதும் ஆகும்.இந்த தாவாவை ஒப்புகொள்ளவில்லை எதிர்த்து பேசினால் ஜிகாத் செய்யவேண்டும். அதனை பற்றி இஸ்லாம் அமைதி மார்க்கமா என்ற விளக்க உரையை எழுதியுள்ளேன். http://pagadu.blogspot.com/2011/08/blog-post_11.htmlஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  5. தருமி அவர்களே.பார்த்தீர்களா என் தாவா பணி உங்களையும் துஆ செய்யவைத்துவிட்டது.

  6. Blog statsல் எந்த மாதிரி கூகுளில் தேடி வருகிறார்கள் என்று பார்த்தபோது ஒரு முஸ்லிம் அன்பர் “முடி வெட்டுதல் இஸ்லாமிய முறை” என்று தேடி எனது தளத்துக்கு வந்து இருக்கிறார். இதை கூகுளில் தேடியபோது 3வதாக எனது தளம் ”தமிழன்: முகமதுவின் படுகொலைகள்.” வருகின்றது. அதனால் கூகுள் கூட இஸ்லாமிய முறையில் வெட்டுதல் என்றாலே கொலை என்று முடிவு கட்டி விடுகின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s