பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை

பி ஜெயினுலாபுதீன் என்ற இறைதூதர் என்றுதான் இந்த பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால், நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அளவுக்கு அவரையும் தூக்கிவிடுமோமோ என்று அஞ்சி விட்டுவிட்டேன். இஸ்லாமில் இறைவனுக்கு மட்டும் இணைவைக்கக்கூடாது என்று சொல்வதை நம்ப வேண்டாம். நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கும் இணை வைக்கக்கூடாது. கவனிக்கவும், இறைவனுக்கு இணை வைக்கும் இந்துக்களையும் கிறிஸ்துவர்களையும் கூட விட்டுவிடுவோம். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு இணை வைத்த காதியானிகளையும், பஹாய் களையும்  ஈமான்தாரிகள்  எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். இறைவனுக்கு இணை வைப்பதை விட மிகப்பெரிய குற்றம் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இணைவைப்பது! ஜாக்கிரதை.

ஆனாலும் பிஜே சில விஷயங்களில் நபிஹள் நாயஹம் முஹம்மது இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு தெரிந்த விஷயங்களை விட அதிகம் தெரிந்தவர் என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அவர் மட்டுமல்ல, இங்கே நிறைய பேருக்கு நபிஹள் நாயகம்)ஸல்) அவர்களை விட அல்லாஹ்வின் மனத்தில் என்ன உள்ளது என்று தெரியும். அதனை எல்லாம் இங்கே இன்ஷா அல்லாஹ் கூற விரும்புகிறேன். அவற்றின் மூலம், இப்படிப்பட்ட அருட்கொடைகள் மீது உங்கல் அன்பு சுரந்து அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

விஷயத்துக்கு வருகிறேன்.

வஹி மூலம் வந்த வசனம் குரானில் இல்லாததை பற்றிய பிஜே அவர்களது விளக்கம் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் உள்ளது
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/

குரான் தவிர வேறு இறைச்செய்தி இல்லை என்பது தவறு என்பதற்கு ஆதாரத்தை பிஜே எழுதியுள்ளார். ஏன் குரானில் இல்லை என்பதற்கு காரணத்தையும் பிஜே எழுதியுள்ளார். மார்க்க சம்பந்தமாக எதுவும் இந்த இறைவசனத்தில் இல்லை என்பதால் அது குரானில் இடம் பெறவில்லை.

( நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும்அவர்களின் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடலை அல்லாஹ் இங்கு எடுத்துக் காட்டுகிறான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரகசியமாக ஒரு செய்தியைத் தமது மனைவியிடம் கூறினார்கள். அந்த மனைவியோ இரகசியத்தைப் பேணாமல் மற்றொருவருக்குச் சொல்லி விடுகிறார். யாருக்கும் தெரியாத இந்த விஷயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்து அந்த மனைவியிடம் விசாரிக்கிறார்கள். “உங்களுக்கு இதை யார் சொன்னார் என்று அந்த மனைவி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அளித்த பதில் தான் இந்த இடத்தில் கவனிக்கத் தக்கது அனைத்தையும் அறிந்த நன்றாகவே அறிந்த அல்லாஹ் தான் இதை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விடை அதாவது உங்கள் மனைவி உங்கள் இரகசியத்தைப் பேணாமல் இன்னொரு வரிடம் சொல்லி விட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுகிறான் குர்ஆன் மட்டும் தான் இறைச் செய்தி. குர்ஆன் அல்லாத வேறு இறைச் செய்தி கிடையாது என்று கூறுவோரின் கருத்துப்படி அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். உங்கள் மனைவி இப்படிச் செய்து விட்டார் எனக் கூறும் ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை அதாவது அந்தச் செய்தியை குர்ஆன் அல்லாத மற்றொரு வஹீ மூலம் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் மட்டுமே இவ்வசனம் உண்மையாகும் குர்ஆன் தவிர வேறு இறைச் செய்தி கிடையாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த வசனத்தில் மார்க்க சம்பந்தமான எந்தச் சட்டமும் இல்லை. மனிதர்களுக்கு உரிய எந்த அறிவுரையும் இதில் இல்லை. கணவன் மனைவிக்கு இடையே நடந்த உரையாடல் தான் இது. அவர்கள் பேசிக் கொண்ட இரகசியமும் மார்க்க சம்பந்தப்பட்டது அல்ல. ஏனெனில் மார்க்க சம்பந்தமான எதையும் இரகசியமாக வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. அது அனைவருக்கும் பொதுவானது முஸ்லிம் சமுதாயத்துக்கோ மற்றவர்களுக்கோ பயனில்லாத இந்த விஷயத்தைக் குர்ஆனில் அல்லாஹ் ஏன் இடம் பெறச் செய்ய வேண்டும் பயனற்ற எதையும் அல்லாஹ் குர்ஆனில் நிச்சயம் கூற மாட்டான் குர்ஆன் அல்லாத வேறு வஹீ கிடையாது என்று கூறும் கூட்டம் பிற்காலத்தில் உண்டாகும் என்பது படைத்த இறைவனுக்கு நன்கு தெரியும். குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது)

ஆகவே அல்லாஹ் ஒரு விஷயத்தை சொல்லாமல் நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்று தெரிந்து கொள்ளலாம். அதுவும் பக்கத்தில் இருக்கும் மனைவி என்ன நினைத்துகொண்டிருக்கிறாள் என்பது கூட நபிஹள் நாயகம் அவர்களுக்கு தெரியாது என்பதே இங்கே நாம் அறிந்துகொள்ளவேண்டிய உண்மை.

ஆனால் அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்பதையும் நமது உயிருக்கும் மேலான நபிஹள் நாயகம் சொல்கிறார்.

ஸஹீஹுல் புகாரி 6223
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

”அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் கொட்டாவியை வெறுக்கிறான்.” மேலும், “ ஹா என்று கொட்டாவி விடுகிற மூஃமினை பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்”
என்றும் உண்மை விளம்புகிறார்.

மேலே இருப்பது ஓக்கே!

இது ரொம்ப ரொம்ப தப்பு.. ஷைத்தான் சிரிக்கிறான் ஜாக்ரதை!

அது அவருக்கு எப்படி தெரிந்தது என்று சிந்தித்து பார்க்க வேண்டும். பகல்லயே பசு மாடு தெரியாதவர், ராத்திரியில் எருமை மாட்டை எப்படி பார்க்க முடியும் என்று கேட்கலாம். பக்கத்தில் இருக்கும் மனைவியின் உள்ளக்கிடக்கையே தெரியாதவர் எப்படி அல்லாஹ்வின் மனத்தில் அவரது விருப்பு வெறுப்பை அறிந்திருக்க முடியும்?

ஆக இதுவும் ஒரு வஹி மூலம்தான் வந்திருக்க வேண்டும். இல்லையா?

ஆனால் பாருங்கள். இந்த தும்மல், கொட்டாவி இறைவசனம் அல்குரானில் இல்லை!

மனைவியை பற்றி அல்லாஹ் நபிஹள் நாயகத்துக்கு சொன்னது நமக்கு தேவையில்லை என்பதால்தான் அது அல்குரானில் இடம் பெறவில்லை என்பதுதான் நமது பிஜே சொல்லும் விளக்கம். ஆனால், தும்மல் அல்லாஹ்வுக்கு பிடிக்கும் என்பது நமக்கு மிகவும் முக்கியமான விஷயம். கொட்டாவி பிடிக்காது என்பதும் நமக்கு முக்கியமான விஷயம். அதுவும் அல்லாஹ்வின் மனதில் உள்ள விருப்பு வெறுப்புக்களை பற்றிய மிக முக்கிய விஷயம்!

இதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

1) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொன்னார். ஆனால் அந்த இறைவசனம் அல்குரானில் இடம் பெறாமல் போய்விட்டது. இப்படி சொன்னால், அல்குரான் முழுமையானதல்ல என்று ஆகிவிடும்.

2) அல்லாஹ்வுக்கு தும்மல் பிடிக்கும், கொட்டாவி பிடிக்காது என்று அல்லாஹ் நபிஹள் நாயகத்திடம் சொல்லவில்லை. இப்படி வைத்துகொண்டால், நபிஹள் நாயஹம் இஷ்டப்படி பொய் சொன்னார் என்று ஆகிவிடும். இதுவும் பிரச்னை.

இந்துக்களும் கிறிஸ்துவர்களும் நாத்திகர்களும் சாதாரண கொட்டாவிக்கு ஏனய்யா இப்படி பிரச்னை பண்றீங்க. வந்தா கொட்டாவி வுடுங்க. தும்மல் வந்தா தும்முங்க. இதுக்கெல்லாம் எதுக்குடா அல்லாவை இழுக்குறீங்க என்று கேட்கலாம். இது முஸ்லீம்களுக்கு தலை போற பிரச்னை (no pun intended..man) என்று அறிந்துகொள்ளவும்.

இதே மாதிரி அல்குரானில் இல்லாத ஆனால் ஹதீஸில் அல்லாஹ் விரும்புகிறான், அல்லாஹ் வெறுக்கிறான் என்று ஒரு வண்டி கிடக்கிறது.

உதாரணத்துக்கு சில.. (சிரிக்கும் காபிர்கள் சற்றி தள்ளி நிற்கவும்)
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் 48, 5198
அல்லாஹ்வுக்கு தொன்னூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை நம்பிக்கை கொண்டு மனனம் செய்பவர் சொர்க்கம் செல்வார். அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்
5207
அல்லாஹ்வை யார் சந்திக்க விரும்புகிறார்களோ அவர்களை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வை சந்திப்பதை வெறுக்கிறார்களோ அவரை சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்

அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான்

இதற்கெல்லாம் அல்குரானில் ஆதாரம் இல்லை. அவையெல்லாம் வஹி மூலமாகத்தானே வந்திருக்க வேண்டும். பிறகென்ன அல்ல்லாஹ்வின் இறுதி இறைதூதர் சும்மா வாயில் வந்ததை புளுகினார் என்றா சொல்ல முடியும்? (புளுகினார் என்று சொல்லும் காபிர்கள் சற்று தள்ளி நிற்கவும். நஜஸ்.. நஜஸ்)

ஆகவே இவற்றை எல்லாம் நாம் எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்று நமது பிஜே கூறலாம்.

இரண்டாவது பிஜேவும் சும்மா லேசுப்பட்டவர் அல்ல. அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்தான் அவரும்.

எப்படி என்று கேட்கிறீர்களா?

இதோ இந்த வரியை பாருங்கள்!
குர்ஆன் அல்லாத வேறு வஹீயும் உண்டு என்பதைச் சொல்வதற்காகவே அல்லாஹ் இதை அருளியது போல் அமைந்துள்ளது:”

ல்லாஹ் இந்த இறைவசனத்தில் இதற்காகத்தான் கூறுகிறான் என்று ஒருவரால் கூறமுடியுமென்றால் அவர் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவராகத்தானே இருக்க வேண்டும்? அது பிஜேதான். 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அல்லாஹ் இறைதூதருக்கு அனுப்பிய வசனத்தில் அன்றைய இறைதூதருக்கே புரியாத தெரியாத விஷயங்களை எல்லாம் புட்டு புட்டு வைப்பவர் ஒருவர் உண்டு என்றால், அது பிஜே அவர்களே!

www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/6-allah-iyalathavana/

அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான், அல்லாஹ் கேலி செய்கிறான், அல்லாஹ் ஏமாற்றுகிறான் போன்ற வசனங்கள் அல்குரானில் காணக்கிடக்கின்றன.

அவர்கள் கேலி செய்தால், அல்லாஹ்வும் கேலி செய்வான் என்பது, அவர்கள் கேலி செய்தால் அதற்கான தண்டனை தருவான் என்றுதான் அல்லாஹ் சொல்ல வருகிறான் என்று விளக்குகிறார்.

ஆகவே அல்லாஹ் என்ன சொல்ல வந்தான் என்பதை விளக்குபவர் பிஜே என்றால் மிகையில்லை. இது போல இந்த காலத்தில் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்துணர்ந்து சொல்லக்கூடியவர் யார் இருக்கிறார்கள்?

இதே மாதிரி, முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லத்துக்கே  தெரியாத பல அறிவியல் உண்மைகளை அல்குரானின் வரிகளிலிருந்து கண்டுபிடிக்கக்கூடியவர் பிஜே அவர்களே. இதனைத்தான் அல்லாஹ் சொல்லியிருக்கிறான், அது முகம்மது நபிக்கு தெரியவில்லை என்று பல விளக்கங்களை கொடுத்துள்ளார் அண்ணன் பிஜே. கவனியுங்கள். இதே போல இரண்டு கிழக்கு இரண்டு மேற்கு என்பதற்கெல்லாம் அல்லாஹ் இதனைத்தான் சொல்லவந்தான் என்று ஒரு வண்டி நமது பிஜேவும், நமது இஸ்லாமிய அறிவியலாளர்களும் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் வஹி வந்து இந்த அறிவை பெற்றார்களா அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக இட்டுக்கட்டினார்களா என்று யாரும் கேட்கக்கூடாது. அவர்கள் அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை அறிந்தவர்கள் என்று வைத்துகொண்டு மேலே போகவேண்டும்.

அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் மாதிரியே அல்லாஹ்வின் உள்ளக்கிடக்கையை மட்டுமல்ல, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் உள்ளக்கிடக்கையையும் அறிந்தவர் பிஜே அவர்கள் மட்டுமே!

அதே மாதிரி இஸ்லாமிய வருடம் என்று அரபி வருடங்களை கருதுவது தவறு என்று பிஜே கூறியுள்ள விஷயமும் முக்கியமானது.

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/hijri_epothu_armbam/

இதன் இறுதியில் அவர் கூறியதை பார்ப்போம்
நபிகளுக்கு பின்னால் வஹி இல்லை என்பதும், வஹியின் அடிப்படையில் இல்லாத எந்த ஒன்றும் மார்க்கமாக ஆகாது” என்று அறிவித்திருக்கிறார் பிஜே.
நபிஹள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பின்னால் வஹி இல்லை என்பது குர் ஆனில் இருக்கிறதா? என்று கேட்கக்கூடாது. காத்தமுன் நபி என்ற ஒரே ஒரு வார்த்தையை வைத்து வூடே கட்டிய மௌலவிகள் நாம் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

அதனை அப்படியே வைத்துகொள்வோம்.

அப்படியென்றால், உத்மான் தொகுத்த குர் ஆனை என்ன சொல்வது என்ற கேள்வி எழுகிறது. காலிபா உத்மான் (றலி)அவர்களே அல் குர் ஆனை தொகுத்தார்கள். அது மட்டுமல்ல,எத்தனை எத்தனையோ வெவ்வேறு விதமாக தொகுத்த குர் ஆன்களை எல்லாம் கைப்பற்றி எரித்து தன்னுடைய குர் ஆனை மட்டுமே குர் ஆன் என்று சொல்லவேண்டும் என்று செய்தார்கள். இதில் அலி(ரலி) தொகுத்த குர் ஆனும் காலி. அந்த குர் ஆன் இப்போது இருக்கும் குர் ஆனுக்கு மாறுபாடானது என்பது வரலாறு. அது மட்டுமல்ல, அந்த குர் ஆன் மிக அழகாக பல முறைகளில் சரியானதும் கூட என்று சுன்னி பிரிவை சேர்ந்தவர்களே எழுதி வைத்துள்ளனர். இருப்பினும் அந்த குர் ஆன் அழிக்கப்பட்டு இந்த குர் ஆன் மட்டுமே நிற்கும்படி உத்மான் செய்துவிட்டார்.

குர் ஆனில் வஹியால் இறக்கப்பட்ட வசனங்கள் இருக்கின்றன. ஆனால் அதற்கு ஒரு வடிவத்தை கொடுத்து அத்தியாயங்களாக பிரித்து இந்த அத்தியாயம் முதலில், இது அடுத்தது இது அடுத்தது என்று கொண்டுவந்து அதற்கு உருவத்தை கொடுத்தது காலிபா உத்மான் அவர்களே.

இந்த குர் ஆனை இப்படித்தான் தொகுக்க வேண்டும் என்று ஒரு விவரமும் அல் குரானில் இல்லை.

குரானை யார் யாரிடம் கற்றுகொள்ள வேண்டும் என்று நபிஹள் நாயஹம் சொல்லியிருக்கிறார் என்றால், அது அப்தல்ல இப்னு மசூத், சலிம் மாவ்லா அபு ஹுதாபியா, உபய் இப்னு காப், முஅத் இப்னு ஜபல்,Muhammad said: “Learn the Qur’an from four persons: Abd-Allah ibn Mas’ud, Salim Mawla Abu-Hudhayfah, Ubay ibn Kab and Muadh ibn Jabal.”

இன்னொரு இடத்தில்
Narrated Qatada: I asked Anas bin Malik: ‘Who collected the Qur’an at the time of the prophet?’ He replied, “Four, all of whom were from the Ansar: Ubai bin Ka’b, Muadh bin Jabal, Zaid bin Thabit and Abu Zaid”.[Bukhari Sahih al-Bukhari, 6:61:525]

நபிஹள் நாயகம் காலத்தில் குரானை மனனம் செய்தவர்கள் அனைவருமே அன்சாரிகள் என்று இன்னொரு ஹதீஸ் சொல்கிறது.

ஆனால், நம்ம உத்மான் (றலி) யாரை வைத்து அல்குரானை தொகுக்கிறார் என்று பாருங்கள். இந்த நான்கு பேருமே இல்லை.
முழுக்க முழுக்க குரேய்ஷிகளை வைத்து அல்குரானை தொகுக்கிறார். (அலி(றலி)யும் குரைய்ஷி பிரிவை சார்ந்தவர்) ஹஃப்ஸா(றலி) என்ற நபிஹள் நாயஹத்தின் மனைவியையும், தனது கையில் இருந்த குரானையும் சரிபார்த்து தொகுத்துகொண்டதாக இஸ்லாமிய வரலாறு சொல்கிறது.

உபய் இப்னு காப் ஓதிவந்த குரானில் இருக்கும் ஒரு வரி இப்போதைய குரானில் இல்லை என்று யூசூப் அலி கூறுகிறார்.

http://al-quran.info/default.aspx?x=y#&&sura;=33&trans;=en-yusuf_ali&show;=both,quran-uthmani&ver;=2.00

3652. ^ In spiritual relationships the Prophet is entitled to more respect and consideration than blood-relations. The Believers should follow him rather than their fathers or mothers or brothers, where there is conflict of duties. He is even nearer-closer to our real interests-thari our own selves. In some Qiraahs, like that of Ubayy ibn Ka’ab, occur also the words “and he is a father of them”, which imply his spiritual relationship and connection with the words “and his wives are their mothers”. Thus his spiritual fatherhood would be contrasted pointedly with the repudiation of the vulgar superstition of calling any one like Zayd ibn Harthah by the appellation Zayd ibn Muḥammad (33:40): such an application is really disrespectful of the
Prophet.

ஆக உத்மான் தொகுத்த குர் ஆன் முழுமையானது அல்ல என்ற நிலைக்கு வர வேண்டியிருக்கிறது. மேலும் இன்றைய குரானின் பெயர் அல்குரான் அல்ல. அல் முஸாப் அல் உத்மானி என்பதுதான் இந்த குரானின் பெயர். இதே போல இதனை பாதுகாப்போம் என்று அல்லாஹ் கூறியிருந்தாலும், அவர் பாதுகாப்பது இந்த குர் ஆனா அல்லது அலி(றலி) தொகுத்த குர் ஆனா என்று பிஜேவோ அல்லது மற்றவர்களோ அறிவார்களா? அல்லாஹ்வே அறிவான். அலி (றலி) தொகுத்த குர் ஆன் பத்திரமாக இறுதி இமாம் பாதுகாத்துவருகிறார் என்று ஷிஆக்கள் நம்புகிறார்கள். அதுவா?

இது மாதிரி நிறைய ஆதாரங்கள் உண்டு என்றாலும் இப்போதைக்கு உத்மானுக்கு அல்லாஹ் வஹி கொடுக்காமல் உத்மான் தொகுத்த குர் ஆனை நாம் குர் ஆன் என்று கருதலாமா என்பதற்கு பிஜே அவர்களே விளக்கம் அளித்துவிடுவார்கள்.

அவருக்கு தெரியாததா? அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் அறிந்தவர் பிஜே ஒருவரே. அல்லாஹ் என்ன கருத்தினால் எதனை சொன்னான், நபிஹள் நாயகம் என்ன கருத்தினால் எதனை சொன்னார் என்பதையெல்லாம் புட்டு புட்டு வைக்கும் பிஜேவுக்கு இதெல்லாம் ஜூஜூபி..

Advertisements

மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

நாத்திகர்களுக்கு நாக்கை புடுங்கிகொள்கிறமாதிரி கேள்விகள் கேட்டுள்ள முஸ்லீம் பதிவர்களிடம் என்னையும் இணைத்துகொள்ளுங்கள் என்று கேட்டதில் அவர்கள் பதிலே சொல்லவில்லை. செருப்படி, சவுக்கடி போன்ற வார்த்தைகளை உபயோகித்தாலும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக இல்லை. அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தி தரட்டும்.

இருந்தாலும் நான் அவர்கள் கூறியுள்ளவற்றை ஆமோதிக்கிறேன். அதுமட்டுமல்ல, அவற்றை பகுத்தறிவே சுத்தமாக இல்லாத நாத்திகர்களுக்கு புரிவதற்காக மேலும் விளக்கி துலக்கிட விரும்புகிறேன். நம்ம நாத்திகர்கள் எல்லாம் கொஞ்சம் மூளை கம்மியான காபிர்கள். அவர்களுக்காக கொஞ்சம் பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். இவற்றை படித்தாவது நாத்திகர்கள் திருந்தி ஈமானுள்ள மூஃமின்களாக வேண்டும் என்று எம்பி3 பிளேயர் தவிர மற்ற எல்லாவற்றையும் படைக்க வல்லமை உள்ள அல்லாஹ்விடம் துவா செய்குவோம்.

முதலில் சிட்டிஜன் (இது தல அல்ல இது வேற சிட்டிஜன்) முஹம்மத் ஆஷிக் கூறுவதை பார்ப்போம்.

“மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, அதன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து, தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா” என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!” என்று நமது சிட்டிஜன் கூறுகிறார்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

“மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, “ல மூஃமீன்களை பார்த்தால், அதுவும் இஸ்லாமிய அறிவியல் எழுதும் மூஃமின்களை பார்த்தால், இந்த வரியில் உங்களுக்கு சந்தேகம் வருவது இயல்பென்றாலும் ஒரு பேச்சுக்கு மனிதர்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது என்று வைத்துகொள்வோம்.

அதனை இறைவன் கொடுத்தானா, அல்லது பரிணாமத்தின் விளைவா என்று பார்ப்போம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்விக்கு வந்து, பிறகு பகுத்தறிவு மனிதர்க்கு மட்டுமே உள்ளதா என்றும் பார்க்கலாம்.

பகுத்தறிவு என்பது எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிவது என்றால், அது விலங்குகளுக்கும் இருக்கிறது என்று தெரிகிறது. தெனாலிராமன் பூனைக்கு சூடு பால் வைத்துகொண்டே இருந்தால் பால் என்றால் சுடும் என்று உணர்ந்து அது நமக்கு கெட்டது என்று தெரிந்து பாலை கண்டால் தெனாலி ராமன் பூனை ஓடுகிறது. ஆகவே எது கெட்டது எது நல்லது என்று அறிவது மட்டுமே பகுத்தறிவு அல்ல.

மொழி? மனிதனை தவிர வேறு எந்த விலங்கினமும் மொழி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ தெரியவில்லை. இதுவே மனிதனை மனிதனாக ஆக்கியது என்றும் சொல்வார்கள். ஆனால், அல்குரான் பகுத்தறிவு என்பது அது அல்ல என்று சொல்கிறது. ஏனென்றால், அல்குரானிலேயே பூமி சூரியன், பாறை, மரம் எல்லாம் பேசும் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. சொல்லப்போனால், ஒரு பாறை, கல் போன்றவைக்குக் கூட தன் பின்னால் ஒரு யூதன் ஒளிந்திருக்கிறான் என்று குரல் கொடுத்து காட்டிக்கொடுக்கும் அளவுக்கு ஈமானும் இருக்கிறது என்று தெரிகிறது. ஆகவே ஆஷிக் சொல்லும் பகுத்தறிவு என்பது மொழி அறிவு அல்ல என்று தெளிவடையலாம். (அல்லது குழம்பலாம்)

ஆகவே பகுத்தறிவு என்று சிட்டிஜன் சொல்வது எது? சிட்டிஜன் சொல்வது என்னவென்றால், யாராவது ஒருவர் வந்து நான் தான் இறைதூதர் நம்புங்கள் என்றால் உடனே நம்பும் குணத்துக்குத்தான் பகுத்தறிவு என்று பெயர்.

ஒரு பாறையோ, மரமோ கூட தன்னிடம் ஒருவர் வந்து நான் தான் இறைதூதர். அல்லாஹ் அனுப்பி வைத்தார் என்று சொன்னால், ஆதாரம் கொடு என்று கேட்கும். நமது மூஃமீன்கள் அப்படி கேட்கவே மாட்டார்கள். அதுவும் கொள்ளையடிக்கலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம் என்று எல்லாவற்றையும் அனுமதிக்கும் ஒருவர் எல்லாத்தையும் கடவுள்தான் செய்யசொன்னார் என்று நியாயப்படுத்தும்போது ஈமானை எவ்வளவு எளியதாக ஆக்கியிருக்கிறார் என்று நமது மூஃமீன்கள் புல்லரிப்பார்களே அன்றி எதிர்த்தா கேள்வி கேட்பார்கள்? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

”தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, ” என்ற வரியை ஆராய்வோம்!

அல்லாஹ் எல்லோருக்கும் சிந்தித்துணரும் மூளையை (அதாவது மேலே சொன்ன பகுத்தறிவு!) கொடுத்திருக்கிறான். ஆனால் ஒரு சிலருக்குத்தான் தனது தூதர் என்ற பதவியை அளித்திருக்கிறான். ஏன் எல்லோரிடமும் அந்த தூதர்களிடம் சொன்னது போல சொல்லலாமே என்று கேட்கக்கூடாது. அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. எப்படின்னா அப்படித்தான். அல்லாஹ் ரொம்ப பிஸி. அல்லாஹ்வால எல்லாரிடமும் சொல்லமுடியுமா? முடியாது. அவருக்கு அவ்வளவு பவர் இல்லை. அவர் கொஞ்சம் பிஸி. அதனால காப்ரியலை கூப்பிட்டு போய் நான் சொல்றதை எல்லாம் இந்த தூதர்கள்ட்ட சொல்லிட்டு வான்னு சொன்னார். அதனால, எப்பப்பல்லாம் முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு தேவையா இருக்கோ அப்ப மட்டும் அவருக்குஒரு வஹி கொடுத்து காபிரியேலை அனுப்பி ஒரு வசனத்தை இறக்க்க்க்குவார். ஒரு முஹம்மது நபியை சமாளிச்சி அவருக்கு தேவைப்பட்ட போதெல்லாம் வஹி அனுப்பி காப்ரியேலை அனுப்பி வசனத்தை அனுப்பியே ரொமப பெரிய தொந்தரவா போச்சி. இதே மாதிரி எல்லோருக்கும் வஹி அனுப்பி, காப்ரியேலை அனுப்பி, வசனத்தை இறக்கிக்கிட்டிருந்தா என்ன ஆவுறது? கொஞ்சமாவது பகுத்தறிவு வேணாம்? என்னது ? வேணாமா? அப்ப நீங்க மூஃமீந்தான்.

இப்ப நம்ம நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்ப அவர் சொன்ன சட்டங்கள் எல்லாம் அல்குரானில் இருக்கும். சிலது இருக்காது. (நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் சட்டம் ஒரு உதாரணம்தான். நின்றுகொண்டு உச்சா போவது எல்லாம் இப்படித்தான்) ஆனால், நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் நின்று கொண்டு குடிக்கச்சொல்கிறார். இன்னொரு தூதர் உக்காந்துகொண்டு குடிக்கச்சொல்கிறார் என்று சொன்னால், எதை கேட்பது? அதனால, நபிஹள் நாயஹம் ஸல்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கலே இறுதி இறைதூதர் என்று அல்லாஹ்வுக்கே ஒரு கேட் போட்டு மூட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ( அல்லாஹ் அடிக்கடி மனம் மாறக்கூடியவர்தான். இன்றைக்கு ஒன்றை கொடுத்துவிட்டு அதனைவிட நல்லதாகவோ அதற்கு மாற்றாகவோ இன்னொன்றை ஒரு வாரம் கழித்து கொடுப்பார். எது கடைசியாக வந்ததோ அதன்னை எடுத்துகொண்டு முன்னால் வந்ததை உதாசீனம் செய்யவேண்டும். அல்லது முன்னால் வந்ததை வைத்து காபிர்களை ஏமாற்றலாம். ) அதனால் இன்னொரு இறைதூதரை கொடுக்கலாம் என்று அல்லாஹ் நினைத்து கொண்டுவந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அல்லாஹ்வே இனி இறைதூதர் கொடுக்கலாம் என்று நினைத்தால் கூட அவரால் முடியாது. இனி எவனெல்லாம் இறைதூதர் என்று சொல்கிறானோ அவனை எல்லாம் பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும் என்று இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியாவில் சட்டமே போட்டுவிட்டார்கள். ஏற்கெனவே அவர் பல தூதர்களிடம் சட்டங்களை கொடுத்து அவற்றை ஆளாளுக்கு மாற்றிவிட்டார்கள். மாற்றுவதை பார்த்துகொண்டு கையை பிசைந்து கொண்டு அல்லாஹ் கடுப்பாகிவிட்டார். அதனால், நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் காப்ரியேல் மூலமாக கொடுத்து அவற்றை பாதுகாப்பதாக வேறு உறுதி அளித்திருக்கிறார். இருந்தும் ஒரு ஆடு அவர் கொடுத்த இறைவசனத்தை இரைவசனமாக தின்றுவிட்டு அல்லாஹ்வுக்கே அல்வா கொடுத்துவிட்டது. ஆகவே இப்போது உத்மான் தொகுத்ததுதான் அல்லாஹ் பாதுகாக்க விரும்பியது என்று நாம் வைத்துகொண்டுவிட்டோம். (வேறவழி என்று காபிர்கள் கேட்பார்கள். அவற்றை உதாசீனம் செய்யவும்).

அல்லாஹ் எல்லாவற்றையும் படைப்பவன் என்று சொல்கிறோம் என்பதற்காக எனக்கு ஒரு mp3 பிளேயர் படை, எனக்கு ஒரு ஏரோப்ளேன் படை என்றா கேட்கமுடியும்? அவனால் முடியுமா என்று சிந்திக்க வேண்டும். அப்படி அவனால் ஒரு எம்பி3 பிளேயர் பண்ண முடிந்திருந்தால், அப்போதே சாத்தானின் இடைச்செருகல் வசனங்கள் தொந்தரவு எதுவும் இல்லாமல் ஒரு எம்பி3 பிளேயர் பண்ணி, காப்ரியேலின் வார்த்தையிலேயே (எதுக்கு நடுவுல ஒரு தூதர்?) ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொருத்தர் பிறக்கும்போதும் கூடவே பிறக்குற மாதிரி பண்ணியிருப்பார்ல? அதனால, அவரால எல்லாத்தையும் படைக்க முடியாது. ஏதோ ஒரு பிரபஞ்சம், ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பூமி மனுஷங்கள், விலங்குகள் அவ்வளவுதான் ஒரு ஆறு நாள்ல படைக்க முடியும். அவ்வளவுதான். ஆனா அவன் நினைச்சா இம்-னு சொல்றதுக்குள்ள அது உருவாயிடும். அப்ப ஏன் mp3 பிளேயர் பண்ணி கொடுக்கக்கூடாதுன்னு கேட்கக்கூடாது. அது அப்படித்தான். அது மட்டும் அல்லாஹ்வால முடியாது.

ஆகவே இறைதூதர் என்று சொல்லிகொள்ளும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன பிரகாரம் உட்கார்ந்துகொண்டு உச்சா போய், உட்கார்ந்துகொண்டு தண்ணீர் குடித்து, இதற்கு மாறாக நின்றுகொண்டு உச்சா போகும் காபிர்களையும், நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும் காபிர்களையும் கண்ட இடங்களில் கழுத்தை வெட்டி, தொடர்ந்து தும்மி அல்லாஹ்வின் இறையருளை பெற்று மறுமையில் டாஸ்மாக் ஆற்றில் நீந்தி சுகம் காணுங்கள்.

”வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா” என்று அல்லாஹ் பரிட்சை வைக்கிறான்.

ஒரு தூதரை அனுப்பினார். (அவர் இறைதூதர்னு நம்பணும். அவ்வளவுதான். ஏன் எதுக்கு எப்படி அவர் இறைதூதர் என்றெல்லாம் கேட்டால் உங்களுக்கு பகுத்தறிவு கிடையாது) அதுவும் அடிக்கடி  நேத்திக்கி ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு  முன்னுக்கு பின் முரணாக அனுப்பியிருக்கார்.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாதுன்னும் சொல்வார், ஆனால், நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பார். அதற்கு பிஜே ஒரு விளக்கம் சொல்வார். ஜாகிர் நாயக் ஒரு விளக்கம் சொல்வார். அப்புறம் சவுதி அரேபிய தலைமை இமாம் ஒரு விளக்கம் சொல்வார். நைஜீரியாவின் இமாம் நின்று கொண்டு குடிப்பவர்கள் எல்லாம் நரகத்துக்கு போவார்கள் என்று சொல்வார். இவை எல்லாம் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட கிருபைகள்.

இந்த கிருபைகளில் எதை நாம் பின்பற்ற வேண்டும் என்று சிந்தித்துணரும் மூளையை உபயோகப்படுத்தினால்,  பகீரென்று அடிவயிற்றில் பயம் வருமே அதுவே இறையச்சம். நின்றுகொண்டு ஒன்னுக்கு அடிக்கும்போது நமக்கு நிச்சயம் நரகம்தான் என்று தெரியும் அல்லவா.. அதுவே இறையச்சம். அந்த அச்சத்துடன் வாழ்கின்றனரா என்று அல்லாஹ் பரிட்சை வைக்கிறான்.

புரிகிறதா நாத்திக காபிர்களே. இப்போதாவது அல்லாஹ்வின் இறையருளையும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் நபித்துவத்தையும் ஒப்புகொண்டு மூஃமீன்களாக ஆகுங்கள்.

யா அல்லாஹ்! 

அல்ஹம்துலில்லாஹ்


இப்போது மூஃமீன்கள் இதற்கு பதிலெழுதும்போது கீழ்க்கண்ட வாக்கியங்களை பயன்படுத்தலாம்.

நாத்திகர்களுக்கு நன்றாக சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். அல்ஹம்துல்லில்லாஹ்.

பளாரென்று நாத்திக காபிர்களை அறைந்து புத்தி சொல்லியிருக்கிறீர்கள். ஏக இறைவன் இவர்களுக்கு புத்தி வழங்கட்டும்.

நாத்திகர்களுக்கு செருப்படி அடித்திருக்கிறீர்கள். இனிய சொல் மூலம் நபிஹள் நாயகத்தின் புகழை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி கொடுக்க துஆ செய்கிறேன்.

இஸ்லாமிய அறிவியல்: ஷைத்தான் ஏன் காதில் உச்சா போகிறான்?


நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஷைத்தானின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள், சாப்பாடு, திருட்டுத்தனம், ஆகியவற்றை பற்றி விலாவாரியாக விளக்கியுள்ளார்கள். இந்த ஷைத்தான் மற்றும் ஷைத்தான்களை பற்றி நாம் அறிந்துகொள்வது இஸ்லாமிய கடமையாகும்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது நபிமொழி கூற்றுக்களின்படி ஷைத்தான்களை பற்றி சில முக்கியமான விஷயங்களை நாம் அறிகிறோம்

ஒன்று அல்லாஹ்வால் நிறைய அல்லாஹ்க்களாக ஆக முடியாது. ஒரே ஒரு அல்லாஹ்தான். அவர் அர்ஷில் உட்கார்ந்திருக்கிறார்.

ஆனால் ஷைத்தான் ஏராளமான ஷைத்தான்களாக ஆக வலிமை படைத்தவன்.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

புகாரி 1899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.”
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(மேலே ஹதீஸின் படி ஷைத்தான்கள் என்ற பதத்துக்காகத்தான் காட்டியிருக்கிறேன். ரமலான் மாதத்தில் ஷைத்தான்களே இல்லாமல் ஒரே புனிதமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. அதேமாதிரி உலகம் நரகமாகத்தான் இருக்கிறது என்று நமக்கு தெரியும். இதுக்கு பி ஜெயினுலாபுதீன் எதாவது விளக்கம் வைத்திருப்பார். முடிந்தால் கேட்கவும். அதற்கு விதண்டாவாதமாக பதில் கூறி, விதண்டாவாதம் என்று லிஸ்டில் சேர்த்துவிடுவார். அந்த லிங்கை இங்கே தரவும்)


ஆனால் உலகத்தில் மொத்தம் எத்தனை ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்ற அறிவியற்பூர்வமான கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முயல்வோம். இதற்கான பதில் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் இந்த நபிமொழியில் உள்ளது.

Volume :1 Book :19

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான்.

1144. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்’ என்று விடையளித்தார்கள்.


3270. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.
Volume :3 Book :59

நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது ஒரு காதிலா இரண்டு காதிகளிலுமா என்று நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இரண்டு காதுகளிலும் ஷைத்தான் இருக்கிறான் என்றால் அவன் ஒவ்வொரு ஆளிலும் இரண்டு ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம்.

ஆனால் இன்னொரு ஹதீஸ் இருக்கிறது

இதன் படி மூக்கிலும் ஷைத்தான் இருக்கிறான்.

3295. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இந்த மூக்கு ஹதீஸ் ரொம்ப முக்கியமானது என்று அறியவும். ஏனெனில் நீங்கள் தொழுகை செய்தீர்களா செய்யவில்லையா என்பதெல்லாம் இங்கே ஷைத்தானுக்கு முக்கியமல்ல. முஸ்லீமா இல்லையா என்பதும் முக்கியமல்ல. ஒவ்வொருவரும் தூக்கத்திலிருந்து எழும்போது மூக்கில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான். நீங்கள் நீர் விட்டு கழுவினால் — மூன்று முறை.. எண்ணிக்கை முக்கியம் — தண்ணீரில் கரைந்து ஷைத்தான் போய் விடுவான். )

ஆகவே ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, அவர்களது உடலுக்குள் மூன்று ஷைத்தான்கள் இருக்கிறார்கள் என்று அறியலாம். உலக மக்கள் தொகை 6,924,419,172 என்று சார்வாகனின் பதிவு சொல்கிறது. அதாவது ஏழு பில்லியனை தொட செல்கிறது. ஆகவே ஏழை மூன்றால் பெருக்கிக்கொள்ளவும். 21 பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன.

ஆனால் இதில் பி ஜெயினுலாபுதீன் மாதிரி நம்முடைய கற்பனையை நாமே அவிழ்த்துவிடவும் செய்யலாம்.

ஒவ்வொரு ஆளிலும் ஒரு ஷைத்தாந்தான் இருக்கிறான். அவன் இந்த பக்கம் காதிலும் அந்த பக்கம் காதிலும் மூக்கிலும் அவ்வப்போது போய் வந்துகொண்டு இருக்கிறான் என்றும் கற்பனையை அவிழ்த்து விடலாம். இதற்கெல்லாம் நபி மொழி ஆதாரம் இல்லை. ஆகையால் நமது சொந்த சரக்கு. அப்படி ஒரே ஒரு ஷைத்தான்தான் காது மூக்கு எல்லாவற்றிலும் உச்சா போகிறான் என்றும் நபிஹள் நாயகம் சொல்லவில்லை. காதில் ஒரு ஷைத்தான், மூக்கில் ஒரு ஷைத்தான் என்றும் சொல்லவில்லை. அவர் சொல்லாததால் நாம் சொல்லுவதுதான் சரி என்பது பிஜே அவர்களது விவாத முறை.

சரி குறைந்த பட்சம் எவ்வளவு ஷைத்தான்கள் இருக்க வேண்டும்? உலகத்தில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு சைத்தான்கள் இருக்க வேண்டும். ஆகவே குறைந்தது ஏழு பில்லியன் ஷைத்தான்கள் இருக்கின்றன என்று மதிப்பிடலாம்.நிச்சயமாக எல்லா இந்துக்கள், கிறிஸ்துவர்கள், யூதர்கள் காதுகளிலும் உச்சா போய் உச்சா போய் சைத்தானே துவண்டு போயிருப்பான். எல்லோருடைய மூக்கு அழுக்கிலும் ஷைத்தான் குடியிருக்கிறான். பாவம் அவன். அதுவும் இவ்வளவு காலம் இவ்வளவு பேர்களின் காதுகளில் உச்சா போவதற்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் முறைப்படி ஆராய்ந்தால் அவன் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியாது.

ஷைத்தான்கள் காபிர்களின் காதுகளிலும், இணைவைப்பவர்கள் காதுகளிலும் உச்சா போவதால், இந்த காபிர்களின் காதுகளுக்கு ஒன்றும் கெடுதல் நடப்பது மாதிரி தெரியவில்லை. ஆனால், நபிஹள் நாயகம் பொய்யா சொல்லியிருப்பார்? அவர் என்றைக்காவது பொய் சொல்லியிருக்கிறாரா? அவரது எதிரிகள் கூட அவர் பொய் சொன்னதாக கூறியதில்லையே!

ஆனால் இந்த உண்மையை வைத்து நாம் இன்னொரு ஆராய்ச்சி செய்யலாம். இது இஸ்லாமிய அறிவியல் செய்பவர்களுக்கு அரிய வாய்ப்புமாகும்.

இதற்கு இப்படிப்பட்ட பரிசோதனையை வடிவமைத்தால் என்ன?

தினமும் தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளை ஒரு முறை நன்றாக சுத்தம் செய்து தொழுகைக்கு அனுப்ப வேண்டும்

தொழுகைக்கே போகாத ஒரு காபிர் அல்லது முஸ்லீமின் காதுகளையும் நன்றாக சுத்தம் செய்து தொழுகை நேரத்தில் தூங்கச் சொல்ல வேண்டும்.

இப்போது தொழுகைக்கு போகும் முஸ்லீமின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்காது. ஆனால், தொழுகைக்கு போகாமல் தூங்கியவரின் காதுகளில் ஷைத்தானின் உச்சா இருக்கும்.

இரண்டு பேருடைய காதுகளையும் சுரண்டி வேதி முறைப்படி ஆராய வேண்டும். எந்த வேதிப்பொருட்கள் எல்லாம் தொழுகைக்கு போகாதவர் காதுகளில் இருக்கிறதோ அதெல்லாம் ஷைத்தானின் உச்சா.

(ஆனால், தொழுகைக்கு போனவரின் காதுகளில் எக்ஸ்ட்ராவாக எதாவது வேதிபொருள் இருந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை. அது அல்லாஹ்வின் உச்சா என்று தயவு செய்து சொல்லாண்டாம்)

ஒரு வித்தியாசமும் இல்லை என்று முடிவு வந்துவிட்டால் என்ன செய்வது என்பது இன்னொரு இஸ்லாமிய அறிவியல் கேள்வி.

இப்போதும் கற்பனையை அள்ளி விடலாம்.

இவ்வளவு காலம் உச்சா போய் உச்சா போய் துவண்டு ஒரே ஒரு சொட்டுகூட உச்சா வராமல் ஷைத்தான் போய் செத்துப்போய் விட்டால் என்ன செய்வது? ஆகவே ஷைத்தான் தெம்புக்கு நல்லா சாப்பிட்டு நல்லா தண்ணி குடிக்கணும்ல?

ஷைத்தான் சாப்பிடுகிறான் தண்ணீர் குடிக்கிறான் என்றும் நாம் அறிகிறோம். எப்படி? இதோ ஹதீஸ்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (4108)
3764 عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால் தான் உண்கிறான்; இடக் கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் (3764)

ஆனால் என்ன விஷயம் என்றால் அவன் இடது கையால் அருந்துகிறான் இடது கையால் சாப்பிடுகிறான். ( இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் உங்களுக்கு நண்பர்கள் ஏதும் இருக்கிறார்களா? எதற்கும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்)

இந்த ஷைத்தான் எதனை சாப்பிடுகிறான் எதனை குடிக்கிறான் என்று தெரியவில்லை.

ஆனால் ஏதோ ரொம்ப அவன் வயித்துக்கு கெடுதலான ஒன்றைத்தான் சாப்பிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள்.


ஏனென்றால் அடிக்கடி அவன் குசு விட்டு நாற்றமடிக்கிறான்

1222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:.
பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் காற்றுவிட்டவனாக ஓடுகிறான். பாங்கு முடிந்ததும் முன்னே வருகிறான். இகாமத் சொல்லப்பட்டதும் திரும்பி ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் முன்னே வருகிறான். தொழுது கொண்டிருக்கும் மனிதரிடம் ‘நீ இதுவரை நினைத்திராதவற்றையெல்லாம் நினைத்துப்பார்” என்று கூறுவான். முடிவில் அம்மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராகிவிடுவார்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மறதி ஏற்பட்டால் அமர்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யவேண்டும்” என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார் என அபூ ஸலமா கூறுகிறார்.

ஆகையால் ஷைத்தான் ரொம்ப கெட்ட நாத்தமடிக்கும் சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறான் என்று தெரிந்துகொள்ளலாம்.

தொழுகை பண்ணுமிடத்தில் நிச்சயம் ஷைத்தான் இருக்கிறான் என்று அறியவும். இகாமத் முடிந்தவுடனேயே திரும்பி வந்துவிடுகிறான் என்று நபிஹள் நாயஹம் ஸல்ல்லாஹூ அலைஹிவஸல்லம் தெரிவிக்கிறார்கள். எதற்கு? தொழுகையை பறித்து செல்வதற்கு.

தொழுகையை எப்படி பறித்து செல்லமுடியும் என்று விதண்டாவாதமாக நீங்கள் கேட்கலாம். ஆகவே இங்கு சொல்லப்படாத விஷயங்களை இட்டு கட்டி நாம் பதில் சொல்லலாம். அதுவே பிஜெயினுலாபுதீன் வழி என்று அறிக.
தொழுகையை பறித்து செல்வது என்பது தொழுகைக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த வெகுமதிகளை பறித்து செல்வது என்று பொருள் என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், ஷைத்தான் எவ்வளவு அதிகமான தொழுகை வெகுமதிகளை கையில் வைத்திருப்பான் என்று சிந்திக்க வேண்டும். உலகத்திலேயே மிக அதிகமான வெகுமதியை பெற்றவனாகக்கூட ஷைத்தான் இருக்கலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.

751. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
தொழுகையில் திரும்பிப் பார்ப்பது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். ‘ஓர் அடியானுடைய தொழுகையை ஷைத்தான் அதன் மூலம் பறித்துச் செல்கிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஷைத்தோனோடு கட்டி புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். அவர் தூணில் கட்டி வைத்திருந்தார். அப்புறம் போனாப் போவுதுன்னு விட்டுட்டார். அவன் ஓடிட்டான். அப்பவே அவர் கட்டிப்போட்டிருந்தார் என்றால், இன்னிக்கு இவ்வளவு ஷைத்தான் அலும்பு பண்ணமாட்டான். ஜெயினுலாபுதீன் எல்லாம் வேலையில்லாம இருந்திருப்பார். நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பொய் சொல்லமாட்டார்.

புகாரி 1210. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்)அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். (தொழுது முடித்ததும்) ஷைத்தான் எனக்குக் காட்சி தந்து என் தொழுகையை முறித்துவிட முயன்றான். அவனை அல்லாஹ் எனக்கு அடிபணியச் செய்தான். அவனை நான் பிடித்துக் கொண்டேன். அவனை ஒரு தூணில் கட்டி வைத்து காலையில் நீங்களெல்லாம் பார்க்க வேண்டுமென விரும்பினேன். எனக்குப் பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்கு (திருக்குர்ஆன் 38:35) என்று சுலைமான் நபி அவர்கள் கூறியதை நினைவுக்குக் கொண்டு வந்தேன். (அதனால் அவனைவிட்டு விட்டேன்) இழிந்தநிலையில் அவனை அல்லாஹ் ஓடச் செய்துவிட்டான் என்று கூறினார்கள்.

எங்கே ஓட செய்துவிட்டான்? என்று விதண்டாவாதமாக கேட்பவர்களுக்கு அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பதில் கூறுகிறார்

”நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்’ எனக் கூறினார்கள்.

புகாரி 2038. ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் – இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

இவ்வாறு ஓடி ஓடி களைத்துவிடுகிறானல்லவா? அதனால், நேரே போய் காதில் உச்சா போய்விடுகிறான்.

இதிலிருந்து அல்குரான் நபிஹள் நாயகத்தின் படைப்பு அல்ல, அது அல்லாஹ் இறக்கிய இறைவேதம்தான் என்று தெளிவாகிறது அல்லவா?

யா அல்லாஹ்

இஸ்லாம் எளிய மார்க்கமா? அல்லது நின்றுகொண்டு தண்ணீர் குடித்தல்

இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்று நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறோம். பிரச்சாரம் செய்வது நல்லதுதான். அப்படித்தான் பிரச்சாரம் செய்யவேண்டும். இஸ்லாம் எவ்வளவு கடினமான மார்க்கம் என்ற உண்மையை சொன்னால், யார் இஸ்லாத்தை தழுவுவார்கள்?

ஆனால், முன்பே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா என்ற கட்டுரையில் சொன்னது போல மூமீன்களே இது எளிய மார்க்கம்தான் போலிருக்கிறது என்று நினைத்து பல தவறான வழிகளில் சென்றுவிடுகிறார்கள்.

ஆகையால் மூமீன்களுக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது.

இஸ்லாத்துக்குள் வருவது எளிது. எல்லா மார்க்கம், மதங்களிலுமே உள்ளே நுழைவது எளிது. கிறிஸ்துவராக வேண்டுமென்றால், அற்புத சுகமளிக்கும் கூட்டத்துக்கு போய் அல்லேலூயா என்று கத்தினால் போதுமானது. அதே போல இந்து மதத்துக்கு போக வேண்டுமென்றால், கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்தால் போதுமானது. அதே போல இஸ்லாத்துக்கு வர வேண்டுமென்றால், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று கலிமா சொன்னால் போதுமானது. அபிஷியலாக மதம் மாற வேண்டுமென்றால் எம்மதத்தவராக இருந்தாலும் கெஸெட்டில் பதிவது அவசியம். இல்லையென்றால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாது.

அது கிடக்கட்டும். இஸ்லாத்துக்கு வருவோம்.

தாவா பணியின் போது, இஸ்லாத்தை பற்றி சில விஷயங்களை பேச கூடாது. உதாரணமாக, மற்ற மதங்கள் போல நினைத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறவும் முடியாது என்பதை நாம் சொல்லிவிடக்கூடாது. ஆனால், அதே நேரத்தில் நினைத்தால் நீ வெளியே போய்விடலாம் என்றும் சொல்லக்கூடாது.

”நெனச்சா வெளில போய்க்கலாங்களா?” என்று கேட்டால், “வெளிக்கு போகறதுதானே ? எங்க வீட்டு கொல்லையில கூட நீ போய்க்கலாம்.. நாமல்லாம் சகோதரருங்கல்லா?” என்று பேச்சை மாற்ற வேண்டும்.

இஸ்லாத்துக்கு வருவதற்கு முன்னதாக, “ இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். இதிலே ஒரே அமைதிதான். நம்ம ஜெயினுலாபுதீன் மட்டுந்தேன் சும்மா வாள் வாள்னு கத்திகிட்டிருப்பாரு. அது அமைதி இல்லத்தான். ஆனா நாங்கல்லாம் ரொம்ப அமைதில்லா” என்று சொல்லி சமாதானம் செய்யவேண்டும். (மேல் தரவுகளுக்கு: இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா? என்ற தாவாப்பணி சிறப்பு கட்டுரை பார்த்துகொள்ளவும்). அவ்வப்போது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று எழுத வேண்டும். சொல்லவேண்டும். அல்லாஹ்வுக்கு எவ்வளவு சாந்தியும் சமாதானமும் இருக்குன்னு நமக்கு தெரியாதா? சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்பாய்ங்க? அதுனால தெகிரியமா சாந்தி சமாதானமெல்லாம் சொல்லலாம். ஒன்னும் பிரச்னையில்ல. இருக்கறது கொஞ்சூண்டு. அள்ளிட்டா போய்டப்போறாய்ங்க?

சரி எளிய மார்க்கத்துக்கு வருவோம்.

இஸ்லாம் ஒரு கடினமான மார்க்கம் என்பது நமக்குத்தான் தெரியும். அதுவும் பிறந்த காலத்திலிருந்தே இது ஹராம், இது ஹலால் என்று வளர்ந்த நமக்கு ரத்தத்திலேயே ஊறிய விஷயம். ஆனா இந்த அமெச்சூர் முஸ்லீமுக்கு அதெல்லாம் தெரியாது. ஆகையால் கொஞ்சம் மார்க்க கல்வி கொடுத்தாக வேண்டும்.

முதலில் நாம் உபயோகிக்கும் அரபி வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் அர்த்தம் சொல்லித்தர வேண்டும். இல்லைன்னா ஒரே ரகளைதான். இது மாதிரி ஒரு அமெச்சூர் முஸ்லீம் நம்மளை பார்த்து முதல்ல இன்ஷா அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்புறம் எதுக்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ்தான்.

இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்
இன்ஷா அல்லாஹ் சாப்பாடு போடு
இன்ஷா அல்லாஹ் இது என்னக்கி பண்ண பிரியாணிடா?
இன்ஷா அல்லாஹ் உவ்வே வாந்தி வருது.
இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்

இப்படியே எல்லாத்துக்கும் இன்ஷா அல்லாஹ் சொல்லி கொன்னேபுட்டான்.

கொஞ்சம் முன்னேறியவுடனே அல்ஹம்துலில்லாஹ்.. அதுவும் வானம் படம் பார்த்துட்டு கொலவெறியோடத்தான் அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்கிட்டிருந்தான். எனக்கே கொஞ்சம் பயமா போயி ”மாப்ள.. எங்க மாமா ஊர்லர்ந்து வர்ரார்டா. அதனால வேற வீடு பாக்கணும்னு” சொல்லி உடுஜூட் பண்ணிட்டேன்.

ஸோ… இதுமாதிரி நெறய அரபி இஸ்லாமிய வார்த்தைகளை போட்டு பேசணும். எக்குதப்பா பேசி மாட்டிக்கக்கூடாது.

அப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீய லிஸ்டு இருக்கு. எது ஹராம் எது ஹலால் (அதாவது எதை முஸ்லீம்கள் செய்யக்கூடாது. எதை முஸ்லீம்கள் செய்யலாம் என்று)

சிம்பிளா சொல்லணும்னா எதெல்லாம் நபிகள் நாயஹம் (ஸல்) செய்திருக்காரோ, செய்ய சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹலால். எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹராம்.

நபிஹள் நாயஹம் செஞ்சதெல்லாம் நாம் செய்யலாம். ஆனா அவரு 13 பொண்டாட்டி 23 வப்பாட்டி வச்சிருந்தார். அதுமட்டும் நாம் செய்யக்கூடாது. ஏன்னா அல்லாஹ் நபிஹள் நாயஹம்(ஸல்) அவர்களோட வாயில வஹியா இறங்கி அது நபிகள் நாயஹத்துக்கு மட்டும் பெஸல் அனுமதின்னு சொல்லிட்டார். மத்தபடி அவர் விரலை ஆட்டினார்னா அது மாதிரி ஆட்டணும். அவர் அகட்டி நின்னார்னா நாமளும் அகட்டி நிக்கணும். அவர் ஆறு வயது ஆயிஷா(ரலி) யை நிக்காஹ் செய்தார்ன்னா நாமளும் செய்யலாம். ஆயிஷாவ இல்லை. வேறெதாவது ஆறு வயசு பொண்ணை. அப்புறம் இன்னொன்னு. எல்லோரட மனைவியும் புருஷன் செத்ததும் மறு நிக்காஹ் பண்ணிக்கலாம். ஆனால் நபிஹள் நாயஹத்தோட மனைவிகள் மட்டும் செய்யக்கூடாது. அவுஹ எல்லாம் மூமீன்களுக்கு உம்மா மாதிரில்லா.

அது கிடக்கட்டும்.

லிஸ்டுக்கு வருவோம்.
இந்த லிஸ்டு இருக்கே.. அது ரொம்ப கொலைவெறி புடிச்ச லிஸ்டு. ஒருத்தன் இதுதான் சரிம்பாம். இன்னொருத்தன் அது தப்பும்பாம். சீ ஒரே பாம் பாம்னும் வருது.. தப்பும்பான். தப்பும்பான்.

இப்ப பாருங்க.

ரொம்ப சாதாரணமா ஒரு கிறிஸ்துவன்கிட்ட போய் நின்னுக்கிட்டு தண்ணி குடிக்கலாமா? உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கலாமான்னு கேட்டு பாருங்க. உங்களை ஏற இறங்க பார்ப்பான்.

சரி ஒரு இந்துகிட்ட போயி, “எல முத்து! ஒரு இந்துவா சொல்லுடா. இந்துக்களெல்லாம் நின்னுகிட்டு தண்ணி குடிக்கணுமா? இல்ல உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கணுமா?” ன்னு கேட்டு பாருங்க. “என்னாச்சிடா மாப்ள? நேத்து நல்லாத்தானே இருந்தே”ம்பாம்.,.. சீ…ம்பான்.

ஆனா இதே ஒரு விஷயத்தை ஒரு முஸ்லீம்கிட்ட கேட்டு பாருங்க. அவன் என்னா சொல்வான் தெரியுமா?

“இது என்ன கேள்வி? நபிஹள் நாயஹம் ஸல்லால்லாஹூ அலைஹிவசல்லம் தண்ணி குடிக்கும்போது நின்னுகிட்டு குடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதனால நின்னு கிட்டு குடிக்ககூடாது” என்று ஆணித்தரமாக சொல்வான்.

(மேலே இருப்பது  ஹராம். நின்று கொண்டு குடிப்பதை சொல்கிறேன்)

மேலே இருப்பது ஹலால். உட்கார்ந்துகொண்டு குடிப்பதை சொல்கிறேன். தயவு செய்து அவுஹ உடையை தொடையை பாக்காண்டாம்)

(அமெச்சூர் முஸ்லீம்களுக்கு.
இந்த இணைப்பை பார்க்கவும்

)

இதுதான் மற்ற மதங்களுக்கும் நமது மார்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம்!

இது நம்மை மாதிரி பிறவி முஸ்லீம்களுக்கு தெரியும். ஆனால் எத்தனை அமெச்சூர் முஸ்லீம்களுக்கு தெரியும்? இப்படியெல்லால் ஒரு லிஸ்டு இருக்குன்னு கூட அவனுக்கு தெரியாது.

பெரியார்தாசன் மாதிரி பகுத்தறிவை விட்டுவிட்டவர்கள் மட்டுமே வரவேண்டிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

இங்கே எதற்குமே ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது. நின்று கொண்டு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கேட்டால் நீங்கள் கெட்ட முஸ்லீம் ஆகிவிடுவீர்கள் (கெட்ட முஸ்லீம் என்றால் என்ன என்பதற்கு, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் அருட்கொடைகள் மூன்று என்ற பதிவில் மூன்றாவது அருட்கொடையை பார்க்கவும்) நபிகள் நாயஹம் செய்திருக்கார். அதனால நாம் செய்யணும். அவ்வளவுதான்.

ஆனால் பிரச்னை அத்தோடு முடிந்துவிடாது.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது பற்றி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான ஹதீஸ்கள் இருக்கின்றன

Saheeh Muslim:

Book 023, Number 5017:
Anas reported Allah’s Apostle (may peace be upon him) disapproved the
drinking of water while standing.

——————————————————————————–
Book 023, Number 5018:
Anas reported that Allah’s Apostle (may peace be upon him) forbade
that a person should drink while standing. Qatada reported: We said to
him: What about eating? Thereupon he (Anas) said: That is even worse
and more detestable (abominable).

——————————————————————————–
Book 023, Number 5019:
This hadith is reported on the authority of Anas with a different
chain of transmitters, but no mention is mane of the words of Qatada.

——————————————————————————–
Book 023, Number 5020:
Abu Sa’id Khudri reported that Allah’s Messenger (may peace be upon
him) warned against drinking while standing.

——————————————————————————–
Book 023, Number 5021:
Abu Sa’id Khudri reported this hadith through another chain of
transmitters but with a slight, variation of wording.

——————————————————————————–
Book 023, Number 5022:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as
saying: None of you should drink while standing; and if anyone
forgets, he must vomit.

Malik’s Muwatta:

Book 49, Number 49.8.13:
Yahya related to me from Malik that he had heard that Umar ibn al-
Khattab and Ali ibn Abi Talib and Uthman ibn Affan drank while
standing.
——————————————————————————–
Book 49, Number 49.8.14:
Yahya related to me from Malik from Ibn Shihab that A’isha, umm al-
muminin and Sad ibn Abi Waqqas did not see any harm in a man drinking
while standing.
——————————————————————————–
Book 49, Number 49.8.15:
Yahya related to me from Malik that Abu Jafar al-Qari said, “I saw
Abdullah ibn Umar drink while standing.”
——————————————————————————–
Book 49, Number 49.8.16:
Yahya related to me from Malik from Amir ibn Abdullah ibn az-Zubayr
that his father used to drink while standing.
——————————————————————————–

Sunan Abu Dawood:
Book 26, Number 3708:
Narrated Anas ibn Malik:
The Prophet (peace_be_upon_him) forbade that a man should drink while
standing.

——————————————————————————–

Sahee Al-Bukhari:

இப்பத்தான் இன்னொன்னு வருது பாருங்க
ஆனால் நபிஹல் நாயஹம் (ஸல்) நின்னுகிட்டே குடிப்பார்!

Saheeh Muslim:
Book 023, Number 5023:
Ibn Abbas reported: I served. (water of) Zamzam to Allah’s Messenger
(may peace be upon him), and he drank it while standing.
——————————————————————————–
Book 023, Number 5024:
Ibn ‘Abbas reported that Allah’s Messenger (may peace be upon him)
drank (water) from Zamzam in a bucket while he was standing.
——————————————————————————–
Book 023, Number 5025:
Ibn ‘Abbas reported that Allah’s Apostle (may peace be upon him) drank
(water) from Zamzam while he was standing.

——————————————————————————–
Book 023, Number 5026:
Ibn ‘Abbas reported: I served (water from) Zamzam to Allah’s Messenger
(may peace be upon him), and he drank while standing, and he asked for
it while he was near the House (i. e. House of Allah-Ka’ba).
——————————————————————————–
Book 023, Number 5027:
This hadith is reported on the authority of Shu’ba with the same chain
of transmitters but with a slight variation of wording.

Sahee Al-Bukhari:

Volume 2, Book 26, Number 701:
Narrated Ibn Abbas:
I gave Zam-zam water to Allah’s Apostle and he drank it while
standing. ‘Asia (a sub-narrator) said that ‘Ikrima took the oath that
on that day the Prophet had not been standing but riding a camel.
——————————————————————————–
Volume 7, Book 69, Number 520:
Narrated An-Nazzal bin Sabra:
‘Ali offered the Zuhr prayer and then sat down in the wide courtyard
(of the Mosque) of Kufa in order to deal with the affairs of the
people till the ‘Asr prayer became due. Then water was brought to him
and he drank of it, washed his face, hands, head and feet. Then he
stood up and drank the remaining water while he was standing. and
said, “Some people dislike to drink water while standing thought the
Prophet did as I have just done.”
——————————————————————————–
Volume 7, Book 69, Number 521:
Narrated Ibn ‘Abbas:
The Prophet drank Zam-Zam (water) while standing.
——————————————————————————–
Volume 7, Book 69, Number 519:
Narrated An-Nazzal:
All came to the gate of the courtyard (of the Mosque) and drank
(water) while he was standing and said, “Some people dislike to drink
while standing, but I saw the Prophet doing (drinking water) as you
have seen me doing now.”
——————————————————————————–

சஹி முஸ்லீம், சஹி புகாரி. ரெண்டுமே சஹி ஹதீஸ்தான்.

அதாவது நபி(ஸல்) செய்ததை சொன்னதை சரியாக சொல்லும் விவரணைகள்.

ஆக நின்று கொண்டு குடித்தாலோ சாப்பிட்டாலோ வாந்தி எடுக்க வேண்டும் என்று ஒரு சஹி ஹதிஸ் சொல்லும்.
நபிகள் நாயஹம்(ஸல்) அவர்களே நின்று கொண்டுதான் குடித்தார்கள் என்று இன்னொரு சஹி ஹதிஸ் சொல்லும்.
அது தப்பில்லை என்று நபிகள் நாயஹம் அவர்களே சொன்னதாக இன்னொரு ஹதிஸ் சொல்லும்.

இப்ப வாங்க. மாட்டுனீங்களா?

நீங்க எந்த கட்சி?

கவனிக்கவும் தமிழ்நாட்டில் அமெச்சூர் முஸ்லீம்கள் எல்லாருமே சுன்னி வஹாபி பிரிவு முஸ்லீம்கள்தான். ஷியா பிரிவு, அஹ்மதியா பிரிவெல்லாம் இருந்தாலும் அவ்வளவு தீவிரமாக தாவாப்பணி செய்வதில்லை. (நம்ம மக்கள் போட்டு தாக்கிட மாட்டாங்க?)

சுன்னி முஸ்லீம்களுக்குள்ளாகவே இரண்டு பிரிவு இருக்கிறது. கொள்கை ரீதியாக பெரும் பிரிவுகள்.

ஒன்று சுன்னத் வல் ஜமாத் என்னும் தர்க்கா வணங்கிகள். இவர்கள் தர்காவில் இருக்கும் சூஃபிகளை கும்பிட்டால் அல்லாஹ்வுக்கு நேரடி லைன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

மற்றொன்று தவ்ஹீத் ஜமாத், தமிழக தவ்ஹீத் ஜமாத், இந்திய தவ்ஹீத் ஜமாத் போன்ற வஹாபி பிரிவுகள். இவர்கள் இதுவரை முகம்மது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே நேரடி லைன் இருந்தது மற்றதெல்லாம் டுபாக்கூர் என்றும் சொல்பவர்கள்.

நின்று கொண்டு குடிக்கக்கூடாது. ஆனால் பிரச்னை என்றால் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று சொல்லும் தவ்ஹீத் ஜமாத்தின் ஜெயினுலாபுதீன்

(நான் சும்மனாச்சிக்கும் ஒரு தேவையில்லாத விஷயத்தை பெரிசு பண்றேன்னுதானே நினச்சீங்க. இங்க பாருங்க. ஒரு ஈமானுள்ள முஸ்லீம் ஜெயினுலாபுதீனிடம் வேலை மெனக்கெட்டு கேட்பதையும், அதற்கு அவர் பல ஹதீஸ்களில் நபிஹள் நாயகம் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதை புட்டு புட்டு வைத்து சொந்த சரக்கை அவிழ்த்து விடுவதையும் பாருங்கள்)

ஏறத்தாழ சுன்னத் வல் ஜமாத்தின் ஜமாலியும் இதனைத்தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன். ஆனால், அதன் இணைப்பு கிடைக்கவில்லை. தெரிந்தால் சுட்டுங்கள்.

(சுன்னத் வல் ஜமாத்தின் ஜமாலி நின்று கொண்டு உச்சா போகலாமா என்பதை பற்றி இதே ரீதியில் ஆற்றும் ஒரு பேருரை இருக்கிறது. தண்ணீர் குடிக்கிற இடத்தில் அது எதற்கு என்று இங்கே பகிர்ந்துகொள்ளவில்லை)

ஆனால் இங்கே சிக்கல் என்னவென்றால், ஜெயினுலாபுதீன் சொல்வது போல நபிஹள் நாயஹம் உட்கார்ந்து குடிக்க முடியாத சூழ்நிலையில் நின்று கொண்டு குடித்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் மேலே இருக்கும் ஹதீஸ்களில் கிடையாது.  உட்கார முடியாத சூழ்நிலைகளில் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று நபிகள் நாயஹம் எங்கும் சொல்லவும் இல்லை. இதெல்லாம் நம் ஜெயினுலாபுதீன் இட்டுக்கட்டும் விஷயங்கள். இதேதான் ஜமாலியும் செய்வார்.

சஹி முஸ்லிம்
Book 023, Number 5022:
Abu Huraira reported Allah’s Messenger (may peace be upon him) as
saying: None of you should drink while standing; and if anyone
forgets, he must vomit.

இது பெலஹீனமான ஹதீஸாம்.

ஸோ, நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவர் என்பதை வைத்து எது சரி என்று முடிவு செய்யலாம். பெரும்பாலும் நீங்கள் எந்த பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் கூட்டத்தோடு சேர்ந்து ஆமாஞ்சாமி சொல்வது நல்லது. விபரீதமாக கேட்டுவிட்டால், வீட்டில் பெண்கள் உடம்பில் பர்க்கா கிடக்கட்டும் சேலை கூட இருக்காது. ஜாக்கிரதை. வூடு பூந்து அடிப்பார்கள்.

ஆகவே இஸ்லாம் எளிய மார்க்கம் என்று சொல்வது நாம் பிரச்சாரம் செய்யும் போது மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்.

எடுத்த உடனேயே, நமது ஹலால் ஹராம் லிஸ்டை காட்ட வேண்டாம். என்சைக்ளோபீடியா அளவுக்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் மூர்ச்சை போட்டுவிடுவார் அமெச்சூர் முஸ்லீம். அப்புறம் ஆளை விடு சாமி என்று ஓடிவிட்டால் ஒரு ஆள் இஸ்லாத்துக்கு குறைந்துவிடும். அல்லாஹ் மனவருத்தமடைவான்.

நின்று கொண்டு தண்ணீர் குடித்துவிட்ட அமெச்சூர் முஸ்லீமின் வீடு புகுந்து அடிக்க வேண்டாம். இப்போதைக்கு அவர்களது வீட்டு பெண்பிள்ளைகள் பிழைத்து போகட்டும்.

அமெச்சூர் முஸ்லீம் உட்கார வாய்ப்பிருக்கும் இடத்தில், நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை பார்த்தால், எச்சரிக்கவும். “அடுத்த முறை நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதை பார்த்தால் குடிக்க வாயிருக்காது, தண்ணீரை எடுத்துகொண்டு வாயருகே போக கையிருக்காது” என்று அல்லாஹ்வின் சாந்தியின் சமாதானத்துடன் அன்பு தவழ எச்சரிக்கை செய்யவும். மீறி அடுத்த முறை செய்தால் அவர்கள் வீட்டுக்கு சென்று பெண்களின் உடைகளை உருவலாம் என்று வைத்துகொள்ளவும்.

மனுஷன் நம்ம நபிகள் நாயகம், அல்லாஹ் மாதிரியே வேளைக்கொன்னு பேசுகிறார். ஆகையால் இப்போதைக்கு  உட்கார முடியாத சூழ்நிலையில் நின்றுகொண்டு குடிக்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறார்.

பின்குறிப்பு:
இப்போ நீங்கள் ஜெயினுலாபுதீன் மாதிரி பெரியாளா ஆகணும்னு நினைச்சீங்கன்னா உங்களுக்கு வழி இதிலேயே இருப்பதை கண்டுகொண்டிருந்திருப்பீர்கள்.
ஜெயினுலாபுதீன், ஜவஹிருல்லா ஆகியவர்களுடன் ரொம்பநாள் இயக்க பணிகளை ஆற்றிவிட்டு தேவையான நபர்களை உங்களுக்கு ஆதரவாக வைத்துகொண்டு ஒரு நாள் இப்படி ஆரம்பிக்க வேண்டும்.

ஜவஹிருல்லா நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கலாம் என்று சொல்கிறார். இது நபி வழி அல்ல. இவர் சஹி அல்லாத ஹதீஸ்களை பின்பற்றி இவ்வாறு செய்கிறார். நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது, அப்படியே குடித்தால் வாந்தி எடுக்க வேண்டும் என்று இன்ன இன்ன சஹி ஹதீஸ்களில் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெளிவு படுத்திகிறார். ஈமானுள்ள பாதையை விட்டு விலகிச்செல்லும் ஜவஹிருல்லாவை/ ஜெயினுலாபுதீனை/ ஜமாலியை விட்டு பிரிந்தேதான் ஆகவேண்டும்.

இப்படி ஆரம்பித்து நீங்கள் சரியான முஸ்லீம் கும்பலை உருவாக்கலாம். அதற்கப்புறம் நீங்கள் மட்டுமே சரியான நல்ல முஸ்லீம். மற்றவர்கள் எல்லா கெட்ட முஸ்லீம். அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் மூன்றாவது அருட்கொடையை ஆதாரமாக வைத்து கெட்ட முஸ்லீம்களை எல்லாம் அழிக்க அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்.

யா அல்லாஹ்

இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்

நேற்று ஒரே நேரத்தில் ஹைசன்பர்க் ஐயப்பாட்டுகொள்கையையும் அல்குரானையும் படித்துவிட்டு தூங்கியதில் இரண்டும் கலந்து இஸ்லாமிய அறிவியல் பளிச்சிட்டுவிட்டது.

ஆஹா இதனைத்தான் அல்லாஹ் 1400 வருடங்களுக்கு முன்னால் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லியிருக்காரா என்று புல்லரித்ததில் என் மனைவி என்னை கூட்டிபோய் புல்லரித்த இடங்களிலெல்லாம் சாம்பலை தேய்த்து சரி செய்ய வேண்டியதாகிவிட்டது. அப்படியும் சரியாகாமல் கார்ட்டிசோன் அரிப்பு மருந்தை தேய்த்துவிட்டு படுக்கும் படி ஆகிவிட்டது.

சரி நாம் இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதுவது எப்படி என்று சிந்தித்து பார்த்தேன்.  இதுவரை எழுதப்பட்டு உள்ள இஸ்லாமிய அறிவியல் கட்டுரைகளை எல்லாம் படித்து அதன் இலக்கணத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்தேன்.
(இஸ்லாமிய அறிவியல் என்றதும் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லவேண்டும். இஸ்லாமிய அறிவியல் என்றால் எல்லா அறிவியலும் அதில் சேர்த்தி. ஆனால் உயிரியலும் வானவியலும் மட்டும் சேர்த்தி இல்லை. உயிரியல் பற்றி வரும் எல்லா அறிவியலும் காபிர் அறிவியல், அல்லது  யூத, இந்து கிறிஸ்துவர்கள் சாத்தானுடன் சேர்ந்து செய்யும் சதிவேலை. அதே போலத்தான் வானியலும், நட்சத்திரங்களின் வயது, அதன் தோற்றம் எல்லாம். கவனமாக இருக்கவும். டார்க் மேட்டர் எல்லாம் உபயோகப்படுத்தலாம். ஆனால், அல்குரானுக்கு மாறாக இருக்கக்கூடாது. அப்படி எழுதிவிட்டோமென்றால் அந்த பதிவுக்கு மட்டுறுத்தல் போட்டு நமக்கு உண்மை மூமீன்களின் சாதகமான கருத்துக்களை மட்டுமே பதிய வேண்டும். இது மிக முக்கியம். ஜாக்கிரதை! )

இதில் பல முன்னோடிகள் ஹாரூன் யாஹ்யா, இன்னும் இணையத்தில் ஆங்கிலத்தில் அறிவியல் மூலம் தாவா செய்யும் பலர் இருக்கிறார்கள். அவற்றை காப்பியடித்து ஏராளமான தமிழ் மூமீன்கள் தமிழில் மொழிபெயர்த்து அறிவியலுக்கே இஸ்லாமிய தண்ணி காட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுகொண்டதை  உங்களுக்கும் அளிக்கிறேன்,. நீங்களும் இஸ்லாமிய அறிவியல் தாவா செய்ய வசதியாக அவற்றை வரிசைப்படுத்துகிறேன்

1) முதலில் எதாவது ஒரு அறிவியல் கட்டுரையை எழுத வேண்டும். இதில் விளக்க படங்கள் இருந்தால் ரொம்ப நல்லது. கீழே எங்கிருந்தெல்லாம் எடுத்திருக்கிறோம் என்று லிங்குகள் இருப்பது மிக அவசியம்

2) பிறகு ஒரு குரான் வசனத்தை எழுத வேண்டும்

3) இறுதியில் இரண்டையும் முடிச்சு போட்டு (இதில் தான் உங்கள் திறமையே இருக்கிறது) ஆஹா அல்லாஹ், இதனைத்தான்யா சொல்லியிருக்கார் என்று புல்லரிக்க வேண்டும்.

நான் கடைசியில் குறிப்பிட்ட புல்லரிப்பை இப்போது செய்யப்போவதில்லை. ஏற்கெனவே அரித்து உடம்பு புண்ணாகிவிட்டது. ஆகவே மெதுவாஹ ரெண்டு நாள் கழித்து புல்லரித்துகொள்கிறேன்.

சரி இப்போது இஸ்லாமிய அறிவியல் கட்டுரை.

இது ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle எவ்வாறு அல்லாஹ் நபி(சல்) மீது இறக்கிய அல்குரானில் உள்ளது என்பது பற்றி.குவாண்டம் இயற்பியலில், ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கை Heisenberg uncertainty principle பின்வருமாறு கூறுகிறது: “ஒரு சிறிய இடப்பகுதியில் ஒரு துகளின் அமைவிடத்தைச் சரியாகக் கண்டுகொள்வது அதன் உந்தத்தை ஐயப்பாடுக்கு உரியதாக்குகின்றது. மறுதலையாக, ஒரு துகளின் உந்தத்தைச் சரியாக அளக்கமுடியுமானால் அதன் இடம் ஐயத்துக்கு உரியதாகின்றது”.

In quantum mechanics, the Heisenberg uncertainty principle states precise inequalities that constrain certain pairs of physical properties, such as measuring the present position while determining future momentum of a particle. Both cannot be simultaneously done to arbitrarily high precision. In other words, the more precisely one property is measured, the less precisely the other can be controlled, determined, or known.

குவாண்டம் பொறிமுறையில், துகள்களின் உந்தத்துக்கும், அமைவிடத்துக்கும் துல்லியமான பெறுமானங்கள் கிடையா, ஆனால் நிகழ்தகவுப் பரம்பல் மட்டுமே உண்டு. ஒரு துகளின் நிச்சயமான இடமும், நிச்சயமான உந்தமும் கொண்ட நிலைகள் எதுவும் கிடையா. அமைவிடம் தொடர்பாகக் குறுகிய நிகழ்தகவுப் பரம்பல் இருக்கும்போது, உந்தம் தொடர்பான நிகழ்தவுப் பரம்பல் அகன்றதாக இருக்கும்.

ஒரு அணுவின் இடத்தை ஃபோட்டான் துகள் கொண்டு அளக்க முற்படும்போது, தெறிக்கும் ஃபோட்டான் அணுவின் உந்தத்தை குறித்துச் சொல்லமுடியாத அளவினால் மாற்றுகிறது. இந்த அளவு இட அளவையின் துல்லியத் தன்மைக்கு எதிர் விகிதசமமாகும். சோதனை ஒழுங்குகள் எப்படி இருப்பினும், இந்த ஐயப்பாட்டுத் தன்மையின் அளவை, இக் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு அளவுக்குக் கீழ் குறைக்க முடியாது.

அதாவது ஒரு துகளின் இடத்தையும் உந்தத்தையும் கணக்கிட விழைந்தால், ஒன்று இடத்தை கணக்கிடலாம், அல்லது உந்தத்தை கணக்கிடலாம். உந்தத்தை எவ்வளவு துல்லியமாக கணக்கிடுகிறோமோ அந்த அளவுக்கு இடத்தை கணக்கிடும் துல்லியத்திலிருந்து விலகுவோம், அதாவது இரண்டில் ஒன்றைத்தான் நம்மால் துல்லியமாக அளக்க முடியும்

இதனைத்தான் அல்லாஹ் தன் திருமறையில் வெளிப்படுத்துகிறான்.

8:7. (அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.

இரண்டு வியாபார கூட்டங்கள் வருகின்றன. இரண்டுமே அபு ஜஹலின் தலைமையில் வருகின்றன. இரண்டு கூட்டங்களில் ஒன்றைத்தான் நபி(சல்) அவர்களால் கொள்ளையடிக்க முடியும். இரண்டையும் கொள்ளையடிக்க முடியாது என்று அல்லாஹ் நபிபெருமானார்(ஸல்) அவர்களிடம் தெளிவு படுத்துகிறான். அபு ஜஹல் ஒரு துகள். அந்த துகளுக்கு இரண்டு வியாபார கூட்டங்கள். ஒன்று இடம், மற்றொன்று உந்தம். இரண்டையும் ஒரே நேரத்தில் அட்டாக் பண்ணமுடியாது. இரண்டில் ஒன்றைத்தான் அட்டாக் பண்ண முடியும்.

ஆஹா என்ன அழகாக ஹைசன்பர்க் uncertainty ப்ரின்ஸிபிளை விளக்கிவிட்டான்.

இபப்டிப்பட்ட அல்குரானை படித்துத்தான் ஹைசன்பர்க் போன்றோர் இயற்கை விதிகளை புரிந்துகொண்டுவிட்டார்கள். இதனை ஹைசன்பர்கே ஒரு டயரியில் எழுதி வைத்திருந்தார். அதனை ஒரு கிறிஸ்துவ காபிர் ஒருவர் அந்த டயரியை எரித்து  அல்லாஹ்வுக்கு வரவேண்டிய புகழை தடுத்துவிட்டார்.

மூமீன்களுக்காக அல்லாஹ் அனுப்பிய இயற்கை விதிகளை காபிர்கள் சுட்டுவிட்டார்கள் என்பது வருத்தத்துக்குரிய செய்தியாக இருந்தாலும், இப்போது அல்லாஹ் என் மூலமாக அதனை தெளிவு படுத்திவிட்டான்..

அல்லாஹ் காஃபிர்களை வேரறுக்க தன் திருவாக்குகளால் நாடுகிறான் என்பதிலும் அறிவியல் இருக்கிறது. காஃபிர்களுக்கு வேர் எங்கே இருக்கிறது. அறிவியலில்தான் இருக்கிறது. அந்த அறிவியலை தனது திருவாக்குகளால் வேரறுக்கிறான் என்று அல்லாஹ் திருமறையில் அறிவிக்கிறான்.

காபிர்களின் அறிவியலை வேரறுக்க  மூமீன்கள் கடுமையாக உழைத்துவருகிறார்கள். அதற்கு அல்லாஹ் தன் உதவியை தருகிறான்.

இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

உசாத்துணை இணைப்புகள் 
 (இது ரொம்ப முக்கியம். கவனிக்கவும். இப்போதுதான் நமக்கே ஒரு பெரிய இஸ்லாமிய அறிவியல் கட்டுரை எழுதிய திருப்தி வரும்.)
1) http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/uncer.html
2)  http://hendrix2.uoregon.edu/~imamura/123cs/lecture-6/planck.html
3) http://farside.ph.utexas.edu/teaching/qmech/lectures/node26.html

எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

தமிழ்நாட்டு முஸ்லீம்கள் என்றில்லாமல் மத்திய கிழக்கு இந்தியா என்று பல நாடுகளிலும் முஸ்லீம்களின் உணவுவகை என்றால் புலாவ், அல்லது பிரியாணி என்று கண்ணை மூடிக்கொண்டு காபிர்கள் சொல்லுவார்கள்.

அந்த அளவுக்கு புகழ்பெற்றது பிரியாணி.

ஆனால் அந்த பிரியாணிதான் முஸ்லீம்களை சுவனத்துக்கு செல்லவிடாமல் தடுத்து வைத்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அஜ்மல் கசாப், முகம்மது மதானி போன்ற தீவிர இஸ்லாமியர்களுக்கு இந்திய அரசாங்கம், அதுவும் கர்னாடகாவின் பாஜக அரசாங்கமே பிரியாணி கொடுக்கிறது என்று சில இந்துத்துவா பாஸிஸ்டுகள் புலம்பியிருந்தார்கள்.
அப்போதுதான் எனக்கே இந்த கேள்வி உதித்தது. சுவனத்துக்கு போகும் முஸ்லீம்களான முகம்மது மதானி, அஜ்மல் கசாப் போன்றவர்களுக்கு இந்துத்துவாகாரர்கள் பிரியாணி கொடுக்கிறார்கள் என்றால் பிரியாணியில் ஏதோ இருக்கிறது என்று முடிவுக்கு வந்தேன்.

பிறகு பிரியாணியை ஆராய்ந்தேன். அப்போதுதான் எனக்கு படார் என்று அல்லாஹ் முகம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வஹி வரும்போது வேர்க்குமே அது போல ”குப்”பென்று வேர்த்துவிட்டது.

ஆமாம். பிரியாணியில் கசகசா இருக்கிறது.

கசகசா என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? கசகசா (Papaver somniferum) என்பது பற்றி இங்கே விக்கிபீடியாவில் இருக்கிறது

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE

அந்த பக்கத்தில் கசகசா என்றால் என்ன என்று தமிழில் ஒன்றுமே எழுதியிருக்கமாட்டார்கள். இதுவும் இந்துக்களின் சதியாக இருக்கும். இடது புறம் கீழே English என்று இருக்கும் இணைப்புக்கு போங்கள். அதே விஷயத்தின் ஆங்கில பக்கம் தெரியும்,

http://en.wikipedia.org/wiki/Opium_poppy

ஓப்பியம் என்றால் என்ன தெரியும் அல்லவா?

பாப்பி, ஓப்பியம் என்று சொல்லக்கூடிய செடியின் விதைதான் கசகசா.
இந்த விதைகளை அரைத்து பிரியாணியிலும் போடுகிறார்கள். அப்படியே சாப்பிட்டு போதையும் ஏற்றிகொள்கிறார்கள். நம் ஈமானுள்ள முஸ்லீம்களும் தாலிபானும் இணைந்து இந்த ஒப்பியத்தைத்தான் ஆஃப்கானிஸ்தானத்தில் பயிர் செய்து ஓப்பியம் விளைவித்து காபிர் நாடுகளுக்கு அனுப்பி போதை ஜிகாத் செய்துவருகிறார்கள்.

இதனைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று சில அரைகுறை முஸ்லீம்கள் கேட்கலாம்.

இறைதூதர் என்ன சொல்லியிருக்கிறார் என்ற அரைகுறை அறிவு இருந்தால் கூட போதும்.

அல்லது இறைதூதரை பற்றி புரிந்தது புரியாதது தெரிந்தது தெரியாதது அனைத்தையும் விளக்க அல்லாஹ்வின் கருணையால் அனுப்பப்பட்டுள்ள பி. ஜெயினுலாபுதீன் மவுத் வாஷுக்கு கொடுத்த விளக்கம் போதுமானதாகும்

http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/alcahol_kalantha_mavuthvash/

”அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
நூல் திர்மிதீ 1788, நஸயீ 5513

இந்த இணைப்பில் ஹராமான பொருளை சாப்பிட்டால் சுவனம் கிடைக்காது என்று ஹதீஸ் ஆதாரத்துடன் பதிவை படியுங்கள்

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

ஆல்கஹாலை உண்டால் போதை ஏற்படும் என்பதால் இதில் சிறிதளவையும் பயன்படுத்தக்கூடாது. ஆல்கஹால் கலந்த பானத்தை வாய் கொப்பளிக்கும் போது வாய்க்குள் அந்த ஆல்கஹால் சிறிதளவேனும் தங்கி இருக்கும் என்று ஆல்கஹாலை தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆல்கஹாலை விட பல மடங்கு போதை தரக்கூடிய ஓப்பியத்தை கசகசா என்ற உருவத்தில் நாம் பிரியாணியிலும் குருமாவிலும் போட்டு கரைத்து உண்டு வருகிறோம்

ஹராமான பொருளை தினந்தோறும் உண்பவர்களுக்கு சுவனம் உண்டா? அல்லாஹ் ஹராம் என்று அறிவித்த பின்னரும், நபி (ஸல்) போதை தரும் பொருள் மிகச்சிறிய அளவில் கூட உண்ணக்கூடாது என்று அறிவித்த பின்னரும் அதனை உண்பது எப்படிப்பட்ட பாவம் என்பதை சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு முகம்மது மதானி, அஜ்மல் கஸாப் ஆகியோர் நரகத்துக்கு போகவேண்டும் என்பதற்காக இந்திய பாஸிஸ்டு அரசு நம் பொய் குற்றவாளிகளுக்கு பிரியாணி போடுகிறது. ( உண்மை குற்றவாளிகளை தப்ப விட்டுவிடுகிறது. உண்மை குற்றவாளிகளுக்கு பிரியாணியும் போடுவதில்லை! ) இந்த தந்திரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்.

அது மட்டுமல்ல, நம் நிக்காவில் ஆரம்பமே பிரியாணி போட்டு ஹராமான உணவுடனேயே நமது திருமணத்தை ஆரம்பிக்கிறோம்.

ஆல்கஹாலில் குளிக்கலாம். ஆனால் பல்லிடுக்கில் கூட மாட்டக்கூடாது என்று நமது பி ஜெயினுலாபுதீன் அறிவிக்கிறார். அது போல, கசகசாவை முகத்தில் தேய்த்து குளிக்கலாம். ஆனால் பிரியாணியிலோ குருமாவிலோ போடக்கூடாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

கசகசா பல மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருள் என்பதை உணர்வோம்.

இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை நாம் சமையலில் பயன்படுத்துவது எவ்வளவு ஹராமானது என்பதை நாம் உணர்வதில்லை.
அது மட்டுமல்ல, வலி நிவாரணத்துக்காக ஓப்பியத்திலிருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, துருக்கி, இந்தியா ஆகிய நாடுகள் மருந்துக்காக இந்த கசகசாவை பயிரிட்டு மருந்துகள் தயாரிக்கின்றன. இவை கோடைன், மார்பின் ஆகிய வகைகள். இவை அனைத்துமே ஹராம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். வலி நிவாரணத்துக்காக அளிக்கப்படும் அனைத்து மருந்துகளுமே ஒருவகை போதைப் பொருட்கள்தான் என்பதையும் நாம் உணர வேண்டும். ஆகையால், வலி நிவாரணத்துக்காக எந்த பொருளையும் உண்ணக்கூடாது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
நஞ்சும் குறைவான அளவில் மருந்தாகும்
என்பதெல்லாம் காபிர் இந்துக்களின் கொள்கைகள். அவற்றை நாம் பின்பற்றக்கூடாது.

அடுத்து காபிர் உணவு வகைகளில் இருக்கும் அல்கஹாலை கண்டுகொள்வோம்

நம் முஸ்லீம்கள் இட்லி தோசை என்று வெளுத்து கட்டுகிறார்கள்.

பாகிஸ்தான் உருவாக உழைத்த ஒரு தீவிரவாத முஸ்லீமை எனக்கு தெரியும். அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது “ஏன் நீங்கள் பாகிஸ்தான் போகவில்லை?” என்று கேட்டேன்.

”அங்கண இட்லி தோச கிடைக்காதாம்ல?” என்று பதில் சொன்னார்.

ஈமானை விட்டுவிட்டு இட்லிக்காக ஏங்கும் ஒரு மூஃமினை மூஃமின் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.

இட்லி தோசை உருவாகும் விதத்தை நாம் அறிந்துகொண்டால் குழப்பத்துக்கு இடமில்லை.

http://www.hindu.com/seta/2009/01/08/stories/2009010850201500.htm

இட்லி மாவை புளிக்க வைப்பது என்றால் fermentation with wild yeast என்றுதான் பொருள். இதே போலத்தான் பீர் என்ற அல்கஹால் பானத்தையும் காபிர்கள் உருவாக்குகிறார்கள்.

இட்லி தோசை மாவுடன் காற்றில் இருக்கும் ஈஸ்ட் கலந்து அதில் உள்ள ஸ்டார்ச்சை உடைத்து சர்க்கரை எடுத்து அதை கார்பன் டை ஆக்ஸைடாகவும் மறுபாதி ஆல்கஹாலாகவும் ஆக்குகிறது.

இந்த ஆல்கஹால் பானத்தைத்தான் தோசைக்கல்லில் போட்டு சாப்பிடுகிறோம். இதில் இருக்கும் ஆல்கஹால் நமக்கு ஹராம் என்று தெரிந்தும் நமக்கு பழக்கிவிட்டு நம்மை ஈமான் பாதையிலிருந்து விலக வைத்த இந்து பாசிஸ்டுகளை என்னவென்று சொல்வது?

ஆகவே இட்லி தோசை பக்கம் நெருங்கவே கூடாது. அது ஹராம் என்பதை நாம் உணர்வோம்.

மேலும் அல்கஹாலை ஆராயும்போது நமது குடலை பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும்

நினைவில் கொள்ளுங்கள். இஸ்லாம் ஒரு அறிவியற்பூர்வமான மதம். இல்லையில்லை மார்க்கம். ஆகவே முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி இறைவன் நம்மிடம் இறைஞ்சுவதை நினைவில் கொள்ளுங்கள்.

அல்கஹாலை ஆராயும்போதுதான், நமது குடலே ஒரு ஆல்கஹால் தொழிற்சாலை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்

நமது உணவு வயிற்றுக்கு சென்று பிறகு குடலுக்கு செல்கிறது. குடலில் ஏராளமான ஈஸ்ட், பாக்டீரியா போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. இது எத்தனை பேருக்கு தெரியும்? அது இருக்கட்டும் நமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கே தெரியுமா என்று தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்றால், நாம் அறிந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று பி ஜெயினுலாபுதீன் போன்ற மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துவார்கள். இப்போதைக்கு அந்த அறிவுரையை தள்ளி வைத்துவிட்டு காபிர் அறிவியலை ஆராய்வோம்.

நமது குடலில் உள்ள பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற மைக்ரோ உயிரினங்கள் நமது உணவை உடைக்க நொதிக்க வைக்கும் வேதிவினையை உபயோகப்படுத்துகின்றன. அப்படியே விழுங்கிய சப்பாத்தி எப்படி மைய அரைத்து வெளியே வருகிறது என்று சிந்திக்க வேண்டும் அல்லவா?

http://en.wikipedia.org/wiki/Gut_flora#Carbohydrate_fermentation_and_absorption

அங்கே இந்த ஸ்டார்ச்சை மீண்டும் இந்த காபிர் பாக்டீரியாக்களும், காபிர் ஈஸ்ட்களும் சேர்ந்து நொதிக்க வைத்து ஆல்கஹாலை உண்டு பண்ணுகின்றன. இதனால், அப்படியே விழுங்கிய சப்பாத்தி கரைந்து அணுக்களாக பிரிந்து அதிலுள்ள சர்க்கரை மற்றும் சத்துக்கள் குடலால் உறிஞ்சப்படுகின்றன. அது மட்டுமா? அங்கு உருவான ஆல்கஹாலும் குடலால் உறிஞ்சப்படுகிறது. இதனால்தான் நன்றாக சாப்பிட்டால் தண்ணி அடித்தாற்போல போதையே உருவாகிறது.

இந்த காபிர் பாக்டீரியாக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையும் தெரியவில்லை. முகம்மது நபி(ஸல்) அவர்களின் அறிவுரையும் தெரியவில்லை. ஹராமானதை ரகசியமாக நம்முடைய உடலுக்குள்ளேயே உருவாக்கி நமக்கு ஆல்கஹாலை தருகின்றன என்றுதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதற்கு ஷைத்தான் இந்த பாக்டீரியாக்களுக்கு உதவி வருகிறானோ என்று சந்தேகமாக இருக்கிறது.

இப்போது ஷைத்தானில் பாதையில் செல்லும் காபிர்கள் தயிர் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் என்பதை அறிவோம். தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை வயிற்றில் சேர்ந்தால் வேறேதும் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதை குறைத்து சரி செய்கின்றன என்று சொல்லிக்கொண்டு புரோபயாடிக் தயிர் என்றெல்லாம் காபிர் தேசங்களில் விற்கிறார்கள். இவ்வாறு ஷைத்தான் மனித குலத்தினரை வழிகேடுக்கு அழைத்துச் செல்கிறான். ஷைத்தானின் சதித்திட்டங்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள அல்லாஹ்வை துஆ செய்குவோம்.

இதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் வயிற்றுக்குள்ளேயே இந்த காபிர் பாக்டீரியாக்கள் அல்கஹாலை உருவாக்கி நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமான அல்கஹாலை கொடுத்துவிட்டன என்பதுதான். ஷைத்தான் அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் வாயில்தான் விளையாடினான் என்று நினைத்தோம். இப்போது வயிற்றுக்குள்ளேயே விளையாடியிருக்கிறான் என்று அறிந்து அதிர்ச்சியல்லவா அடைகிறோம். இவ்வாறு ஹராமான ஆல்கஹாலை எடுத்துகொண்டதால் அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் எத்தனை சதைகள் நரகத்தில் வாடுகின்றன என்று நமக்கு தெரியவில்லையே!!!

 
ஆனால் அதற்கு முன்னதாக இந்த பாக்டீரியாக்களிடம் சொல்லுவோம்.

86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16 நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:17 எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

மூஃமீன்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவர்கள் வயிற்றில் அல்லாஹ் படைத்த காலம் முதலாக ஹராமான அல்கஹாலை ஊற்றுபோல உருவாக்கியிருக்கிற காபிர் பாக்டீரியாக்களை இப்போது அறிந்துகொண்டோம். அல்லாவிடமிருந்தே மறைந்து வயிற்றுக்குள் இந்த சதிவேலை பண்ணிகொண்டிருக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் ஜிகாத் தொடுத்தே ஆகவேண்டியுள்ளது

ஆகவே இந்த காபிர் பாக்டீரியாக்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசமளிப்போம். அவர்களது சூழ்ச்சியிலிருந்து அவர்கள் விலகிக்கொள்ளட்டும். பிறகு ஆண்டிபயாடிக் தான் ஒரே அட்டாக்.

நிறைய ஆண்டிபயாடிக் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். கூடவே நாமும் காலி. ஆனால் தற்கொலை செய்துகொள்வது முக்கியமா? அல்லது காபிர்களை கொல்லுவது முக்கியமா?

தற்கொலை படையாக சென்று ஒரு இருபது காபிர்களை அழிப்பதன் மூலம் சுவனத்து கன்னியரை பெறுவதற்காக ஏராளமான இளைஞர்கள் இளைஞிகள் அல்லாவின் பாதையில் அறப்போர் புரிகிறார்கள்.

ஆனால் நமக்குள்ளேயே இருக்கும் கோடிக்கணக்கான காபிர் பாக்டீரியாக்களை அழித்தால் எவ்வளவு உயர்ந்த சுவனத்தை நாம் பெறுவோம் என்று சிந்திக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் சிந்தித்துவிட்டு வருகிறேன். அதற்குள் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்திக்க மாட்டீர்களா என்று இந்த பிரபஞ்சத்தை படைத்த இறைவன் அடிக்கடி நம்மிடம் இறைஞ்சுவதை உண்மையிலேயே ஏடுத்துகொண்டு கன்னாபின்னாவென்று சிந்திப்பவர் பி ஜெயினுலாபுதீன் அவர்களே!!!

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வார்த்தைகளுக்கும் குரானின் வார்த்தைகளுக்கும் நேர் எதிரான பொருளை கொடுத்து தப்புவதில் அவர்தான் எனக்கு தெரிந்து பெரிய கில்லாடி. தற்போதைக்கு ஜெயினுலாபுதீனை கலந்து ஆலோசிக்கவும். மனுஷன் தப்புவதற்கு எதாச்சும் வழி வச்சிருப்பார்.

மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

ரமலான் வந்துவிட்டது. ஐந்து வேளை தொழும்போது நாம் பலவிஷயங்களை செய்கிறோம். இப்படி நபிகள் நாயகம் விரலை ஆட்டினார் என்றெல்லாம் நாம் கவனித்து விரலை ஆட்டி துவா செய்கிறோம்.

ஆனால் முக்கியமான எச்சரிக்கையை நமது ஆலீம்களும் மௌலானாக்களும் இமாம்களும் சொல்லுவதில்லை.

அதனை இங்கே பகிர்ந்துகொள்ளத்தான் இந்த பதிவை உடனே எழுதுகிறேன்.

அதுவும் பகுத்தறிவை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்தில் ஐக்கியமான பெரியார் தாசன் போன்ற அமெச்சூர் முஸ்லீம்கள் உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.

அதாவது துவா செய்யும்போது எந்த காரணம் கொண்டு அண்ணாந்து வானத்தை பார்க்கக்கூடாது. உங்கள் கண்கள் இரண்டும் உடனே காலி!

ஆமாம் பொய்யல்ல. அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் என்றாவது பொய் சொல்லியிருக்கிறாரா?

கீழே சஹீஹ் முஸ்லீம் அத்தியாயம் 23 கவனியுங்கள்.

http://www.iium.edu.my/deed/hadith/muslim/004_smt.html

Chapter 23 : IT IS FORBIDDEN TO LIFT ONE’S EYES TOWARDS THE SKY IN PRAYER


Book 4, Number 0862:

Jabir b. Samura reported : The Messenger of Allah (may peace be upon him) said : The people who lift their eyes towards the sky in Prayer should avoid it or they would lose their eyesight.

Book 4, Number 0863:

Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away.

உடனே கண்களை காப்பாற்றிக்கொள்ள துவா செய்யும்போது கண்களை தாழ்த்திகொள்ளுங்கள். அண்ணாந்து வானத்தை ஒருபோதும் பார்த்துவிடாதீர்கள். கண்கள் இரண்டும் உடனே பிடுங்கப்பட்டுவிடும். அப்புறம் குருடனாக அலைய வேண்டியதுதான்.

இது மாதிரி துஆ செய்யும்போது யாருமே அண்ணாந்து பார்க்கவில்லையா? அவர்கள் கண்களெல்லாம் என்ன பொட்டையாகவா போய்விட்டது என்று கேட்பதெல்லாம் இஸ்லாமுக்கு மாறானது. இறுதி இறைதூதர் சொல்றார். நாம கேட்கிறோம் என்பதுதான் இஸ்லாத்தின் வழி. இங்கே பகுத்தறிவு கிகுத்தறிவு என்றெல்லாம் சொல்லக்கூடாது. பகுத்தறிவை விட்ட பெரியார் தாசர்கள்தான் இஸ்லாமுக்கு வர்முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பை ஏன் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எழுதவில்லை என்று யாரேனும் விளக்கினால் நல்லது. தமிழர்கள் பின்புறமாக சிரிப்பார்கள் என்று கருதி ஒருவேளை ஜெயினுலாபுதீன் போன்றோர் இந்த துவா வழிமுறையை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று அமுக்கியிருக்கலாம்.

ஆனால், எவ்வளவு பெரிய ஆபத்தை நம் முஸ்லீம் உம்மத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது.

எத்தனை பேருடைய கண்கள் போயிருக்கும்!

ஆகவே முஸ்லீம்களே ஒருகாலும் துஆ பண்ணும்போது அண்ணாந்து வானத்தை பார்க்காதீர்கள். பார்த்தால் அம்புட்டுத்தேன். கண்ணுகள் ரெண்டும் புடுங்கப்பட்டுவிடும்.

அப்புறம் “கண்ணில்லாத பாய் பிச்சை கேட்டு வந்திருக்கேன்.. அம்மா தாயே சோறு போடுங்கம்மா” என்றுதான் அலைய வேண்டியிருக்கும்.

அதுவும் லட்சக்கணக்கில் பாய்கள் எல்லாம் கண்ணில்லாத கூட்டமாக அலைவது எவ்வளவு பெரிய பிரச்னை என்று தமிழக அரசும் கருத்தில் கொண்டு இதனை போஸ்டராக அடித்து தமிழக மசூதிகளில் ஒட்டி தமிழக முஸ்லீம்களின் நலனை காக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

தப்பு தப்பு… அய்யோ கண்ணு பத்திரம்…